Tuesday, July 22, 2008

 

திண்ணையில் ஒதுங்காதது...பழைய பொலிவு...இப்போது ஒதுங்கியது!!

போன பதிவில் புது பொலிவுடன் மிளிரும் திண்ணையைக் காட்டியிருந்தேன். அதன் பழைய தோற்றம் காட்ட வேண்டாமா?
அண்ணன்மாரும் ஒரு அக்காவும் அந்த நாளில்....இப்போது சிறுவர்கள் கணினியைச் சுத்தி
அமர்ந்து கண்ணை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பது போல்...அந்நாளைய
கணினியான தட்டச்சு எந்திரத்தைச் சுத்தி அமர்ந்து கொண்டு சமத்தாக என்ன செய்வது என்று தெரியாமல் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது சுமார் 1945-1950-களில் எடுத்திருக்கலாம்.
அவர்களின் உடையலங்காரமும் தலையலங்காரமும் அதையே பறைசாற்றுகின்றன. 90 வருடங்கள் பழமையானது எங்கள் வீடு. இப்போது வளைவாக கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள அதே திண்ணையும் தூண்களும் ஒரு 'ஆண்டிக் லுக்கோடு' காட்சி கொடுக்கின்றன.

அதே திண்ணை....1970-ல் முதல் முறையாக கீழே செங்கல் தரையாக தூண்களெல்லாம் புது
வண்ணம் பூசிக்கொண்டு லேசாக ஜொலிக்கிறது. 'மணவடையை அந்த்ப் பெரிய சோபா
மறைத்துக் கொண்டிருக்கிறது. 'சிந்துபூந்துறை அஜித்தும் பெருமாள்புரம் ஐஸ்வர்யாராயும்'...அதுகள் தங்களை அப்படித்தான் சொல்லிக் கொள்கிறதுகள்!!!!என்ன அழகாக
'உப்புக்கருவாடு ஊறவெச்ச சோறு...' பாடலுக்கு ஆடுகிறார்கள்!!!!


இன்று மோர்பனைட் டைல்ஸ் பதித்து தூண்களுக்கிதையில் குழாயைவளைத்து பொருத்தி
தூண்கள் புது பெயிண்ட் அடிக்கப்பட்டு 90 வயது பேர்..பேர்..பேரிளம் பெண் ஒருத்தி
பியூட்டி பார்லருக்குப் போய் தன்னை அழகு படுத்திக்கொண்டாற்போல் மிளிர்கிறது.
முதல் வளையம் இருக்குமிடத்தில்தான் அன்று என் உடன்பிறந்தோரெல்லாம் அக்கால கம்ப்யூட்டரை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காலங்கள் மாறினும் இல்லத்தின் கோலங்கள் மாறினும் அது இன்னும் பழைய தலைமுறைகளை அனுப்பிக்கொண்டு அடுத்த தலைமுறைகளை வாங்கிக்கொண்டு அதே கம்பீரத்தோடு நிமிர்ந்து நிற்கிறது!!!

Labels:


Comments:
Old thinnai looks innocent Naanaani.,like the children sitting on it!!
 
அப்டேட் பண்ணிய திண்ணையும் அழகு தான்... :)
 
சரியாச் சொன்னீங்க! வல்லி!
அந்த இன்னோசண்ட் காலத்திலேயே இருந்திருக்கலாம்.
 
இல்லை, தமிழ்பிரியன்!!
வல்லி சொன்ன இன்னோசண்ட் திண்ணைதான் எனக்குப் பிடித்தது.
 
ஓ இதையும் தேடி எடுத்துப்போட்டாச்சா.. நல்லது.அழகு .
 
ஆமா! கயல்விழி முத்துலெட்சுமி!
அந்த பட்ட பழைய படம் பெரிய அக்காவிடம் இருந்தது. பாத்தேன்...விடலாமா? போட்டுட்டேன்.
 
எத்தனையோ இடங்களில் பாரம்பரிய வீட்டை சரியாக பராமரிக்காத நிலையில் ,உங்கள் வீட்டில் அதை மிக அழகாக பராமரித்து அதே நேரத்தில் அடுத்த தலை முறையினரின் பொக்கிஷமாக மாற்றி கொடுத்துள்ளீர்கள்
 
அரை நூற்றாண்டுக்கு முந்தைய அற்புதமான படம். அந்த கணினி, பாலகர்களின் உடையலங்காரம் தலையலங்காரம் எல்லாம் சூப்பர். அந்தச் சிறுமிதான் உங்க அக்காவா?
 
உண்மைதான் பாபு!
காரைக்குடியில் பல செட்டிநாட்டு வீடுகள் பராமரிக்க முடியாமல் தேக்கு மர கதவுகள், தூண்கள், வாசல்கள்
மற்றும் பிற விலைமதிப்பில்லாத பொருட்களை விற்று கலை நயம் மிக்க வீடுகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனதுக்கு கஷ்டமாக இருக்கும். எங்கள் வீட்டை
பழமை மாறாமல் புதுப்பித்து வைத்திருக்கும் அண்ணன் மகனைப் பாரட்டத்தான் வேண்டும்.
 
அது பெரியக்காவா...சின்னக்காவா..?
என்று அக்காவுக்கே சந்தேகமாக இருக்கிறது. எண்ணையிட்டு படிய வாரிய தலையும் போலீஸ்காரன்
காலசட்டையுமாக அண்ணன்கள்
ஜொலிக்கிறார்கள்!!!
 
நானானி,,
பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பான் என்று உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வீடும் திண்ணைகளும் எத்தனை கதைகளைச் சொல்லுகின்றன அம்மா!!!
 
உண்மைதான் வல்லி!

இன்றும் அவ்வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வொரு நினைவுகளை கிளறிக் கொண்டுதானிருக்கின்றன.

பழங்கணக்குப் பார்த்த உங்கள் பசி தீர்ந்ததா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]