Sunday, June 15, 2008

 

ஜூன் மாத PiTக்கு என இரண்டாவது தொகுப்பு

பிஸியான சாலையில் ஊருக்கெல்லாம் மும்முரமாக, நுணுக்கமாக பூத்தொடுக்கும் கைகள், தன் வாரி முடிந்த கொண்டையிலே ஓர் இணுக்கு பூச்சூட மறந்ததேனோ?
ஆஹா....! பிள்ளைகள் இபபடி தட்டில் பிட்டுபிட்டு வைத்த இட்லியை தாமே எடுத்து
சாப்பிடும் தினுசு....அதிசயம்தானே!
முதல் படம்தான் போட்டிக்கு. முந்தய பதிவிலிட்டது வாபஸ்!

Labels:


Comments:
மும்முரமாய் பூத் தொடுக்கும் மூதாட்டியும்,
தானே சாப்பிடும் தங்கக் க(சு)ட்டியும் அருமை அருமை.
 
பூவே பூச்சூடவா ...சூபர் .கலர்,பூக்காரியின் ஈடுபாடு கேமரா கோணம் அத்தனையும் வெற்றிக்கு படிக் கட்டுகள் .
 
சந்தோசம் ராமலஷ்மி!!
அம்மூதாட்டியின் அள்ளிச் சொருகிய
கொண்டையில் அரை முழம் பூ கூட இல்லை(அந்த வயசில் எவ்ளோ...கூந்தல்!!!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

குட்டிகள் இபடிச் சாப்பிட்டால் அம்மாமார்களுக்கு எவ்ளோ சிரமம் மிச்சம்!!அதைவிட வேற வேலை என்னன்கிறீர்களா? அதுவும் சரிதான்!!
 
கோமா!
என்னவோ போங்க...எப்படியும்
ஆட்டையில் இருக்கணும். அதுதான் நமக்கு வேணும். அம்புடுதேன்!
 
//எப்படியும் ஆட்டையில் இருக்கணும். அதுதான் நமக்கு வேணும். அம்புடுதேன்!//

இதுவும் நல்லாத்தான் இருக்கு.
 
பூக்காரி படம் அருமை!!!
 
//அள்ளிச் சொருகிய கொண்டையில் அரை முழம் பூ கூட இல்லை//

நிஜத்தைச் சொல்லும் கவித்துவமான வரிகள். இதையே படத்துக்கு அடியில் கமெண்டாகச் சேருங்கள். ரொம்பப் பொருத்தமாக இருக்கும் நானானி.
 
//நுணுக்கமாக பூத்தொடுக்கும் கைகள், தன் வாரி முடிந்த கொண்டையிலே ஓர் இணுக்கு பூச்சூட மறந்ததேனோ?//

ம்ம்ம். இப்ப சூப்பர்.
 
"அந்த வயசில் எவ்ளோ கூந்தல்? கர்ர்ர்ர்."
என் வயது நண்பர்கள் இன்னும்
கோடு எடுத்து தலை சீவி
வருவதை பார்த்தால்
எனக்கும் இப்படித்தான் தோன்றும்

சகாதேவன்
 
நம்ம பாலிசியே அதுதான்..கார்த்திக்!
நன்றி!
 
இல்லத்தரசி!!!நல்ல புனைப் பெயர்!
முதல் வருகைக்கு வந்தனம்.
 
கொஞ்சம் மாத்தியிருக்கிறேன்...எப்டின்னு
சொல்லுங்க, ராமலஷ்மி!!
 
இப்ப சூப்பரா...?ஹம்மா! உங்க கையிலே வாங்கிய ஷொட்டு ஷொகமாயிருக்கு.
 
சகா! அப்ப உங்க தலையிலே ஒன்றிரண்டு முடிகள்தான் கோடாகத்
தெரியும் போல. வருந்தாதே மனமே...அவ்வளவு கூந்தலையும் பராமரிக்கும் சிரமம் மிச்சம் என்று சந்தோசப்படுங்கள்!!வாழ்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு முடி என்று
கணக்கிட்டுக் கொண்டு, அவற்றுக்கு
மதிப் பெண்களும் போட்டு, நமக்கு நாமே பட்டமும் கொடுத்துக் கொள்ளலாம். சேரியா?
 
படம் சூப்பர் - நானானி - கொண்டையிலே கொஞ்சம் பூ வச்சிருக்கலாம் - பாவம் நினைப்பில்லாமப் போச்ச்சு
 
செல்விஷங்கர்!!
புது வருகை...வாங்க..வாங்க!
'தான் தொடுக்கும் பூக்களையெல்லாம்
தானே சூடிக்கொள்ள ஆசைப்பட்டால்
தன் பொழப்பு என்னாவது?' என்றும் யோசிச்சிருக்கலாமல்லவா?
 
முதல் ஐம்பதுக்குள் வந்து விட்டீர்கள்.
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.
சகாதேவன்
 
PiT போட்டிக்கு எங்கேன்னே பதிவு பண்ணனும். link கொடுத்தா நல்லா இருக்கும். நான் புதுசுன்னே
 
மார்க்சியன்!
பதிவுலகத்து புது வரவுக்கு வாழ்த்துக்கள்!
புகைப்படக்கலை போட்டிக்கு உங்கள்
படங்களை உங்கள் பதிவில் போட்டுவிட்டு, பிறகு கீழ் கண்ட லிங்க்குக்குப் போய் அங்கே நீங்கள் போட்டியில் கலந்து கொண்டது பற்றி
ஒரு பின்னோட்டம் இட்டுவிடுங்கள்.
லிங்:
http://www.photography-in-tamil.blogspot.com/
ஜுலை பிட்டில் வெற்றி பெற இப்போதே என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]