Thursday, December 11, 2008

 

மதர் அலெக்ஸ்! 98-வது பிறந்தநாள்!!!

நேற்று 10/12/08 அன்று எங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய Rev. Mother Alex அவர்களுக்கு
98-வது பிறந்தநாள்!!இன்றும் அவர்களைப் போய்ப் பார்த்து, வணங்கி, வாழ்த்தி, ஆசி பெற்று வரும் எங்கள் பாக்கியத்தை என்ன சொல்வது? நேற்று மாலை சுமார் ஐந்து மணிக்கு
நான்,என் தங்கை,அவள் தோழி மூவரும் தங்கையின் காரில் அண்ணா மேம்பாலத்துக்குக் கீழிருக்கும் சிறுமலர் கான்வெண்டுக்குச் சென்றோம். மற்றவர்களெல்லாம் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து சேர்ந்து கொண்டார்கள்.

மதருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி ஆசி பெற்றோம்.

அவர்களுக்காக நாங்கள் வாங்கிச் சென்ற கேக்!!!

என் பெயர் மேலே கட் செய்ய வா? என்றார்கள். நோ..நோ..மதர் வெளியிலேயே கட் செய்யுங்கள் என்றோம் கோரஸாக. அவர் முகத்தில்தான் எவ்வளவு சந்தோஷம்!!!!
எங்கள் அன்பில் தோய்ந்து, நெகிழ்ந்து, நெக்குருகிப் போனார்.

என்னைப் பார்த்ததும்.'you..naughty kalyani!' என்று இறுக்கியணைத்து ஓர் உம்மா கொடுத்து தானும் சந்தோஷித்து என்னையும் மகிழ்வித்தார். பழைய கதைகளையெல்லாம் மறந்தும் மறக்காமலும் பேசி மகிழ்ந்தார். 98 வயதுக்கு நல்ல ஆரோக்கியத்தோடும் உற்சாகமாகவும் இருக்கிறார். இதே தொடர்ந்து 100 வயதைத் தாண்டி வாழ ஏசுவையும் அம்மாவையும் பிரார்த்தித்துக் கொண்டேன்.

எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் மாற்றி மாற்றி விசாரித்தார். அன்பான அம்மா, உல்லாசப் பயணத்துக்கெல்லாம் இலவசமாக பஸ் கொடுத்த அப்பா, அமைதியான என் பெரியக்கா, சரோஜினிப் பார்க்கில் பூ திருடி மதரிடம் மாட்டிக்கொண்டு அவன் பறித்த மலர்களையே அவன் தலையில் வைத்து ஆபீஸ் ரூம் வாசலில் நிற்க வைக்கப்பட்ட சின்னண்ணன், நான் எப்போதும் அண்ணாச்சியின் காஸ்ட்லி காமராக்களோடேயே அலைந்து படமெடுத்தது வரை சொல்லி சொல்லி மகிழ்ந்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பா அம்மா நல்லாருக்கிறார்களா? என்றதுதான். மறதியின் உச்சம் இதுதானோ? பாவமாயிருந்தது.
இந்த வயசில் நாம் இருப்போமா...இருந்தாலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்போமா? என்று நாங்கள் பேசிக்கொண்டோம்!!!!

அங்கு அவரை கவனித்துக்கொள்ளும் சிஸ்டர்,'உங்க குரூப்பைப் பார்த்ததும்தான் இவ்வளவு உற்சாகம். பாருங்கள்! கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்பதை!!'என்றார்.
ஆமாம்! ரொம்ப நேரம் பேசி அவர்களை சிரமப் படுத்த விரும்பாமல் நாங்கள் கிளம்பியபோது
மனமில்லாமல் கண்களில் கண்ணீர் வழிய வழியனுப்பினார்.
எங்களுக்கும் அத்தனை சந்தோஷத்திலும் மனதில் சிறு பாரம்!!
அடுத்த வருடமும் இதே போல் வந்து மதரை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே திரும்பினோம். இனி முடிந்த போதெல்லாம் வர வேண்டும் என்றும்
நினைத்துக்கொண்டோம்.

மதர்!!!நீங்கள் நூறு வயதைத் தாண்டி வாழ பிரார்த்திக்கிறோம்!!!!!

Labels:


Comments:
வாவ்! அமேசிங் நானானி! உங்க அன்பும்தான்
 
மனம் நிறைந்திருந்தது உங்கள் சந்திப்பு பற்றிய பதிவு !

//அடுத்த வருடமும் இதே போல் வந்து மதரை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே திரும்பினோம். இனி முடிந்த போதெல்லாம் வர வேண்டும் என்றும்
நினைத்துக்கொண்டோம்//

முடிந்த வரை அவ்வப்போது சென்று சந்திக்க முயற்சியுங்கள் அம்மா! - மிக மகிழ்ச்சியடைவார்கள் மதர்!:)
 
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சேர்ந்த பதிவு.

காலையிலிருந்து உங்கள் வலையில் பதிவு மழை.

முதலில் வந்தது தீர மழை.

பின்னர் தீபமாய் வாழ்த்து மழை.

அடுத்து அலெக்ஸ் மதருடன் விழாக் கொண்டாடிய அன்பு மழை.
 
ஆம்! சந்தனமில்லை! இதற்கெல்லாம் கொடுத்து வைத்ததே பாக்கியம்தானே!
 
நிச்சயமாக ஆயில்யன்!!
அடுத்தமுறை மகளையும் பேரனையும் அழைத்துக்கொண்டு போய் காட்ட வேண்டுமென்றிருக்கிறேன். பேரன் சரியான வாலு என்ற போது உன்னைப் போலவா? என்றார்கள்.
 
இன்று நான் ஹாட்ரிக் அடித்திருக்கிறேனா? ராமலக்ஷ்மி?
 
நெகிழ்ச்சியாக இருக்கின்றது. நினைவில் வைத்து சந்தித்து, பிறந்தநாள் கொண்டாடி... மகிழ்ச்சியாக உணர்கின்றேன்.
 
அட இதுவும் நல்லாருக்கே,

//அடுத்த வருடமும் இதே போல் வந்து மதரை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே திரும்பினோம். இனி முடிந்த போதெல்லாம் வர வேண்டும் என்றும்
நினைத்துக்கொண்டோம்//

கண்டிப்பாக, உங்கள் எண்ணம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்
 
இன்று நான் ஹாட்ரிக் அடித்திருக்கிறேனா? ?//

சந்தேகமா நானானி. கலக்கிட்டீங்க.
 
மதருக்கு எங்களின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 
இப்போதுதான் கார்த்திகைப்பொரி பூஜைக்கு செய்துவிட்டு உங்கள் ப்ளாக் பார்க்க வந்தேன் இன்றே மூன்று பதிவா? எப்படி? தீபம் பதிவும் விளக்கு படமும் அருமை.
தாமரை.
 
உங்களுடன் படித்தவர்கள் எங்கிருந்தாலும் மதர் பற்றிய உங்கள் பதிவைப் படித்துவிட்டு சென்னையிலோ அருகாமையிலோ இருந்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து சொல்ல மதரைப் பார்க்க கட்டாயம் வருவார்கள். அவர்களுக்காக உங்களுக்கு என் நன்றி.
தாமரை
 
உங்கள் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் நானும் உணர்கிறேன், தமிழ்பிரியன்!
 
உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கும் அம்ருதாவின் அம்மா!
 
இதுதான் முதல், புதுகைத்தென்றல்!
மனசுக்கு நல்லாருக்கு.
 
அடுத்த முறை மதரைப் பாக்கும் போது உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். சேரியா?
 
ஆகா...!என்னோட தடாகத்தில் தாமரை பூத்திருக்கிறதே!!!
செந்தமிழ்மணம் வழியாக வந்து பாடுகிறதே....!
 
உண்மைதான் தாமரை! அப்படி பழைய மாணவிகளைப் பார்த்தால் மிகவும் பூரிப்பார்கள்!
 
நெகிழ்ச்சியா இருக்கு.

மகிழ்ச்சிப்பா.
 
இந்த நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும்தான் அன்று நாங்கள் அனுபவித்தோம். நீங்களும் அடைந்தது பத்தி நானும் நெகிழ்ந்தேன்....துள்சி!!
 
It is time for another precious visit...... 2009..... keep us posted with more photos.....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]