Sunday, November 23, 2008

 

இங்கே கிள்ளிப் போட்டு....அங்கே அள்ளிப் போட்டு - சமையல் குறிப்பு

அட! அடை சாப்பிட்டுருக்கிறீர்களா? என்ன புதுசா கேக்குறேன்னு பாக்குறீங்களா? அடை இங்கேயெல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். அதான் எனக்குத் தெரியுமே!
கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பருப்பு வகைகளெல்லாம் ஊறப்போட்டு அதில் காஞ்ச மெளகா, பச்ச மெளகா, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் எல்லாம் சேத்து அரைத்து தோசைக்கல்லை காய வைத்து அடைமாவை ஊத்தி எண்ணை விட்டு சுட்டு எடுத்தால் அதுதான் அடை!!

ஆனா நாஞ் சொல்ல வந்ததே வேற.
இங்கே நாம் எண்ணி எண்ணி, கிள்ளி கிள்ளி, பாயசத்துக்கும் இனிப்புக்கும் நெய்யில் வறுத்துப் போடும் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு சேத்து செய்யும் அடை பத்தி!!

அமெரிக்கா போன போது அங்கு ஒண்ணு வாங்குனால் ஒண்ணு ப்ரீ என்று காஸ்கோ,ஸம்ஸ் போன்ற ஹோல்சேல் கடைகளில் (இங்கு மெம்பராக இருந்தால்தான் உள்ளேயே போக முடியும்)எது வாங்கினாலும் 'நானும் வருவேன்'ன்னு இன்னொண்ணும் கூட வரும். ஒரு பாக்கெட் முந்திரிப் பருப்பு வாங்கினால் இன்னொருபாக்கெட்டும்சேர்ந்து கிடைக்கும். அதே போல் பாதாம், பிஸ்தா, வால்னட், பீநட், பைன்நட் போன்றவைகளும். பாக்கெட்டென்றால் சின்ன மூட்டை சைசில் இருக்கும்.
அங்கு மாதந்திர சாமான்கள் வாங்குவதே சுலபமாயிருக்கும். எல்லோரும் ட்ராலி ட்ராலியாக அள்ளிக்கொண்டு போவார்கள். பார்க்கவே மனசெல்லாம் பொங்கும்!!

இப்படி மகள் வீட்டில் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பீநட், பைன்நட் எல்லாம் பாக்கெட்டுகளாக அடுக்கியிருந்தது.
ஒரு நாள் அடைக்குப் போடலாமென்று ஷெல்பைத் திறந்து மேய்ந்த போது திடீரெனத் தோன்றியது. நம் ஊரில் நாம் கிள்ளிக் கிள்ளி உபயோகிக்கும் பாதாம் முந்திரியை அள்ளி அள்ளிப் போட்டு அடை செய்தாலென்ன? நினைத்ததை முடிப்பவள் அல்லவோ நாம்!


கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு(சிறிது) கூட பாதாம்பருப்பும் முந்திரிப்பருப்பும் அள்ளிப் போட்டுத்தான், சேர்த்து ஊற வைத்தேன். அதோடு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தெடுத்தேன். அதில் கறிவேப்பிலை கொத்தமல்லி அரிந்து, பெருங்காயம் தூளும் சேர்த்துத் தூவினேன்.


இரவில் அனைவரும் சாப்பிட வந்ததும் தோசைக்கல்லை நல்லாக் காய வைத்து...வெயிலில் இல்லை..எரியும் அடுப்பில். முறுகலாக தோசை வார்த்து மேலே சிறிது வெண்ணெய் வைத்து கெட்டிச்சட்னியோடு(விவேக்குக்கு ரொம்பப் பிடித்தது)பரிமாறினேன். அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு காலியாயிற்று.

அடுத்த முறை முழுவதும் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், பீநட், பைன்நட் மட்டுமே சேர்த்து
அடை செய்யலாமென்றிருக்கிறேன். எனக்கு ரொம்பத்தான் இது இல்ல? இப்ப முடியாது...முடிந்தவர்கள் செய்து பாத்து சொல்லுங்கள்!!!

Labels:


Comments:
அடையா அப்படின்னா? கேள்விப்பட்டதோட சரி...;)
(ஆனா... இந்த அடை நம்மூர் பட்ஜெட்டுக்கு சரியா வருமான்னு தெரியலியே?..;) )
 
ரொம்ப வருசத்துக்கு முந்தி ஒரு நாள் பைன் நட் இல்லாமல், முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பூசணி விதை, சன் ஃப்ளவர் விதை, இண்டியன் ஸ்டோரில் ஆசையா வாங்கிவச்சு மறந்து போயிருந்த சாரப்பருப்புன்னு போட்டு அரைச்சு கோல்டன் சிரப் சேர்த்து உன்னியப்பம் செஞ்சேன். நெய் கொஞ்சம் கூடவே குடிச்சுருச்சு. ஏலக்காய் சுக்குப்பொடி எல்லாம் போட்டு ஜமாய்ச்சுட்டொமில்லெ:-)

அப்பெல்லாம் கொழுப்பில்லாத கவலையில் கொழுப்போடு ( மனசுலேப்பா) திரிஞ்ச காலம்.

ருசி நல்லா இருந்துச்சு.
 
விதவிதமா வித்தியாசமா சமயத்தில [நம்மூர்] கைக்கு வீக்கமாவும் செஞ்சு அசத்தி.. யோசிக்காம எங்களையும் செய்ய வச்சிடுவீங்களே! படங்கள் தரும் எஃபக்ட் அப்படி! கிளம்பிட்டேன் சின்ன மூட்டை முந்திரி பாதாம் வாங்க:)!
 
ஆகா ஆகா - அருமையான அடை - எப்போ நாங்க உங்க வூட்டுக்கு வரணும் - முன்னாலேயே சொல்லிடுங்க

கொழுப்பு - அது இருக்கவே இருக்கு - பாத்துக்கலாம்
 
முதல் வருகை தமிழ்பிரியனுக்குன்னு எழுதி வெச்சுட்டோமில்ல!
கேள்விப் பட்டதோடு சரியா...?
அடை-அவியல்ன்னு ஹோட்டல்களில் மெனு பாத்ததில்லையா? எனக்கு அந்த காம்பினேஷன் புடிக்காது. நம்ம பட்ஜெட்டுக்கு கொஞ்சம் கையைக் கடிக்கும்தான். இருந்தாலும் பாதகமில்லை..எப்பவாவது செய்யலாம்.
 
துள்சி! உங்க செய்முறைப்படி குழிப்பணியாரம் செய்யலாம்...(இப்பத்தானே குழிப்பணியாரக் கல் கிடைத்தது). இப்பவும் திரியலாமே...மனசிலே மட்டும் வச்சுக்கிட்டு.
 
நீங்கதான் வருமுன் சொல்லணும் சீனா!
அப்பத்தானே தயாராயிருக்கலாம்? எங்கேயாவது ஓட...!ஹி..ஹீ..!
செல்வியைப் பிடியுங்கள்!
 
ம்ம்ம்ம்ம் செல்விதானே ! பிடிச்சிடுவோம்.

அவங்க எப்பவாச்சும் கிள்ளிப் போடாம அள்ளிப் போடுவாங்க - எல்லாத்துலேயும் - பாயாசம், காலைலே கார்ன்ப்ளேக்ஸ், வெங்காயச் சட்னி - எங்கெல்லாம் பொட்டுக்கடலை ( ஒங்கூர்ல ஒட்ச்ச கல்ல ) போடணுமோ அங்கெல்லாம் டிரை ப்ரூட்ஸ் தான்

வேறென்ன பண்றது - ஓசியா வந்ததே வேஸ்ட் பண்ணக் கூடாதில்ல
 
ப்ரீன்னா ஏன் சமையலில் அள்ளிப் போடணும்? சும்மாவே சாப்பிடலாமே!
சத்தும் உடம்பில் நேரடியாகச் சேருமே!
டிவி பாத்துக்கிட்டே கொறிக்கவும் நல்லாருக்கும்.
 
ப்ரீன்னா ஏன் சமையலில் அள்ளிப் போடணும்? சும்மாவே சாப்பிடலாமே!
சத்தும் உடம்பில் நேரடியாகச் சேருமே!
டிவி பாத்துக்கிட்டே கொறிக்கவும் நல்லாருக்கும்.
 
ம்ம் ரெண்டு தடவ சொன்னாலும் நேரடியாச் சாப்பிட மாட்டோம் - எங்களுக்கு கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தி - எனக்குத் தெரியாம தங்க்ஸ் சேக்கறது அது.
 
ம்ம்ம்ம். நானானி பார்க்க இவ்வளவு அழகா செய்து வைத்துட்டு கொழுப்புன்னு சொல்றீங்களே, நல்லா இருக்கா உங்களுக்கு:)

கொஞ்சம் இஞ்சி,பூண்டு சேர்த்தா மு.பருப்பு கொழுப்பு அடங்கிடுமே.
அப்புறம் சுக்குக் காப்பி சாப்பிட்டுப் பார்க்கலாம்:0)
 
தெரியாமல் சேர்த்தே உங்களை ஹெல்தியாக வைத்திருக்கும் தங்கஸுக்கு ஒரு தாங்ஸ் போடுங்கள்! சீனா!
 
தெரியாமல் சேர்த்தே உங்களை ஹெல்தியாக வைத்திருக்கும் தங்கஸுக்கு ஒரு தாங்ஸ் போடுங்கள்! சீனா!
 
ராமலஷ்மி! சின்ன மூட்டைகள் வாங்கியாச்சா? ரங்கமணியும் மகனும் விரும்பிச் சாப்பிடுவார்கள். கட்டாயம் இந்த அடையைச் செய்து மகிழ்ச்சி அடையுங்கள்!!!
 
வல்லி! நான் கொழுப்பு என்று சொல்லாமல் சொன்னது....ராமலஷ்மி சொன்னது போல் 'கைக்கு வீக்கமான' விஷயத்துக்குத்தான். இங்கே விலைவாசி இருக்கும் இருப்புல இப்படி அள்ளிப் போடச் சொறது கொஞ்சம் 'அது'தானே? நூறு ரூபாய்க்கு ஒரு வார காய்கறி வாங்கிய காலம் போய் ஒரே நாளுக்கு வாங்கும் நிலையை என்ன சொல்ல? இருந்தாலும் ஆசைக்கு எப்போதாவது செய்யலாம்தானே?
 
தாங்க்ஸ் டு தங்க்ஸ் - ஆமா - மகளிரணி சேந்துடுவீங்களே !! துளசியும் அப்படித்தான் - செல்விய ( எங்க தங்க்ஸ் ) விட்டுக் கொடுக்க மாட்டாங்க
 
நெல்லையிலும் இன்று
அடை மழை.
முந்திரி, பாதாம் எல்லாம்
வாங்கி வரலாம் என்றால்
வெளியே செல்ல முடியவில்லை.

சகாதேவன்
 
மகளிரணி சேந்து என்ன ப்ரோசனம்?
33% க்கு இன்னும் போராடிட்டுத்தானே இருக்கோம்?
 
உங்கூர்ல மழையே 'அடையாய்' பெய்யும் போது என்ன கவலை?
அடிச்சு மொழக்குங்க!!!
 
யக்காவ்

பருப்பு அடை பருப்பே இங்க வேக மாட்டேங்குது.
நம்மூர் பட்ஜெட்டுக்கு இதெல்லாம் தாங்காதுக்கா

அதனால நான் இங்கயே ஃபுல் கட்டு கட்டிட்டேன்.

நல்லா இருக்குதுக்கா,

அப்புறம் அந்த லின்க்கு ஓபன் ஆகலக்கா. “ஷன்”னை விசாரிச்சதா சொல்லுங்கக்கா.
 
:-) பார்க்கவே டேஸ்டா இருக்கு! fatless முந்திரி இருக்கா? பாதாம் நல்லதுதான்..ஊற வச்சி அரைச்சா பாதகம் இல்லேன்னு படிச்சதா நினைவு!
 
அடை.. எனக்கு ரொம்ப புடிக்கும்.. அடுத்த வாட்டி செஞ்சதும் சுட சுட கோவைக்கு ஒரு பார்சல் போட்றுங்க.. :)
 
Sounds healthy naananee .Will surely try..
To all those readers who are concerned about cholesterol ,I would like to say something.Nuts are healthy snack rich in Omega-3 fatty acids .It becomes unhealthy only when it is deep fried.SO go ahead try these wonderful adai once in a while...
-Swapna
 
உங்க பருப்பு அங்க வேகலையா? பரவாயில்லை...இந்தப்பருப்பெல்லாம் எங்கும் வேகும். செஞ்சு சாப்பிட்டுப்பாருங்க!!ஆங்! மறக்காம அமிர்து குட்டிக்கும் கொடுங்க!!
 
fatless முந்திரியா..? அப்படி ஒன்னு இருக்கா? எனக்குத்தெரியலை நெஜமா எனக்குத்தெரியல. உங்களுக்கெல்லாம் என்ன fat conciousness? சும்மா அடிச்சு மொழக்குங்க!!
 
பொடியன் - சஞ்சய்!!
சுடச்சுட பார்சல் பண்ண நான் ரெடி!!
அதே சூட்டோடு உங்களுக்குக் கிடைத்தால் சந்தோஷம்!!
 
ரொம்ப ரொம்ப நன்றி ஸ்வப்னா!!
சரியான நேரத்தில் தேவையான தகவல்களைக் கொடுத்து அனைவரது
கொழுப்பையும் இல்லையில்லை பயத்தையும் கரைத்ததுக்கு!!!
நமக்கினி பயமேது...?
 
நீங்கள் கிள்ளி கிள்ளி, போட்டீங்களோ,
இல்லை, அள்ளி அள்ளி, போட்டீங்களோ,
ஆனால் ,கிள்ளி கிள்ளி சாப்பிடும்
பிள்ளைகள் கூட,
அள்ளி அள்ளி சாப்பிடும்
 
இவ்வளவு சூப்பரா அடை செய்றீங்களே நீங்க வசிப்பது அடை-‍‍‍யாரா நானானி
 
இவ்வளவு சூப்பரா அடை செய்றீங்களே நீங்க வசிப்பது அடை-யாரா நானானி
 
எப்பவும் சரியாகவே சொல்கிறீர்களே? அது எப்படி கோமா?
 
அட! கரெக்டா அடை..யாளம் கண்டுபிடிச்சிட்டீங்களே?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]