Wednesday, July 16, 2008

 

கஞ்சி குடிக்க வா....கஞ்...சி கு..டி.க்க வா!!!

ஆடிமாசக் காத்தடிச்சு ஆனி மாசம் ஓடிப் போச்சு! ஆக முகூர்த்தங்களுக்கும் விசேஷங்களுக்கும் ஒரு மாதம் விட்டாச்சு லீவு. அம்மன் கோயில்களுக்கு இந்த ஒரு மாதமும் கொண்டாட்டம்தான்!!
அம்மன் கோயிலில் ஆடிமாசக் கூழ் குடித்திருக்கிறீர்களா? அமிர்தமாயிருக்கும்!!
இன்று ஆடி பொறந்தாச்சு! அம்மனும் கூழ் கேட்டாச்சு. அம்மா கேட்டால் கொடுக்கணுமில்ல?


காலையில் ஒரு கப் அரிசியை மண்பானையில்கொதிக்கும் நீரில் சேர்த்து நன்றா...க குழைய வேகவிட வேண்டும். நல்லா குழைந்ததும் ரெண்டு கப் ராகி...கேழ்வரகு...கேப்பை மாவை நீர்விட்டு கரைத்துக்கொண்டு சாதத்தில் ஊற்றி வேகவிடவேண்டும். நல்ல கெட்டியாக வெந்ததும்
இறக்கி வைத்து அதனுடன் உப்பு, ஈராய்ங்கம்....சின்ன வெங்காயம் பொடியாக அரிந்து

நிறைய மோர் விட்டுக் கரைத்து பூஜையில் விளக்கு முன் வைக்கலாம். வேப்பிலை அம்மனுக்கு உகந்தது. மேலும் அதற்கு விஷத்தன்மையை முறிக்கும் ஆற்றலுமுண்டு. அண்டாஅண்டாவாக காய்ச்சும் போது வேப்பிலையின் பாதுகாப்பு அவசியம்.
பாருங்கள்!! கஞ்சியில் உருவிப்போட்ட வேப்பிலை தாமரைப்பூ வடிவில் விழுந்திருப்பதை!!!!


பூஜையில் வைத்து நெய்வேத்தியம் காட்டி கற்பூரமும் காட்டியாச்சு.
ம்ம்..அம்மனுக்குப் படச்சாச்சு! அவளும் வந்து குடிச்சாச்சு!!! என் குழந்தைகள் சின்ன வயதில்
இது போல் பூஜையில் பூஜை முடியும் வரை பொறுமையாயிருப்பார்கள். முடிந்ததும், " ஆங்!
எடுத்துக்கலாமா?.....எடுத்துக்கலாம்!" என்று கேள்வியும் பதிலும் அவர்களே சொல்லிக்கொண்டு
பிரசாதத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்!!!இப்ப நாமும் 'எடுத்துக்கலாமா? எடுத்துக்கலாம்!'

பௌலில் ஊத்தி தயாரய் வைத்திருக்கிறேன். பிடித்தவர்கள் வந்து, எடுத்துக்கலாமா? எடுத்துக்கலாம்!!

மண்பானையில் காய்ச்சி மண்கிண்ணங்களிலேயே ஊத்தியிருக்கிறேன்.

ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயற்றுக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கஞ்சி ஊற்றுவார்கள்! வயது வித்தியாசம்....அந்தஸ்து வித்தியாசம் பாராமல் அனைவரும் விரும்பி வாங்கிக்குடிப்பார்கள். நானும் வீட்டிலேயே கேழ்வரகு கஞ்சிகாய்ச்சி இருப்பதிலேயே பெரிய தூக்கு
நிறைய மோர் விட்டுக் கரைத்து அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கு சாமிக்கு
நெய்வேத்தியம் காட்டித் தருவார்கள். நாம் அங்கு ஒரு மேஜையில் வைத்துக்கொண்டு
டிஸ்போசபிள் டம்ளார்களில் ஊத்தி ஊத்தித் தருவோம். ஆரம்பத்தில் கூட்டமில்லாத கோவிலில்,
அவ்வளவும் காலியாகிவிடுமா? என்று யோசிக்கும்போது எங்கிருந்துதான் கூட்டம் வருமோ?
மடமடவென்று டம்ளர்களில் ஊத்தித் தரத்தர கொண்டு போன் தூக்கு கா...லி...யாகி விடும்.
ஆனால் நம் மனது நிறைந்துவிடும்!

"ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கிவெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேணாம்
தின்னுபுட்டுப் போடியம்மா!!"

இந்த எளிமையான, உண்மையான, உரிமையான பக்தியே எனக்கும் பிடிக்கும்!!!
ஆடிக் கூழ்,கஞ்சி குடித்து அம்மனருள் பெற வேண்டுகிறேன்.

கேழ்வரகு என்றதும் பழைய விகடன் தீபாவளிமலர் ஜோக் ஞாபகம் வந்தது.
பாட்டி கேழ்வரகை சுத்தம்செய்து மிஷினில் திரிக்க வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்தாளாம்.
பேரன் அங்கே வந்து கேழ்வரகைப் பார்த்து,
'அது என்ன பாட்டி!'
'கேப்பைடா!'
'கேக்க மாட்டேன் பாட்டி! அது என்ன?'
'கேப்பைடா!
'ஐயோ! பாட்டி கேக்கவே மாட்டேன். அது என்ன?'
'ஐயோ! அது கேப்பைடா!'
இப்படியே போய்க்கொண்டிருக்கும்.

Labels:


Comments:
சதங்கா உங்களை பாட்டி
என்று சொன்னது எல்லோருக்கும் கேட்டுவிட்டது போல. அதான் உங்களிடம் வந்து 'அது என்ன பாட்டி' என்று கேட்க நீங்கள் 'கேப்பைடா'ன்னு சொல்கிறீர்களோ?
சகாதேவன்
 
பெரிய பானையா இருக்கேங்க.

பதிவர்கள் எல்லாருக்குமாச் சேர்த்துக் காய்ச்சிட்டீங்களா?

பாட்டி வீட்டில் கூழ் காய்ச்சி வாசத்திண்ணையில் வச்சு போறவர்ற ஆளுங்களுக்கு ஊத்துவோம்.

அது அந்தக் காலம்.

இப்போ...........

அது இருக்கட்டும் விடுங்க.

சூப்பர் படங்களா இருக்குப்பா.

எங்கே வச்சுக் காய்ச்சுனீங்க?

வெளியே அடுப்பிலா?
 
////பிடித்தவர்கள் வந்து, எடுத்துக்கலாமா? எடுத்துக்கலாம்!!
//

நன்னி! நிறைய, நிரையக் குடிச்சுட்டேன். :)

//ஆத்தாடி மாரியம்மா!
கூழு ஆக்கிவெச்சேன்....//

ம்ம்ம்..சுருளிராஜன் பாட்டு இல்ல. யூடூயூப்-ல தேடிட்டேன்.பாட்டு கிடைக்கல.
 
நான் 'கேப்பைடா!'ன்னு சொன்னது உங்களையில்லை சகாதேவன்!!!!
 
பானை சின்னதுதான் துள்சி!!
ஆனா மனசு பெரிசு! அபதிவர்கள் எல்லோருக்கும் காணும்.
ப்ளாட்டிலே எங்கங்க வெளியே வச்சு காய்ச்சுறது? எல்லாம் என்னோட சமையலறையில்தான். காஸ் அடுப்பில்தான்!!!
 
தேன் உண்ணும் வண்டே!
கஞ்சிப் பானையைக் கண்டே,
திருப்தியாய் கூழ் உண்டே,
என் மனசையும் கவர்ந்து கொண்டே
பறந்ததுவே!
 
ஈ..ராங்யம் என்று வாசிக்கும்போதே வாசனை ஆளை இழுக்குதே...இந்த வெள்ளி, நானானி வீட்டுக்கு ஒரு பொடி நடைய போகணும் யாரெல்லாம் வாரீ...ங்க?
 
நட்டியோடு பொடி நடையாக ஆரெல்லாம் வாரீக?
முன்னக்கூட்டி சொல்லிப்போடுங்க!!!!
 
இப்பல்லாம் பதிவுக்கு வந்தா விதவிதமா வாய்க்குருசியாத்தாராக எல்லாருமே.. :)
 
இந்தக் கஞ்சியில் புதினா சட்னியையும்
கரச்சு விட்டுடுவோம், பாருங்க....
மணமும் ருசியும்அள்ளிக்கொண்டு போகும். நெஞ்சாங்கூட்டில் குளிரகுளிர
இறங்கி வயித்தை அடைவதே சுகமாயிருக்கும்.
 
எனக்கும் குமுதத்தில் வாசித்த ஜோக் நினைவுக்கு வந்தது.
என்னடா கையிலே...மறைச்சு மறைச்சு கொண்டு போறே?
அம்மா ,கேப்பையை நைசா அரைச்சுட்டு வரச் சொன்னா.....
 
//மடமடவென்று டம்ளர்களில் ஊத்தித் தரத்தர கொண்டு போன் தூக்கு கா...லி...யாகி விடும்.
ஆனால் நம் மனது நிறைந்துவிடும்!//

இப்போது அதே போல் ஊற்றி வைத்திருக்கிறீர்களே! எங்கள் மனமும், நிஜமாகவே குடித்தது போல வயிரும் நிறைந்து குளிர்ந்து விட்டது நானானி!

விகடன் ஜோக் தெரியாது. ஆனா இதே சம்பவம் வீட்டில நடந்திருக்கு. அம்மா கேப்பையுடன் மற்ற சகல தானியங்களை வறுத்துத் திரிந்து அதைக் காய்ச்சிக் கொடுப்பார்கள். நாங்கள் பருகிக் கொண்டிருக்கையில் விளையாடச் சென்று திரும்பியிருந்த அண்ணன் 'அது என்னம்மா' என வினவ அம்மா 'கேப்படா' என்க 'கேக்க மாட்டம்மா, சொல்லுங்க' என்க 'அட, கேப்படா..' என்க........இப்படியே போய்...சிரியாய் சிரித்தோம் சிறு வயதில்..:))))!
 
கேப்பைக்கூழ், கம்பங்கூழ்... ம்ம்ம்ம்... கேட்கும்போதே நாக்குல எச்சி ஊறுது.. நான் ஒரு கப் குடிச்சிக்கலாமா? தொட்டுக்கறதுக்கு உப்பு + மிளகாய்ப்பொடி தடவின மாங்காய் கிடைக்குமா?
 
அன்பின் நானானி

கூழ் அருமை அருமை - குடிச்சு செரிச்சுப் போச்சு - சென்னைலே ஆடி பொறந்தாப் போச்செ - தெருவெங்கும் ரெகார்டு தான் - கூழ் தான் - வசூல் தான் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சுருளிராஜன் வரலட்சுமி = ஆத்தாடி மாரியம்மா - பாடல் கேட்கக் கேட்க கூழ் குடிச்ச சுகம் கிடைக்கும்

ம்ம்ம்ம்ம்ம்ம்
 
நைசாவுக்குப் பின்னே இப்படி ஓர் அர்த்தம் இருக்கா? கோமா!
 
நைசாவுக்குப் பின்னே இப்படி ஓர் அர்த்தம் இருக்கா? கோமா!
 
அம்மனுக்குப் படைக்கும் கூழ் அவள் பிள்ளைகளுக்கு அமுதன்றோ!

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்
 
வெண்பூ!!என் பதிவில் புதுசாப் பூக்குதே!!!
கஞ்சிக்கு காரம் தடவிய மாங்காயா..?
சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஆவக்காய் ஊறுகாயே
வெச்சிருக்கேன். வெரசா வந்து குடிங்க.
 
உண்மைதான் விஜய்!அதன் ருசியே
அலாதிதான்!!
உங்கள் பதிவைப் போய் பாக்கேன்
 
சீனா!
அம்மன் கூழ் உங்களுக்கும் பிடிக்குமா?
சந்தோசம்! கோவிலிலேயே ஊத்தும்
அம்புட்டு கூழும் அம்புட்டு ருசி!!
இங்கே பக்கத்திலுள்ள எல்லையம்மன்
கோவிலில் வேறு இடத்தில் கூழ் காய்ச்சி, மேளதாளத்தோடு ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வருவார்கள்! கோலாகலமாயிருக்கும்.
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே,
கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே.
 
//துளசி கோபால் said...

பாட்டி வீட்டில் கூழ் காய்ச்சி வாசத்திண்ணையில் வச்சு போறவர்ற ஆளுங்களுக்கு ஊத்துவோம்.//

நாங்க நம்மூர்ல, சைக்கிள் ஓட்டப்போட்டி நடந்தா வாளியில தண்ணி வச்சு பங்குபற்றுகிறவங்களுக்கு ஊத்துவோம். நீங்க இப்படியா???? :-)))

மதுவதனன் மௌ.
 
இதுவரை நான் இந்த கூழ் குடித்ததில்லை... :(
 
நல்ல சுவையான பதிவு.வாழ்த்துக்கள்!
 
i am a regular visitor to your blog .i enjoyed reading all the recipe.let me know more from you .it is very helpful for me
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]