Wednesday, July 30, 2008

 

ஓட ஓட விரட்டும் உறவுகள்!!

ஓடஓட விரட்டும் உறவுகள்!!!!

இந்த முதல் சுற்று உறவுகளை நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். அண்ணன்,தம்பி, அக்கா, தங்கை, நாத்தனார், மச்சினர், கொழுந்தன் மற்றும் அவர் தன் குடும்பத்தினர். இவர்கள் எல்லோரும் அவரவர் குடும்ப விசேஷங்களுக்கு கண்டிப்பாக அழைக்கப் பட வேண்டியவர்கள். மேலும் விசிட் என்ற பேரிலும் அடிக்கடி பார்ப்போம்.

ரெண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, உறவுகளை பெரும்பாலும் விசேஷ வீடுகளிலும் கல்யாண மண்டபங்களிலுமே சந்திப்போம். இவர்களை
நமக்குத் தெரியும். ஆனால் பிள்ளைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு காரில் பொறுத்தியுள்ள
GPS மாதிரி ஃபஸ்ட் ரைட்...செகண்ட் லெஃப்ட் என்று ரெண்டே திருப்பங்களில்
புரிய வைத்துவிடலாம்.

ஆனால் இந்த...நாலாம் ஐந்தாம் சுற்று உறவினர் யாராவது கல்யாண வீடுகளில் நம்
அருகில் வந்து, 'நானானி! என்னைத் தெரியுதா? என்பார்கள். நான் ராஜேந்திரகுமார் கதைகளில் வரும் கதாபாத்திரம் மாதிரி 'ஙஏ' என்று விழிப்பேன். நம்மை பேர் சொல்லி அழைக்கும் அவர்களை நமக்குத் தெரியவில்லையே! தர்மசங்கடத்தில் நெழியும்போது
'ஞாபகம் இல்லையே' என்று சொல்லி அவர்கள் மனம் நோகச் செய்யவும் தயக்கம்....
ஓ தெரியுமே! என்றுவிட்டு மேற்கொண்டு பேச்சை வளர்க்கவும் முடியாது.
சில சமயம், மன்னிக்கவும் நினைவுக்கு வரவில்லை என்று டோட்டல் சரண்டர்தான்.

அப்போது தாங்கள் இன்னார் என்று எனக்கு விளக்க அவர்கள் எடுக்கும் ரூட்டைப் பிடித்து
பின் தொடர்ந்து செல்வதற்குள் நமக்கு மண்டை காய்ந்துவிடும்.
'நான் உன் முக்குவீட்டு சித்தியோட நாத்தனார் பெண்ணூக்கு மருமகளோட தங்கச்சிக்கு மச்சினரோட பெரியம்மாவோட மக!' என்று நம்மை ஓடஓட விரட்டுவார்கள். உங்களுக்கு
ஏதாவது புரிந்ததா? did you reach your destination?

இது மாதிரி சமயங்களில் நான் தஞ்சமடைவது என் பெரியக்காவிடம்தான்! அவள்தான்
எங்கள் குடும்பத்து அனைத்து சுப,அசுப நிகழ்ச்சிகளுக்கு தவறாது போய்வருபவள். மேலும்
நாங்கள் எல்லாம் சிறியவர்கள் என்பதால் அவர்களது 'இன்வைட்டி லிஸ்டிலேயே'
இருக்க மாட்டோம்.

அக்காதான் கொஞ்சம் புரியும்படி விளக்குவாள். புரிந்தால் ஓஹோ! அப்படியா! என்றுவிட்டு
தொடர்ந்து அவர்களோடு பேசுவேன். புரியவில்லையானால் மண்டையை மண்டையை
ஆட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நகர்ந்துவிடுவேன்.

இது போன்ற நாலாவது ஐந்தாவது சுற்று உறவுகளோடு இன்றும் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டு, போய் வந்து கொண்டும் இருப்பதிலும் அம்மாதிரி தூஊஊஊஊஊரத்து
உறவுகளை பக்கத்து உறவுகளாக வைத்திருப்பதில் என் சின்ன மதனியை குறிப்பாக சொல்ல வேண்டும்!!அந்த அருமையான சாமர்த்தியத்தைக் கண்டு பல முறை வியந்திருக்கிறேன்! அவர் காட்டும் உண்மையான அன்பும் பரிவுமே அவர்களை கட்டிப்போட்டிருக்கின்றன.

இக்கால சந்ததிகளுக்கு, டாப் கியரில் ஓடும் வாழ்கை ஓட்டத்தில் சொந்த அக்கா,தம்பி, அண்ணன், தங்கை உறவுகளும் மங்கிப் போகும் அபாயம் இருக்கிறது!!உஷார்!உஷார்!!!

'என் பெரியப்பா பெண்ணோட அக்கா மாப்பிள்ளைக்கு தங்கையோட நாத்தனாருக்கு தம்பி மகனுக்கு கல்யாணமாகியிருக்கிற பெண்ணோட அண்ணனோட பேரன் ஒருவன் இருக்கிறான்.
உன் பெண்ணுக்குப் பார்க்கிறாயா?' என்றால் என்ன செய்வீர்கள்? எங்கே ஓடுகிறீர்கள்?
இந்த உறவுமுறையை விளக்கிவிட்டுப் போங்கள்!!ப்ளீஸ்!!ப்ளீஸ்!!

சேரீ...உங்களுக்காக் ஒரு சின்ன பஸில்.
என் அம்மாவோட தங்கை பெண்ணோட அப்பாவோட மாமனாரோட மூத்த மாப்பிள்ளையோட
பெண் யார்? தெரியலை? கொஞ்சம் யோசிங்க. தெரியலையானா......கீழே வாங்க!


இன்னும் வாங்க!
இன்னும்இன்னும்அட! அது நாந்தாங்க!!!!ஹி..ஹி..ஹி.....!

Labels:


Comments:
உறவுகள் பற்றிய அருமையை நகைச்சுவையோடு இனிமை குறையாமல் எழுதியிருக்கிறீர்கள் நானானிம்மா. GPS நல்ல உவமை.
 
ஓட ஓட விரட்டியதில் நானானி இப்பொழுது எங்கே நிற்கிறீர்கள்.நான் யார் தெரிகிறதா.உங்களுக்கு ரொம்ப தூ ஊ ஊ ...த்து உறவுதான் ஆனாலும் கிட்டதான் இருக்கேன்...உங்க அம்மா ஓட, தாத்தா ஓட ...,அவரோட மச்சினன் ஓட ..,அவரோட மச்சினி ஓட ...இப்படி எல்லாரும் ஓட நான் மட்டும் இங்கே நிக்கிறேன் இப்போ டக்குனு சொல்லுங்க நான் யாருன்னு ...ங்ய..ங்யன்னு நிக்காம சொல்லணும்.
 
நான் இதுக்கு ஒருவழி வச்சிருக்கேன்..சிரிச்சிக்கிட்டே தெரிஞ்சமாதிரிபேசிட்டு ..பக்கத்துல ரகசியமா இவங்கள எப்படி கூப்பிடன்னு பெரியவங்க யாருகிடயாவது கேட்டுப்பேன்..
 
நீங்களும் சிக்கி இருக்கிறீர்களா இந்த ஓட்டத்தில் நானானி.

எங்க மாமியாரும் அம்மாவும் கம்ப்யூட்டர் மெமரி படைத்தவர்கள்.
யாரைச் சொன்னாலும் டக்னு பிடித்துக் கொள்ளுவார்கள். எனக்குத் தான் யாரையும் நினைவில் ...தூர உறவுகளைச் சொல்கிறேன்...சட்டுனு சொல்ல முடியாது.
 
எனக்கு மூன்றாவது படி சொந்தங்களே தெரியலை... அவங்க வந்து பேசும் போது கூட பொதுவா ஹிஹிஹி என்று இளித்து ஓடி விடுவது வழக்கம்... :))
 
நண்பர்களோடும் சில சமயம் இந்த சங்கடம் வருகிறது. என்னுடன் பியூசி படித்த கிருஷ்ணன், அதன் பின் K G F சென்றுவிட்டான். வருடம் தவறாமல் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவான். ஐந்து வருடம் முன்னால் திடீரென்று நெல்லை வந்தவன் என் இடம் விசாரித்து வந்து, ஹாய் என்றான். ஒரு நிமிடம் தடுமாறி விட்டேன். அவன் கண் விழிகள் ப்ரெளன் கலரில் இருக்கும். அடையாளம் கண்டு நான் அழைக்கும் முன் நான் கிருஷ்ணன் என்று சொல்லிவிட்டான் . அவனுடன் வந்த அவன் மனைவியிடம் என்ன சொல்லியிருப்பானோ, அவள் என்ன நினைத்தாளோ. எனக்கு ஒரே வெட்கம். பிறகு அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.
சகாதேவன்
 
//ஒரு சின்ன பஸில்.
என் அம்மாவோட தங்கை பெண்ணோட அப்பாவோட மாமனாரோட மூத்த மாப்பிள்ளையோட
பெண் யார்? //

அவர் என் அக்கா/தங்கையாகவும் இருக்கலாம்.
:-)
 
எனக்கும் இதுமாதிரி பல குழப்படிகள் நடக்கும், ங்ஙேனு முழிக்கறத தவிர வேற வழியில்லை, சில மாமாக்கள் எல்லாம் பாசமா என்ன மாப்ளனு ஆரம்பிப்பாங்க, உடனே வாங்க மாமா எப்டி இருக்கீங்க, வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா, அத்தை எப்டி இருக்காங்கன்னு கேட்டு சமாளிச்சுருவேன். ஆனா வாங்க தம்பினு சொல்றவங்ககிட்டதான் என்ன முறை சொல்லி கூப்பிடுறதுனு தெரியாம முழிச்சுருக்கேன்.
இதுல இந்த பெரிசுங்க போய் எங்க அப்பாகிட்ட உம் மவனுக்கு எங்களையெல்லாம் தெரியலப்பான்னு ஒரு புகார் ஒன்ன கொடுத்துட்டு போவும் பாருங்க. அவரு பாவம் ரொம்ப சிரமப்பட்டு சமாளிப்பாரு.
 
அவருடைய இவருடைய என்பதை அவரோட(ஓட) இவரோட(ஓட) என எப்படியெல்லாம் நம்மை ஓட ஓட விரட்டி ஒரு வழி பண்ணுவார்கள் என அருமையா அழகா சொல்லியிருக்கிறீர்கள்:))!

கயல்விழி உங்கள் வழிதான் என் வழியும்.//சிரிச்சிக்கிட்டே தெரிஞ்சமாதிரிபேசிட்டு ..//

வழிஞ்சிட்டு...

//பக்கத்துல ரகசியமா இவங்கள எப்படி கூப்பிடன்னு பெரியவங்க யாருகிடயாவது கேட்டுப்பேன்..//

அதே அதே..:)))!
 
ஆகா, ஸ்குரோல் பண்ணாமலே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். விடையை ஒரு நாள் கழித்து போட்டிருந்தா சுவாரசியம் இன்னும் கூடியிருக்குமே...
 
நன்றி! சதங்கா!
 
உறவுகள் விரட்டினால் நீங்க அந்த ஓட்டத்தோடு சேந்துக்கிட்டால், //எல்லாரும் ஓட நான் மட்டும் இங்கே நிக்கிறேன்.//ன்னு
ஓரிடத்தில் நிக்கவேணாமே! எல்லோரும் ஓடட்டும்ன்னு நீங்க சைடு
கொடுத்துட்டீங்களோ?
 
நான் எங்கக்கா கிட்டே ஓடிடுவேன்.
அவகிட்டேயிருந்து இன்னாருன்னு தெரிஞ்சுக்குவேன். கயல்விழி முத்துலெட்சுமி!
 
பல முறை..பல முறை..வல்லி!
தெரிந்த முகமாகத் தெரிந்தால் தூரத்திலிருந்தே அக்காவிடம் அது யாருன்னு கேட்டு விட்டு ரொப தெரிந்த மாதிரி, 'ஹாய்!' னு பேச ஆரம்பிப்பேன். இதெல்லாம் ஒரு மாதிரியான விளையாட்டுத்தான். வல்லி!!
 
//அட! அது நாந்தாங்க!!!!ஹி..ஹி..ஹி//

avvvvv... super post :))
 
cent percent right mam, naanum etha anubavichuruken.... kannu enna theriyutha apadinu start pannuvanga...naanum epadiyum ellama apadiyum ellama thalaiya aatuven... my brother was trying to make a family tree.... romba confuseda pochu, but we enjoyed that.... u have got a great humor sense mam... hats off....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]