Wednesday, July 2, 2008

 

மரகத கேசரி

அது என்ன மரகத கேசரி? மரகதவர்மன், கேசரிவர்மன் என்பது போல் ஏதோ ராஜா காலத்துப்
பேரா? ஒரு வர்மனும் இல்லை. பின்ன என்ன? மரகதம் என்றால் பச்சை நிறம். கேசரி என்றால்?
வேறென்ன ஊருக்கு எழச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி! மாதிரி நமக்கெல்லாம்
இனிப்பு என்றவுடன் கை கொடுக்கும் நாம் கிண்டும் ரவாகேசரிதான்!

எப்போதும் ஆரஞ்சு நிறத்திலேயே கிண்டிக்கொண்டிருக்கோமே....வேஷ்று வண்ணத்தில் கிண்டினால் என்ன? என்ற எண்ணம் என்னை வழக்கம் போல் பிறாண்டியது.
அப்போ உதித்ததுதான் இந்த 'மரகத கேசரி'

'யாரங்கே!!நான்...நானே...கிண்டிய மரகதகேசரியை கொண்டுவாருங்கள்!!'
கொஞ்சம் ராஜா காலத்து பேர் போல் தொனித்ததால் இந்த கெத்து!!


வழக்கமான கேசரி செய்யும் விதம் பற்றி இங்கு விளக்கப்போவது இல்லை.
ஆனால் இந்த பச்சை நிறம் வந்த விதம் மட்டும் சொல்கிறேன்.
முக்கியமான தேவைகள்...பிஸ்தா கலர், பிஸ்த எசன்ஸ். அவ்ளோதான். ஆரஞ்சு கலருக்குப் பதிலாக பிஸ்தா கலரும் எசன்ஸும். யாராவது முன்னே செய்திருந்தால் ஜஸ்ட் இக்னோர் இட்!!

ஸ்லைஸ் செய்து வைத்திருக்கிறேன் எல்லோரும் வந்து ஆளுக்கொரு துண்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து என்ன கேசரி என்று சொன்னால் அவர்களுக்கு காட்பெரீஸ் சாக்லெட் தருவேன்!!!!

Labels:


Comments:
அட இப்ப தான் கேள்விபடறேன் இந்த கேசரி பத்தி. சூப்பர். :))

அடுத்து என்ன பைனாப்பிள் கேசரியா? :))
 
நானானி

கலக்குறீங்க - இத்தூணூண்டு ( தம்மாத்துண்டு ) துண்ட வச்சிட்டு ஊர்லே உள்ள எல்லோரையும் கூப்பிடறீங்க துன்னு பாக்குறதுக்கு.

நல்லா இருக்கா - ம்ம்ம்ம்
 
வணக்கம் நானானி மேடம், அடடா கைவசம் இந்த பிஸ்தா எசன்ஸ் இருக்கு.இன்னிக்கே செஞ்சு சாப்பிடபோறோம்.அடுத்து என்ன ரவா கேசரியா??
 
/அடுத்து என்ன கேசரி என்று சொன்னால்//

ம்ம்ம்ம்....வேற என்ன? மஞ்சள் நிற பைனாப்பிள் கேசரி தான்.

என்னது இல்லையா?:(. பரவால்ல, தப்புன்னாலும் எனக்கு ஒரு சாக்லேட் ப்ளீஸ்...:-|
 
பச்சை நிறமே பச்சை நிறமே எனப் பாடியபடி செய்த மரகதக் கேசரியை பாந்தமாக எங்களுக்காகப் பரிமாறியும் இருக்கும் விருந்தோம்பலை என்னவென்று சொல்ல?

//அடுத்து என்ன கேசரி என்று சொன்னால் அவர்களுக்கு காட்பெரீஸ் சாக்லெட் தருவேன்!!!!//

அடுத்து வெனிலா..பைன் ஆப்பிள்..ஸ்ட்ராபெரி..?
சாக்லெட் உண்டா..:))?
 
ஆந்திர கேசரி என்று முன்னே கேட்ட ஞாபகம்.
அது என்னங்க?
சகாதேவன்
 
அடுத்தது பழுப்பு நிற கேசரி.அதாவது சாக்க்லேட் நிறம். சரியா நானானி. ம்ம்ம்.வாசனை........................................................................................
 
கேசரி ஸ்பெஷலிஸ்ட் இங்க சிலர் இருக்காங்க..ஒருத்தங்க லீவு விட்டுட்டுபோன டீச்சர்..

இது எனக்கு பிடித்த கலரில் இருக்கு செய்து பாத்துடறேன்..
 
வல்லிசிம்ஹன் said...
//அடுத்தது பழுப்பு நிற கேசரி.அதாவது சாக்க்லேட் நிறம்.//

இருக்கலாம் இருக்கலாம், அதான் காட்பரீஸ் கொடுப்பதாய் க்ளூ கொடுத்தார்களோ நானானி:))?
 
அட! ப்பூன்னு சொல்லிடுவாங்களோன்னு நெனச்சேன்.
பரவாயில்லை. யாரும் தொடாத ரூட்!
அடுத்ததா? பொறுங்கள். அம்பி!!
 
சீனா!
அப்படி விட்ருவேனா?
அது....இழுக்க இழுக்க இன்பம்....
போல் எடுக்க எடுக்க வந்து கொண்டேயிருக்கும் 'அட்ஷய தட்டு!'
கவலைப் படாமல் வேணுங்கறதை
எடுத்துக்கொள்ளுங்கள்!!!
இப்ப லல்லாருக்கா?
 
உங்க உற்சாகம் பாத்து சந்தோசம்! பிரேம்ஜி!!
வெறும் எசன்ஸ் மட்டும் போதாது பிஸ்தா கலரும் தேவை. இது ரவாகேசரியில் வரைட்டிதான்
 
தப்புத்தான் நியூபீ! இருந்தாலும் உனக்கில்லாததா? கட்டாயம் சாக்லேட்
உண்டு. இல்லாட்டா ராணித்தேனியும் ராஜாத் தேனியும் என்னை வந்து கொட்டிடாதா?
 
சாக்லேட் கிடையாது ராமலஷ்மி!!
 
ஆந்திர கேசரி...ஒரு பத்திரிக்கை
கேசரி என்ற பேரில் ஒரு மந்திரியும் உண்டு.
 
சாக்லேட் நிறம் சரி!
 
ராமலஷ்மி! சபாஷ்! உங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்கிறீர்கள்!
 
நல்ல கலரு...

கேசரி சூப்பருங்க...


(ஆனா உப்புதான் பத்தலை...;)
 
ஹி ஹி. அப்போ அதற்காகவாவது ஒரு சாக்லேட் ப்ளீஸ்.
 
தமிழன்...தமிழன்..!
அடுத்த முறை உப்பு காரம் சரியாப் போட்டு கறிவேப்பிலையும் தாளிச்சு
கொட்டிடறேன்! ஆருகண்டா? அது கூட நல்லாத்தானிருக்கும் போல!
 
மேற்கொண்டு வேலையைப் பாத்துட்டுத்தான் தருவேன்!!!!!!!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]