Sunday, November 16, 2008

 

ஆசை நிறைவேறியது.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆ.....சை!
காஃபி ஷாப்புகளில் அதாவது காஃபி கஃபேகளில் ரிலாக்ஸ்டாக அமர்ந்து கொண்டு அரட்டையடித்துக் கொண்டு நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்களை காரில் போகும் போதும் வரும்போதும் பார்த்திருக்கிறேன். அப்படி என்னதான் பேசுவார்களோ?

எனக்கும் அது போல் காஃபி கஃபே போய் அமர்ந்து விதவிதமான காஃபிகளை ருசி பார்க்க வேண்டும் என்று ஆசை. நான் மட்டும் போனால் எப்படி? ரங்கமணிக்கோ ஆர்வமில்லை.
என்ன செய்வது? ஆசை தள்ளிக்கொண்டே போயிற்று. நானும் என் தங்கையும் ஒரு நாள் போவோம் என்று பேசிக் கொண்டோம்.

சரி..'உறு மீன் வரும் வரை' காத்திருந்தேன். சரியான நேரம் வாய்த்தது. டக் என்று கொத்திக்கொண்டேன்.

நாங்கள் சகோதரிகள் நான்கு பேர். ஒவ்வொருவர் பிறந்த நாளுக்கும் மற்ற மூவரும் சேர்ந்து
பரிசளிப்பது வழக்கம்.(from three of us- என்று சொல்லி) ரெண்டாவது அக்கா காலமான பின்னும் மானசீகமாக அவளையும் சேர்த்துக் கொள்ள அவள் மகனை சேர்த்துக் கொண்டோம். பெரியக்கா-அத்தானுக்கு சதாபிஷேகம் வந்தது. அதாவது உறுமீன் வந்தது. நான்,தங்கை,சின்னக்கா பையன் மூவரும் என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்தோம்.

வாடியிருந்த கொக்கான நான் வந்த உறுமீனை பாய்ந்து கொத்தினேன். ஆம்! என்ன பரிசு என்ற டிஸ்கஷனை காஃபிஷாப்பில் வைத்துக்கொள்வோம் என்றேன் மகிழ்ச்சியோடு. தங்கையும் சரியாகக் கொத்தினாய் என்பதுபோல என்னைப் பார்த்தாள்.

சேரி...என்று இந்திராநகர் கஃபிடே காஃபேயில் நான்,தங்கை, அக்கா மகன் அவன் மனைவி நால்வரும் கூடினோம், டிஸ்கஷினோம், ரெண்டு வகை காஃபி ருசித்தோம், கொறிக்ஸ் சாப்பிட்டோம், பரிசையும் முடிவு செய்தோம். திருப்தியாகக் கலைந்தோம்.


தங்கை எடுத்த படம்

Labels:


Comments:
ஆசை நிறைவேறிய கதையும் நல்லாயிருக்கு. தங்கை எடுத்த படமும் நல்லாயிருக்கு. அதிலே காஃபி கப்புடன் இருப்பது யாரு? நீங்கதானே:)?
 
காபி ஷாப்பில் என்ன ஆலோசித்தீர்கள்? நிச்சயம் ப்ரூவா நெஸ்கபேயா என்று இல்லை. ரெண்டு வகை காபி அருந்தியதாக சொன்னீர்கள். உங்கள் மகன் பெரியாப்பாவுக்கு என்ன பிடிக்கும், என்ன வேண்டும் என்று யோசித்து சொன்ன ஒரு அருமையான, கிஃப்டை வாங்கியிருப்பீர்கள். சரியா? அது என்ன என்று நீங்கள் பதிவில் சொல்லவில்லையே.
சகாதேவன்
 
இப்படியெல்லாம் கேக்கப் படாது ராமலஷ்மி! ஹி..ஹி..!
 
நெஸ்காஃபியும் ப்ரூகாஃபியும் வீட்டிலேயே குடிக்கலாமே! சகாதேவன்!
நான் குடித்தது ஹாட் சாக்லேட்டும் காஃபிமோக்காவும். டிஸ்கஷன் முடிவில்
அக்கா மகன் சொன்ன போர்டபிள் டிவிடி ப்ளேயர் வாங்கி மூவரும் சேர்ந்து கொடுத்தோம். காலேஜில் டிவி மூலம் கொடுக்கும் லெக்சர்களை திரும்ப போட்டுப் பார்க்க வசதியாயிருக்கும். அவர்களுக்கும் ரொம்ப சந்தோஷம்!
 
இது மாதிரி எல்லாம் ஆசை வருதா... ஹா ஹா ஹா.. காப்பிசினோ எனக்கு பிடிக்கும்.. குடிச்சு ரொம்ப நாள் ஆச்சு... ஆசையைக் கிளப்பி விட்டுட்டீங்கம்மா...:)
 
///நானானி said...

இப்படியெல்லாம் கேக்கப் படாது ராமலஷ்மி! ஹி..ஹி..!///

போனதே நான்கு பேர் தான்... போட்டோ எடுத்தது தங்கை என்றால் கேள்வி எல்லாம் கேக்கலாமா.. ஹீஹிஹிஹி.. :))
 
சரியாக துப்பறிந்து விட்டீர்கள்! ஷெர்லாக்ஹோம்ஸ், சங்கர்லால்,சாம்பு,கணேஷ்-வசந்த் எல்லாம் தோற்றுப் போவார்கள்!!!
 
aakaa - இப்படிஎல்லாம் டிஸ்கஸலாமா ? ம்ம்ம்ம் - படத்தில் இருக்கும் மூவரில் ( தங்கை இல்லாத மூவரில் ) - நானானி யாருன்னு கேட்டா ராமலக்ஷ்மிக்கு கொஞ்சம் ஜாஸ்திதான். ம்ம்ம்

சங்கர்லால் கத்தரிக்காய் மாது வகாப் எல்லாத்தேயும் இப்போ கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்களே ம்ம்ம்ம்ம்ம்ம்
 
பிளாக்கரின் சதியா - இல்லை இணைய இணைப்பின் சதியா தெரியவில்லை - ம்ம்ம்ம்ம்

எத்தனை முறைதான் எழுதுவது .....

சென்றது நால்வர் - புகைப்படம் எடுப்பவர் யாரெனச் சொல்லி விட்டனர் - மீதமுள்ள மூவரில் ஒருவர் ஆண் - மற்றொருவர் இளம் பெண் - மூன்றாமவர் யாராய் இருக்கும் - தெரிய வில்லையே

ராமலக்ஷ்மி - ........ கொஞ்சம் ஜாஸ்தி தான் ( நீங்களே புள்ளிய ரொப்பிக்கங்க)

நானானி. சங்கர்லால் வகாப் கத்தரிக்காய் மாது - சாம்பு - கொசுவத்தி சுத்த வைச்சிட்டீங்களே !

ம்ம்ம்ம்ம்ம் டிஸ்கஸன் இப்படியும் பண்ணலாம் போல இருக்கு - அங்கே கொடுத்த காசெ பரிசு பொருளில் சேத்துருக்கலாமே !
 
வாங்க வாங்க சீனா! டிஸ்கஷனுக்கு நல்ல ஐடியா கொடுத்துட்டேனா?
'ராமலஷ்மிக்கு மூளை கொஞ்சம் ஜாஸ்தி' இப்படி ரொப்பிக்கலாமா?
 
நான் சங்கர்லால் மட்டும் சொன்னேன் நீங்க மீதி கேரக்டர்களை கண் முன்னே ஓட விட்டுட்டீங்களே! மறக்க முடியாதவர்கள்!!
 
//அங்கே கொடுத்த காசெ பரிசு பொருளில் சேத்துருக்கலாமே !//
அப்படி செய்திருந்தால் எனக்கு ஒரு பதிவு கிடைத்திருக்காதே? தங்கை எடுத்த படம் பாத்தவுடன்தான் பதிவிடும் எண்ணமே வந்தது.
கொசுறுத்தகவல்: அங்கே பர்ஸை திறந்தது மகனல்லவோ! சித்தியின் ஆசைக்கு அவன் கொடுத்த ட்ரீட்!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]