Sunday, October 12, 2008

 

அக்டோபர் மாத PiT-க்கு என்னோட மிரட்டல்!


ஆமாம்! இதுதான் 'THE KINGKONG OF REFREGIRATORS!''அம்மா! நாம்பளும் இதையே வாங்கிக்கலாமா?'

ஆமா..ஆமா..வாங்கிக்க கண்ணு...!

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும்? எனக்கு எல்லாம் செய்தது. புரியலையா?
படத்திலிருக்கும் நாளையும் கோளையும்(நேரத்தையும்) கிரகங்கள் எல்லாம் சேர்ந்து செய்த சதியால் என்னால் எடுக்க முடியவில்லை.
பிட்டின் நடுவர்களே!! விதி அதாவது ரூல்ஸ் இடம் கொடுத்தால் முதல் படம் போட்டிக்கு.இல்லயேல் பார்வைக்கு.

Labels:


Comments:
ஆகா, இத்தனை நாள் கழித்து பதிவிடும் போதே கண்டிப்பாக மிரட்டுவீங்கன்னுதான் உங்கள் ரசிகர் மன்றம் காத்திருந்தது. அதிரடி மிரட்டல். வாழ்த்துக்கள் நானானி!
 
ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்ட மாதிரி இருக்கு... :)
கிங் காங் பீரோவுக்கு விளம்பரமா? அம்மாவுக்கு எம்புட்டு கமிஷன்?
 
;-))))))))))
சிரிப்பா சிரிச்சேன்!!
நல்லா இருக்கு.
விதி முறை எங்கே மீறுதுன்னு நினைக்கிறீங்க? நாளும் கோளும் பிரச்சினையே இல்லையே! தேவையானா கிம்பிலே அதை எடுத்துடலாமே?
 
எப்படியும் பிக்காசோ வெச்சிருப்பீங்கதானே.இல்லன்னா பிக்காசா 3 டவுண்லோட் பண்ணுங்க. அதுல ரீடச்ன்னு ஒரு டூல் இருக்கும் பாருங்க. ரொம்ப ஈசியா எடுத்துடலாம்
 
வாங்க, ராமலஷ்மி!
ஏதோ மெரட்டீட்டேன். எத்தனை பேர்
பேந்தாங்களோ...?
 
வாங்க..தமிழ்பிரியன்! பாத்து நாளாச்சு.
சுகம்தன்னே? கமிஷனிலே உங்களுக்கு எத்தனை பர்சண்ட் வேணும்?
 
நன்றி! திவா!
நீங்கள் சொன்னதை அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு முயற்சிக்கிறேன்.
சிரிப்பு வந்துச்சா..? நல்லது.
 
வாங்க..வாங்க..நிலா அப்பா!
நிலாக்குட்டி நல்லாருக்கா? என் பதிவுக்கு ஃபாலோயரா வந்துட்டு ஏன் ஓடி விட்டாள்? வரச்சொல்லவும்.
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி!
பதிவு எழுதி பிரசுரிப்பதைத் தவிர மற்ற விஷயங்கள் கொஞ்சங்கொஞ்சமாக
படித்து வருகிறேன். இது ஒன்றுதான் ஆட்டம் காட்டுகிறது. அதையும் வெற்றி கொள்வேன். சேரியா?
 
நானானி, மாமன்மகள் படத்தில வர கரடி இங்க வந்துடுத்தே!!!
சூப்பர்சூப்பர்.

கரடியை விட கூட நிக்கிற செல்லம்தான் நல்லா இருக்கு:)
வாழ்த்துகள்மா.
 
போட்டியில் உங்கள் படத்தை காணவில்லையே???
 
அன்பின் நானானி

இந்த வயதிலும் கற்றுக் கொள்ளும் ஆசை - ஆர்வம் பாராட்டத் தக்கது

நானும் நெரெயக் கத்துக்கணும் - எங்கே நேரமிருக்கு ?

நல்வாழ்த்துகள் - செல்லத்துக்கு
 
வாங்க வல்லிம்மா! ரொம்ப நாளாச்சு பதிவிட்டு! அதா மெரட்டாலாமுன்னு வந்தேன். செல்லம் பயப்படாமல் வந்து நின்னது!
 
முதல் வருகையா...ஓவியா? நன்றி! போட்டிக்கு நான் அனுப்பினால்தானே?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]