Monday, June 23, 2008

 

யானையின் பலம் எதிலே? தும்பிக்கையிலே!!! யம்மாடீஈஈஈஈதன் பலம் தனக்குத் தெரியாத யானை. தெரியாததல்ல, தெரியாதபடி பழக்கி, அடக்கி வைத்திருக்கும் மனிதனை தன் பலம் புரிந்த போது..........என்ன வெல்லாம் செய்கிறது?

தவறு எங்கே யானையிடமா? அல்லது மனிதனிடமா?

காலம்காலமாய் அடங்கியிருக்கும் யானை.....ஒரு நாள்...ஒரே ஒரு நாள் கட்டவிழும் போது நடப்பதென்ன? துவம்சம்!!!!துவம்சம்!!!துவம்சம்!!!

அங்குசத்தால் குத்திக்குத்தி அடக்கியாழும் மனிதன், மதங்கொண்ட யானையிடம் படும் பாட்டைப் பாருங்கள்!!!! தென்றலாக அசைந்தாடிவரும் அப் பாலூட்டி, புயலாக மாறி அடிக்கும்
லூட்டியையும் பின் வரும் படங்களில் காணுங்கள்!!!!

தன்னை அன்போடு குளிப்பாட்டி, உணவூட்டி ஏன்?..தன் தும்பிக்கையில் ஆசையோடு மெஹந்தியும் வரைந்து அழகு பார்த்து பராமரிக்கும் மனிதனிடம் நன்றியோடிருக்கும் அந்த ஜயண்ட் ஜந்து.....சமயத்தில் தன்னம்பிக்கையில்லாத அம்மனிதன்

யானையின் தும்பிக்கையை நீட்ட வைத்து அதை பிச்சை எடுக்கவும் வைத்ததை சகித்துக்
கொள்ளமுடியாமல்தான் மதங்கொண்டதோ? அந்த கோபத்தில் சுழன்றடிக்கும் அதன் சீற்றத்தில்
சிக்கிக் கொண்ட பாகன்தப்பித்துவிடலாமென்று நம்பிக்கையோடு அதன் தும்பிக்கையை பற்றிக்கொண்டு....பாவமன்னிப்பு கேட்டானோ என்னவோ? 'பிழைத்துப்போ! மானிடனே!'
என்று அவனை தூக்கி வீசியதில், நல்லவேளை அவன் பிழைத்துக்கொண்டான்.


சினிமாவில் பார்த்திருக்கிறோம்....நீண்ட கத்தியை வில்லனின் வயிற்றில் சொருகி முதுகு வழியாக வெளிவருவதை....இங்கு அதே பாடு ஒரு அப்பாவித் தென்னை மரம் பட்டிருக்கிறது. மரத்தின் நடு வயிற்றில் குத்திய தந்தம் மறுபக்கம் வெளிவந்திருப்பதைக் கண்டால் அதன் உக்கிரம் புரியும்.


அது என்ன பாவம் செய்தது? அம்போ என்று நட்ட இடத்தில் செழித்து வளர்ந்ததைத் தவிர

இந்த வார குமுதத்தில்தான் இவ்வளவு களேபரத்தையும் படம் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.
திருவனந்தபுரம் சந்திரகுமார் எடுத்த அற்புதமான படங்களையும் அது பற்றிய விபரங்களையும்
உங்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கும் மதம் பிடித்தது.

யானை என்றால் அசைந்தாடி வரும்.....பழம் கொடுத்தால் தும்பிக்கையை நம் தலையில் வைத்து
ஆசீர்வாதம் செய்யும்....காசு கொடுத்தால் பாகனிடம் கொடுக்கும் என்று மட்டும் எண்ண வேண்டாம். அதுக்கு மேலும் என்னெல்லாம் செய்யும் என்பதைப் படங்கள் பார்த்து
தெரிந்து கொள்ளலாம்.சில வருடங்களுக்கு முன் கேரளாவில் மதங்கொண்ட யானை ஒன்று
பாகனை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு, விசிறியடித்து சாகடித்ததை....நம்மையெல்லாம் நோகடித்ததை நேரடி ஒளிபரப்பாக
தொலைக்காட்சியில் கண்டு மனம் பதைபதைத்ததை மறக்க முடியாது.ஒரு முறை சங்கரன் கோவிலில் என் குழந்தைக்கு யானை முடி மோதிரம் செய்ய ஆசைப்பட்டு
அங்குள்ள யானைப்பாகனிடம் பணம் கொடுத்து யானை முடி கேட்டேன். (கேட்டது எவ்வளவு
தவறு என்று பிறகு புரிந்தது.)


என்னிடம் பணத்தை வாங்கி கொண்ட பாகன் யானையின் வால் பக்கம் சென்றான். அவன் என்ன
செய்யப் போகிறான் என்று உணர்ந்து கொண்ட யானை..... தும்பிக்கையைத் தன் நீண்ட தந்தத்தில் இறுக சுற்றிக் கொண்டது. வலிக்கப் போகிறது என்று தெரிந்து நாம் கண்களை இறுக மூடிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொள்வோமே? அதுபோல். பார்த்ததும் எனக்குத் தாங்கவில்லை. அதற்கு வலிக்க வலிக்க ஒற்றை முடியைப் பிடுங்கினான் பாகன்.

இப்படியா யானை முடி எடுப்பார்கள்? நான் என்னவோ கத்தரிக்கோல் கொண்டு ஒரே ஒரு
முடியை அதற்கு வலிக்காமல் வெட்டித் தருவார்கள் என்றல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன்!!

எனக்கு ஆத்தாத்துப் போச்சு!!! அந்த முடியை மோதிரம் செய்யாமல் ரொம்ப நாள் நினைவாக வைத்திருந்து சமீபத்தில்தான் என் மகனுக்கு மோதிரம் செய்தேன். இனி யானையிடமிருந்து
நாம் கொடுக்கும் பழங்கள், சர்க்கரை, அரிசி இவற்றுக்கு ஈடாக அதன் முடியை பிடுங்கக்கூடாது
என்று முடிவெடுத்தேன்.திருச்செந்தூர் கோவில் யானை ஒன்று நாம் வாழைபழம் கொடுத்தால் அழகாக வாங்கி, ஒரு வினாடி தும்பிக்கைக்குள் என்ன மந்திரமாயம் செய்யுமோ அடுத்த நொடி வாழைப்பழத்தோலை
மட்டும் விசிறியடித்துவிட்டு பழத்தை சுகமாக வாயில் திணித்துக் கொள்ளும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஒரு சீப்பு பழம் வாங்கிக் கொண்டு போவோம்....ஆனால்
பாகன் ரெண்டு மூணுக்கு மேல் கொடுக்க விடமாட்டான். அதுக்கு வயித்துக்கு ஒத்துக்காதாம்!!

இது எப்படியிருக்கு? யானை வயிற்றுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் ஒத்துக்காதாம்!
சமீபத்தில் திருச்செந்தூர் சென்றபோது தோலுறித்து பழம் உண்ணும் யானையைப் பார்க்க ஆவலோடு போனேன். அந்த யானை மரித்து...மறுயானை அங்கு இருந்தது. அதற்கு அந்தக்கலையை கற்றுக் கொடுக்காமலே போய்விட்டது போலும்...இந்த யானை பழத்தை
"அப்படியேச் சாப்பிடுவேன்" என்ற ஹார்லிக்ஸ் பேபி மாதிரி தோலோடு சாப்பிட்டது.
எனக்கு 'பொம்பியாகி விட்டது'.

ஆகவே யானைப் பிரியர்களே!!! உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

Labels:


Comments:
19-ம் தேதியே போட வேண்டிய இப்பதிவு என் மடிக்கணினிக்கு
மதம் பிடித்தால் குமுதத்தில் வந்த படங்களை அப்லோட் செய்ய போராடி அங்குசத்தால் அடக்கி
இன்றுதான் முடிந்தது.
 
Hi,

This is Alpesh from Linq.in.I thought I would let you know that your blog has been ranked as the Best Languages Blog of week on 2008-06-15

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.We offer syndication opportunities and many tools for bloggers to use in there web sites such as the widget below:

Blogger Tools

By adding this widget you would be able to know the Weekly Statistics of your blog and the various details such as Rank,Votes and the Awards you get from Linq.

Alpesh
alpesh@linq.in
www.linq.in
 
தன் வலிமை புரிந்து அவ்வனவிலங்கு
விழித்துக் கொள்ளும் வேளையிலே
விளைகின்ற கோலங்கள்!

பகுத்தறிவு என்ற பலத்தால்
அவற்றை அடக்கிடலாம் என்கின்ற
பலவீனமான எண்ணத்தால்- மூச்சு
அடங்கிப் போகிற மனிதர்கள்!

வன விலங்குகளை அவர் வனத்திலே
வாழ விட்டிருந்தால் வாராதன்றோ
வருந்த வைக்கும் இக் கோரங்கள்!

[ரிஷான் ஷெரீப் தனது சமீபத்திய பதிவொன்றில் இதே போன்ற ஒரு கோர சம்பவத்தைப் பல படங்களுடன் காட்டியிருந்தார். அப்பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தை அப்படியே மேலே தந்துள்ளேன்]

யானை முடி எப்படி எடுக்கிறார்கள் என்பது புதிய விஷயம்.

//எனக்கு 'பொம்பியாகி விட்டது'.//

அப்படின்னா என்னாங்க:)?
 
அதுசரி! ரீச்சருக்காகவும், பொன்ஸ் அக்காவுக்காகவுமா இந்த பதிவு! சபாஷ்!!!!
 
யம்மாடி.............

பதிவு படிச்சுட்டு மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.

மனுசனை மாதிரி ஒரு கேவலமான உயிர் இருக்கா?

பாவம். யானையானாலும் அதுக்கு வலி.....
 
அதானே பொம்பி ன்னா என்ன?/

இப்பல்லாம் யானை அங்க வருதுன்னா கோயிலில் நான் அதுக்கு நேர் எதிர்ப்பக்கமா அத பாக்கமா போயிடுறேன்.. பிள்ளைங்களுக்கு காசு குடுக்கனுன்னா அப்பா வ கூட்டிட்டு போங்கன்னு சொல்லிடுவேன் எனக்கு அத்தனை பயம் ஆகிப்போச்சு டிவிக்காரங்க காட்டுனதப் பாத்து.. பிள்ளைங்கள நாமா ஏன் பயப்படுத்தனும்ன்னு விட்டுடறது.. :)
 
ரீச்சர் எங்க காணும்??
 
மனமார்ந்த வாழ்த்துக்கள் நானானி!

விரிந்து பரந்த வாசகர் வட்டமே தங்களுக்குப் பெரிய அவார்ட்தான் என்றாலும் இத்தகைய அங்கீகாரங்கள் மென்மேலும் உங்களைப் படைக்கத் தூண்டி எங்களுக்கு பயனுள்ள பல பதிவாலே விருந்து படைக்கட்டும்.

எனக்கு இதுதான் வரும் என்ற எந்த எல்லைக் கோடும் இன்றி எல்லா வித எழுத்துக்களிலும் சிறந்து விளங்கி ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறீர்கள்.

வயிற்றை நிறைய வைக்கும் பல பாட்டிக் கால பக்குவ சமையல் குறிப்புக்கள், நெஞ்சை நிறைய வைக்கும் தங்கள் மலரும் நினைவலைகள், பயணக் கட்டுரைகளைத் தாங்கள் ப்ரெசன்ட் செய்யும் பாங்கு, ஆர்வத்துடன் பங்கேற்கும் புகைப் படப் போட்டி, தொடர் சங்கலி விளையாட்டுக்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய சிறுகதைகளே ஆனாலும் நேர்த்தியான் கதையோட்டம் (கதைகள் நிறைய எழுதுவதில் கவனம் செலுத்துங்கள், இது ஒரு விண்ணப்பம்), எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனையோ வேலைகளுக்கிடையே எழுதுபவர்களை ஊக்குவிக்க சளைக்காமல் இடும் பின்னூட்டங்கள், அந்த அன்பினால் வாசகர்களைக் கட்டிப் போட்டிருக்கும் அழகு...வாழ்க நானானி!

வாருங்கள் பதிவர்களே வாழ்த்து மழையில் நானானியை நனைத்திட வாருங்கள்!
 
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது,
Alpesh!
இந்த அங்கீகாரம் மேலும் உற்சாகமளிக்கிறது. மிக்க நன்றி!!!
 
நாம் சொல்வதையெல்லாம் கேட்பதைப் பார்த்து யானை ஒரு பலவீனமான பிராணி என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். அதற்காக
அது எவ்வளவு கொடுமைகளையெல்லாம்
அனுபவித்திருக்கிறது!!! அந்த பலவீனத்திலிருந்து விடுபடும் போதுதான்
அதன் பலம் அதற்கே தெரிகிறது.
இயற்கையாக வனத்தில் திரியும் யானைகள் எவ்வளவு கொழுகொழு என்றிருக்கிறது!!!மனிதன் அவற்றை அரைப் பட்டினி போட்டு அடக்கியாளும் அடாவடித்தனத்தை என்ன சொல்ல?

"பொம்பி"ன்னா தெரியாதா?
கயல்விழிக்கு விலாவாரியாக சொல்லியிருக்கிறேன், பாருங்கள்!!!
 
அபி அப்பா!
கீதாம்மா....கீதாவை விட்டுவிட்டீர்களே!!
நாம் எல்லோருமே யானைப் பிரியர்கள்தான்! என்ன..அவர்களுக்கு
%கொஞ்சம் ஜாஸ்தி!
தும்பிக்கையை ஆட்டிக்கொண்டே அசைந்தாடி வரும் யானையை பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.
 
வாங்க..வாங்க..துள்சி! ஏன் லேட்?
யானை மாதிரி ஆடி அசைந்து வந்தீர்களோ?
பாவம்தான் யானைகள்!!
 
சின்ன குழந்தைகள் யானைக்கு பயமில்லாமல் பழம் கொடுக்கும் போது
சில பெரியவர்கள் யானை தும்பிக்கையை
நம்பிக்கையோடு நீட்டும் போது பயந்து அலறி பழத்தை பொத்தென்று கீழே போட்டு விட்டு துள்ளியோடுவதை
நிறைய பார்த்திருக்கிறேன்...கயல்விழி!
நீங்களும் அந்த ரகமா?

'பொம்பி' என்றால்.....
அண்ணன் பிள்ளைகள் விளையாடும் போது முக்கியமாக பெரியவள், வாயில் வரும் விசித்திரமான வார்த்தைகளுக்கு
விதவிதமான அர்த்தங்கள் சொல்வார்கள்.
கேட்பதற்கு மிகவும் சுவையாயிருக்கும்.
அதில் ஒன்றுதான் இந்த 'பொம்பி'
விளையாட்டில் ஒருவர் ஏமாந்துவிட்டால்
மற்றவரெல்லாம் அவரைப்பார்த்து
"பொம்பி மிட்டாய்!...பொம்பி மிட்டாய்! என்று கைதட்டி கேலி செய்வார்கள். அது மறுவி 'பொம்பி'
குறுகிவிட்டது. 'மிட்டாய்'க்கு என்ன அர்த்தம் என்று கேட்காதீர்கள்.
இன்னும் இதுபோல் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. ஒரு பதிவுக்கு தேத்திக்கலாம். ஐடியா!!!
 
ரீச்சரைத்தேடி அழும் கொத்ஸ்!!
அழண்டா!!ரீச்சர் இப்ப வந்துடுவாங்க..
அதோ வந்துட்டாங்க!!!
இனி பதிவைப் படித்துப் பாத்து சொல்லுங்கள்!!சேரியா?
 
துள்சி! நம் சுண்டு விரல் நுனியை கிள்ளினால் எப்படி வலிக்குமோ அது போல்தானே அதன் வால் நுனியில்
ஒரே ஒரு மயிரைப் பிடுங்கினாலும்
வலிக்கும்தானே!!
 
ஆமாம்ப்பா. பாவம். அதுவும் எத்தனைன்னுதான் பொறுத்துக்கும். அதான் சாது மிரண்டால்னு ஆகிருது(-:
 
ராமலஷ்மி!
நான் ஏதோ..மனதில் தோன்றியதை எல்லாம் விரல் வழியே வெளிப்படுத்திக்கொண்டு தேமே என்றிருக்கிறேன். இது எப்படி? என்றும் புரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னது...உங்களுக்கே சற்று ஓவராகத் தெரியவில்லை?
எப்படியிருந்தாலும் இது போன்ற அங்கீகாரங்கள் ஓர் உற்சாகத் தீனிதான்.
அதில் சந்தேகமில்லை. சந்தோசம்! ராமலஷ்மி!!!
 
'பொம்பி' கதை நல்லாயிருக்கு.
//ஒருவர் ஏமாந்துவிட்டால் மற்றவரெல்லாம் அவரைப்பார்த்து "பொம்பி மிட்டாய்!...பொம்பி மிட்டாய்! என்று கைதட்டி கேலி செய்வார்கள். //

அதற்கு "வெம்பி விட்டாய்:( ! வெம்பி விட்டாய்:( !" என்று கூட அர்த்தமாகலாமில்லையா. சரியாத்தான் சொல்லியிருக்கா அந்தப் பெரியவள்:))!
 
அவார்ட் கிடைத்த விவரம் கண்டு மகிழ்ச்சி கொண்டு மடமட என இட்ட பின்னூட்டத்தில் விட்டுப் போன எண்ணவோட்டங்கள் எத்தனையோ. ஆனால் இதையாவது குறிப்பிட்டால்தான் முந்தைய வாழ்த்து நிறைவுறும்.

தங்களிடம் என்னைக் கவர்ந்த யாவரும் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய பண்பு வாழிவிலே சந்திக்க நேரும் யாவரிடமும் எந்தப் பாகுபாடுமின்றிக் காட்டும் பரிவும் நன்றியும் நேசமும். ஏதோ ஒரு பதிவில் முந்திரிக் கொட்டை உடைக்கும் பெண்ணிடம் முந்திரி வாங்கி விட்டு அவளது காய்த்துப் போன கைகளுக்காக வருந்தியிருந்தீர்கள். எந்த பதிவென நினைவில்லை. இம்மாத முதல் பதிவான 'உறவில்லாத....ஆனால் மறக்க முடியாத பெண்மணிகள்' ஒன்று போதும் அந்த உயரிய பண்பின் உதாரணத்துக்கு. ஏன், இப்பதிவில் யானைக்காக வருந்தியிருக்கிறீர்கள்.

//ஆனாலும் நீங்கள் சொன்னது...உங்களுக்கே சற்று ஓவராகத் தெரியவில்லை?//

ஓவர் என்று ஏன் நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் நாம் காணும் நல்ல பண்புகளை உணர போற்ற முடிந்தால்தான் நம்மாலும் அவற்றைப் பின் பற்ற முடியும். அதற்காகவது போற்ற வழி விடுங்கள். என்னை வழிமொழிவோருக்கும் வழி விடுங்கள்.
 
பொம்பி கதை லல்லாருக்கா...? ராமலஷ்மி? //வெம்பிவிட்டாய்//நல்ல சிங்க்ரனைஸ் ஆகுது. ஆனால் குழந்தைகள் வெம்பிவிடக்கூடாது...
'வென்றுவிட்டாய்..வென்றுவிட்டாய்' என்று உற்சாகப் படுத்தவேண்டும்.
 
அதாங்க, "வெம்பி விட்டாய் வெம்பி விட்டாய்" என்றால் பசங்க மனசு வருத்தப் படுமேன்னு பெரியவ பாந்தமா அதை 'பொம்பி மிட்டாய் பொம்பி மிட்டாய்' என இனிப்பாச் சொல்லியிருக்கக் கூடும்னு சொன்னேன். ஆனால் நீங்கள் சொல்வது போல "வென்று விட்டாய் வென்று விட்டாய்" எனக் கூறுவதுதான் நம்பிக்கையை வளர்க்கும். பின்ன,
"நானானியின் பலம் எதிலே?
நம்பிக்கையிலே!!!
சும்மாவாடீஈஈஈஈ"

[பி.கு:'டீஈ..' உங்களையில்லை.சக வயது பதிவுத் தோழியரிடம் இப்படிக் கூவு(று)கிறேன், உங்கள் பதிவுத் தலைப்புக்குப் பொருத்தமாய்:))!]
 
//தும்பிக்கையைத் தன் நீண்ட தந்தத்தில் இறுக சுற்றிக் கொண்டது//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....யானை மிகப் பெரியது பலம் கொண்டது என்று, எது வேண்டுமானாலும் தாங்கும் என்ற நினப்பு நமக்கு.....

ஆனால் அதுவும் ரத்தமும் சதையும் கொண்ட உயிர்தானே...:((
 
நானானி,
யானைப்பலம் வேண்டும் நமக்கு.
ஆனால் அதன் மதம் மட்டும் ,வெறுப்பாகி விடுகிறது. பாவம் அதும்பாட்டுக்குக் காட்டில் உலாவும்போது பிடித்து வைத்துச் சித்திரவதைப் படுத்தி,

பத்தாயிரம் மனிதர்கள் நடுவில் நடமாடிவிட்டு வேடிக்கை காட்டினால், அது இந்த மாதிரி தான் செய்யும்.
இது இன்னோரு காட்டு யானை சொன்ன மாதிரி எனக்குக் காதில விழுந்ததுப்பா:)
 
நானானி

நான் மறு மொழி எழுத்ப் போவதில்லை

ராமலக்ஷ்மி சொன்ன அத்தனை மறு மொழிகளையுமே அப்படியே வரிக்கு வரி வழி மொழிகிறேன்

அவ்ளோதான் - பொம்பியாயிடாதீங்க
 
cheena (சீனா) said...
//அவ்ளோதான் - பொம்பியாயிடாதீங்க//

சூப்பர் சீனா சார்!

ஆக வலையுலக அகராதிக்கு அடுத்த வார்த்தை கிடைச்சாச்சு!

ஆகா "பொம்பி" பேஷ் பேஷ்..ரொம்ப நன்னாயிருக்கு!
 
யானைக்கும் அடி சருக்கும் கேள்வி பட்டிருக்கிறோம்...யானைக்கும் வலிக்கும் என்பதை நானானி சொல்லித்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம்.ந்மக்கு திருஷ்டி வரக் கூடாது என்று மெகா ஸ்ரிஷ்டியை நாம் படுத்துகிறோம்.அன்னியன் பாஷையில் கேட்டால் ..."ஒரே ஒரு முடி பிடுங்கினால் தப்பா?"
பத்தாயிரம் பேர் ஒரே ஒரு முடியைப் பிடிங்கினால்...?"
"தப்பு மாதிரிதான் தெரிகிறது...."
[ஒவ்வொரு பதிவும் யானையின் ராஜ நடைதான்...வாழ்த்துக்கள்]
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]