Thursday, July 24, 2008

 

அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள காரில்

இந்த வார குமுதத்தில், 'அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள் காரில்' என்ற தலைப்பில்
வந்த ஒரு கட்டுரை படிக்கவே நாராசமாயிருந்தது.

ஐடி கம்பெனிகள் நிறைந்த பழைய மகாபலிபுரம் சாலையில்,காலை 8-மணி முதல் மாலை 6-மணி வரை நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் நடப்பவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

அவர்கள காரில் என்னவெல்லாம் இருக்குமாம்? பொம்மைகள், ஆங்கிலப் பத்திரிக்கைகள்,
ஏர் ப்ரஷனர், தண்ணீர் பாட்டில்....கூடவே பலமணி நேரத் தனிமையில் முகம் வெளுத்துப் போன நான்கு வயது குழந்தையும் காருக்குள் இருக்குமென்றால் நம்ப முடிகிறதா?

இங்காவது செக்யூரிட்டிகளின் கண்காணிப்பில் குழந்தைகள் காருக்குள் பலமணி நேரம் இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன் சிகாகோ நகரில் நடந்ததாக அங்கு நான் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று இன்று நினைத்தாலும் மனதை பதற வைக்கும்.

கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறவர்கள். மனைவிதான் வழக்கமாக தங்கள் குழந்தைகள் இருவரையும் மதியம் மூன்று மணிக்கு பள்ளிக்குச் சென்று அழைத்து வந்து வீட்டில்
விட்டு விட்டு மறுபடியும் வேலைக்குத் திரும்பி விடுவாள்.

ஒரு நாள் கொஞ்சம் அதிகப்படி வேலையால் கணவனுக்கு போன் செய்து பிள்ளைகளை
பள்ளியிலிருந்து கூட்டிவந்து வீட்டில் விட்டு விடுமாறு வேண்டினாள். அவனும் பெருமாள்மாடு மாதிரி தலையாட்டிவிட்டு, மதியம் மூன்று மணிக்கு பள்ளிக்குச் சென்று அவர்களை அழைத்துக்கொண்டு, நேரே வீட்டுக்குச் செல்லாமல்....பழக்க தோஷத்தில் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று
தன் ஆஃபீசுக்குச் சென்று அங்கு தன் பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்திவிட்டு உள்ளே குழந்தைகள்
இருப்பதே நினைவில்லாமல் திரும்பிக்கூட பார்க்காமல் கதவை அறைந்து சாத்திவிட்டு, அவர்கள்,'அப்பா!அப்பா!' என்று கத்துவதைக் கூட காதில் வாங்காமல் லிஃப்ட்டில்
ஏறி ஆஃபீசுக்குள் நுழைந்து ஆணி பிடுங்க ஆரம்பித்தான். அங்கெல்லாம் பார்க்கிங் லாட் ஒரே
இருட்டுக் கசமாயிருக்கும். நான்கு கதவுகளும் பூட்டிக் கொள்ளும் ஆட்டோமாட்டிக் லாக்!!!

ஆறு மணிக்கு வீடு திரும்பிய மனைவி, வீட்டில் குழந்தைகளைக் காணாமல், கணவனுக்குப் போன் செய்து, 'குழந்தைகள் வீட்டில் இல்லையே!' என்று கேட்டிருக்கிறாள்.
உடனே மண்டையில் அறைந்தாற்போல் பதறி பேஸ்மெண்டுக்கு ஓடி காரைத்திறந்து பார்த்தான்
அந்த கோரக் காட்சியை!!!இரு குழந்தைகளும் மூச்சுத்திணறி உதவுவாரின்றி பரிதாபமாக
இறந்து கிடந்த காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும். பிறகு விழுந்து புரண்டு அழுது என்ன பயன்?

பெற்ற பிள்ளைகளைவிட "ஆணி புடுங்குவதில்தான்" அதிக ஆர்வம் காட்டிய அந்த பெற்றோரை
அவர்கள் புடுங்கிய ஆணிகளாலேயே சிலுவையில் அறைந்தாலென்ன?

வேலைக்குப் போகும் பெற்றோரின் குழந்தைகள் படும் பாட்டை ஒரு தனிப் பதிவாகவே
எழுத எண்ணியிருந்த போது இந்த பத்திரிக்கை சேதி இதை மட்டும் உடன் எழுதிவிடு என்று
என்னைத் தூண்டியதில்தால்தான் இதை எழுதுகிறேன். இது மாதிரியான பெற்றோர்களே!!!
உஷார்...உஷார்...உஷார்!!!!!!

Labels:


Comments:
கலங்க வைக்கும் பகீர் பதிவு. இதைப் படிக்கும் வேலைக்குச் செல்லும் பெற்றோர் சிந்திக்கட்டும். இயன்ற வரை பலரும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வேலையிலும் வெல் பாலன்ஸ்டா போகிறதையும் பார்க்கிறோம். வெகு சில இடங்களில் இப்படியான கவனக் குறைவுகள் நடக்கத்தான் செய்கின்றன. முதல் முக்கியத்துவம் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் சொன்னபடி பின்னர் வருந்திப் பயனில்லை!
 
வருத்தமா இருக்கு.

இங்கே இதுபோல ஒரு கேஸ்.

குழந்தையைக் காரில் விட்டுட்டு மறந்து போயிட்டாங்க ஒரு அம்மா.

என்ன வேலையில் பிஸியா இருந்தாங்களாம்?

காஸினோவில் விளையாடிக்கிட்டு(-:
 
நல்ல விழிப்புணர்ச்சியூட்டும் பதிவு, நன்றிங்க நானானி
 
பெற்றோர் கவனிப்பில்லாமல், குறிப்பாக
தாயின் அரவணைப்பில்லாமல் வாடும் குழந்தைகளை நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.
 
அவர்களாவது ஆணி புடுங்கினார்கள்.
இந்தம்மா சூதாடினார்களாமா?
இதெல்லாம் கலிகாலத்துக்கும் அடுத்த காலம்!!!
 
தாங்கள் ஓடி ஓடி...நாற்காலிகளில்
உக்கார்ந்து உக்கார்ந்து...சம்பாதிப்பதெல்லாம் தங்கள் குழந்தைகளுக்காக என்னும் பெற்றோர், அக்குழந்தைகள் எதிர்பார்ப்பதெல்லாம் அப்பா,அம்மாவின் அன்பும் அரவணைப்புமே என்பதை மறந்துவிடுகிறார்கள்.
முதல் வருகைக்கு நன்றி! ராப்!
 
பெற்ற பிள்ளைகளைவிட "ஆணி புடுங்குவதில்தான்" அதிக ஆர்வம் காட்டிய அந்த பெற்றோரை
அவர்கள் புடுங்கிய ஆணிகளாலேயே சிலுவையில் அறைந்தாலென்ன?
WELL said naanaani
 
This is just a story.....

I never heard from anyone.....

This never happend in India.....

Kumudam heard from someone added some masala (tragedy in the last) they used as this.....

Anyone give this news from Indian new paper?
 
சிகாகோவில் நடந்த சம்பவத்தை படித்தபிறகு அதிர்ச்சியாக இருக்கிறது. அதே போலவா நடக்கிறது சென்னையிலும்?.... அந்த பிஞ்சு குழந்தைகளை நினைத்தால் பாவமாகவும் - அந்த 'பெற்றவர்களை' #$#%#$##%#$# திட்டலாம் போலவும் இருக்கிறது...
 
நாம் வாழ்வதும் பொருளீட்டுவதும் நம் வாரீசுகளுக்காக என்ற எண்ணம் தேவை என்பதை உணர்த்தும் எச்சரிக்கைப் பதிவு,
தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com/
 
ஐய்யோ நினைக்கவே பயங்கரமா இருக்கிறதே... :(
 
romba scary!! ippadi koodavaa irupaanga...!!
 
குடும்பம் என்ற அமைப்பு நம் கண் முன்னே சிதறிகொண்டிருக்கிறது.
வயல் வேலைக்கோ மற்ற கூலி வேலைக்கோ சென்றவர்கள் கூட குழந்தையை முதுகில் சுமந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது.
 
பெற்ற பிள்ளைகளைவிட "ஆணி புடுங்குவதில்தான்" அதிக ஆர்வம் காட்டிய அந்த பெற்றோரை
அவர்கள் புடுங்கிய ஆணிகளாலேயே சிலுவையில் அறைந்தாலென்ன?

தப்பே இல்லை.
 
வயல் வேலைக்கோ மற்ற கூலி வேலைக்கோ சென்றவர்கள் கூட குழந்தையை முதுகில் சுமந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது//

மகளீர் மட்டும் திரைப்படத்தில் ஒரு காட்சி அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம்.

இது மாதிரி இருந்தால் தான் வசதி.

கவனிப்பார்களா நிர்வாகிகள்.
 
"தாங்கள் ஓடி ஓடி...நாற்காலிகளில்
உக்கார்ந்து உக்கார்ந்து...சம்பாதிப்பதெல்லாம் தங்கள் குழந்தைகளுக்காக என்னும் பெற்றோர், அக்குழந்தைகள் எதிர்பார்ப்பதெல்லாம் அப்பா,அம்மாவின் அன்பும் அரவணைப்புமே என்பதை மறந்துவிடுகிறார்கள்."
Thats certainly true.
Horrible to read.Being a mother mysellf,its so scary.Me and my husband we are ready to sacrifice anything for our baby.I bet so many parents are like us only,only few morons act like this.
-Swapna
 
நானானி

நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது - சிகாகோ சம்பவத்தை.

சென்னையில் நடந்திருக்கலாம் - நடக்காமலும் இருந்திருக்கலாம் - நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது

என்ன செய்வது - இருவரும் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலைகள் - ம்ம்ம்ம்ம்ம்ம்
 
நன்றி! கோமா, இது வெறும் ஞாபகமறதி...கவனமின்மைதான் காரணம்.
 
இது கதையல்ல அனானி!
சிகாகோவில் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்.
குமுதம் இதழில் வந்த ஒரு செய்தி
எனக்கு இதை நினைவுபடுத்தியதால்
எழுதினேன். இங்கு அப்படி நடக்க வாய்ப்பேயில்லை.
 
ச்சின்னப்பையன்!
சென்னையில் நடக்க வாய்ப்பில்லை.
பார்க்கிங் ஏரியாவெல்லாம் பிறர் கண்பார்வையில்தான் இருக்கிறது.
 
ஆம்! விஜய்!
ஓர் எச்சரிக்கையாகத்தான் இந்த மணியை அடித்தேன்.
 
ஒரு சிறு கவனக்குறைவு எத்தனை பேரிழப்பை உண்டாக்கி விட்டது?
நெஞ்சம் பத்றத்தான் செய்கிறது, கயல்விழி முத்துலெட்சுமி!
 
அவர்களைச் சொல்லிக் குத்தமில்லை
சந்தனமுல்லை!
அவசர யுகம் தான் காரணம்.
 
அவர்களைச் சொல்லிக் குத்தமில்லை
சந்தனமுல்லை!
அவசர யுகம் தான் காரணம்.
 
வயல் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் கூட அங்கேயே மரத்தில் தூளிகட்டி குழந்தை வயக்காட்டின் சிலுசிலுக் காத்தில்
சுகமாக உறங்கிக்கொண்டிருக்கும்.
விழித்து அழுதாலும், 'ஏ!புள்ள!
புள்ள அழுது பாரு. போய் பசியாத்து.'
என்று சொல்லும் கருணை உள்ளம் கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்.
இன்று ஆஃபீஸ்களில் அதெல்லாம்
நடக்கிறகாரியமா? இப்போதுதான் ஓரிரு
அலுவலகங்களிலேயே க்ரச் வந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம்கொஞ்சமாக இது பரவும்.
 
ஸ்வப்பனா!
உங்களைப் போன்ற பொறுப்பான
பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அஜாக்கிரதையால்
நிகழ்ந்தது. கணவனும் மனைவியும்
மாற்றி மாற்றி குழந்தைகளை அழைத்து வருமாறு பழக்கப்படுத்தியிருந்தால் ஒரு வேளை
இது போல் ஒரு நிகழ்வு நிகழ்ந்திருக்காதோ என்னவோ?
 
இருவரும் வேலைக்குப் போகும்படி
வாழ்கை அமைந்திருந்தால் இருவரும்
வேலைகளை சமமாக பங்கு போட்டிருக்க வேண்டூம். கணவன் ஆஃபீஸ் வேலை மட்டும் பாக்கணும்.
மனைவி தன் ஆஃபீஸ் வேலையும்
குழந்தைகள் வேலையும் வீட்டு வேலையும் பாக்கணுமென்றால் எப்படி?
நியாயமாயில்லையே?
நான் சொல்ரது சரிதானே சீனா?
 
/
பெற்ற பிள்ளைகளைவிட "ஆணி புடுங்குவதில்தான்" அதிக ஆர்வம் காட்டிய அந்த பெற்றோரை
அவர்கள் புடுங்கிய ஆணிகளாலேயே சிலுவையில் அறைந்தாலென்ன?
/

ரொம்ப ரொம்ப வருத்தமான சம்பவங்கள்.

அனானி சொல்வது போல நடக்காத சம்பவங்கள் எல்லாம் குமுதம் போன்ற ஒரு பத்திரிகையில் வராது, நிச்சயம் சென்னையில் நடக்க சாத்தியம் மிக அதிகம்.
 
/
துளசி கோபால் said...

வருத்தமா இருக்கு.

இங்கே இதுபோல ஒரு கேஸ்.

குழந்தையைக் காரில் விட்டுட்டு மறந்து போயிட்டாங்க ஒரு அம்மா.

என்ன வேலையில் பிஸியா இருந்தாங்களாம்?

காஸினோவில் விளையாடிக்கிட்டு(-:
/

:((((((((((((((
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]