Friday, July 4, 2008

 

விருப்பம் நிறைவேற்றும் வா..ரம்!! தாமரைக் கேட்ட பானைக்கதை!

தாமரைக் கேட்ட பானைக் கதை -செந்
தாமரைக் கேட்ட பானைக் கதை - அதை

சொல்லாமல் போனால் கிடைக்கும் உதை!!

எப்படியோ என்னை உசுப்பிட்டே இருக்கீங்க மாத்தி மாத்தி! யானையாச்சு, பூனையாச்சு, இப்ப
ரைமிங்குக்காக பானையா? இருந்தாலும் உடுறதில்ல. இன்னும் என்னென்ன 'னை' இருக்கோ..! ஆனா என்னை நை..நை..ங்காம இத்தோட ஆள வுடுங்க சாமீ!!


"பொங்கல் பானை"

பாபுவும் கீதாவும் சொந்த ஊருக்குச் சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர்.
வழியில் திருச்சியருகே சமயபுரம் வந்ததும் பாபு, 'கீதா! கோவிலுக்குப் போய்விட்டு போலாமா?'
என்றான். கரும்பு தின்னக் கூலியா?

கார் வலது புறம் திரும்பி கோவில் ஆர்ச் வழியே கோவிலை அடைந்தது. நல்ல கூட்டம்
அன்று வெள்ளிக்கிழமை வேறு.

கோவிலுக்கு வெளியே நிறைய பேர் அம்மனுக்கு பொங்கலிட்டுக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த கீதாவுக்கு தானும் அது போல் பொங்கலிட ஆசைப்பட்டு, பாபுவிடம் சொன்னாள்.
அதற்கு பாபு, 'நாம் அதற்காக தயாராக வரவில்லையே!' என்ற போது...அருகில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணி, 'எல்லாமே இங்கேயே கிடைக்கும் சார்! என்னோட வாங்க, நான் எல்லாம் வாங்கித்தாரேன்.' என்று முன்வந்தாள்.

இருவரும் அவள் பின்னால் சென்றார்கள். ஒரு கடையில் பல சைஸ்களில் மண்பானைகள்(கதையின் முக்கிய பாத்திரம் வந்துடுதுடுத்து!!) அதில் கால் கிலோ பிடிக்கும் அளவில் அவளே...
டொக்டொக் என்று தட்டிப் பாத்து ஒன்றை தேர்வு செய்து கொடுத்தாள். கூடவே மரக்கரண்டி. பானைமூடி ஒன்றும் வாங்கினாள்
அடுத்த கடைக்குப் போய் அரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை ஏலக்காய், தீப்பெட்டி, பெரிய கட்டிக் கற்பூரம் எல்லாம் வாங்கிக்கொடுத்தாள்.

எல்லாஞ்சரி....அடுப்பு, விறகு? பூக்காரப் பெண்மணி அங்கே பொங்கலிட்டுக் கொண்டிருப்பவர்களைக் காட்டினாள். வாவ்!!!!!!!!!டூ-இன்-ஒன்!!!
அடுப்பும் நானே! எரிபொருளும் நானே! என்று அவளைப் பார்த்து சிரித்தன.
மாட்டுச் சாணத்தை வரட்டியாக தட்டி வைத்திருப்பார்களே! அவற்றை இரண்டிரண்டாக உடைத்து
வட்டமாக சுமார் முக்காலடி உயரத்துக்கு நடுவில் ஹாலோவாக அடுக்கி அதன் மேல் மண் அல்லது பித்தளை எவர்சில்வர் கனம் குறைந்த பானைகளை இருத்தி நெருப்பு மூட்டி பொங்கலிட்டுக் கொண்டிருதார்கள் பெண்கள்!

'எனக்கு இப்படியெல்லாம் பொங்கலிடத் தெரியாதே! தெரிந்ததெல்லாம் ஸ்டவ் அடுப்பு, கேஸ் அடுப்பு...மிஞ்சிமிஞ்சிப் போனால் தைப் பொங்கலுக்கு மூன்று மண்கட்டி வைத்தும் உபயோகித்திருக்கிறேனே தவிர இம்மாதிரி "டெக்னிக்" எல்லாம் பாத்ததேயில்லையே!' என்று வியந்தாள் கீதா.

'உனக்கென்னம்மா? நான் அடுக்கித்தாரேன்!' என்றவள் அவளிடம் பணம் வாங்கிக்கொண்டு
வரட்டிகள் வாங்கி வந்தாள். பொங்கல் விடத் தோதான இடம் பார்த்து அப்பூக்காரி
ரெண்டிரெண்டாக வரட்டிகளை உடைத்து 'ஆஞ்சநேயர் தன் வாலால் அமைத்துக்கொண்ட
ஆசனம் போல்' அழகாக அடுக்கித்தந்தாள்.

அடுப்பை எப்படி மூட்டுவது? கீதாவின் அந்த 'ஸ்டார்டிங்க ட்ரபுலுக்கும்' அவள் கைகொடுத்து
பொங்கல் நீங்கதானே விடவேண்டும்! நான் சொல்கிறேன் அதுபடி ஆரம்பியுங்கள் என்று கீதாவை அம்மனை வேண்டிக்கொண்டு முதலில் அந்த கட்டி கற்பூரத்தை வரட்டிகளின் நடுவே வைத்து
ஏற்றச் சொன்னாள். அதன் மேல் சிறிது சிறிதாக உடைத்த வரட்டிகளையும் வைத்து அடுப்பை எரியச் செய்து தந்தாள். சுத்தம் செய்த மண்பானைக்கு குங்குமமிட்டு அளவாக நீர் விட்டு
ரொம்பரொம்ப டெக்னிக்கலாக பொங்கலிடவாரம்பித்தாள் கீதா.

வரட்டி அடுக்கின் மேல் மண்பானையை மிகவும் பயத்துடனே வைத்தாள். பானையோடு ஓர்
உடன்படிக்கையும் செய்து கொண்டாள். "பானையே! மண்பானையே!!இது என் கன்னி முயற்சி!
காலை வாறிடாமல் நல்லபடியாக நான் சர்க்கரைப் பொங்கல் பொங்கிட அருள் புரிவாய்! நான் இப்போதுதான் பார்க்கும் வரட்டி அடுப்பே! உனக்கும்தான்!"
அதோடு வரட்டிகளுக்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு ஆரம்பித்தாள்.

இந்த சமயம்....அந்த சமயபுரத்து மாரியம்மனை மறந்தாள். தன் புது முயற்சிக்குத் துணையாக
'பானையம்மனையே' வேண்டினாள். பொங்கல் எல்லாம் உனக்கே உனக்கு என்றும் ஆசைகாட்டினாள்.

நெருப்பு நன்றாகப் பிடித்து எரியவாரம்பித்ததும் பூக்காரி,'அம்மா! இனி பாத்துக்கொள். நா கொஞ்சநேரம் கழித்து வாரேன்.அரிசியை கிண்டும்போது மாத்திரம் ஜாக்கிரதையாக கிண்டு.' என்று ஒரு டிப்பும் டிப்பிவிட்டு தன் யாவாரத்தை கவனிக்கப்போனாள்.

கீதா மிகவும் கவனமாக நீர் கொதித்ததும் அரிசியை பானையிலிட்டாள். அப்பப்ப பூக்காரி சொன்னது போல் பூப்போல் கிண்டினாள். பானைக்கு சிரிப்புத்தாங்கலை...பொங்கிவழிந்தது!!
அதிகப்படி நீரை கரண்டியால் எடுத்துவிட்டாள். சாதம் குழைய வெந்ததும் வெல்லத்தை சேர்த்து
இருகி வந்ததும் பானையை மெதுவாக கீழே இறக்கி வைத்துத்தாள். என்ன அதிசயம்! வரட்டி கலையாமல் கனலோடு அப்படியே இருந்தது. நன்றி வரட்டியே! பானையின் மூடியையே
கடாய் மாதிரி அடுப்பில் மெதுவாக வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையையும் வறுத்து
மணக்க மணக்க சர்க்கரைப் பொங்கலில் சேர்த்தாள். ஏலக்காயையும் பொடித்துப் போட்டாள்.

ஏலம், சர்க்கரை, நெய், அதில் வறுத்த முந்திரி, திராட்சை எல்லாம் சேர்ந்து போட்ட...என்றுமே விலகாத கூட்டணியில், சர்க்கரைப் பொங்கல் அந்த சுத்துவட்டாரத்தையே
தன் கமகமக்கும் மணத்தால் தூக்கியடித்தது.

பானைக்கு பெருமை பிடிபடவில்லை!!! 'என்னில் சமைத்த பொங்கல்தான் மணக்குது!' என்று
'இந்த ஏசியை நான் நெக்ஸ்டில்தான் வாங்கினேன்!!!!!' என்று அனு மாதிரி கூவியது.

யார் காதில் விழுந்ததோ? கீதாவுக்கு பானையின் சந்தோஷம் நல்லாவே புரிந்தது. அம்மனை
சேவிப்பதுக்கு முன் பானையையும் வரட்டி அடுப்பையும் விழுந்துவிழுந்து வணங்கி தன் நன்றியையும் மகிழ்ச்சியையும்
தெரிவித்தாள்.

மேலும் வரட்டி அடுப்பில் அதன் தொழில்நுட்பத்தோடு சமைக்க கற்றுக்கொண்டதில் பெருமை பிடிபடவில்லை. பாபுவும் அவளின் குழந்தைத்தனமான மகிழ்ச்சியில் கலந்து கொண்டான்.

பூக்காரியும் வந்துவிட அவளையும் அழைத்துக்கொண்டு அம்மனுக்கு பொங்கலைப் நெய்வேத்தியம்
செய்து வணங்கிவிட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோடு பானைப் பொங்கலை அப்படியே
அவளுக்கு குரு காணிக்கையாக சமர்ப்பித்தாள் நன்றியோடு!!! பானையும் அவளைப்பார்த்து குறும்பாக கண் சிமிட்டியது. அத்துடன் ஒரு நல்ல தொகையையும்
தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து கொடுத்து பூக்காரியை மகிழ்வித்துத் தானும் மகிழ்ந்தாள்!!!

அம்மனின் ஆசியோடு பானையின் ஆசியும் சேர்ந்து கிடைத்த திருப்தியில் ஊர் திரும்பினர்.

பி.கு:

இன்னொரு சமயம் பெரியபாளையம் கோவிலுக்குப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தபோது,
தயாராக அடுப்பு தவிர மற்ற பொருட்கள் வாங்கிக்கொண்டு போய், பெரிய 'தில்லாலங்கடி'
போல் தானே வரட்டி வாங்கி, தானே அடுக்கி ரொம்ப இயல்பாக அம்மனுக்கு பொங்கலிட்டு(இம்முறை வெறும் சாதம்) வணங்கி, பின் கோவிலுக்கு அருகில் ஓடும் ஆற்றங்கரையில்(பாலாறு?)வைத்து கொண்டுபோயிருந்த ரயில் சட்னி, உருளை சிப்ஸ் வைத்து சாப்பிட்டது மறக்கமுடியாதது கீதாவுக்கு.பி.கு. எண்:2:
இந்த கீதா யார்?
அது நாந்தேன்!

பி.கு.எண்:3
சீனா அவர்கள், "யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க முடியாமல்" தன் பெயர்த்திகளிடம் செமையாய் மாட்டிக் கொண்டு மயங்கி விழுந்தாராம். பாவம்!!
யானை என்று ஒரு காதிதத்தில் எழுதியோ, வரைந்தோ அல்லது ஓர் அட்டையில் வரைந்து வெட்டியோ....அவர்கள் பார்க்கும்படி பானைக்குள் அடைத்துக் காட்டலாம்.
இதுக்கெல்லாம் அசராத வலுத்த குட்டிகளாயின்....வேறு வழி உண்டு....அதை..........
பிறகு சொல்கிறேன்!!!!!!!!!

Labels:


Comments:
//பானையின் மூடியையே
கடாய் மாதிரி அடுப்பில் மெதுவாக வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையையும் வறுத்து
மணக்க மணக்க சர்க்கரைப் பொங்கலில் சேர்த்தாள்.//

என்னன்ன டெக்னிக்கள்? பூனை ஆனை தோசைக்குப் பிறகு மணக்க மணக்கப் பானையிலே எங்களுக்கு சர்க்கரைப் பொங்கலா? இனிய வாழ்த்துக்கள்!
 
பானைக் கதை கடைசியில் உண்மைதானா?.,,,,,, நல்லா தான் இருக்கு....:)
 
//இன்னும் என்னென்ன 'னை' இருக்கோ..! ஆனா என்னை நை..நை..ங்காம இத்தோட ஆள வுடுங்க சாமீ!!//
எனக் கூறியிருந்ததால் பி.கு.3 பற்றிக் கேட்காமலிருந்தேன்:)!

//வேறு வழி உண்டு....அதை..........
பிறகு சொல்கிறேன்!!!!!!!!!//
என்றுதான் சொல்லியிருக்கிறீர்களே! காத்திருக்கிறோம்.

[ அப்படியே நான் அழுத்திக் கேட்ட 'ணை'யையும் பிறகு சொல்லிடுங்க. (அதாங்க திண்ணை). விருப்பம் நிறைவேற்றும் வா..ரம் இன்னும் முடியவில்லையாக்கும்..:)!]
 
ராமலஷ்மி!
எல்லாம் நம்ம 'ஐடியா கோடவுனில்'
இருந்து எடுத்தது.
 
உண்மைதான்! தமிழ்பிரியன்!!
யாராவது என்னிடம் ஏதாவது கேட்டால்
என்னால் முடிந்தால் செய்துடனும். முடியலையா? முடியலைன்னு வழிஞ்சிடனும்.
ஏதோ...பானையை நான் கூத்தாடி கூத்தாடி போட்டுடைக்கலையே? அந்த மட்டும் நல்லது!!
 
'ணை'க் கதை கட்டாயம் உண்டு.
விரைவில் எதிர்பாருங்கள்!!பதிவுத்திரையில்!!

என்ன வழின்னு நீங்கதான் சொல்லி
சிரமம் குறையுங்களேன்!!
 
மூடியை கடாய் மாதிரி உபயோகித்த டெக்னிக்தான் உங்களைக் கவர்ந்ததா?

வரட்டி அடுப்பு? நான் அசந்தே போனேன்.
 
நான் ஏதோ விளையாட்டாக கேட்க பானை கதை அழகாக சொன்னீர்கள். அடுத்த விருப்பம் சேனை. அது சேனைக்கிழங்கு அல்லது ராஜாவின் படையாக இருக்கலாம். கோடவுனைத் திறந்து பாருங்கள். நிச்சயம் இருக்கும். இல்லையென்றாலும் கற்பனை (ஆஹா பனை ஒன்று இருக்கே) குதிரையைத் தட்டி விடுங்கள்.
தாமரை.
 
நான் திருச்சி டி.வி.எஸ் ஒர்க்ஷாப்பில் வேலை செய்தபோது, என்ஞின் ஓவரால் (ரிப்பேர்) செய்த கார், பஸ், லாரியை எல்லாம் சோதனை ஓட்டம் செய்ய சமயபுரம் வரை சென்று கோவிலில் ஒரு அர்ச்சனை செய்துவாருங்கள் என்பார் எங்கள் ஒர்க்ஸ் மானேஜர், திரு கணபதியாபிள்ளை. நான் பஸ் பிரிவில் இருந்ததால் நானே எடுத்துக்கொண்டு சமயபுரம் செல்வேன். கோவிலை வலம் வந்து ஒரு ஓரமாக நிறுத்திச் செல்வேன்

நெடுநாட்களுக்குப் பின் ஒருமுறை சென்னைக்கு காரில் சென்ற போது சமயபுரம் கோவிலுக்குப் போனேன். இடம் முன்போல இல்லை. நிறைய கடைகள். காரை நிறுத்த இடமே இல்லை. ஒரு கடைக்காரர் வந்து இங்கு நிறுத்துங்கள் என்றார். சரி என்று இரங்கினால் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு என்ன விலை ஆகும்? அவர் கேட்ட தொகை, என் கார் நிறுத்ததற்கு வாடகை சேர்த்து என்று புரிந்தது. அர்ச்சனை வேண்டாம் நான் அம்மன் தரிசிக்கத்தான் வந்தேன் என்றதும் காரை எடுத்து வேரிடம் பாருங்கள் என்றார். அதன்பின் எப்போது அவ்வழியாக சென்றாலும் ஹைவேயிலிருந்து நுழைவாயில் உள்ள ஆர்ச்சை கும்பிட்டுவிட்டு போகிறேன்
சகாதேவன்
 
//என்ன வழின்னு நீங்கதான் சொல்லி
சிரமம் குறையுங்களேன்!!//

திருநெல்வேலிக்காரரான உங்கள் வீட்டிலும் திண்ணை இல்லாமலா இருந்திருக்கும்? ஏற்றுங்கள் உடனே கொசுவர்த்தி. நாம அதிலே எப்படி எக்ஸ்பெர்ட்னு சொல்லியிருக்கார் பாருங்க ஆயில்யன் அவர் தொகுத்த வலைச்சரத்திலே..

http://blogintamil.blogspot.com/2008/06/blog-post_7127.html
 
ஆஹா....!நீங்கதானா? தாமரை?
முதலில் உங்க கற்'பனை'க் குதிரையை கட்டிவையுங்கள்.
விட்டால் நான் கதைத்துக் கொண்டேயிருப்பேன். அப்புரம் எல்லோரும் என்'னை' 'நை'யப்புடைத்துவிடுவார்கள்!!!
 
ஆனாலும் கோடவுனை கொஞ்சம் திறந்து பார்த்தேன். சேனை!!!!
அம்மா செய்த 'சேனைக் கிழங்கு' தேர்
ஞாபகம் வந்தது. இப்ப நான் என்ன செய்ய?
 
ராமலஷ்மி! என்ன வழின்னது...யானையை பானைக்குள் அடைக்க!
திண்ணையி ஏறி ஒக்காந்தாச்சு....வந்துட்டேயிருக்கு.
 
சும்மா ரொம்ப
பி.கு பண்ணாமல்,
சேனை, பனை என்று
ஏதாவது ஒரு கதை
சொல்லுங்கள்.
தாமரை.
 
தாமரை!!
உங்க பிகுவெல்லாம் விட்டுட்டு இப்பதே
பின்னோட்டப் பெட்டிக்குள்ளே
வந்திருக்கீக.....ரங்கமணி சொல்லிக்கொடுத்தாரா?
நீங்க எத்தனை 'னை' கேட்டாலும்
நான் நொங்குநொங்குன்னு நொங்கிவிடுவேன். அப்பால லபோ..லபோங்கக்கூடாது. சேரியா?
 
//பானையின் மூடியையே
கடாய் மாதிரி அடுப்பில் மெதுவாக வைத்து அதில் நெய் ஊற்றி//

இந்த டெக்னிக் அந்தக்காலத்து ரயிலடுக்கு மூடியை கடாயாக உபயோகிக்கும் டெக்னிக் மாதிரி இருக்கே. :))
இப்போ சமயபுரம் போனீங்கன்னா நிக்கக்கூட இடம் இல்லை.
ஷோபா
 
கட்டுரை அருமை வாழ்த்துக்கள். நானானி!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]