Monday, June 9, 2008

 

ஒண்ணு- ஒருமுத்து, ரெண்டு- ரெண்டு முத்து.....இப்படி ..ஒன்,டூ, த்ரி படித்திருக்கீறீர்களா?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த அத்தானுக்கான குவார்டர்ஸ்ஸில் குடியிருந்த
அக்காவீட்டுக்குப் போகும் போதெல்லாம், சோலையாயிருக்கும் வளாகத்தில் நடந்து போவதே சுகமாயிருக்கும். அங்கு காயோ கனியோ தராத வெறும் நிழலும் காற்றும் மட்டுமே தரும்(அதுவும் தேவைதானே?) மரங்களையும் அவற்றில் காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கும் காய்களையும் பார்த்துக்கொண்டே போவேன். அந்தக் காய்களுக்கும் ஏதாவது உபயோகமிருக்கும். நமக்குத்தெரியவில்லை. தாவரயியல் படித்தவர்களைக்கேட்டால் பேரும் பயனும் சொல்வார்கள்.


அதில் ஒரு வகை மரத்தில் காய்கள், முருங்கக்காய் மாதிரி கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கும். நான் பள்ளியில் சேர்ந்தபோது, அதாவது 'பேபி க்ளாஸ்!!' அக்கால LKG!!!, எண்ணும் எழுத்தும் படிக்கவாரம்பித்தபோது, எங்களுக்கு எண்களை அறிந்து கொள்ள உதவிய காய்கள் அல்லவா!! என்று மகிழ்ச்சியோடு அவைகளுக்கு 'டாட்டா!' சொல்லிவிட்டுப்
போவேன்.

போன வாரம் பேரனுக்கு வெளியுலகைக் காட்ட வென்று கிண்டியிலுள்ள சிறுவர் பூங்காவுக்குச் சென்றோம். அங்கு சுற்றிக்கொண்டிருந்த போது அதே மரங்கள்!!.....அதே காய்கள்!!!
இப்போது அவைகள் எனக்கு 'டாட்டா!!' சொல்லி என்னைப்பற்றி எழுதேன் என்று கொஞ்சின...கெஞ்சின..! ஆஹா! செய்நன்றி மறக்கலாமா? அப்புரம் நான் உய்ய வேண்டாமா?
பிறர் வேடிக்கைப் பார்ப்பார்களே!!என்றெல்லாம் யோசிக்காமல் 'ஒரு பேபிக் கிளாஸ் குழந்தையைப் போல்' பார்க்கிலிருந்து பொறுக்கிவந்தேன்...நான் ஒரு பொறுக்கியுமல்லவா?
ப்ளாக் எழுத ஆரம்பித்ததிலிருந்து எதைப் பார்த்தாலும் இதை எழுதலாமா...அதை எழுதலாமா? என்று பரபரக்குது மனசு!!

கான்வெண்டில் பேபிக்ளாஸ் சேர்ந்தபோது...நன்றாக நினைவிருக்கிறது. இந்தக் காய்களை..பள்ளி வளாகத்துள்ளும் இம்மரங்கள் நிறைய இருக்கும். கான்வெண்டின் சிக்கனம் எல்லோரும் அறிந்ததே!
இக்காய்களைப் பறித்து மெதுவாக உடைத்து அதன் முத்துக்களை நிறைய சேகரித்து வைத்திருப்
பார்கள்.
அதோடு கூட மாதகாலண்டரில் உள்ள எண்களை ஒன்று முதல் பத்து வரை(ஆரம்பப் பாடத்துக்கு
இவ்வளவு போதும்) ஓர் அட்டையில் ஒட்டி தனித்தனியாக வெட்டி வைத்திருப்பார்கள்.

இவைகளை, குழந்தைகள் உடைத்துவிட்டாலும் வீணாக்கினாலும்.....காசா பணமா? மறுபடி மரத்திலிருந்து பறித்துக்கொள்ளலாம், அடுத்தமாத காலண்டரிலிருந்து வெட்டி ஒட்டிக் கொள்ளலாம்!


கணக்கு வகுப்பில்....எல்லோரும் நான்கு வயது குழந்தைகள்...இந்த முத்துக்கள் ஓர் அட்டைப் பெட்டியிலும் எண்கள் ஒட்டிய அட்டைகள் இன்னொரு பெட்டியிலும் வைத்திருப்பார்கள்.
பேபிக்ளாஸ் சிஸ்டர் சொன்னதும் நாங்கள் ஓடிப் போய் சின்ன கைகள் நிறைய எண்களை எடுத்துவந்து எங்கள் டெஸ்கின் மேல் வைத்துக்கொள்வோம். மறுபடி ஓஓஒடிப் போய் முத்துக்களை
கைகள் நிறைய அள்ளிக்கொண்டு வந்து செட்டிலாவோம்.
சிஸ்டர் சொல்லச் சொல்ல, 'ஒன்று,ஒரு முத்து....இரண்டு,இரண்டு முத்து...மூன்று, முன்று முத்து...' என்று சொல்லிக் கொண்டே பத்து வரை அடுக்கிக் கொண்டே போக வேண்டும். மிக எளிமையான இம்முறையில் சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருக்கும்.

பசுமரத்தாணி....பசுமரத்தாணி...என்பார்களே!!!அது போல் மனதில் பதிந்தது, இன்று பதிவிடும் வரை வந்திருக்கிறது.

பேர் தெரியாக் காயே!!உனக்கு என் அனந்த கோடி வணக்கங்கள்!!!

Labels: ,


Comments:
அப்பாடா, இப்பல்லாம் முதல்ல வர்ரது பெரும் பாடா இருக்கே...உஷ் அப்பாடா என்ன வெயில் என்ன வெயில்.... சும்மா சொல்லகூடாது சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. (ஆமா இது காமடிப்பதிவு தானே)
 
அடடா இது (மலரும்) காயும் நினைவுகளா, தப்பு நடந்து போச்சே!!
 
ஒரு முத்து, இரு முத்து என்று பழைய பாட்டில் வரி உண்டு. அதைத்தான் சொல்லப்போகிறீர்களோ என்று நினைத்தேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காத நினைவுகள். அழகாகச் சொல்கிறீர்கள்.

சகாதேவன்
 
ஓரொண் ஒண்ணு ஈரோண் ரெண்டுனு படிக்கலாம் மாதிரி இருக்கும்மா.
இப்படி ஒரு நினைவுக் களமா.")இந்தக் காயைப் பார்த்த ஞாபகம். இந்தக் குல்மோஹர் மரத்திலியோ இல்லாட்டா மஞ்சள் பூக்கள் பூக்குமே அந்த மரத்திலியோ இந்தக் காய் இருக்கும்.சிங்கத்தைக் கேட்கிறேன்:)
 
//"ஒண்ணு-ஒருமுத்து, ரெண்டு-ரெண்டு முத்து....இப்படி..ஒன்,டூ,த்ரி படித்திருக்கிறீர்களா?"//

இப்படித்தான் படித்தோம் ஒன்,டூ,த்ரீ பாளை லயோலா கான்வென்டில். சதங்காவின் வலைப்பூவில் எப்படி இக்கால அபகஸ் சென்டர்கள் குன்னி முத்து,சோவி வைத்து வீட்டில் நாம் படித்த ஆரம்பக் கணக்கை மாடர்னாக்கி விட்டார்கள் எனப் பின்னூட்டமிட்டிருந்தேன். இந்தக் காய் மறந்தே போச்சே. பேபி க்ளாஸ் சிஸ்டர் சொல்லிக் கொடுத்த அதே மாதிரி அடுக்கி வைத்து படமும் எடுத்து..., அதான் நானானி!

[ஒன்னாம் க்ளாஸ், அஞ்சாங் க்ளாஸ் சிஸ்டர்களையும் ஞாபகமிருக்கா. என் சின்னத் தங்கை காலம் வரை அங்குதான் இருந்தார்கள். லயோலாவில் படித்த எல்லோருக்கும் இவர்களை நினைவிருக்கும்.]
 
இது மான்டிஸோரி மாதிரி இல்ல இருக்கு! நாங்க திரிசங்கு தலைமுறை போலிருக்கு:-)

படிக்கச் சுவையா இருந்தது.
 
முத்தான பதிவு.
 
அந்தக் கால அபாக்கஸ்!!
 
//...உஷ் அப்பாடா என்ன வெயில் என்ன வெயில்.... சும்மா சொல்லகூடாது சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. (ஆமா இது காமடிப்பதிவு தானே)//

அபி அப்பா கொழுத்தும்வெயிலில் இளகிவிட்டீர்களா?
 
உண்மைதான் அபி அப்பா!
இது காயும் நினைவுகள்தான்.
 
சகாதேவன்,
மறக்க முடிந்த நினைவுகளா அவை?
 
வல்லி,
நிச்சயமாக குல்மொகர் மரமில்லை. மற்றபடி பேர் தெரியாது. சிங்கத்திடம் கேட்டீர்களா? என்ன உறுமியது?
 
ராமலஷ்மி,
ஒண்ணாங்கிளாஸ், அஞ்சாங்கிளாஸ் சிஸ்டர்களின் போட்டோவே என்னிடமிருக்கிறது.
 
கெக்கேபிக்குணி,

திரிசங்கு தலைமுறையில் எப்படி படித்தீர்கள்?
 
பிரேம்ஜி,
சத்தான வார்த்தை!
 
கொத்ஸ்,
நல்லவேளை ஸ்மைலி போடாமல், நாலு வார்த்தை சொன்னீர்கள்!!!
 
நீங்க ரிப் வான் வின்கிள் தலைமுறை ஸ்டைலில் ரெண்டு வருடம் கழித்து மறுமொழி கொடுக்கலாம், நாங்க திரிசங்கு தலைமுறையில் (வௌவால் மாதிரி:-) அந்தரத்தில் தொங்கிகிட்டே படிக்க முடியாதா என்ன? :)
 
கெக்கேபிக்கே...கெக்கேபிக்கே...!
சிரிக்கிறேனாக்கும்!!!
 
என்ன செய்றது கெ.பி.கெ.கி.,
பழைய பதிவுகளை மேய்ந்தபோது இதற்கு பின்னூட்டங்களே இடாமல் விட்டிருக்கிறேன். அதான்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]