Monday, July 7, 2008

 

சாக்லேட் கேசரி!!

மரகத கேசரி.......சேரி...அடுத்தது என்ன என்று கேட்டிருந்தேன். வல்லி சாக்லேட்கலர்
என்றார்கள். நம்ம ராமலஷ்மி, 'அதான் க்ளூ கொடுத்தார்களே!'என்று கொஞ்சம் கிட்ட வந்தார்கள். ஆமாம்! தோழியர்களே! அது சாக்லேட் கேசரிதான்!!!!!!


வழக்கமான செய்முறையில், கேசரி பவுடருக்குப் பதிலாக 'குடிக்கும் சாக்லேட் தூள்' சேர்த்து
செய்யவேண்டியதுதான். ஏலம், முந்திரி தேவையில்லை. ரெடியானதும் தட்டில் சமப்படுத்தி
வெள்ளை சாக்லேட்டை கேசரி மீது துருவி அலங்கரிக்கலாம்.

எல்லோருக்கும் கிடைக்கும்படி இரண்டு தட்டுகளில் கேசரித் துண்டங்களை பரிமாறியிருக்கிறேன். சீனா! கவலைப் படாமல் வந்து சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்கள்!!

இத்தோடு கேசரிச் சாப்டர் முடிந்தது. சேரியா....?

Labels:


Comments:
Ive read this topic for some blogs. But I think this is more informative.
 
அட சிம்பிளா முடிஞ்சுதே சாக்லேட் கேசரி.... :)
 
செய்து பார்க்கிறேன் நானானி. அதற்கு முன் ஒவ்வொரு தட்டிலிருந்தும் ஒரு பீஸ் எடுத்துக் கொண்டு :)) வருபவர்களுக்கு விட்டு வைக்கிறேன்.

பேரன் விரும்பிச் சாப்பிட்டானா?
 
It is not only informative but also
innovative. Is'nt it?
thankQ for coming super lotto!
 
சாப்பிடுவதற்கும் ரொம்ப சிம்பிள்தான்
தமிழ் பிரியன்! உங்களுக்குப் பிடிச்சிருக்கா? அம்மாவை(காம்ளான்
கொடுக்கச்சொல்லு) செஞ்சுதரச் சொல்லுங்கள்!!!!
 
சமத்து! ராமலஷ்மி!!
பேரன் ரெண்டு துண்டுகள் விரும்பி சாப்பிட்டான். அதுக்குள் அவனுக்கு ரொம்பப் பிடித்த முறுக்கு கண்ணில் பட்டுவிட்டதால் அங்கே தாவி விட்டான்.
 
ஸ்ஸ்ஸ்...படம் பார்க்கும் போதே, அத்தனையும் சாப்பிடத்தோன்றுகிறது.

வொயிட் சாக்லேட் மேலே தூவியது தான் ஹைலைட்.

அழகான சதுரத் துண்டுகள் ஐடியா, இன்னும் அருமை. நேடிவ் ப்ரொவ்னீஸ்-ன்னு(Natibe brownies) பேரு வைப்போமா?
:D :D
 
நானானி இந்த சூப்பர் லோட்டோ ஸ்ப்பேம் கமெண்டா இருக்குமோ..?

கேசரி நல்லா இருக்கு பர்பி மாதிரி பார்க்க.. என்ன அதுக்குள்ள சேப்டரை க்ளோஸ் செய்திட்டீங்க..இன்னும் நாலு டிசைன் போடுவீங்கன்னு நினைச்சேன்..
 
அத்தனையும் அப்படியேச் சாப்பிடலாம்
நியூபீ!
நல்ல பேர் வெச்ச உங்களுக்கு
டுகோவும் உண்டு!!!!
 
கயல்விழி முத்துலெட்சுமி!
நன்றி! பர்பி கேசரிக்கு.
என் கோடவுனுக்கு சரக்கு ஏதாவது
வந்தால் மறுபடி கேசரிக்கிறேன்.
சேரியா?
 
YUMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
 
பாக்க நல்லாத்தான் இருக்கு ஆனா சாப்பிட முடியுமா?? இல்ல எதுக்காவது இப்படி பெயிண்ட் அடிச்சு வச்சிருந்தா என்ன செய்ய?
 
என் கோடவுனுக்கு சரக்கு ஏதாவது
வந்தால் மறுபடி கேசரிக்கிறேன்//
இது!!!!

நானானி டச் சூப்பர்லேடிவ்ல போகுதுப்பா.
இன்னும் ஏதாவது வேணுமே. முறுக்கு??
:))
 
Thooya!!
ThankQQQQQQQQQQQQQQQQQQQQQQ!
 
இவன்!!இது வேறயா...?
நீங்க இவண் வந்து ரீலா...ரியலான்னு
தெரிஞ்சிட்டு சாப்பிட்டு சப்புகொட்டிட்டு
போங்க!சேரியா?
 
சரியாக 7:28-க்கு மெயில் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அக்கணம்
வல்லிமெயில் வந்து அமர்ந்தது.
இதுதான் முதல் முறை புது மெயில்
விழுவதைப் பார்ப்பது. அதுவும்
'வல்லிமெயில்!!!'
இப்போல்லாம் அப்பப்பதான் வருது?
 
இதைப் பாருடா. உங்களை இல்லம்மா நானானி.
இது நல்லா இருக்கே. ஏம்மா நாந்தானே பழுப்பு நிறம்னு சொன்னேன். சொன்னவளுக்குச் சாக்கலேட் கூட வாயில போடமுடியாது. உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
 
அடடா....!இந்த 'டா'வும் உங்களையில்லை வல்லி!!பதிவின் முதல் வரியிலேயே 'யூ த ஃபஸ்ட்!'
சொல்லீட்டேனே! நாஞ்சொன்னது
வேறெங்கும் காணோமேன்னு.
 
உங்களுக்காக செயற்கை இனிப்பு
சேர்த்து செய்யலாமா? அல்லது நல்ல
காரசார கேசரி செய்யலாமான்னு
யோசிச்சிட்டிருக்கேன். சேரியாப்பா?
 
கேசரி சாப்டர் ஓவரா?
ஓ சரி, ஓ சரி, ஓ சரி
சகாதேவன்
 
// சீனா! கவலைப் படாமல் வந்து சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்கள்!! //

எனக்கு இல்லைங்களா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]