Saturday, November 15, 2008

 

ரங்கோலியில் ரங்கநாதர்

போன மாதம் நவராத்திரி சமயம் திலியிலிருந்தேன்....அதாங்க! செல்லமாக திருநெல்வேலி!!!
அப்போது அண்ணி,'என்னோட சில வீடுகளுக்கு கொலு பாக்க வர்ரீயா?'னு கேட்டார்கள்.
சுண்டல் தின்ன கூலியா? ரெடினு கிளம்பீட்டேன்.
வீடுகளிலெல்லாம் ரெகுலர் கொலுதான். சுண்டல் பாக்கெட்+சூவீட் பாக்கெட், தாம்பூலம் வாங்கிக் கொண்டு நாங்கள் போய் சேர்ந்த இடம்....திருநெல்வேலி சாரதா காலெஜ்! காலேஜில் கொலுவா?
வியந்த என்னை இன்னும் வியக்கலாம் வா! என்று ஊருக்கு வெளியே இருட்டு கசமாயிருந்த
இடத்தில் கார் கேட்டுக்கு உள்ளே வெகு தூரம் சென்று கல்லூரி வளாகத்தில் இருந்த கோவிலருகே சென்று நின்றது.
உள்ளே சென்றதும், அம்மன் சந்நிதிக்கு இரு புறமும் படி அடுக்கி அழகாக கொலு வைத்திருந்தார்கள். சந்நிதிக்கு எதிரே கண்ட ரங்கோலிதான் கண்ணைக்கவர்ந்தது.

பாற்கடலில் ஆதிசேஷனின் பஞ்சு மெத்தையில் அவரே குடையும் பிடிக்க
பள்ளி கொண்ட பெருமாள் கண்களில் அருளும் குறும்பும் வழிய செவ்விதழ்களில் கவர்ந்திழுக்கும் காந்தச் சிரிப்புமாக ஆனந்தமாக சயனத்திருந்தார். காலடியில் மகாலட்சுமி பாந்தமாக பெருமாளின் காலைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அற்புதமான காட்சி!!!
சிலையோ பெயிண்டிங்கோ அல்ல ரங்க..ரங்க..ரங்கோலியில்தான் இந்த கண்கொள்ளாக் காட்சி!

வியந்து வியந்து பல கோணங்களில் அனுமதியோடு எடுத்த படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே சமர்ப்பிக்கிறேன்.

யார் வரைந்தது...எப்படி...எத்தனை பேர்..எவ்வளவு நேரம் பிடித்தது? என்று கேள்விக் கணைகளால் அங்கிருந்த பெண் சன்யாசி ஒருவரைக் கேட்டேன். சேலம் சாரதா காலேஜில் ஒவ்வொரு வருடமும் இது போல் நவராத்திரி சமயம் ரங்கோலி வரைவார்களாம். அது போல் இங்கும் செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டு அங்கே வழக்கமாக ரங்கோலி போடுபவரையே
இங்கும் வரவழைத்து போட வேண்டும் என்று கேட்டார்களாம்.

சாரதா காலேஜின் பழைய மாணவியான அவர் தற்போது திருமணமாகி பாண்டிச்சேரியில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டு அவரையே நேரிடையாக அணுகி விருப்பத்தை தெரிவித்தபோது மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்.

பாண்டிச்சேரியிலிருந்து மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் திருநெல்வேலி சென்றடைந்திருக்கிறார். ஓய்வு எடுத்து கொண்டு காலையில் ஆரம்பிக்கலாமே என்று கல்லூரி பொறுப்பாளர்கள் சொன்னதுக்கு இல்லயில்லை உடனேயே ஆரம்பித்துவிடுவதாக சொன்னாராம்.

உடனேயே ஆரம்பித்து இரவு முழுவதும் இடைவிடாமல் தூங்காமல் விடியும் போது முடித்திருக்கிறார்.

கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுக்கிறேனோ? கண்டிப்பாக இல்லை. கட்டாயம் பாராட்டப் பட வேண்டிய ஓர் அற்புதமான கலைஞர் ஒருவரை முறையாக அறிமுகப் படுத்தி கொண்டாட வேண்டுமல்லவா? அதற்காகத்தான். காரணம்...இரவு முழுவதும் தன்னந்தனியாக உதவிக்கு ஒருவரும் தேவையில்லாமல்...வேண்டாமல் சாக்பீஸ் கொண்டு எவ்வித ஸ்கெட்ச்சும் போட்டுக் கொள்ளாமல் மேலிருந்து கீழாக ரங்கோலியாகவே போட்டுக் கொண்டு வந்து முடித்தாராம்.

தன் கையெழுத்தை அழகாக போட்டிருக்கும் மாலதி என்பவர்!!பொருத்தமான பெயரல்லவோ?
அரங்கன் அவர் மனதில் உறங்காமல் பதிந்தால் அல்லவோ இது சாத்தியமாயிற்று!!!

'ஏன் பள்ளி கொண்டீரய்யா?' என்று நாம் கேட்டால்..'மாலதி கையால் உங்களுக்கெல்லாம் தரிசனம் தரத்தான்!' என்பாரோ?

Labels:


Comments:
not for publishing ...

naananimmaa,

the artist is s. malathi right ?

not mithili ... am i wrong ??
 
நானானிம்மா,

அருமையான படங்கள் மற்றும் செய்தி. கல்லூரியில் ரங்கோலி என்றவுடன், குமரிகள் பலரின் கைவண்ணமாக இருக்கும் என நினைத்தேன். ஒரே ஒருவர் என்றவுடன், நான் அடைந்த அதிசயத்துக்கு அளவில்லை !!!! பில்டப் எல்லாம் இல்லை, நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். உங்களையும் சேர்த்து தான், இந்த அழகிய ரங்கோலி ஓவியத்தை எங்களுக்காக வித விதமாய் படம் பிடித்ததற்கும் சேர்த்து.
 
not for publishing too ...

நேரம் கிடைக்கும் போது வந்து வாசித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/11/blog-post.html
 
ஓவியத்தில் கூட இப்படி கொண்டு வரமுடியுமா என தெரியவில்லை.
ரொம்பவும் அழகான ரங்கோலி கோலம். வரைந்தவர் பெயர் மாலதி என்று படத்தில் இருக்கிறது. பதிவில் மாற்றிக் கொள்ளுங்கள்.
 
நன்றி!!சதங்கா! எல்லாத்துக்கும் சேர்த்து.
உண்மையில் பாராட்ட வேண்டிய ஒன்றுதான். பல குமரிகள் சேர்ந்திருந்தால் இவ்வளவு அருமையாக வந்திருக்குமா என்பது சந்தேகமே!!
 
அனானி! சுட்டியமைக்கு நன்றி!
 
அனானி! சுட்டியமைக்கு நன்றி!
 
கை தேர்ந்த ஓவியராக இருப்பார்போலவே அற்புதம் அற்புதம்.. அதை கோலமாவில் போட அதும் ஸ்கெட்ச் இல்லாமல் ..என்றால் சூப்பர்.
 
அற்புதமாக வரைந்திருக்கிறார்கள்.. பகலாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக புகைப்படம் எடுத்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.
 
ரங்கநாதர் பேரைப்பார்த்ததும் ஓடிவந்தேன் இங்க அவரை ரங்கோலில பார்த்ததும் அசந்துபோனேன்! எவ்ளோ தத்ரூபமா இருக்கு!அந்த மாலதிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்... அரங்கன்இந்தக்கோலத்திற்காகவே அரங்கத்தில் சயனித்திருக்கிறானோஎன்னவோ? அற்புதம் நானானி இந்தமாதிரி கலைஞர்களை வெளிச்சமிட்டுக்காட்டணும். நல்ல காரியம் நீங்க செஞ்சது. பாராட்டுக்கள்!
 
கயல்விழி முத்துலெட்சுமி!!உங்களைப்போலவே நானும் வியந்ததால்தான் பதிவுலகத்துக்கும் கொண்டு வந்தேன். பாராட்டுக்கு நன்றி!
எல்லா பாராட்டும் மாலதிக்கே!!!
 
நன்றாக படமெடுக்க ரங்கோலியைச் சுற்றியிருந்த தடுப்புக்குள் சென்று படமெடுக்க அனுமதித்தார்கள். மேலும் ஒரு நாற்காலி தந்து(பதவி இல்லை)அதில் ஏறி படம் பிடிக்கவும் உதவினார்கள். அவர்களுக்கு என்நன்றி!
பகலில் எப்படியிருந்திருக்கும் என்று தெரியவில்லை, தமிழ்பிரியன்! என் கேமராவுக்கு இவ்வளவுதான் முடியும்போல.
 
ஓடோடி வந்ததுக்கு நன்றி! சைலஜா!
அரங்கன் தரிசனம் அற்புதம்தானே?
உங்கள் பாராட்டுகள் முகம் தெரியாத அந்த மாலதிக்குப் போய்ச் சேரட்டும்!!!
 
ரங்கநாதரின் அருளால் இவ்வாண்டின் நூறாவது பதிவை எட்டி ரங்கநாதரையே ரங்கோலியில் காட்டி அசத்தியிருக்கிறீகள் நானானி.

சதத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மீ த ஃபஸ்ட்டாக:))!

மாலதிக்கும் என் பாராட்டுக்கள்.

காணக் கிடைத்த அற்புதக் காட்சிகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே சிரத்தையுடன் [சிரமம் பாராமல் நாற்காலியில் எல்லாம் ஏறி] படங்கள் எடுத்தளித்தமைக்கும் நன்றிகள் பல.
 
மிக அற்புதமாய் இருக்கிறது. அதுவும் ஓரிரவில், சாக்பீஸ் இல்லாமல், அப்ப்ப்ப்ப்ப்பா! படுத்திருந்த திருக்கோலத்தில், அந்த கழுத்து ஆரம் மெல்ல நழுவி, அதற்குத் தான் இந்த பின்னூட்டம்: பிரமாதம்!

பெரிய ரங்கோலி, தரையில் இருந்தமையால், புகைப்படம் முழு ரங்கோலி காணக் கிடைக்கவில்லை போலிருக்கிறது.

ரங்கோலியையும் விவரங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி!
 
திருமதி மாலதி அவர்கள் தன் கவனம் சிதறாமல் இருக்கவே தனியாக இரவு விழித்திருந்து, வண்ணப்பொடிகளால் 8 அடி விட்டத்திற்கு அழகிய வட்ட ஓவியம் வரைந்திருக்கிறார்
அதை நீங்கள் ரசித்த விதம் அழகு. இன்று உலகிற்கே சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி.
சகாதேவன்
 
2008-ன் நூறாவது பதிவா? சந்தோஷம்!ராமலஷ்மி! பிறகுதான் கவனித்தேன்.
விழா எடுக்காமலே பாராட்டியதுக்கு நன்றி! என்னோடு அண்ணன் பேரன் விக்ரமும் வந்தான். அவனும் தன் கேமராவில் சுத்தி சுத்தி எடுத்தான்.அவன் கேமராவில் இன்னும் கூர்மையாக வந்திருக்கிறது. அவற்றையும் தருகிறேன். பாருங்கள்!
 
ஆமாம்! கே.கெ.பிக்குணி!
தரையில் இருந்ததால்தான். ஒருவேளை ப்ரொபஷனல் பகைப்படக்காரராக இருந்தால், அதுவும் தயாராகப் போயிருந்தால் முடிந்திருக்கும். எனக்கும் இது எதிர்பாராமல் கிடைத்தது, அரங்கன் அருளால்.
 
சரியாகச் சொன்னீர்கள்! சகாதேவன்!
 
நானானியின் பதிவைக் காணவில்லையே என்று காத்திருந்ததற்கு அரங்கநாதனைக் கண்ணில் காட்டி WORTH WAITING என்று நிரூபித்து விட்டீர்கள்
 
அடங்கலை போல நம்ம ரங்கன்!

கெமெரா ஃபிரேமுக்குள்ளேன்னு சொல்ல வந்தேன்.

அட்டகாசமா இருக்குப்பா. மாலதியின் கைவண்ணத்தை,
இங்கே எங்கள் கண்களுக்கும் கொண்டுவந்ததுக்கு ரொம்ப நன்றி.

மாலை வரைஞ்ச மாலதி நல்லா இருக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.
 
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்,
எல்லோர்
அகத்திலும் இருப்பார்
அரங்கத்திலும் இருப்பார்
அந்த ரங்கநாதர்
ரங்கோலியிலும் வருவார்.
 
'ஏன் பள்ளி கொண்டீரய்யா?' என்று நாம் கேட்டால்..'மாலதி கையால் உங்களுக்கெல்லாம் தரிசனம் தரத்தான்!' என்பாரோ?

NICE

EXCELLENT RANGOLI,
 
அடங்காத அரங்கனையும் என் ப்ரேமுக்குள் முடிந்தவரை அடக்கியிருக்கிறேன். துள்சி..உங்க வாழ்த்து மாலதிக்குக் கொண்டு போய் சேர்ப்பான் ரங்கன்!!!
 
மாலதியின் கை வண்ணத்திலும் இருந்திருக்கிறார்!!!கோமா!
 
முதல் வருகைக்கு மிக்க நன்றி! அமிர்துவின் அம்மா!
 
அன்பின் நானானி,

அருமையான அரங்கன் படம் - ரங்கோலியில் - வரைந்தவரின் திறமை பாராட்டுக்குரியது. மாலதி இரவு முழுவதும் கண் விழித்து, ஸ்கெட்ச் இல்லாமல் நேரிடையாக ரங்கோலியாகவே வரைந்து, இவ்வளவு பெரிய படத்தினை தத்ரூபமாகத் தந்தது அரங்கனின் கருணையால் தான்.

நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள் மாலதிக்கும் அவரது ரங்கோலியை வெளிச்சமிட்டுக் காட்டிய நானானிக்கும் ( விக்ரமுக்கும் தான் )
 
அட இது நூறாவது பதிவாமே - அரங்கனின் அருள் பூரணமாக இருக்கிறது. நல்வாழ்த்துகள்

பார்ட்டி எப்போ - ( அடை வேற பாக்கி இருக்கு )

ம்ம்ம்ம்ம்ம்ம்
 
மிக்க நன்றி சீனா! விக்ரமனின் படங்களும் விரைவில் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
 
நூறாவது பதிவுக்கு வாழ்த்திய சீனாவுக்கு நூறு நன்றிகள்!!!
அடையோடு கூடிய ட்ரீட் கட்டாயம் உண்டு!
கிள்ளிப் போட்டதா? அள்ளிப் போட்டதா? அதையும் சொல்லிப்போடுங்க!
 
அன்போட நானானி கிள்ளிப் போட்டாலென்ன அள்ளிப் போட்டாலென்ன - திங்கறதுக்கு நாங்க ரெடி
 
அப்ப நானும் ரெடி!!
 
ரொம்ப நல்லாயிருக்கு
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]