Tuesday, June 10, 2008

 

யாரு வாயிலே ஜிலேபி?
ஆரஞ்சு கலரில் ஜிங்குச்சான்னு இருப்பது ஜாங்கிரி...
எலுமிச்சை நிறத்தில் ஜிங்குச்சான்னு பளபளப்பது ஜிலேபி! சேரியா?

ஜிலேபி சுத்தறது சுலபம் சும்மா...நம்ம இஷ்டப்படி....கைக்கு வந்தபடி சுத்திரலாம்
ஆனா......இந்த ஜாங்கிரி சுத்தரது இருக்கே...ரெண்டு ரவுண்ட் சுத்தீட்டு, அதும் மேலே
சின்னச்சின்ன வளையம்வளையமா...சுத்தோணும். அம்மாடீ!!!கைக்கு நிறைய பழக்கம் வேணும்.
நான் சுத்தினால் ஜாங்கிரி சுத்தினால் படத்திலிருக்கும் ஜிலேபி மாதிரிதான் வரும்

சரி சுத்தரதுன்னு முடிவாயிடிச்சி....அது ஜாங்கிரி மாதிரி வந்தா என்ன? ஜிலேபி மாதிரி வந்தா என்ன? தொண்டைக்கு கீழே எல்லாம் ஒண்ணுதானே?

எப்படியும் வல்லிம்மா "பாட்டிசுட்ட வடையை கொத்திக்கினு போன காக்கா மாதிரி(அடிக்க வந்துராதீங்க..ச்சும்மா ஓர் உதாரணத்துக்குத்தான்)நமக்குத்தெரியாமல் ரெண்டு,மூணு கொத்திக்குனு போய் மொசுக்கிருவாங்க!!!அப்புரம் சுகர்...சுகருதான்னு பாட வேண்டியதுதான்.

ஏன் எல்லாருக்கும் ஜிலேபின்னாலே ரெண்டாவது சிவாஜிதான் ஞாபகம் வரணுமா?
மூத்த....பேரிட்ட....வாஜி..வாஜி..வாஜி சத்ரபதி சிவா..ஜி நினைவு ஏன் வரவில்லை?

ஜிஜாபாய்: 'கண்ணே! சிவாஜி!! இங்கே ஓடிவா! அம்மாகிட்டே என்ன இருக்குது பார்!

சத்ரபதி சிவாஜி: 'தாயே! என்னம்மா இருக்கிறது தங்கள் கைகளில்?

ஜிஜாபாய்: ' வேறொன்றுமில்லை மகனே! உனக்குப் பிடித்த ஜிலேபி, வா! நானே உன் வாயில்
ஊட்டிவிடுகிறேன்.'என்றவாறு தட்டு நிறைய இருந்த ஜிலேபிகளில் ஒன்றை மகனது
வாயில் போட்டார்.

சிவாஜி: 'ஏதம்மா? இவ்வளவு ஜிலேபி? நீயே செய்தாயா?

ஜிஜாபாய்: 'எனக்கு ஏதடா? அவ்வளவு பொறுமையும் திறமையும்? ஊர் ரெண்டு பட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் இந்த பதிவர்கள் பண்ற அலம்பலில்
நிறைய பேர் "சிவாஜி வாயிலே ஜிலேபி.....சிவாஜி வாயிலே ஜிலேபி" ன்னு பழைய பாடலையே பாடிக் கொண்டு 'தட்டுத்தட்டா இங்கு கொண்டு வந்து
வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்!!
எல்லோரும் எந்தெந்த சிவாஜிக்கோ வாயில் கொடுக்கிறார்கள். நீதானே மூத்தவன்?
மூலவன்? உன் வாயில் ஜிலேபி இருப்பதுதானே முறை?
எனவேதான் நானே எடுத்துவந்தேன் உனக்கு கொடுக்கலாமென்று.
சாப்பிடு மகனே! ஆனால் அளவோடு உண்டு வளமோடு வாள் எடு. வெற்றிகள்
பல அள்ளு...மகனே அள்ளு!!!

சிவாஜி: 'தாயின் ஆணை கிடைத்து விட்டது...இனி புறப்படுவேன்...பொங்கி எழுவேன்!
களம் பல கண்டு வெற்றி எனும் "ஜிலேபிகளை" தாயே உன் காலடியில்
சமர்ப்பிப்பேன்!!! ஜெய் ஜிலேபி!! சீச்சி! ஜெய் பவானி! ஜெய் பவானி!!


எனக்கு அடுத்து ஜிலேபி சுத்தப் போகும் நான் அழைக்கும் மூவர்:

1) டெல்ஃபின்
2)கண்மணி
3)புதுவண்டு

உங்கள் பதிவுக்கு நேரிலே வந்தும் அழைக்கிறேன். சேரியா?

Labels:


Comments:
ஹிஹி, நல்லா சமாளிச்சுட்டீங்க. :))
 
இதல்லோ ஜிலேபி.
அம்மாடி சும்மா சூப்பர் ஜிலேபிப்பா.

உண்மையாவே நல்ல கற்பனை. படம் வேற.
ரியல்லி டச்சிங்.
அம்மா இல்லாம சிவாஜி ஏது. அந்த சிவாஜி இல்லாம மத்த பேரு எங்கே!!
நன்றி நன்றே, நன்றி.
 
ஆஹா இன்னுமொரு சூப்பர் ஜிலேபி...:)
 
// ஜெய் ஜிலேபி!! சீச்சி! ஜெய் பவானி! ஜெய் பவானி!!//

:-))))))
 
அன்னையின் பாசம்,
அவர் நேசத்துடன் (ஜிலேபி) ஊட்டி வளர்த்த வீரம்,
அவ்வீரம் தந்த வெற்றிகளால் அடைந்த அழியாப் புகழ்- எனப்
பதிவிலே பொதிந்திருக்கும் மெசேஜ் அத்தனையும் தனி நானானி டச்.
 
ஆஹா நல்ல கலக்கல். இல்ல, இல்ல ... சுத்தல், சூப்பரூஊஊ ....
 
not for publication...

நனானி... தங்கள் அழைப்புக்கு நன்றி. நன்றி... நான் தற்சமயம் அமெரிக்கா செல்வதால் எனக்கு பயங்கர வேலை... .... நான் அங்கு சென்றதும் எழுத ஆரம்பிக்கிறேன். ஓகே வா?
 
அடடா நானானி...ஜிலேபி மேட்டர் ஒன்னும் விளங்கிட்டில்லா...மொத்தத்துல மொக்கை போடனுமா?
உம்மோட [மொக்கை] ஜிலேபி ஜூப்பருங்கோ
 
சிரிப்புதான் வருகுதையா இடுகையில் பின்னூட்டம் பாப் அப் ஆகாததால் ஜிலேபி சுத்த வந்தேன்.சீர்காழி பாடல்களுக்கான சைட் இது.http://music.cooltoad.com/music/song.php?id=311822
 
ஜிலேபி நல்லாவே சுத்தி இருக்கீங்க, நானானி, பழசெல்லாமும் படிச்சாச்சு, எங்கே, ஊரிலே இருக்கிற நேரம் எழுதவும், புத்தகங்கள் படிக்கவுமே சரியாப் போயிடுது, ரொம்ப நாளைக்கு ஒரு நாள் தான் வர முடியுது.:((((( அது சரி, என்னை என்ன "கீதாம்மா"னு கூப்பிடறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
 
//நல்லா சமாளிச்சுட்டீங்க//
நம்ம பொழப்பே அதானே! அம்பி!
வருகைக்கு நன்றி!!
 
பழம் புலவர்களுக்கெல்லாம் முதலடி
எடுத்துக் கொடுத்தால்...மற்ற அடிகள்
அருவியாய் கொட்டுமாமே?
அது போல் 'சிவாஜி வாயி.....'என்று
எடுத்துக் கொடுத்தீர்கள்.
கொட்டுச்சோ..கொட்டலையோ?
நீங்கதான் சொல்லணும், வல்லி!
 
தமிழன்!!
சூப்பர் ஜிலேபி... உப்பு, காரம்,
புளிப்பு எல்லாம் சரியாக இருந்துச்சா?
 
ச்சின்னப்பையனுக்குப் பிடிச்சது..
அவ்வரிகளா? சந்தோசம். டக்கென்று
வந்தது.
 
ராமலஷ்மி!
நானானி 'டச்' என்று சொல்லி என்னையும் 'டச்' பண்ணிவிட்டீர்கள்.
 
சதங்கா!
சுத்துரது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
உதாரணமாக...ஜிலேபி, ரீல், ஊர், நூல், பம்பரம், அவ்ளோதான்.
 
கவலை வேண்டா கண்மணி!!
கொத்ஸிலிருந்து இத்தனை பேரும்
வேறென்ன போட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்? மொக்கைதான்...மொக்கைதான்..மொக்கைதான். இப்ப மனசிலாயோ?
சவட்டி களையுங்கோ!!!!
 
என்னோட ஜிலேபியைப் படித்து
உங்களுக்கு, 'சிரிப்புத்தான் வருகுதா
ஐயா!'
நீங்க சொன்ன சைட்டில் போய் பார்க்கிறேன். கோமா, நன்றி!!
 
ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறோம்.
எதுக்கு கர்ர்ர்ர்ர்ர்புர்ர்ர்ர்ர்ர்ர்ர்?
சரி(டி) இனிமே உங்களை கீதாஆஆன்னே கூப்பிடுறேன். சேரியா?
நலம்தானே? வந்ததுக்கு நன்றி!!
கீதா...கீதா...கீதா!
 
அழைப்புக்கு நன்றிம்மா ..

ஊரில் இருந்து இப்போதான் வந்திருக்கேன். இரண்டொரு நாளில் பதிவு போடுறேன். :)

என் பேரையும் சரியாப் போட்டிங்கன்ன்னா நல்லாயிருக்கும் புது இல்லை பொன். :))))
 
நானானி,

மொக்கை நல்லா இருக்கு - கோச்சுக்காதீங்க - இது மொக்கை தானே !! - நானும் ஒண்ணு போட்டேனே

http://ennassiraku.blogspot.com

ஆமா நீங்க அழைத்தது புது வண்டு தானே !! பொன் வண்டு அல்லவே !!

பொன்வண்டு - கவனிக்கவும் - புது வண்டு என்றொரு பதிவரும் இருக்கிறார்.
 
செல்விஷங்கர்!
இப்பல்லாம் மொக்கை போட எல்லோரும் ரெக்கை கட்டி பறக்குறாங்க.....உங்க மொக்கையையும் பறந்து வந்து பாக்குறேன்.

பெரிய தர்மசங்கடத்திலிருந்து என்னை காப்பாற்றியிருக்கிறீர்கள்...ரொம்ப நன்றி!!
நான் அழைத்தது newbee என்னும் புதுவண்டைத்தான். ஆனால் பொன்வண்டும் ஜிலேபியை சிவாஜி வாயிலே போட்டால் எனக்கு சம்மதம்தான்!!
 
பொம்வண்டு!!
நீங்களும் சிவாஜி வாலிலே ஜிலேபியை
போட அன்போடு அழைக்கிறேன். மூன்று பேர்தான் என்பதை மாற்றுவோமே!!!
 
அன்புள்ள நானானி!

நலமா! நிஜமாய்ச் சொல்கிறேன் 4/5 நாட்களாய் வலைப்பூ பக்கம் சுத்தமாக வர இயலவில்லை.

நீங்கள் இதில் என்னையும் அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி.....:))))))(I really mean it)

இப்பத் தான் செல்வி அம்மாவும் அழைச்சு இருக்காங்க...

கண்டிப்பா இரண்டு ஜாங்கிரி சுத்துறேன்.இந்த பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்.இன்னும் இரண்டு நாள் டைம் கொடுங்க.....பிழிஞ்சுடுவோம்....:)

என்னை அழைத்ததற்கு மீண்டும் நன்றி! நன்னி! டாங்ஸு! டங்க்கே! :))))
 
நன்னி! நன்னி! நன்னி!........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......உங்களுக்குத் தாமதமாக பதில் சொல்றது, மனதுக்குக் கஷ்டமா இருக்கு......

தப்பா எடுத்துக்காதீங்க.....என்னவோ மிஸ் பண்ணிட்டேன்:(
 
வாங்க! வாங்க! என் கூட்டுக்கு! வந்து இந்தக் கொடுமையப் பாருங்க! :-0
 
// பெரிய தர்மசங்கடத்திலிருந்து என்னை காப்பாற்றியிருக்கிறீர்கள்...ரொம்ப நன்றி!!
நான் அழைத்தது newbee என்னும் புதுவண்டைத்தான். ஆனால் பொன்வண்டும் ஜிலேபியை சிவாஜி வாயிலே போட்டால் எனக்கு சம்மதம்தான்!! //

ஹா ஹா ஹா !!! அம்மா கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் !! என் பதிவில் வந்து பின்னூட்டத்திலும் அழைப்பு விடுத்திருந்தீர்களே !!! :)))))
 
அழைப்புக்கு நன்றி !! விரைவில் பதிவிடுகிறேன் :)
 
கொடுமையெல்லாம் இல்லை. சரித்திரம் பேசி நன்றாகவே சமாளித்திருக்கிறார் வண்டு.

நான் அழைத்த கயல்விழியும் நல்லா கதை பண்ணியிருக்காங்க. அப்படியே அதையும் பார்த்தீங்கன்னா சந்தோஷப் படுவேன்.
 
நானானி நானும் யோசிச்சு பார்த்தேன் சிரிப்பா எழுதலாம்ன்னா வரவே இல்லை.. உங்களுடையது மனோகரா வசனம் மாதிரி இல்ல இருக்கு..

;--------
@ராமலக்ஷ்மி நீங்க வேற எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டு அதெல்லாம் அவசரசிலேபிப்பா..
 
//ஜாங்கிரி சுத்தறது சுலபம் சும்மா...நம்ம இஷ்டப்படி....கைக்கு வந்தபடி சுத்திரலாம்
ஆனா......இந்த ஜிலேபி சுத்தரது இருக்கே...ரெண்டு ரவுண்ட் சுத்தீட்டு, அதும் மேலே
சின்னச்சின்ன வளையம்வளையமா...சுத்தோணும். அம்மாடீ!!!கைக்கு நிறைய பழக்கம் வேணும்.
நான் சுத்தினால் ஜிலேபி படத்திலிருப்பது மாதிரிதான் வரும்//

இப்ப எனக்கு ஒரே கன்ஃப்யூஸ்(-:

எது ஜாங்கிரி எது ஜிலேபின்ற உண்மை தெரிஞ்சாகணும்.

நான் ஜிலேபின்னு எழுதி ஜாங்கிரிப் படம் போட்டேன். நீங்க ஜிலேபிப் படம் போட்டுட்டு........ !!!!
 
ரொம்ம்ம்பத் தெளிவா புரிஞ்சிக்கிட்டு...ஜிலேபியையும் படம் போட்டுக்கிட்டு...எதை எப்படி சுத்தறதுன்னு குழம்பிட்டேனே!!!!
எனக்கு இந்த ரெண்டு இனிப்புமே புடிக்காது. இப்ப சமீபமாத்தான் அதாவது மினிஜாங்கிரி சந்தைக்கு வந்தப் புறம்....பார்ட்டிகளில், பஃபேகளில் சுடச்சுட ஜிலேபிகளை தட்டில் வைத்து கூட ஒன்றிரண்டு ஸ்கூப்
ஐஸ்கிரீமும் சேர்த்து தர ஆரம்பித்த பிறகு ரெண்டுமே பிடித்துவிட்டது.
என்ன..?இந்த 'ஜா'வும் 'ஜி'யும்தான் அப்பப்ப இடம் மாறிக்கொள்கிறது.
டீச்சரிடம் குட்டு வாங்க வேண்டாமா?
சேரி..நான் இப்ப க்ளாஸுக்கு வெளியே நிக்கவா...அல்லது வெயிலில்
முட்டிபோடவா? ரெண்டுமே பழக்கம்தான்!!!ஜா...ஜா...ஜி...ஜி...!
 
பிழைதிருத்திவிட்டேன் டீஈஈஈச்சர்!
இப்ப சரி பார்க்கவும்.
 
நல்ல கொடுமைடா..சிவாஜி...!
உங்க சுத்தலைப் பாத்தேன் நியூபீ!!
சுத்திசுத்தி வந்தீக....!
ஒவ்வொருவர் கற்பனையும் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது...விஞ்சுகிறது.
 
pottachu jilebi :-)

http://ponvandu.blogspot.com/2008/06/blog-post_23.html

 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]