Tuesday, July 15, 2008

 

என்னன்னாலும்.....குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குமா.....?

சிகாகோ நகரில் மில்லினியனம் பார்க் போய்விட்டு நடந்தே ஊரைச் சுற்றி வந்தோம்.
அங்கே ஓரிடத்தில் கோடை வெயிலில் தங்களை குளிர்விக்க செயற்கை அருவியில்
குளித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர் அமெரிக்கர்கள்!!வாழ்கையை எந்த உறுத்தலுமில்லாமல் அனுபவிப்பதில் அலாதியானவர்கள்!!!

முதலில் இப்படி சாதாரணமாக தோற்றமளிக்கும் இக்கோபுரம் போன்ற அமைப்பு.

சிறிது நேரம் கழித்து அதில் இப்படி ஓர் உருவம் தோன்றும்!!சுமார் நூறடி இடைவெளியில்
இதுபோல் எதிரெதிரே இரண்டு கோபுரங்கள் அமைந்திருக்கும்.

எதிர் கோபுரத்தில் இதுபோலும் ஓர் உருவம் தோன்றும்.

சில வினாடிகளில் சிரிக்கும் அந்த கருப்பரினப் பெண் தன் வாயைக் குவித்து 'ஊஊஊ'
என்பாள் அப்போது குவிந்த அவள் வாயிலிருந்து தண்ணீர் கொட்டும்.
உடனே பெரியவர்களும் குழந்தைகளும் 'ஹோவென்று' கூச்சலிட்டபடியே அதில் ஆனந்தமாக
ஜலக்கிரீடை செய்வார்கள். பார்க்கும் நமக்கும் ஆனந்தமாக இருக்கும்.

அடுத்து சிரிப்பவள் ஒரு வெள்ளைக்காரி....ஆம்! இருவருமே அமெரிக்கர்கள்தானே?

இவளது ஊஊஊவென்று குவிந்த கோவைச் செவ்வாயிலிருந்து வீழும் நீரைப் பாருங்கள்!!

வேடிக்கைப் பார்க்கவும் நீரில் விளையாடவுமாக மக்கள் எத்துணை மகிழ்ச்சியோடு
கோடையை கொண்டாடுகிறார்கள்!!!

என்னன்னாலும் இது செயற்கை அல்லவா? நம்ம குத்தாலத்தில் இயற்கையாக பல மூலிகை
வாசங்களையும் சத்துக்களையும் வாரி இழுத்துக்கொண்டு பொங்குமாங்கடலென கொட்டும்
ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குத்தாலம், புலியருவி, செண்பகாதேவியருவி என
குளித்து மகிழ நமக்கிருப்பதுபோல் அங்கில்லையே? நயாகராவைப் பார்க்கத்தான் முடியும்,
குளிக்கமுடியுமா?

மனசை மயக்கும் சுகமும் கிடைக்கும் குத்தால அருவி போல் வருமா?

இந்த சீசனுக்கு குத்தாலம் கட்டாயம் போக வேண்டியதுதான். என் சொந்த கொசுவத்தியை
நானே பத்தவச்சிட்டேனே...பரட்ட.....!!!!!!

Labels:


Comments:
//"என்னன்னாலும்.....குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குமா.....?"//

அதானே!

//நம்ம குத்தாலத்தில் இயற்கையாக பல மூலிகை
வாசங்களையும் சத்துக்களையும் வாரி இழுத்துக்கொண்டு பொங்குமாங்கடலென கொட்டும்
ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குத்தாலம், புலியருவி, செண்பகாதேவியருவி என
குளித்து மகிழ நமக்கிருப்பதுபோல் அங்கில்லையே? நயாகராவைப் பார்க்கத்தான் முடியும்,
குளிக்கமுடியுமா?//

ஆமாங்க. இதெல்லாம் நினைக்கையில் நீங்க படத்திலே காட்டியிருக்கும் அருவி ரொம்ப ரொம்ப பரிதாபமாக அல்லவா இருக்கிறது?
 
என்னன்னலும்....இதுவும் வித்தியாசமாக இருக்குது தானே?
நம்ம வயக்காட்டில் பம்ப்செட்டில் குளிப்பதையே கொஞ்சம் அழகு சேர்த்து கொடுத்திருக்கிறார்கள்!
 
நயாகராவைப் பார்க்கத்தான் முடியும்,குளிக்கமுடியுமா?//
super punch....
 
//பம்பு செட்//

ரொம்ப ரைட்:))!
 
நானானி பாட்டி,

வித்தியாசமான பதிவு. 'ஜலக்கிரீடை' என்ற வார்த்தை சாண்டில்யனை ஏனோ நினைவுபடுத்தியது :)) அவரது புதினம் படித்த மாதிரி நினைவு.

ஜூப்பர் பம்புசெட்டு குளியல் :)
 
யாரோ வாய் கொப்புளிப்பார்களாம்.
அதில் குளிக்கணுமாம்.
உவ்வே. எனக்குப் பிடிக்கலே
சகாதேவன்
 
எனக்கும் குத்தாலம் போகணும்.

நான் போனதே ஒரே ஒருமுறைதான்.

நம்ம அதிர்ஷ்டம்........

பிச்சுக்கிட்டுப்போயிருச்சு.

நோ தண்ணீர்.
 
சாண்டில்யன் புதினங்கள் குமுதத்தில்
தொடராக வந்த போது படித்தது.
இபோதெல்லாம் அவ்வளவு பொறுமையில்லை.
ஜலக்கிரீடை என்ற வார்த்தி இங்கு பொருந்துமோ பொருந்தாதோ தெரியலை. ஆனால் வித்தியாசமான
வார்த்தை தேடிய போது கிடைத்தது.
நன்றி! பேரா!!
 
ஆனால் நாங்கள் கால் நனைத்தோம்
கோமா! அருவியாக விழுமுன்
ஆறாக ஓடிவருமல்லவா? அவ்விடத்தில். கொஞ்சம் தயாராக
அந்த நயாகராவுக்குப் போயிருந்தால்
குளித்தும் இருப்போம்!!
 
பம்புசெட்!!நீங்க குளித்திருக்கிறீகளா?
ராமலஷ்மி!
சின்னவயதில் எங்க மாமா கரிசல்குளத்தில் இருக்கும் அவரது
தோட்டத்துக்கு ஜீப்பில் அழைத்துப்போவார். அங்கு சுமார் நாலு அங்குல விட்டமுள்ள குழாயிலிருந்து கொட்டும் தண்ணீரில்
ஆனந்தக்குளியல் போட்டதெல்லாம்
நினைவிருக்கிறது.(போச்சுடா! வத்தி...வத்தி..கொசுவத்தி!!)
 
அடடா! என்ன துள்சிக்கு வந்த சோதனை!!போகுமுன் யாரும் சொல்லவில்லையா? நாங்கெல்லாம்
குத்தாலம் போனால் ஒரு அருவியில் குளித்துவிட்டு அப்படியே அடுத்த அருவிக்குப் போய் அங்கும் குளித்துவிட்டு...அருவியருவியாய்
குளித்துவிட்டு கடைசியில் போதும்போதும் என்றவுடன்தான் நிறுத்துவோம்.
என்ன..?கர்.கர்கர்கர்...ன்னு வருதா?
காதிலே புகையும் வருதா?

ஆனால் இப்போதெல்லாம் என்னவோ
ரேஷன் கடையில் சர்க்கரைக்கு க்யூவில் நிற்பதுபோல் போலீஸ் பந்தோபஸ்துடன் பத்துபத்து பேராக
அருவிக்குள் நிழைய அனுமதிக்கிறார்கள். அதுவும் ஐந்து நிமிடம் கூட குளிக்க விடுவதில்லை.
லத்தியால் தட்டி தட்டி வெளியேறச் சொல்கிறார்கள்!!காரணம் கூட்டம்,
மேலும் 'சாரல் விழா' என்ற பேரில்
மந்தி..ரிகள் கூட்டம் வேறு. என்னடா இது குத்தால அருவிக்கு வந்த சோதனை!!!!
 
அதனாலென்ன சகா? அவர்களே
கொப்பளித்துக்கொள்கிறார்கள் அவர்களே குளித்தும் கொள்கிறார்கள்!!!நமக்கென்ன போச்சு? நாம குளிக்கலையே!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]