Sunday, August 3, 2008

 

மனம் கவர்ந்த பாடல் வரிசை -2

சரச மோகன் சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்
சுவையில் தேனிசை கேட்பவர் யாவரும்
சித்திரமாகும் விசித்திரம் பார்

சரச மோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான் கவி சுக குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீ...தம்

சரசமோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்

மந்தை மேகங்கள் மாமழை பொழியும்
விந்தையாய் மயில் வளைந்தசைந்தாடும்
மந்த மாருதம் மலரிசை பாடும்
அந்த கீதமே அமர சங்கீத.......ம்

சரச மோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பா......ர்!கோகிலவாணி படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அருமையான தெள்ளுத்தமிழ்
பாட்டு.


அதே படத்தில் வரும் மற்றொரு அருமையான பாடல்...சீர்காழியார் தான் பாடியிருப்பார்.
தமிழ் அகராதியிலிருந்து முத்துமுத்தான சொற்களைக் கோர்த்தெடுத்து கட்டிய பாடல்.
பாட வெகு சுகமாய்யிருக்கும்.

அன்பொழி வீசி உயிர் வழிந்தாடும் விழியில் வான் கண்டேன்

தன்னிதழ் ஓசை இசையினில் வாணியின் வீணையை நான் கேட்டேன் - பசும்
பொன்னுடல் வாரி வீசிய ஜோதியில் வாட்டிய குளிர் உணர்ந்தேன்.

பின்னவள் அருகே புன்னகையோடு வர
பின்னவள் அருகே புன்னகையோடு வர

என்னை நான் மறந்தேன்

அன்பொழி வீசி உயிர் வழிந்தாடும் விழியில் வான் கண்டேன்.

Labels:


Comments:
விட்டு விட்டீர்களே?
"மாமலை சாரலில் கூவும்கோகில மதுர கானமே உன் குரலே
வானுலாவும் கதிர் போல ஒளி மழை வாரி வழங்கும் எழிலே
பூமகள் போல் தயை சாந்தம் யாவுமே பொலியும் தேவமாதே
போதை கொள்ளுதே எனது உள்ளமே உன்னை எண்ணும் பொழுதே"
பாட்டின் சரணம். பாட்டு என்ன?
இதுவும் சீர்காழி, ஜிக்கி ஹம்மிங்குடன் பாடியதுதான்
இந்த பாட்டுக்காகவே படத்தை பலமுறை பார்த்தவன் நான்.
கூடுதல் தகவல்: தாம்பரம் லலிதா ஹீரோயின். ரகுவீர் என்று புதுமுகம் ஹீரோ.
தயாரிப்பு-வில்லன் நடிகர், எஸ்.ஏ.நடராஜன்
சகாதேவன்
 
நானும் விட்டுவிட்டேனே. இசை:ஜி.ராமநாதன்
 
நான் ஆரம்பிப்பேனாம்....நீங்க முடிப்பீங்களாம்!!!!
சரணத்தை உங்களுக்காகவே விட்டு
வைத்தேன்(சமாளிஃபிகேஷன்!?)
ஏதோ ஒன்று இடிக்குதேன்னு யோசிச்சேன்.
சரணத்தை விட்டேன்...சரணடைந்தேன்.
நன்றி!சகா!
 
ஆ.. நானானீஈஈ என்ன இது..பாட்டு வரிசைகள்.. நான் கேட்டதே இல்லையே... இதுக்கெல்லாம் பாட்டு கிடைக்குதா இணையத்துல கேட்டுப்பார்க்கிறேன்..இனிமே...
 
நான் எழுதிய சரணம் அதே
படத்தில் வேறு ஒரு பாட்டு.
பாட்டு என்ன என்று கேட்டேனே.

நீங்க்ள் சொல்கிறீர்களா,
நான் சொல்லவா?

சகாதேவன்
 
அம்மா நீங்கள் யாரோ யவரோ .......
முடியல விட்டுடுங்க !
 
சகாதேவன், அருமை அருமை. எங்கே கிடைக்கின்றன இந்தப் பாட்டுகள்?

சிரிப்புதான் வருகுதையா,நினைவுக்கு வருகிறது.
படம்தான் நினைவில்லை:(
 
நானானி பாடல் போட்டதற்கு நன்றி.


வானுலாவும் கதிர் போல ஒளி மழை வாரி வழங்கும் எழிலே..
கதிருக்குப் பதில் மதி வந்திருக்கலாமோ.எழுதியவரை எங்கு தேடுவது:)
 
கேட்டாச்சே இந்த பாட்டை.. :)

இங்க கிடைச்சது
 
சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவலயம் ஆகா நல்ல பாட்டு தான்.
 
நானானி அம்மா,

நலமா? :)

இந்தப் பாடல் நான் கேட்டதில்லை. முதன் முறை. நன்றி :)

சீர்காழியின் குரலே குரல் :)

பி.கு.: வீக்கெண்ட், கணினியைத் தொடவில்லை, அதனால் உங்கள் பதிவுகளையும் மிஸ் பண்ணிட்டேன் :(
 
சகாதேவன்!!
ரொம்ப தாங்ஸ்!!பாடலை முழுமையாக போட்டுவிட்டேன்.
நீங்க அந்தா 'ஆஹா' வை விட்டுடீங்களே! எவ்வளவு ரசனையோடு வரும் அந்த 'ஆஹா!'
 
ஆம், கயல்விழி முத்துலெட்சுமி!!
ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.
தேடிப்பாருங்கள்! எனக்காகவும் சேர்த்து.
 
வெயிட்..வெயிட்..சகா!
நானே சொல்கிறேன்.
 
நல்லதந்தி!
ஏன் முடியலை? இவையெல்லாம் சாகாவரம் பெற்ற பாடல்கள். கிடைத்தால் கேட்டுப் பாருங்கள். முடியும்.
 
வல்லி! சிரிப்புத்தான் வருகுதையா..
ஏற்கனவே போட்டிருக்கிறேனே!
படம் 'பொன்வயல்' சீர்காழியில் முதல் சினிமா பாடல்.
 
வல்லி!
வானுலாவும் 'கதிர்'..தான் சரியான வார்த்தை!!
கதிர் என்றால் சூரியன்தானே?
 
ரொம்ப..ரொம்ப..ரொம்ப தாங்ஸ்!!!
கயல்விழி முத்துலெட்சுமி!!
காதிரெண்டும் ஜில்ல்ல்ல்ல்ல்ல்ன்னு இருக்கு!! இதை கூல்கூட்டிலிருந்து எட்டுத்து தந்தவரும் என்னைப் போல் ஜி.ராமநாதனின் தபேலாவில் மயங்கியிருக்கிறார். அவரது வார்த்தைகள்..படியுங்கள்..predictable lines but always remember a tabla in a GR song is a co-singer more than an accompaniment (thanks Bhairavan). Follow the tabla carefully in every GR song.
 
கயல்விழி முத்துலெட்சுமி நமக்காக
எடுத்துத் தந்திருக்கிறார்...புதுத்தேனீ
அள்ளி அள்ளி உறிஞ்சுங்கள்!!
 
சகா........தேவன்!!!!!!!
நீங்களும் குழம்பி என்னையும் குழப்பிவிட்டீர்களே?
நீங்க கொடுத்த வரிகள்..'அந்த இன்னொரு பாட்டு வரிகள்!!
அதயும் பதிவிட்டிருக்கிறேன்.
பாருங்கள்!
 
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
கேட்டாச்சே இந்த பாட்டை.. :)

இங்க கிடைச்சது //


பாடலின் சுட்டிக்கு நன்றி

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
 
மாமலைச் சாரலில் வரியை
எழுதி இது என்ன பாட்டு
என்றுதான் கேட்டென்.
நான் குழம்பவில்லை.
சகாதேவன்
 
சரி..சரி...சரீஈஈஈஈ!!!சகாதேவன்!
 
கோவை விஜய்! நாமெல்லாருக்காகவும்
கயல்விழி முத்துலெட்சுமி தேடி எடுத்துநாம் கேட்டு மகிழ தந்திருக்கிறார். அவருக்கு நன்றிகள்!!!
 
வல்லி! சகா! இப்பாடலை எழுதியவர்
S.D.சுந்தரம்.
 
எத்துணை அருமையான வரிகள் ஆனால் பாட்டாகக் கேட்டதில்லையே என நினைத்தேன், அதற்கும் சுட்டி தந்து விட்டார் முத்துலெட்சுமி. உங்கல் இருவருக்கும் நன்றி நானானி!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]