Tuesday, June 24, 2008

 

அப்பள பூனைக் கதை


அரைநாளை மொக்கையா கழித்த அபி அப்பா...'யானைக்கதை சொன்ன நானானியம்மா பூனைக்கதை சொல்வார்களா? என்று கேட்டுவிட்டார். அவரைச் சும்மா விடலாமா...?அவர் மீதி அரைநாளையும் மொக்கையாய் கழிக்க ஒரு பூனைக்கதை சொல்லப் போறேன்!!
யாருக்கெல்லாம் பூனைக் கதை வேணுமோ ஓடி வாருங்கள்!!

ஒரு ஊருலே ஒரு பூனை இருந்துச்சாம்....! இப்படி ஆரம்பிக்கப் போறேன்னு நினைச்சீங்களா?
பொம்பி ஆயிடுவீங்க. நம்ம ரூட்டே தனி.

என் குழந்தைகள் ரெண்டு மூன்று வயதில் சமத்தாக சாப்பிட அவர்களுக்கு 'எல்லோரும் நிலா
தோசைதானே சுட்டுத்தருவார்கள்...நான் உங்களுக்கு யானை தோசை, பூனை தோசை சுட்டுத்தருகிறேன்' என்று தோசை மாவை காய்ந்த கல்லில் யானை வடிவிலும் பூனை வடிவிலும்
ஊற்றித்தருவேன். இருவரும் உற்சாகமாகி, 'எனக்கு யானை தோசை...எனக்கு பூனை தோசை..அவளுக்கு யானை தோசையா அப்ப எனக்கும் யானை தோசை....அவனுக்கு பூனைதோசையா அப்ப எனக்கும் பூனை தோசை!' என்று போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். சாதரணமாக ரெண்டு தோசை சாப்பிடுபவர்களின் வயிற்றில் யானை, பூனை என்று நாலு தோசைகள் இறங்கும்.


என் பெரியக்கா அண்ணாயூனிவர்சிட்டி க்வார்டர்ஸில் குடியிருந்தார்கள். அத்தானுக்கு காலேஜில்
வேலை. க்வார்டர்ஸ் அந்தக்கால கலைக்டர் பங்களா மாதிரியிருக்கும். சகல வகையான ஜீவராசிகளும் அங்கு நடமாடும். அக்காவுக்கு ரொம்ப தைரியம்தான்.

அங்கு அவள் அனுமதியில்லாமலே நாலைந்து பூனைகளும் அவளுக்கு துணையாயிருந்தன.
பெருச்சாளி, எலி, பல்லி இவற்றை வேட்டையாடி உண்டு, தானுண்டு தன் வேட்டையுண்டு
என்று சமத்தாயிருந்தன.

ஆனால் ஒரு ஓசைக்கு மட்டும் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து விடும். என்ன ஓசை?
அப்பளம் நொறுங்கும் ஓசை நாங்கள் சாப்பிட உக்காந்து சாதம் குழம்பு விட்டு பிசைந்து
அப்பளத்தை ஒடித்தவுடன் ஓடிவந்து நம் மடியைப் பிறாண்டும், 'அப்பளம் தா! அப்பளம் தா!'
என்று அப்பளத்தை ஒடித்து போட்டவுடன் அமைதியாக மொசுக்கிவிட்டு மறுபடி வந்து பிறாண்டும்.

அக்காவின் மகன், அவன் கிண்டியில் வாசம் செய்வதால் எல்லோருக்கும் அவன், கிண்டித் தம்பி,
கிண்டியண்ணா!' அவன் அப்பூனைகளுக்கு நான்வெஜ் சாப்பாடு போடுவதே வித்தியாசமாயிருக்கும். பழங்கால வீடு என்பதால் பெரிய பெரிய மரப் பல்லிகள் சுவற்றில்
இருக்கும். நாங்கள் எல்லாம் பயந்து பயந்து நடமாடுவோம்.

சுவற்றில் ஓடும் பல்லிகளை தன் கைக்குட்டையில் சுருட்டிப் பிடித்து பூனைகள் பார்க்கும்படி
வெளியே விடுவான். பூனைகள் ஓஓஓஓடிப் போய் பல்லியைப் பிடித்து லபக் லபக் என்று
விழுங்கிவிடும். அவனுக்குப் பிடித்தமான விளையாட்டு. என் குழந்தைகளும்,'கிண்டியண்ணா!
பல்லி பிடிச்சு பூனைக்குப் போடு!' என்று அவன் பின்னாலேயே ஓடுவார்கள்.


ஒரு முறை எங்கள் வீட்டுக்கு அவன் வந்த போது ஒரு பெரிய பல்லி சுவற்றில் ஓடியது.
ஸ்டூல் போட்டு ஏறி கைகுட்டையில் அதை கவ்விப்பிடித்து(உவ்வே....).....வீட்டுக்கு எப்படி எடுத்துப் போவான் என்று யோசித்தபோது....சாவகாசமாக கைகுட்டையை சுருட்டி தன் பாண்ட்
பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
அந்த பல்லி வேட்டையைக் காண பிள்ளைகளும் கிண்டி சென்றார்கள். அங்கு போர்டிகோவில்,
பெரிய சிமெண்ட் தரையில் பல்லியை ஓட விட்டான். தாவி வந்த பூனைகள் பல்லியை சிறிது
நேரம் ஓடவிட்டு (பிள்ளைகளுக்கு விளையாட்டுக்காட்டியதோ என்னமோ!) பிறகு கவ்விக்கொண்டோடியது.

Labels:


Comments:
என் நாத்தனார் என் பொண்ணுக்கு லேடர் தோசை அதாங்க ஏணி தோசை சன் தோசை சூரிய தோசை.. ஆமை தோசை. எல்லாம் செய்வா.. ஹாலில் வந்து ஆர்டர் எடுத்துட்டு போவா..

:) இதுவும் நல்லாருக்கு பூனை ஆனை.. ஆனா பிஞ்சுக்காம வரனும் கல்ல விட்டு ..
 
//யாருக்கெல்லாம் பூனைக் கதை வேணுமோ ஓடி வாருங்கள்!!
//

ஸ்ஸ்ஸ்ஸ்....மூச்சு வாங்குது.வந்ததுக்கு ஒரு அப்பளமோ, யானை தோசையோ 'டு கோ' உண்டா? :P :D :)))
 
உங்களுடைய தசாவதாரம் விமர்சனத்துக்காக தான் waiting. சீக்கிரம் போடுங்க, சேரியா ?
 
எங்க அம்மாவும் பூனை தோசை சுட்டுத் தருவாங்க. ஆனை தோசை சுட்டதா ஞாபகமில்லை.

கண்மணியும் சமீபத்தில் ஒரு பூனை பதிவு போட்டிருந்தாங்க. உங்க ஞாபகம்தான் வந்தது.

//கைகுட்டையில் அதை கவ்விப்பிடித்து(உவ்வே....).....//

'உவ்வே'யேதான்:(!
 
ஆனாலும் ஒரு நானானி டச் இதிலே மிஸ்ஸிங். என்னங்கறீங்களா? ஆனை தோசை, பூனை தோசை என்றதும் கடகட எனக் கண்களை ஓட்டினேன் பதிவின் கடைசி வரை. வேறெதற்கு, தோசைக் கல்லில் இந்த ஷேப்புகளில் தோசை ஊற்றி படம் பிடித்துப் போட்டிருப்பீர்கள் என்றுதான். இப்போதும் பிற்சேர்க்கையாக செய்யலாமே.(வாசகர் விருப்பம்:). அப்புறமா பேரன் புட்டு புட்டு சாப்பிட்டுக்கட்டும்.
 
சூப்பரா வரும் கயல்!(செல்லமா இப்டி
கூப்பிடலாமா?) ஊத்துரது யாரு?
சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டால் பிஞ்சுக்காம வரும்.
ஒண்ணு யானை தும்பிக்கை கீழே தொங்கவிட்டா மாதிரி கேக்கும். இன்னொண்ணு யானை குட்மார்னிங்
சொல்றாமாதிரி கேக்கும்.
 
உங்களுக்கு ஏன் மூச்சு வாங்குது,நியூபீ!
கதை நானில்ல சொன்னேன்?
அப்பளம், யானை தோசை,பூனை தோசை....அப்புரம்..கைக்குட்டையில் பாக் செய்த ஓரு பல்லி(ஹீ..ஹி..)எல்லாம் 'டு கோ'செய்து ரெடியாயிருக்குது. புதுத்தேனீ!!வொய்ய்ய்ய்ய்ன்னு பறந்து வந்து எடுத்துப்போ!!!
 
அனானி!
என்னோட விமர்சனத்துக்கு அவ்வளவு வெயிட்டா? நீங்கல்லாம் வெயிட்பண்ணுவதற்கு!!!
 
நல்ல யோசனை!! நான் வேற மாதிரி டச் வெச்சிருந்தேன். வலை முண்டும் முடிச்சுமாய் சிக்கிக்கொண்டதில் பட ஒன்று அப்லோட் செய்ய முடியவில்லை.
டச் இல்லாமல் பப்ளிஷ் பண்ணச் சொல்லி விட்டு(மகளிடம்)வெளியூர் சென்றுவிட்டேன். இப்ப வொண்ணும்
கெட்டுப்போகவில்லை. இதோ...!
 
யானைக் கதை, பூனைக் கதை ஆச்சு.
அடுத்து ஒரு பானைக் கதை
சொல்லுங்களேன்.
தாமரை.
 
நானானி,

அருமை அருமை - ஆனை தோசை பூனை தோசை எல்லாம் பேரப்புள்ளைங்களுக்கு மட்டும் தானா ? எங்களுக்கு இல்லையா

ஆமா - எதப்பத்தி பதிவு போட்டாலும் இப்படி சூப்பராப் போடுறீங்களே அதெப்படி

ம்ம்ம்ம்ம்ம் - ( சென்ற மறுமொழி பிளாக்கர் சொதப்பல்) - அதனாலே மறுபடியும் மறு மொழி
 
அபி அப்பா பூனைக் கதை கேட்டார். இப்போ தாமரை கேட்பது பானைக் கதை.

எந்தக் கதை கேட்டாலும் நானானி வசம் எப்போதும் ஸ்டாக் உண்டு.

தங்களின் ஏதோ ஒரு பதிவில் பானைக் கதை படித்திருக்கிறேன், [பொங்கல் வாழ்த்தாக சின்னப் பொங்கல் பானையை ஸ்ட்ராவினால் செய்த கரும்புடன் இணைத்துக் காரில் அலங்கரித்த படத்துடன்.சரிதானா:)!
 
//யானைக் கதை, பூனைக் கதை ஆச்சு.
அடுத்து ஒரு பானைக் கதை
சொல்லுங்களேன்.
தாமரை.//

இல்லை இல்லை அடுத்து அவர்கள் நமக்குத் தரப் போவது "திண்ணை'க் கதை? சரிதானா நானானி?
 
தாமரை பானைக்கதை கேக்குறார் - ராமலக்ஷ்மி சொல்லிட்டாங்க - நானானி எழுதுவாங்கன்னு - எதெக் கொடுத்தாலும் கதெ எழுதுவாங்களாம் நானானி

நானு ஒரு பானைக் கதை ( கதையிலே பனை வரும் அவ்ளோ தான்) என்னோட பதிவுலே எழுதுறேன்.
http://cheenakay.blogspot.com

மக்களே வாங்க வாங்க படியுங்க பதில் போடுங்க
 
பூனையில் தொடங்கி யானையில் நடந்து பல்லி வதம் பார்த்து பானையில் முடிந்த கதைக்கு பானை நிறைய பாராட்டுகள்.நானானி நானானி ஒரு பாம்ம்ம்ம்பு....கதை சொல்லுங்களேன்...[உங்கள் அக்கா வீட்டு பக்கத்திலேதானே ஸ்னேக் பார்க் இருக்கு.
 
தாமரை நீங்க கேட்ட பானைக்கதை வருகிறது. பாருங்கள்!!
 
நமக்கெல்லாம் வட்டவட்டமாய்....சமயத்தில் அது இஷ்டப்படி வந்த உருவத்தில் தோசை சுட்டுத் தந்தால் போதாதா?
அப்பளம் உடைந்து விட்டது என்று அழுததாம் குழந்தை ஒன்று...அடுத்த அப்பளத்தை முழுதாகப் பொரித்து, அப்படியே உடையாமல் தின்னு என்றாளாம் தாய்!
 
என் பதிவுகளையெல்லாம் நல்லா பிரிச்சு மேஞ்சிருக்கீங்களே!!!ராஷ்மி!
 
முதலில் பானை...பிறகுதான் திண்ணை!
அதுக்கு சிறிது யோசிக்கணும். சேரியா?
 
கிளம்பீட்டாய்யா....கிளம்பீட்டாய்யா!பாம்புக்கதை கேட்கும் கோமா!
கற்பனை, பாம்பு மாதிரி சீறிப்பாய்ந்துவிடுமே! பரவாயில்லையா?
அக்காவின் வீடே ஒரு பாம்புப் பண்ணை மாதிரிதான். தனியா பண்ணைதேவையில்லை. ஐயோடா! சாமி! எப்படித்தான் குடியிருந்தாளோ?
அதையெல்லாம் எழுதினால் மெகா பதிவாயிடும். பிறகு பாம்புக்கதை, பம்புக்கதை, செம்புக்கதை, தும்புக்கதை என்று கிளம்பிவிடுவார்கள்!!வுட்டேன் ஜூட்!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]