Thursday, September 4, 2008

 

பால்கோவா - AMC cookware-ல் சமையல் குறிப்பு

AMC- சமையல் பாத்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
'இது ஒரு ஜெர்மன் தயாரிப்பு. சர்ஜிகல்
மெட்டல், அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தாலானது.
விரைவாக சூடேறும். அதே நேரம் சமையல் எண்ணையும் எரிவாயுவும் குறைவாக செலவாகும்.
என்ணையில்லா சமையலுக்கு ஏதுவானது.' இப்படியெல்லாம் வாசல் கதவைத்தட்டி, டைகட்டிய
ஸேல்ஸ் பர்சன் ஒருவர் வந்து விரிவுரை ஆற்றி கவிழாத ரங்கமணியையும் கவிழ்த்துவிட்டார்.
வழக்கமாக இப்படி வருவோரை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட வைப்பவர். இப்போது 'வாங்கலாமே!' என்று முடிவெடுத்துவிட்டார்.வந்தவரும் கடைசி வரை விலையைச் சொல்லாமல் பயன் பாடுகளை அழகாகச் சொல்லி 'பரவாயில்லை! இந்த விலை கொடுக்கலாம்.' என்று முடிவெடுக்க வைத்துவிட்டார். ரங்கமணியைப் பற்றித் தெரிந்ததனால் ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். வாங்கலாம் என்றதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.

வாங்கி உபயோகித்ததும் அவர் சொன்னது எதுவும் பொய்யில்லை என்று உணர்ந்தேன்.
அந்த AMC பாத்திரத்தில் செய்ததுதான் இந்த பால்கோவா!!

தேவையானவைகள்
பால் - இரண்டு லிட்டர்
சர்க்கரை - அரைக் கிலோ
பாம்பே ரவை - 200 கிராம்
குங்குமப்பூ - 2 பிஞ்
நெய் - 50 கிராம்
பச்சைக் கற்பூரம்

கிண்டலாமா

பாலை ஏஎம்சி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும். மூடியிலுள்ள
மீட்டரில் சிவப்பு பாயிண்டுக்கு வந்ததும் மூடியை எடுத்துவிட்டு கொதிக்கவிடவும். இடையிடயே
கிண்டவும். இந்த பாத்திரத்தில் மற்ற பாத்திரங்களைப்போல் அடி பிடிக்காது. ஓரங்களில் பால் சேராமல் கிண்டிக்கொண்டேயிருக்கவும். பச்சைக் கற்பூரத்தை உள்ளங்கையில் வைத்து நசுக்கி உதிர்த்து பாலோடு சேர்க்கவும்.

பால் பாதி சுண்டியதும் குங்குமப்பூவையும் ரவையையும் போட்டு கட்டி விழாமல் கிளரவும்
ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து விடாமல் கிண்டவும்
பாலும் ரவையும் சேர்ந்து சுருள, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

தேவையான பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். ரவை பால்கோவா தயார்.
இனிப்புகளில் பச்சைக் கற்பூரம் சேர்ப்பது பற்றி சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
அப்பாவிடம் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரசனை போன்ற பொருட்கள்
ஸ்டாக் இருக்கும் எங்களுக்குத்தேவையான போது அப்பாவிடம் போய் வாங்கிக் கொள்வோம்.
குங்குமப்பூ அளந்து தருவதே ஓர் அழகு. சின்ன தராசில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தை
ஒரு பக்கமும் அந்த ஒரு ரூபாய் எடைக்கு குங்குமப்பூவும் நிறுத்து இன்ஜெக்ஷன் பாட்டிலில்
போட்டு தருவார்கள். கடையில் அதன் விலையும் தெரியாது. அப்பா காலத்துக்குப் பிறகுதான் குங்குமப்பூவின் விலையே தெரிந்தது. பச்சைக்கற்பூரமும் ஒரு சிறிய பாட்டிலில் தருவார்கள்.பச்சைக் கற்பூரத்தை சேர்க்கும் காரணமே தெரியாமல் அப்பா சொன்னதால் உபயோகித்துக்கொண்டிருந்தோம். காரணமும் கேட்கத் தெரியாது. அதிக இனிப்பு சாப்பிடுவதால்
ஏற்படும் சர்க்கரை நோயை மட்டுப்படுத்தவே இனிப்பில் பச்சைக் கற்பூரம் சேர்க்கிறோம்
.


இந்த ரவை சேர்த்து பால்கோவா செய்யும் முறையை எனக்கு சொல்லித்தந்தவர் என் மதனியின்
சகோதரி திருமதி மணி. அவர் செய்து கொடுத்ததை ருசித்தவுடன் பக்குவம் கேட்டு தெரிந்து கொண்டேன். பால்கோவாவில் பால் தவிர என்ன சேர்ந்திருக்கிறது என்று கேட்ட போது
எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்!!!

என்னாத்த கண்டுபிடிக்க..? அதான் அப்பன் குதிருக்குள் என்று தான் சொல்லிட்டயே?

Labels:


Comments:
காஸ்ட்லியான பாத்திரத்தில் சுலபமான அல்வா செய்யக் கற்றுத் தந்த நானானியின் ஒரு டச் இந்த ரெசிபியில் குறைந்தது .கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
 
காஸ்ட்லியான பாத்திரத்தில் சுலபமான அல்வா செய்யக் கற்றுத் தந்த நானானியின் ஒரு டச் இந்த ரெசிபியில் குறைந்தது .கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
 
யார் கண்டு பிடிக்கிறாங்களோ அவங்களுக்கு ,"அல்வா ஒரு பார்சல்...."
 
கொஞ்சம் அனுப்பமுடியுமா? :-)
 
அ!டச்!அ!டச்! அது என்னாங்கடா..டச்?
உப்பு எல்லாம் அளவாகத்தானே போட்ருந்தேன்?
 
பார்சல் நீங்கதானே அனுப்பப்போறீங்க?
கோமா? அப்ப சேரி!!!!
 
//கொஞ்சம் அனுப்பமுடியுமா? :-)//

சாப்பிடத்தானே வடுவூர் குமார்?

அப்பாட! நான் என்னமோ நெனச்சேன்.
கட்டாயம் அனுப்புகிறேன்.
 
கண்டு பிடிச்சாத்தானே....பார்சல்.
இல்லாங்காட்டி நான் தரமாட்டேன்
 
கண்டு பிடிச்சாத்தானே......அல்வா பார்சல்.
இல்லாங்காட்டி நான் தரமாட்டேன்...
 
[குங்குமப்பூ இரண்டு பிஞ்....]குங்குமப்பூ இரண்டு 'கிள்ளு கிள்ளிக்கோங்க‌'ன்னு எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.என்னைக் கிள்றதுக்குள்ளே எஸ்கே....ப்
 
சூப்பர்.

ஆமாம்...முக்கியமான ஒன்னைக் காணோமே.....

பத்திரம் என்ன விலை?
 
ரவை சேர்த்து செய்யும் போது பிறுபிறுவென கூடுதல் சுவை இருக்கத்தான் செய்யும் நானானி. ட்ரை பண்ணுகிறேன்.

கோமா, இதில் இல்லாத நானானி டச் இதுவா சொல்லுங்க. அழகா சின்னச் சின்னக் கிண்ணியிலே ஸ்பூனுடன் பரிமாறி "கம் ஆன், டேக் இட் அண்ட் டேஸ்ட் இட்"னு சொல்லுவாங்களே, அதானே:)! சரி உடல் நலக் குறைவுக்குப் பின் நமக்காக அவசரமா விருந்து வைத்திருக்கிறார்கள். குறையும் இந்த டச் ஓஓக்கேம்மா என்றாலும் உங்க போட்டிக்காகப் பதில் சொல்லியிருக்கிறேன். சரிதானா? சரியில்லை என்றால் ஒரு கிலோவுக்குப் பதில் அரை கிலோ பார்சல் அனுப்புங்க:), பரவாயில்லை.[நம்ம ஊர் அல்வாதானே:)?]
 
கோமா!
அது என்ன டச்னு என்னோட டச்சையே
கேட்டேன். அதுக்கு என்ன மூடோ, 'டோண்ட் டச்!'ன்னு நச்சுனு சொல்லிட்டது. இப்ப நான் என்ன செய்ய? எனக்கு வேண்டாம்..பார்சல் எனக்கு வேண்டாம்.'
 
This comment has been removed by the author.
 
வாங்க..வாங்க..துள்சி! சமையல் பதிவுக்கு வரலையேன்னு பாத்தேன்.
பால்கோவா மாதிரி செய்த பாத்திரத்தின் விலையும் சூப்பர்தான்.
இது ஒரு பேஸிக் செட். செட்டில் என்னவெல்லாம் இருக்கும் என்று தனிப்பதிவேபோடுகிறேன்உங்களுக்கெல்லாம் தெரியுமென்று பார்த்தேன். தெரியாதா? அப்ப காலரை...அடட! எனக்கு ஏது காலர்..கழுத்தையே தூக்கி விட்டுக்கெல்லாம் போல!!!
 
ரொம்ப டச் பண்ணிட்டீங்க நானானி
 
எனக்கு அல்வா பிடிக்காது..கோமா!
நிஜம்மா...! ஆனால் கொடுக்கப் பிடிக்கும்!ஹி..ஹி..!
 
Hi Nananee ,
I use condensed milk and I do it in microwave but I dont get the grainy texture like the local sweet shop.May be I'll try your recipe for authentic taste n texture.
-Swapna
 
hai! swapna! i think it's not authentic, but something innovative! do try it and tell me!
 
இரண்டு நாள் ஊரில் இல்லையே? பால் கோவா நல்லா இருக்குமா?... பால் கோவா எனக்கு ரொம்ப பிடிக்கும். செய்ய அந்த பாத்திரத்தை மட்டும் பார்சம் பண்ணி விட்ருங்கம்மா... :)
 
வாரும்..வாரும் தமிழ்பிரியன்! பால்கோவா நாலுநாள் வெளியே இருந்தால் நல்லாருக்கும்...நாலு வாரம் பிரிட்ஜிலிருந்தால் கெடாமலிருக்கும்.
பால்கோவாவை விட பாத்திரம் ருசியாயிருக்குது போல...எடுத்துக்கோங்க.
 
நானானி அம்மா,

நலமா?

ரவை சேர்த்துப் பால்கோவா...புதுசா இருக்கு எனக்கு.

தமிழ் பிரியன் 2 நாள் தான் லேட்...
நான் 9 நாள் லேட்...:D :D

ஃப்ரிட்ஜில் இருக்குல்ல(4 வாரம் நல்லா இருக்கும்னு சொன்னீங்களே)...எனக்குப் பாத்திரத்தோட பார்சல் ...:))
 
நானானி,பாத்திரமும் பச்சக் கற்பூரமும் நல்ல பயனுள்ள குறிப்புகள். திரட்டிப் பால் மாதிரி டேஸ்ட் வருமா இதில?
கோமா, இதில சேரியா என்கிற வார்த்தையை விட்டுட்டாங்க. சரியா:)
 
we are using this AMC for the past two years.

The top recipe is biriyani without oil.
 
புதுத்தேனீ...ஏன் இவ்ளோ லேட்?
பூக்களில் மது அருந்திய மயக்கமோ?
ஆமா....!பதார்த்தங்கள் செய்து பிரிட்ஜில் வைத்து, 'நல்லாருக்கா...கெட்டுப் போச்சான்னு பாக்கவா செய்கிறோம்? சாப்பிட்டு காலி பண்ணத்தானே? ஸோ..அன்று செய்தது...காலி.......!
அடுத்து செய்யும் போது தமிழ்பிரியனுக்கும் உனக்கும் பார்சல். சேரியா? ஆங்..!பார்சல் வித்தவுட் பாத்திரம்..ஹி..ஹி..!
 
வல்லி!! எனக்குத் தோணலையே! டச்சிட்டீங்க!!
கோமா......! வல்லிம்மாவுக்கு ஒரு இருட்டுக்கடை அல்வா பார்சல்!!!!
 
நீங்க சொன்னது ரொம்ம சரி..பெருசு!!
எண்ணையையும் எரிபொருளையும் நிறைய மிச்சம் பிடிக்கலாம். அப்பாட!!AMC உபயோகிக்கும் ஒருவராவது பின்னூட்டமிட்டீர்களே!!மிக்க மகிழ்ச்சி!அதுவும் முதல் வருகைக்கு.
 
எங்கூர்லே எங்கே கிடைக்குமுன்னு தேடிக்கிட்டு இருக்கேன்.

ஸ்பெஷாலிட்டி கடைகளில் தேடிட்டுச் சொல்றேன்.

ஏற்கெனவே வேற ஒரு செட் (கொஞ்சம் காஸ்ட்லியாப் போச்சு)வாங்கி உள்ளே உக்கார்ந்துருக்கு.
 
iruttuk kadaiyil power cut.
light vandhathum parcel varum OK vaa?[cheyriyaa]
 
iruttuk kadaiyil power cut.
light vandhathum parcel varum OK vaa?[cheyriyaa]
 
துள்சி! இந்தப் பாத்திரமும் கும்பகர்ணன் மாதிரி தூங்கிக் கொண்டுதானிருக்கும். அப்பப்ப எழுப்பி
உபயோகித்த பின் மறுபடி தூங்க வைத்துவிடுவேன். உங்கள் தேடலின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!!
 
கோமா! வல்லி கண்டுபிடித்தது 'சேரிதானே?' அப்பண்ணா...இருட்டு முன் இருட்டுக்கடைக்குச் சென்று அல்வா வாங்கி விடுங்கள். சேரியா?
 
mm..yummy!!
india-la kidaikuma..intha cookware?
 
[குங்குமப்பூ இரண்டு பிஞ்....]குங்குமப்பூ இரண்டு 'கிள்ளு கிள்ளிக்கோங்க‌'ன்னு எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.என்னைக் கிள்றதுக்குள்ளே எஸ்கே....ப்."

ரெண்டு பின்ச்'ரெண்டு கிள்ளு.கிள்ளி எழுதாமல் விட்டதுதான் நானானியின் பாணி மிஸ்ஸாகிறது என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டேன் .இருந்தாலும் வல்லிசிம்ஹன் கணிப்புக்குப் பரிசு காத்திருக்கிறது.விலாசம் தரவும்..
 
சந்தனமுல்லை!
AMC பாத்திரம் சென்னையில் கிடைக்கும்.
டிநகரில் ஷோரூம் உள்ளது.
 
அன்பின் நானானி

அருமையான பால்கோவா பதிவு - நாக்கில் நீர் ஊறுகிறது - 32 மறுமொழிகளிலும் பாத்திரத்தின் விலை தெரியவில்லை

ம்ம்ம்ம்ம்ம் - சொல்லலாமெனில் சொல்லலாமே

சேரியா
 
சீனா!!33-வது பின்னூட்டத்துக்குப் பிறகு
விலையை சொல்ல வேண்டியதுதான்.
நான் வாங்கியது பேஸிக் செட். இதில் என்னவெல்லாம் உண்டு என்று தை பதிவில் படங்களோடு தருகிறேன். அதன் விலை அப்போது ரூபாய் 13.000/. சேரியா?
 
பாத்திரமும் பால்கோவாவும் மிக அருமை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]