Friday, August 1, 2008

 

மனமெனும் சிம்மாசனம்

மனமெனும் சிம்மாசனம்!!

மகளின் கலயாணச் செலவுகளை கணக்குப் போட்டுக் கொண்டிருந்த மாமனார் மாமியார்
இருவரின் உரயாடலை யதேச்சையாக அந்தப் பக்கமாகப் போகும் போது சுமதியின் காதுகலில் விழுந்தது.
'என்னங்க சித்ராவின் கல்யாணத்துக்கு இன்னும் இருபதாயிரம் துண்டு விழுதே! என்ன செய்யலாம்?'

'என்ன நீ? இருபதாயிரம் உனக்கு துண்டு விழுதா? அடி! அசடே! வேட்டியே விழுது'
சீனிவாசனுக்கு எந்தப் பிரச்சனையையும் லேசாக எடுத்ஹ்துக்கொண்டு, வேடிக்கையாகப்
பேசி நிலமையின் கனத்தைக் குறைக்கும் குணமுண்டு. அதனாலேதான் இத்தனை வருடங்களில் இரண்டு பெண்களுக்கும் ஒரே பையன் சுந்தரேசனுக்கும் நல்லபடியாக திருமணம் முடித்து....இப்போது ஓய்வு பெற்ற பின் கடைசிப் பெண் சித்ராவின் கல்யாணத்துக்கு பட்ஜெட் போட்டூக்கொண்டீருக்கிறார்.

'சுந்தரை மறுபடி ஏதாவது லோன் போடச் சொல்லலாமா?'
'வேண்டாம்! ஏற்கனவே நிறைய போட்டுட்டான். அவனை மேலும் தொந்தரவு செய்யக் கூடாது. வேறு வழி யோசிப்போம்.'

மகனுக்கு அதிகம் சிரமம் தரக் கூடாது என்ற அவரது நல்லெண்ணத்தைக் கண்டு சுமதி நெகிழ்ந்து போனாள்.

தங்கள் அறைக்கு வந்த சுமதி ஆபீஸ் ஃபைலில் மூழ்கியிருந்த சுந்தரிடம்,'சுந்தர்! மாமாவும் அத்தையும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். சித்ரா கல்யாணத்துக்கு இன்னும் இருபதாயிரம் தேவையாயிருக்கிறதாம். உங்களை சிரமப் படுத்தாமல் வேறுவழி இருக்கிறதா
என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.' என்றாள். சுந்தரும், ஆமா! அப்பா ஏற்கனவே தன்னோட ரொடையர்மெண்ட் பணம் எல்லாத்ஹ்தையும் கல்யாணச் செலவில் போட்டுட்டார்.
நானும் ஏதாவது யோசிக்கிறேன்!' என்றான்.

சுமதி மெதுவாக....'நான் வேணுமானால் பாங்கில் பர்சனல் லோன் போடட்டுமா?'
'எவ்வளவு போட முடியும்?'
'ஒரு ஐம்பதாயிரம் வரை போடலாம்.' என்றாள்..வெளிநாட்டு வங்கி ஒன்றில் கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலையில் இருக்கும் சுமதி.
'ஓகே! அப்படியானால் ஒரு முப்பதாயிரம் லோன் போட்டு அப்பாவிடம் கொடுத்துவிடு.
மீதியை கல்யாணம் முடியும்வரை பிற செலவுகளுக்கு வைத்துக்கொள்ளட்டும்.' என்று
சொல்லிவிட்டு மீண்டும் ஃபைலில் முகம் புதைத்துக் கொண்டான்.

நாத்தனாரின் கல்யாணச் செலவுகளுக்குத் தவிக்கும் மாமனாரிடம் அவரது பாரத்தைக் குறைக்கும் விதமாக தாங்கள் எடுத்த முடிவைச் சொல்ல அவசரமாக கீழிறங்கிப் போனாள்.
சுமதி விஷயத்தை சொன்னபோது அவர் முகத்தில் பாரம் குறைந்த நிம்மதியும் பரவசமும்
அவளிடமும் பரவின. நெகிழ்ந்து போன சீனிவாசனும் பார்வதியும், 'எவ்வளவு நல்ல மனசம்மா உனக்கு! உன்னை மாதிரி ஒரு மருமகள் கிடைக்க கொடுத்துவச்சிருக்கணூம்.'
என்று சொன்ன போது அவர்களின் உண்மையான அன்பு தெரிந்தது. சுமதியும் சந்தோஷத்தோடு உறங்கப் போனாள்.

கல்யாண் வேலைகள் எல்லாம் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. ஊரிலிருந்து சுந்தரின் சகோதரிகள் இருவரும் குழந்தைகளோடு வந்து கல்யாண வேலைகளில் அம்மாவுக்கும்
சுமதிக்கும் கை கொடுத்தனர். வீடு களைகட்டவாரம்பித்தது. சித்ராவும் முகமெல்லாம் பூரிப்பாக வலம் வந்தாள்.

ஆச்சு..க்ல்யணஹ்துக்கு ஒரு வாரம் இருக்கையில் கல்யாணத்துக்குப் போடுவதாகச் சொன்ன
ஐம்பது பவுன் நகையில் பத்து பவுன் சங்கிலி மட்டும் செய்துவர தாமதமாயிற்று. நகைக்கடையில் கேட்டபோது பதினைந்து நாட்களில் ரெடியாகிவிடும் என்று பதில் சொன்னார்கள். பணியில் இருந்தபோது வேலையில் ரொம்ப கரெக்டாக இருந்தவர் சீனீவாசன். மேலதிகாரிகள் முன்பும் கம்பீரமாக இருந்தவர். இப்போது சம்பந்திகளிடம்
கையைப் பிசைந்துகொண்டு நிற்க மனம் ஒப்பவில்லை. இந்நிலையில் பத்து பவுன்நகைக்கு
என்ன செய்வது?

குழம்பிப்போனார்கள் சீனிவாசனும் பார்வதியும். சுந்தரும் செய்வதறியாது தைகைத்து நின்றான். அவர்களது பெண்கள் இருவரும் தங்கள் நகைகளைத் தருவதாகச் சொன்னார்கள்.
அவரது மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. என்ன இருந்தாலும் அடுத்த வீட்டுக்குச் சொந்தமானவர்கள். ரெண்டு வாரத்தில் நகை கைக்கு வந்துவிடும்....ஆனால் கல்யாணத்தில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்று விரும்பினார்.

அன்று மாலை பாங்கிலிருந்து வீடு திரும்பிய சுமதிக்கு இந்த விஷயம் தெரிந்ததும் சுந்தரிடம் விபரம் கேட்டு அவனது அனுமதியோடு மாமனாரிடம் போய், 'மாமா! இதற்காகவா கவலைப் படிகிறீர்கள்? என்று கேட்டுவிட்டு தன்னோட பத்து பவுன் சங்லியைத் தயங்காது கொடுத்தாள்.
சீனிவாசனும் பார்வதியும் மெய்சிலிர்த்துப் போனார்கள். நீதான் எங்க வீட்டு மஹாலஷ்மி!
என்று கொண்டாடினார்கள். அனைத்தையும் மௌனசாட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர்!

கல்யாண நாளும் வந்தது. வந்தாரை வரவேற்பதும் உபசரிப்பதுமாகவும் இடையிடையே
சித்ராவின் அலங்காரங்களை சரிசெய்வதுமாக பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள் சுமதி.
மனசில் மட்டும் லேசான நெருடல்...மாமாவும் அத்தையும் தன்னைப் பாராட்டும் போது கட்டிய கணவன் ஒரு வார்த்தைகூட பாராட்டாமல்...கண்டுகொள்ளாமல் இருப்பது சிறிதூ
வருத்தமடையச் செய்தது. யார் பாராட்டையும் விட கொண்டவன் பாராட்டுத்தான் ஒரு மனைவிக்கு வாழ்கையில் உற்சாகத்தைக் கொடுக்குமல்லவா? என் குடும்பத்தை உன் குடும்பம் போல் பாவித்து பார்த்து பார்த்து எல்லாம் செய்வது எனக்கு எவ்வளவு சந்தோஷமளிக்கிறது தெரியுமா? என்று சொல்லியிருந்தால் அவள் மனசு ரொம்பியிருக்கும்.
ஆனாலும் சுமதி த சொந்தத் தங்கை திருமணம் போல் முழு ஈடுபாட்டோடு இயல்பாக நடமாடிக்கொண்டிருந்தாள். ஆம்! அவள் அவளாகவே இருந்தாள்! எல்லோரும் அவளையே வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆயிற்று! நல்லபடியாக, சிறப்பாக திருமணம் நடந்தேறியது. முகூர்த்தம் முடிந்து
புது மணத்தம்பதிகள் மேடையை விடு கீழறங்கப் போனார்கள். அப்போது திடீரென்று
சுந்தர் மணமேடையில் ஏறி மணமக்களை அமரச் சொன்னான். கூடியிருந்த சொந்தபந்தங்களையும் அமரச் சொன்னான். வாசலருகில் நின்று கொண்டிருந்த சுமதியும் என்னவோ ஏதோ என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏதும் புரியாமல் எல்லோரும் அமர்ந்தார்கள். வீடியோ கேமராக்கள் அவனை நோக்கித் திரும்பின். அருகிலிருந்த மைக்கை காயிலெடுத்துக் கொண்டான். "என் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து அனைவரும் அமைதியாக அமர்ந்ததற்கு நன்றி!! ஒரு முக்கியமான, சந்தோஷமான், பெருமையான விஷயத்தை உங்களோடு பகிந்துகொள்ள ஆசைப் படுகிறேன்!"
என்றவன், தூரத்தில் நிற்கும் மனைவியைப் பார்த்து, "சுமதி!! இங்கே வா!" என்று முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க அழைத்தான்.

மேடையேறி வந்த சுமதியை தன் தோளோடு அணைத்துக் கொண்டு, "இவள் சுமதி! என்
மனைவி! இவளை மனைவியாய் அடைந்ததில் மிகவும் பெருமைப் படுகிறேன்!! என் தங்கையின் கல்யாணத்தை தன் சகோதரியின் திருமணம் போல் எண்ணி பணத்தாலும் நகையாலும் தன் உடலுழைப்பாலும் என் பெற்றோருக்கும் எனக்கும் தோளோடு தோள் கொடுத்ததோர் அருமைத் தோழி! இவளை இந்த இடத்தில் கௌரவப் படுத்தத்தான் இத்தனை நாள் பேசாமல் இருந்தேன்!!" என்று சுமதியை ஆகாசத்தில் உயர்த்தி வைத்தான்.

சுமதி...கண்களில் மகிழ்ச்சி நீர் வழிந்தோட உடம்பிலுள்ள சத்தெல்லாம் கால்கள் வழியே
வெளியேற....பேச்சிழந்து நின்றாள்.

கணவனின் அன்பையும் அவன் மனதில் தான் இருக்கும் இடத்தையும் நினைத்து பெருமிதப்பட்டாள்.

தன் மனமென்னும் "சிம்மாசனத்தில்" அவனை ஏற்றி வைத்து பட்டாபிஷேகமும் செய்தாள்!

Labels:


Comments:
நல்லாயிருக்கு கதை!!
ம்ம்..அந்த சுமதி நீங்கதானா?? :-)
 
துண்டு, வேட்டி அளவில் விழுந்த பட்ஜெட்டை ஆறு கஜம் சேலை கொண்டு நிறைவு செய்த சுமதிக்கு, சபை முன் பொன்னாடை போர்த்திய சுந்தர் பாராட்டுக்குரியவர்.
நானானி, நீங்கள் இத்தனை நாள் எழுதாமல் என்ன செய்தீர்கள்?
சகாதேவன்
 
சந்தனமுல்லை...நான் அவளுமில்லை..இவளுமில்லை..நான்...நாந்தான்!!!!
 
//துண்டு, வேட்டி அளவில் விழுந்த பட்ஜெட்டை ஆறு கஜம் சேலை கொண்டு நிறைவு செய்த சுமதிக்கு, சபை முன் பொன்னாடை போர்த்திய சுந்தர்//
ஆஹா..!அருமையான சகாதேவன் டச் &பஞ் நல்லாருக்கு. இது எனக்கு தோணலையே?
 
குடும்பத்து நன்மைக்காக ,மருமகள் அனுசரிப்பை எல்லோரும் இது போல் பாராட்டக் கற்றுக் கொண்டால்...மாமியார் மறுமகள் சண்டை, தமிழ் சீரியலில் கூட வராது.உங்களிடமிருந்து இது போல் இன்னும் எதிர்பார்க்கிறேன்.
 
எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன். இதுவரை (விரல் விட்டு எண்ணும் அளவே எனினும்) நீங்கள் எழுதிய அத்தனை சிறுகதைகளும் நேர்த்தியான படைப்புகள். அந்த வரிசையில் இதுவும் சேருகிறது. சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்னும் நிறைய எழுதலாம். பாருங்க, சகாதேவனும் கேட்டிருக்கிறார் //நீங்கள் இத்தனை நாள் எழுதாமல் என்ன செய்தீர்கள்?//
 
எத்தனை பேருக்கு, சுந்தர் போல், முதுகெலும்பை நிமிர்த்தி, மன்னிக்கவும் நெஞ்சை நிமிர்த்தி, மனைவியை, கூட்டத்தில் பாராட்டும் மனம் இருக்கும்....நல்ல உதாரண புருஷன்
 
எத்தனை பேருக்கு, சுந்தர் போல், முதுகெலும்பை நிமிர்த்தி, மன்னிக்கவும் நெஞ்சை நிமிர்த்தி, மனைவியை, கூட்டத்தில் பாராட்டும் மனம் இருக்கும்....நல்ல உதாரண புருஷன்//
இது கதை!!
உதாரண புருஷன் உதாரண மனைவி.நன்மை அளிக்கும் எழுத்து நானானி.
 
ஆகா கதையும் எழுதுவீங்களா நீங்க - பலேபலே - தூள் கிளப்புங்க - ஜூப்பரு

சீனிவாசனின் பாத்திரப்படைப்பு நன்கு அமைத்துள்ளது. அவரின் குண நலன்கள் நன்கு விளக்கப்படிருக்க்கின்றன. சுமதி சுந்தர்
தமபதி ஒருவர் மனதை மற்றவர் புரிந்து கொண்டவர்கள்

மான்ம் மகிழ்ந்தது

மேன்மேலும் எழுதுங்கள்
 
//தன் மனமென்னும் "சிம்மாசனத்தில்" அவனை ஏற்றி வைத்து பட்டாபிஷேகமும் செய்தாள்!//
நல்ல கதைக்கேற்ற நல்ல பினிஷிங் டச் !
 
Simple and beautiful story.
-Swapna
 
ச..ரியாகச் சொன்னீர்கள்!!கோமா!
 
ராமலஷ்மி உங்காள் அன்புக்கு நன்றி!!
முயற்சிக்கிறேன். சேரியா?
 
கணவர்கள் இப்படி அமைந்துவிட்டால்...நாமும் "கணவன் அமைவதெல்லாம்..."ன்னு நாமும் பாடலாம்தானே? கோமா?
 
மிக்க நன்றி! வல்லி!!
 
சீனா! உங்கள் பாராட்டுக்கு நன்றி!!
மனதில் கரு ஒன்று உதித்ததும் கதை ஒன்றும் பிறக்கும். அந்தக் கருவும் எப்போதாவது உதிக்கும். சரிதானே? சீனா?
 
அருவை பாஸ்கர்!!
எல்லோருக்கும் இக்கதை பிடித்திருந்தது
பற்றி மிகுந்த சந்தோஷம்!!!!
 
Thank Q!! Swapna!!!!!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]