Wednesday, July 2, 2008

 

இனிமையான பதிவர்....அல்ல பதிவர்கள் சந்திப்பு!!

ஒரு முறை பதிவர்-நண்பர் அவர்களின் பதிவொன்றிலே, "யாராவது மதுரை வந்தால் எனக்குத்
தெரியப் படுத்துங்கள். நான் துணைவியாரோடு வந்து சந்திக்கிறேன்." என்று ஓர் அழைப்பு
விடுத்திருந்தார். யாரெல்லாம் தெரியப் படுத்தினார்களோ தெரியாது.

அப்படி அழைத்தவிதம் எனக்குப் பிடித்திருந்தது. சில மாதங்கள் கழித்து மதுரை போகும்
சந்தர்ப்பம் வாய்த்தது.
ஆகவே சந்திக்க விரும்பிய பதிவர் அவர்களுக்கு ஈ-மெயிலில் மதுரை வரும் விபரமும் என்னோட செல்-எண்ணும் கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

நாங்கள் மதுரையிலிருந்த என் நாத்தனார் வீட்டுக்கு வந்துவிட்டோம். மறுநாள் போன் செய்து பார்க்க வருவதாக கூறினார். விலாசம் சொல்லி சிரமமில்லாவிட்டால் வரச்சொன்னேன்...காரணம் வீடு ஊரைவிட்டு சிறிது வெளியே இருந்தது.

ஆனால் அன்று கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு தூரம் ஆட்டோ பிடித்தே
வந்துவிட்டார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ரங்கமணி "நிகழ்ச்சியை திருடிக்கொண்டார்"( steal the show). அவர் பேச ஆரம்பித்தால் "சகல வயல்களையும்" தொட்டுவிட்டே வருவார்.

பிறகு இனிப்பு...ஆமா! அல்வாதான்! காரம் காபி உபசரிப்போடு சந்திப்பு இனிதே முடிந்தது.
கையிலும் டுகோவாக வேறு இனிப்பும் காரமும் கொடுத்தனுப்பினேன்.


இதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து அதே மதுரைக்கு வேறு வேலையாக ரங்கமணி செல்வதாக இருந்தார். நானும் உடன் வருவதாகக் கூறி கிளம்பிவிட்டேன். நாத்தனார் வெளிநாடு சென்றுவிட்டத்தால் ஹோட்டலில் தங்குவதாக ஏற்பாடு.
இம்முறையும் நாங்கள் தங்கியிருக்கப் போகும் நாட்களைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பிவிட்டு ரயிலேறினோம்.

ஹோட்டலில் எங்களுக்கு ஒதுக்கியிருக்கும் மூன்றாவது மாடியின் ஏசி அறைக்குப் போவதற்காக
லிப்ஃட் அருகில் நின்றிருந்த போதே நண்பர் வந்துவிட்டார்.

எங்களோடு அறைக்கு வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, 'ஓய்வெடுங்கள்! மாலையில்
மனைவியோடு வருகிறேன்.' என்று சென்றுவிட்டார்.

மாலையில் அவர் தம் மனைவியோடு வந்த போது ரங்ஸ் தனது பழைய நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தார்.

இருவரையும் வரவேற்று வலையுலகைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் தன் மனைவியும் ப்ளாக்கில் செல்விசங்கர் என்ற பேரில் எழுதுகிறார் என்ற விபரத்தைப் போட்டுடைத்தார். அதுவரை அவரது மனைவி என்ற முறையில் பேசிக்கொண்டிருந்தாவள், பின் சகபதிவர் என்றறிந்ததும் ரெட்டை சந்தோஷமாயிருந்தது. பேச்சினூடே அவர்களது மகளும் பதிவெழுதுகிறார்.........என்ற பேரில்
என்றதும் மகிழ்ச்சி மும்மடங்காயிற்று. ஆகாககாகா....!மூவர் சந்திப்பு நாலாவது நபர் அறிமுகமாக
மாறியது.

சரியாக அந்நேரம் காஃபி நேரம்... நான்கு காஃபி வாங்கி
நால்வருமாக அருந்தினோம். இதே வீடாக இருந்தால்....கலக்கியிருபேனுல்ல?

ரங்ஸ் வந்ததும் ஜூனியர் விகடன் ரேஞ்சுக்கு நாட்டு நடப்பையெல்லாம் அலசிவிட்டு, பரஸ்பரம்
அவரவர் இல்லங்களுக்கு வர அன்பான அழைப்பையும் விடுத்துவிட்டுப் பிரிந்தோம்.

சகோதரி செல்வி சங்கர் அவர்களின் தமிழ் பேச்சு சுவையாயிருந்தது. நல்ல தமிழ் கேட்க எப்போதுமே பிடிக்கும்.

சென்னை வரும் போது தவறாமல் எங்கள் இல்லத்துக்கு வருமாறு அன்போடு அழைத்துவிட்டு
ஊர் திரும்பினோம்.

இரு பதிவர்களோடான அந்த சந்திப்பு அவர்கள் கொண்டு வந்த ஆப்பிள்களைப் போல்
இனிப்பாக இருந்தது!!!

Labels:


Comments:
பதிவு எழுதிய விதமும் இனிமையாகத் தான் இருக்கு..... :)
 
அடடே, அருமையா நடந்திருக்கே நானானி.
அன்பர்கள் சந்திப்பு என்றே எழுதணும்.
 
இனிமையாக முடிந்த பதிவர்கள் சந்திப்பை அருமையாக விவரித்திருக்கிறீர்கள்!

//சகோதரி செல்வி சங்கர் அவர்களின் தமிழ் பேச்சு சுவையாயிருந்தது.//

அவரது எழுத்தைப் போலவே!
இல்லையா நானானி?
 
நானானி, நட்பு இனிமை உடையதாய் இருக்க வேண்டும். இன்சொற்கள் மென்மையான இதயத்திற்கு ஊட்டம் அளிக்க வேண்டும். சந்திப்போம் சென்னையில்.

பதிவின் தரம் உயர்தரமாக, மொழிநடை சிறப்பாக அமைந்திருக்கிறது.
 
பேனா நண்பர்கள் கேட்டிருக்கிறேன்.
பதிவு நண்பர்களா? தொடரட்டும்.
சகாதேவன்
 
நன்றி! தமிழ்பிரியன்!!
இனிமையான சந்திப்பைப் பற்றி எழுதும்போது எழுத்தும் இனிமையாக
அமைந்துவிட்டது.
 
ஆமாப்பா! உங்களோடு நடந்த சந்திப்பு போலவே!!!
 
ஆமா! ராமலஷ்மி!
நான் எடுத்த எடுப்பில் கலகலன்னு
பேசிவிடமாட்டேன். நான் கொஞ்சம்
ரிசர்வ்ட் என்று கூட சொல்வார்கள்.
பழகியதும் முடிவை மாற்றிக்கொள்வார்கள். கல்லூரி நாட்களிலேயே இப்படி நடந்திருக்கிறது.
முதலில் சிறிது நூல் விட்டுப் பார்ப்பேன்.
பிறகு நூல் கயிறாகும்...பிறகு மெல்லமெல்ல தேர் வடமாக மாறிவிடும்.
 
தமிழறிஞரின் பாராட்டுக்கு நன்றி!!
விரைவில் சந்திப்போம்.
 
ஆமா! சகாதேவன்! இது கீ-போர்டு
நண்பர்கள்.
 
நானும் ரெண்டு மாதத்திர்க்கொருமுறை மதுரை வருவேன்,
தருமி மற்றும் ஜாலி ஜம்பர் தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை,
ஊர் வாரியாக பதிவர்கள் லிஸ்ட் ஒன்று வெளியிட வேண்டும்,

மிக விரைவில் ஈரோடு லிஸ்ட் வெளியிடப்படும்

வால்பையன்
 
வால் பையன்

அடுத்த முறை வரும்போது - மதுரையில் சந்திக்கலாம் - மின்னஞ்சல் தட்டுக

cheenakay@gmail.com
 
//முதலில் சிறிது நூல் விட்டுப் பார்ப்பேன்.
பிறகு நூல் கயிறாகும்...பிறகு மெல்லமெல்ல தேர் வடமாக மாறிவிடும்.//

நான் ரசித்த இவ்வரிகளை சீனா சாரும் ரசித்து உங்களுக்கான வலைச் சர வரவேற்புரையிலும் பாராட்டிக் கூறியிருக்கிறார்:)!
 
நானெல்லாம் பதிவுகள் சம்பந்தமா பேசறதுக்கு யாராச்சும் சிக்க மாட்டாங்களான்னு அலையறேன்! உங்களுக்கு ஒரே நேரத்துல ரெண்டு, மூணு பேர் கிடைச்சிருக்காங்க!!

தூள்!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]