Friday, August 15, 2008

 

ஆகஸ்ட் ரெண்டாவது PiT...


கலக்குவேன்...கலக்குவேன்...முக்கோணம் கட்டி கலக்குவேன்.
மில்வாக்கி மியூசியத்தில், மியூசியம் போகும் பாதையின் ஒரு பக்கத்தில் இது மாதிரி அயில் அயிலாக இடையில் அமர்ந்து கொள்ள பெஞ்சுகள்.இங்கிருந்து பார்த்தால் அழகான லேக் வியூ கிடைக்கும். ஒவ்வொரு அயிலின் இடையிலும் நின்று படமெடுத்த்டுக்கொண்டோம். அதில் தூ...ரத்தில் நின்று எடுத்தது.

அதே மியூசியத்தில் சென்டர் ஹால். கீழே தெரிவது பிரதிப்பலிப்புத்தான்.
மியூசியத்தைப் பற்றி பதிவாகப் போட நினைத்திருந்தேன். அதற்குள் 'தலைப்பில்லாப் படம்'
போடலாமென்றார்கள். போட்டுட்டேன்.

இரண்டு பிட்டும் பார்வைக்குத்தான், போட்டிக்கல்ல
காரணம் நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க. சேரியா?

Labels:


Comments:
இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.....ஓடு மீன் ஓட .....வாடி இருக்குமாம் கொக்கு, கேள்வி பட்டிருக்கிறீர்களா ......நான் இந்த 11 pm க்காகத்தான் காத்திருந்தேன்.....சூப்பர் சாய்ஸ்.ALL THE BEST.....
 
அசத்தல். அசத்தல். எங்கே
காணுமே காணுமேன்னு வந்து
பா(கா)த்துக்கிட்டே இருந்தேன்.

இரண்டாவதில் அடிப்பாகம் பிரதிபலிப்பா. இரண்டையும் பற்றி இரண்டிரண்டு வரிகள் சொல்லிடுங்களேன்.

வாழ்த்துக்கள்.
 
அப்படியே அந்த பொருட்கள் என்னவென்று சொல்லியிருந்தால் செளகரியமாக இருந்திருக்கும் .....இப்போ மண்டை காயுது...தூக்கம் போச்சுடி[ங்க] யம்மா...
 
just checked your snap is not registered in PIT...only few more mnts left[not for publishing]
 
ஆகா கடைசி கட்டத்தில் பதிவு போடுறீங்க... இது எங்க எடுத்தது... அழகா இருக்கே... :)
 
என்னங்க அது கருப்பா என்னமோ படத்துல?நான் முதல் தவணையே இப்பத்தான் ஒட்டவச்சுட்டு வாறேன்.அதுக்குள்ள இரண்டாவதா?கடைசி தேதி ஆகஸ்ட் 25தானே சொன்னாங்க?
 
தாங்ஸ்! கோமா!
ஏதோ ரெண்டு மீன்களைக் கொத்திவிட்டேன். பிட்டிலே இருக்கோணுமல்லோ?
 
அழகா இருக்கு நானானி.. முதல்படம் கொஞ்சம் சாய்த்து எடுத்திருக்கீங்களா?
 
சொல்லீட்டேன், ராமலஷ்மி!
படம் போட்டதும், டபுள் க்ளிக் பண்ணியதில்...அவசரக் குடுக்கை மாதிரி, படங்கள் மட்டும் பிரசுரமாகிவிட்டது. எனக்கு ஒரே சுரமாகிவிட்டது.
 
கோமா!
இப்போ மண்டை குளிர்ந்துவிட்டதா?
இன்று ராத்திரி...யம்மா...நல்ல தூக்கம் வருமே யம்மா!!!
 
இந்த முறை நான் போட்டியில் இல்லை.
இவையாவும் உங்கள் பார்வைக்கு மட்டுமே....'பார்வை ஒன்றே போதுமே...'
 
நேரமின்மைதான் காரணம், தமிழ்பிரியன்!!நீங்கெல்லாம் என்னைத் தேடுவீங்ன்னுதான் நட்ட நடுராத்திரியில்
'அடிறா மேளம்..புடிறா பிட்டை'ன்னு
ஓடிவந்துட்டேன். சேரியா?
 
எங்கே எடுத்ததுன்னும் விபரமும் போட்டுவிட்டேன், தமிழ்பிரியன்!!
 
அப்படித்தான் இப்ப தெரியுது கயல்விழி முத்துலெட்சுமி!!
பிட்டடிப்பேன்னு அப்ப தெரியாதே?
இனி உஷாரா இருக்கோணும்.
 
கருப்பா தூரத்தில் தெரிவது ரங்கமணியும் என் மகளும். சும்மாத்தானே கெடக்குதுன்னு ரெண்டாவதும் போட்டுட்டேன்.காசா..பணமா?
25-ம்தேதி முடிவுகள் அறிவிப்பு. ராஜ நடராஜன்!!!
 
//இரண்டு பிட்டும் பார்வைக்குத்தான், போட்டிக்கல்ல
காரணம் நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க. சேரியா?//

நேரமின்மை அதை நீங்க சொல்லிட்டீங்க. அப்புறம் பெருந்தன்மை அதை நான்
சொல்லிட்டேன்!

ச(சே)ரிதானா:)?
 
என்னப்பா நானானி,
ஏன் போட்டிக்கு அனுப்பக் கூடாதுன்னு ஒரு வரி போடலாமே. ரெண்டுமே நல்லா இருக்கு.

பச்சை நிறம் கட்டம் கட்டி கண்ணில் உலாவுதே:)
 
நேரமின்மை அது நான் சொன்னது.
பெருந்தன்மை இது நீங்க சொன்னது,
ராமலஷ்மி!!பெரியபெரிய வார்த்தையெல்லாம் கூடாது.
இப்ப என் பாஷையில் சொல்லவா?
'நான் கலந்துகிட்டா ஏகப்பட்ட பேர் ஏமாந்துடுவாங்களே...அப்படின்னுதான்
கலந்துக்கலை!!'இது எப்படியிருக்கு?
 
வாங்க..வாங்க..வல்லி!
நல்லாருக்கீங்களா?
'அப்பனை குதிருக்குள்ளேருந்து வெளியே விடு'-ங்குறீங்க? விட்டாப்போகுது. வேறொண்ணுமில்லை.
நேரமின்மை...பெருந்தன்மை..களுக்கிடையே நான் சொல்வது 'அறியாமை'
நாளும் நேரமும் படத்திலிருந்து எடுக்க இன்னும் கத்துக்கலை. அப்புடுதேன்!!
ஒவ்வொரு முறையும் நினைப்பேன்..பிறகு பாத்துக்கலாம் என்று ஒதுக்கிவிடுவேன். பிட்டுக்குப் படம் போடும்போது அடடா..ன்னு முழிப்பேன். க்ராப் செய்தால் படத்தின்
முழுமை கெட்டுவிடும் என்று விட்டுவிடுவேன். இதுதான் சமாச்சாரம். என் தங்கை பின்னூட்டத்தில் வழி சொல்லிக்கொடுத்தாள். ஆனாலும்...!
அடுத்த பிட்டுக்குள் தெரிந்து கொள்வேன். சேரியாப்பா?
ரொம்ப நன்றிப்பா!!வல்லி!!
 
இந்த adobe foto shop ...CROPping வேலையை முன்பே செய்து பதிந்திருந்தால் ,நானானி படம், ஐந்தில் ஒன்றாகியிருக்கும்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]