Thursday, July 10, 2008

 

என்னா சிட்டி? ஓபிசிட்டி!!!

குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு குளித்துவிட்டு வந்த புவனா, புடவை கட்டும் போதுதான் தன்னை கவனித்தாள். ஐயோ!
திடீரென்று எப்படி இவ்வளவு குண்டானேன்? உண்டானபோது கூட இவ்வளவு குண்டாகவில்லையே? இப்போது எப்படி? கடுமையான டயட்டிலும் முறையான உடற்பயிற்சியிலும்
ஒரு குறையுமில்லை. பின் எவ்வாறு இது நிகழ்ந்து?

அம்மாவிடம் ஓடினாள். அம்மா!அம்மா! நான் என்ன செய்தேன் என்ன செய்யவில்லை?
திடீரென்று இப்படி குண்டடித்து நிற்கிறேனே!! சொல்லம்மா! என்று அழாத குறையாக அம்மாவிடம் முறையிட்டாள்.

அம்மாவுக்குத் தெரியும் காரணம். ஆனாலும் தான் சொன்னால் ஒத்துக்கமாட்டாளென்று
,'எதுக்கும் நீ உன்னோட டாக்டரைப் பாத்துடேன்!' என்றாள்

புவனா உடனே டாக்டர் லலிதாவுக்கு போன் செய்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்டாள்.
மதியம் 12மணிக்கு வரச் சொன்னாள்.

குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

க்ளினிக்கில் கூட்டம் குறைந்திருந்தது. கடைசியாக புவனா உள்ளே நுழைந்தாள்.

புவனா: ஹலோ! டாக்டர்!

லலிதா: வா! புவனா! என்ன ப்ராப்ளம்?

புவனா: திடீரென்று வெயிட் கூடியிருக்கிறேன். என்னான்னு புரியவில்லை. என்னோட
டயட், எக்ஸர்சைஸ் எல்லாம் கவனமாயிருக்கிறேன். ஆனாலும் இது எப்டின்னு
புரியலலையே? டாக்டர்!

லலிதா: சரி! உன்னோட டெய்லி ரொட்டீனைச் சொல்லு!

புவனா: காலைல ப்ரஷ் செய்தவுடன் 2க்ளாஸ் தண்ணீர் குடிப்பேன். அப்புரம் ஒரு காஃபி.
81/2மணிக்கு கெலாக்ஸ்,வாழைப்பழம். லஞ்சுக்கு ஒரு கப் சாதம், நிறைய
காய்கறிகள். ஒரு கப் மோர். ஈவினிங் காஃபியோடு நாலு மேர்ரி பிஸ்கட்.
டின்னருக்கு ரெண்டு சப்பாத்தி, டால். படுக்குமுன் ஒருகப் பால் ஒரு வாழைப்பழம்.
இவ்வளவுதான் டாக்டர் என் டயட்! இதோடு கூட காலை 5-6 பெசண்ட்நகர் பீச்சிலே
பிரிஸ்க் வாக்கிங். இதுக்கப்புரமும் எப்படி டாக்டர்?

லலிதா: ரொம்ப சரி! புவனா! உன்னோட டயட் சொல்லீட்ட! ஓகே! ஓங்கொழந்தையோட
ரொட்டீன் சொல்லு.

புவனா: காலைல ஒரு பெரிய டம்ளர் பால். பிறகு இட்லி அல்லது பொங்கல் அல்லது
ஒரு முட்டை. 11மணிக்கு ஆரஞ்சுஜூஸ். ஒரு மணிக்கு நெய்,பருப்பு
வேகவைத்த பீன்ஸ்,காரட்,உருளை போட்டு குழைய பிசைந்த சாதம். மூன்று
மணிக்கு தோலுரித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம். பிறகு பால். இரவு
இட்லி,நெய் ரோஸ்ட் தோசை,சப்பாத்தி இவற்றில் ஏதாவது ஒன்று. தொட்டுக்க
சாம்பார் அல்லது சட்னி, டால். இரவும் பால். தட்ஸால் டாக்டர்.

லலிதா: இதுவும் சரிதான் புவனா!! இன்னொண்ணு கேப்பேன்.

புவனா: கேளுங்க டாக்டர்!

லலிதா: குழந்தை சாப்பாடு எல்லாம் ஒழுங்கா சாப்பிடுவானா?
புவனா: எங்க...டாக்டர்! அது பெரிய போராட்டம்தான். வேடிக்கை காட்டி காட்டி
ஊட்டிவிடுவதுக்குள் என் தாவு தீந்துடுது டாக்டர்!!

லலிதா: அப்படியாவது முழுவதும் சாப்பிட்டு விடுவானா?

புவனா: அதயேங்கேக்குறீங்க! பாதிநாள் கிண்ணத்தில், தட்டில் பாதி அப்படியேயிருக்கும்.

லலிதா: மீதி சாப்பாட்டை என்ன செய்வாய்? ட்ராஷில் போட்டு விடுவாயா?

புவனா: அதெப்படி டாக்டர்? நெய்யும் வெண்ணையும் பருப்புமாக சேர்த்து பிசைந்த
தாயிற்றே?

லலிதா: அப்போ..என்ன செய்வாய்?

புவனா: அப்படியே வழித்து உருட்டி வாயில் போட்டுக்கொள்வேன்!

லலிதா: உன் வயிறுதான் அப்போ ட்ராஷா?

புவனா: ங்ஏஏஏ........!(விழித்தாள்)

லலிதா: புவனா.....!இதுதான் உன் ப்ராப்ளம்!!!உன் டயட்டில் கரெக்டாக இருந்து
கொண்டு...குழந்தையின் டயட்டில் பாதியை நீ விழுங்கினால் வெயிட் ஏறாமல்
என்ன செய்யும்? உங்கம்மா நீ வருமுன் எனக்கு போன் செய்து இது எல்லாவற்றை
யும் சொல்லீட்டாங்க. நான் சொல்வதைவிட நீங்க சொன்னால் உனக்குப் புரியும்
என்பதால் என்னை சொல்லச் சொன்னாங்க.

புவனா: இப்ப எனக்குப் புரியுது டாக்டர்!

லலிதா: எல்லா தாய்மார்களும் தங்கள் குழந்தை நல்ல சாப்பிட்ட வேண்டும் என்று
நிறைய பிசைந்து கொண்டு முழுவதும் சாப்பிடவேண்டுமென்று போராடுகிறார்கள்.
ஒரு நேரம் லங்கணம் போட்டால் பாதகமில்லை. இப்ப உனக்கு என்ன புரிந்தது?
சொல் பாக்கலாம்?

புவனா: குழந்தைக்கு சோம்பல் படாமல் கொஞ்சம்கொஞ்சமாக பிசைந்து
சாப்பாடு கொடுக்கவேண்டும். என்னோட வயிறு ட்ராஷ் இல்லை!!ஓகேயா? டாக்டர்?

லலிதா: ரொம்ப சரி! புவனா!

இருவரும் வாய்விட்டு சிரிக்கவாரம்பித்தனர். டாக்டர் லலிதாவுக்கு நன்றி சொல்லிவிட்டு
வீடு நோக்கி ஓடினாள் புவனா. அம்மாவுக்கும் அதே நன்றியைச் சொல்ல.

Labels:


Comments:
இது ஒரு விழிப்புணர்வு கதை.. அறிவுரையை கதை வடிவில் அழகாக சொல்லியிருக்கீங்க..
 
//என்னா சிட்டி? ஓபிசிட்டி!!//

"என்னா நடக்குது? எனக்குப் புரியுது!!"

:))! அப்பப்போ அனுபவத்தில் பார்ப்பவற்றை பார்வைக்கு வைக்கும் நானானி 'அம்மா'! நல்ல அறிவுரை இளம் அன்னையருக்கு.

சில சமயம் சாப்பாடை பாட்டிகளும் கொடுக்க வேண்டியிருக்குமே:)))!
 
நன்றி! புபட்டியன்!
 
ஓடியாடி பேரப்புள்ளைகளுக்கு
சோறுட்டும் பாட்டிமார்களுக்கு மிச்சமெல்லாம் எக்ஸ்ட்ரா டானிக்!!!
 
//பாட்டிமார்களுக்கு மிச்சமெல்லாம் எக்ஸ்ட்ரா டானிக்!!!//

அப்படிப் போடு(ங்க)!
:))))!
 
ஹஹ்ஹஹ்ஹா....!
எனக்கு எக்ஸ்ட்ரா டானிக்கெல்லாம்
வேண்டா!!
 
Well said !!!
I have a one and half year old and same thing was going in our household.Thats y we have our lunch together in case if there's any left over I have it and also we both eat the same food.Now it works out great.
-Swapna
 
swapna..nice name! your idea is also nice. so nice of you, and nice to hear from you. keep in touch swapna!!!
 
ஏறக்குறைய மருத்துவக்கட்டுரை? நல்ல முயற்சி.

நிறைய பெண்கள்/குடும்பத்தலைவிகள் தங்கள் வயிற்றை ட்ராஷ் போல தான் பயன்படுத்துகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
 
மாமியார் வீட்டுல "பிள்ளைங்க மிச்சத்தை நாம‌ சாப்பிட்டா, அவுங்களுக்கு வயித்து வலி வரும்"னு சொல்லுவாங்க. நல்ல வழின்னு கடைபிடிச்சாச்சு, ஒபிசிட்டி ஊர்ல நான் இல்லை;-)

என் தந்தை "லங்கணம் பரம ஔஷதம்" (பட்டினி பெரும் மருந்து) என்று அடிக்கடி சொல்வதும் நீங்கள் "லங்கணம்"னு எழுதினதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது..
 
நன்றாகச் சொன்னீர்கள்! கயல்விழி!
மருத்துவக் கட்டுரையா...? சரியாப் போச்சு போங்க! டாக்டரம்மா டெல்ஃபின் கோச்சுக்கப் பொறாங்க.
(அவங்க ஆளையே காணோம்)
நா ஏதோ...இன் பேரனின் சாப்பாட்டு நேரப் போராட்டத்தைப் பார்த்து உல்டாவா எழுதியது. நல்லாருக்குன்னு
சொல்லீட்டீங்க! ரொம்ப சந்தோசம்!!
 
ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க!
கெக்கேபிக்குணி!!!
வயித்தை வலிக்கும்தான். அதனால்தான் அளவா பிசைந்து கொடுக்கலாமின்னு சொன்னேன்.
சில தாய்மார்கள் தாங்கள் பிசைந்த சாதம் முழுவதையும் அவர்கள் வேலை முடியனும்னு குழந்தைக்குத்திணிப்பார்கள். குழந்தையும் வேறுவழியில்லாமல்
வாங்கிக்கொள்ளும். கிண்ணத்தை காலிசெய்துவிட்டு அவள் நிமிர்ரதுக்குள் உள்ளே போன அத்தனையும் வெளிவந்துவிடும்.
இது தேவையா?
'லங்கணம் பரம ஔஷதம்' தான்
ஒரு வேளை லங்கணம் போட கூட
அம்மாக்களுக்கு மனசு வராது.
வருகைக்கு நன்றி!!
 
மாமியார் வீட்டுல "பிள்ளைங்க மிச்சத்தை நாம‌ சாப்பிட்டா, அவுங்களுக்கு வயித்து வலி வரும்"னு சொல்லுவாங்க. நல்ல வழின்னு கடைபிடிச்சாச்சு, ஒபிசிட்டி ஊர்ல நான் இல்லை;-)

என் தந்தை "லங்கணம் பரம ஔஷதம்" (பட்டினி பெரும் மருந்து) என்று அடிக்கடி சொல்வதும் நீங்கள் "லங்கணம்"னு எழுதினதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது..
//
ரிபீட்டே, நன்றி கே.பிக்குணி.
நானானி நடைமுறையில் இப்படிக் குண்டான அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்.
 
அப்படிப் போடுங்க...வல்லி!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]