Sunday, May 25, 2008

 

வெயிலை அடிக்க..அதாங்க 'to beat the heat' என்னென்ன செய்யலாம்!!!!

என்ன செய்யலாம்...என்ன செய்யலாம்? வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க.
முடிந்தால் முன்று வேளை குளிரகுளிர குளிர்ந்த நீரில் குளிக்கலாம். பருத்தியாடைகளையே
அணியலாம்.
சரி..வரண்டு போகிற தொண்டைக்கு? அதுக்குத்தான் வாரேன். காலையெழுந்து பல் சுத்தம் செய்த பின் இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்தவேண்டும்.
கலை உணவோடு ஏதாவது பழரசம் குடிக்கலாம்.
பிறகு இளநீர், நீர்மோர் தாகத்தையும் தணிக்கும் வயிற்றுக்கும் குளிர்ச்சியைத்தரும்.

இந்த மோரை எவ்வாரெல்லாம் தயாரிக்கலாம்.
தயிர் ஒரு கப், ஆறு அல்லது ஏழு கப் தண்ணீர் விட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய்,இஞ்சி, நாலைந்து புதினா இலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து மோருடன் கலந்து
கொடுத்தால் கொண்டா கொண்டா என்று காலி டம்ளரை நீட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

மதியம் கம்பங்கூழ் அல்லது கேழ்வரகு கூழ் கோடைகாலத்துக்கு மிகவும் ஏற்றது.

கம்பங்கூழ் எப்படித் தயார்செய்வது:
சூப்பர் மார்கெட்டில் கம்பு பாக்கெட்டுகளில் சுத்தமாக கிடைக்கிறது.
அதை மிக்ஸியில் ரவையாக பொடித்துக்கொள்ளவும்
அதில் ஒரு கப்புக்கு இரண்டு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
நன்கு ஆறியதும் பெரியபெரிய உருண்டைகளாகப் பிடித்து ஒரு மண்பாத்திரத்தில் போட்டு
அவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு முதல் நாள் மாலையே செய்து வைத்து விட வேண்டும்.

மறுநாள் காலை அல்லது மதியம் விருப்பம் போல்...தேவையான உருண்டைகளை எடுத்து
மோர்விட்டு நன்கு கரைத்து உப்புப்போட்டு கூழ் போலவும் குடிக்கலாம்...தயிர் விட்டுப்
பிசைந்து சாதம் போலும் சாப்பிடலாம். தயிசாதத்துக்கு இசையும் எல்லாம் இதற்கும்
இசையும். உம்: எனிஊறுகாய், மாவடு, ஆவக்காய் ஊறுகாய், பழங்கறி(என் பேவரைட்), மோர்மிளகாய், வெங்காய வடகம் இன்னும் எனக்குத் தெரியாத என்னவெல்லாம் இருக்கோ அதெல்லாம்!!!

கேழ்வரகு கூழ்...ராகி கூழ் இப்போது செய்யலாமா? :
கேழ்வரகை வாங்கி சுத்தம் செய்து, சுத்தம் செய்து, சுத்தம் செய்து, சுத்தம் செய்து...ஆம் அத்தனை முறை களைய வேண்டியிருக்கும் (அவ்வளவு மணலாயிருக்கும்) மெஷினில் மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இதுவும் முந்தின நாளே செய்து கொள்ளவேண்டும்.

மண்பானை ஒன்றில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் ஒரு கப் அரிசியை இட்டு நன்கு குழைய
வேகவிடவேண்டும். சாதம் வெந்தவுடன் மூன்று கப் ராகியை நீர் விட்டு கரைத்து சாதத்துடன்
சேர்த்து மீண்டும் வேக வைக்கவும். ராகி நன்கு வெந்து இறுகியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி
மூடி வைத்துவிட வேண்டும்.

மறுநாள் காலை அல்லது மதியம் நேற்று வைத்த ராகிசாதத்திலிருந்து தேவையான அளவு எடுத்து
கெட்டியான மோர்,உப்பு, அரிந்த சின்ன வெங்காயம், காரத்துக்கு கொஞ்சமாக அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக குடிக்கும் பதத்தில் கரைத்துக்கொள்ளவேண்டும்.
இதோடு சந்தோஷமாகப் போகும் அகத்திக்கீரை வதக்கலோடு சேர்த்து நாலு டம்ளர் குடித்தால்
வெயிலை நன்றாக 'அடிக்கலாம்' அவ்வளவு குளிர்ச்சி!!!!

இது தவிர எல்லாவித பழரசங்களும் குடிக்கலாம். கோடைகாலத்தில் சாப்பாடு அவ்வளவாக
ஏற்காது. இதுபோல் செய்து சாப்பிட்டு குடித்து வந்தால் கோடையிலும் குளிர்ச்சியாக
இருக்கலாம். இது எல்லாம் போக என்னோட பேவரைட் என்னா தெரியுமா? வெறும் தயிர்சாதம்
பங்கனப்ள்ளி மாம்பழம்!!!!மாம்பழசீசன் முடியும் வரை இதுதான். விட்டால் ஒரு வருடம்
காத்திருக்கவேண்டுமே!!!!

இங்கு என் பேரனுக்குப் பிடித்ததைப் பாருங்கள்.
"ஆச்சி!!!நீ கொடுக்கும் ஜூசெல்லாம் எனக்கு டம்ளாரில் பத்தாது இதில் தான் வேண்டும்.
ஒரு கேன் காலி..இது ரெண்டாவது...!"

Labels:


Comments:
ஸோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ க்யூட்.

நீன் க்க சொன்னது எர்தையும் செய்யாமல் இருந்தால் இந்தக் குளிரில் இருந்து தப்பிச்சுருவேனா?

அடுத்தவாரம் முதல் அஃபீசியல் விண்ட்டர். இன்னிக்கே 5 டிகிரிதான்(-:

அந்தக் கேழ்வரகுக் கூழ் & களியை
மைக்ரோவேவில் செய்யலாம். ரெண்டு வருசத்துக்கு முந்தி ஒரு பதிவு போட்டுருக்கேன்.
 
:) நல்ல படம்
 
நானானி, பேரன் செய்யற மாதிரி தண்ணியே குடிக்கலாம் போல இருக்கு. இந்த வெய்யில்ல இவ்வளவும் அரைத்தி கரைத்து வச்சிருங்க. நானும் வரேன். ரெண்டுபேரும் எனக்கு ஒரு வாய் உனக்கு ஒரு வாய்னு சாப்பிடலாம் சரியா.:)
சீரியஸா சொல்லணும்னால் மோர் ரெசிபி அமிர்தம்.!!
 
//நீன் க்க சொன்னது எர்தையும் செய்யாமல் இருந்தால் இந்தக் குளிரில் இருந்து தப்பிச்சுரிவேனா?//

இந்த லொள்ளூதானே வேணாங்கறது!
நாஞ்சொன்னது வெயிலுக்கு இதமான
குளிர்ச்சியான சாமாச்சாரங்கள்.
நீங்க சூடான சமாச்சாரங்களை முயற்சியுங்களேன்.

கேழ்வரகுக் கூழ்..ஆடிமாசம் அம்மன்கோவிலிலெல்லாம் ஊத்துவாங்களே அது!!
 
நன்றி! கயல்விழி முத்துலெட்சுமி!!
 
வல்லி! கேக்கவே நல்லாருக்கு.
வாங்க வாங்க நீங்க சொன்னாமாதிரியே
சாப்புடலாம். சேரியா?
தண்ணிதான் பெஸ்ட்!
 
கம்பங்கூழும் கேப்பைக் களியும் இப்படி கேனிலும் கிடைக்கிறதா.உங்கள் பேரனிடம் கேட்டு செல் நம்பர் சொல்லுங்களேன் .களி தந்தவரைக் காலமெல்லாம் நினைப்பேன்.[உங்கள் பதிலையும் நானே எழுதிக் கொள்ளட்டுமா?"கேப்பே கேப்பே ஒரு கோப்பை கேப்பை களி கிண்டத் தெரியாத நீங்களெல்லாம் ......"]
 
கோமா...பேரன் கேட்டது ஜூஸ், மேலும் நான் கேப்பை களி பத்தி சொல்லவேயில்லை. இப்போது களியும் கிண்டிடலாம் என்றே தோன்றுகிறது.
கேழ்வரகும் கம்பும் வைத்து கூழ் செய்வது பத்தித்தான் விலாவாரியாக
சொன்னேன்.
வெயிலுக்கேற்ற கூழுண்டு
விரட்டுவீர் சூட்டை அதை உண்டு.
 
சென்னை வெயிலின் கொடுமைக்கு வாண்டு என்னமா கொடுக்கிறான் போஸ் :-))!!
 
பேரன் படம் படா ஜோர் - அந்தக் கேன் உயரம் இருந்துகிட்டு அதிலே 2 கேன் ஜூஸ் கேக்குதா ஐயாவுக்கு ?? ஹா ஹா ஹா....

மறுபடி மறுபடி பங்கனப்பள்ளி மாம்பழத்தை ஞாபகப்படுத்தி ஜொள்ளு விட வைக்கிறீங்களே!!

-RL
 
வாண்டு கொடுக்கும் போஸ்களை
அப்பப்ப க்ளிக் செய்தது எப்படி
உபயோகமாயிருக்கிறது!!!!
ராமக்ஷ்மி!
 
RL!
உங்கூரில் கிடைக்கும் பழங்களை
எல்லாம் நினைத்து நான் ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறேனே?
அதுக்கு இன்னா செய்றது?
கூட்டி கழிச்சுப் பாத்தால் ரெண்டும்
சரியாப் போச்சு. சேரியா?
 
என்னென்ன பழங்கள் சொல்லுங்கள் - இப்போ ஆகஸ்டில் வரும்போது கொண்டு வந்தாப் போச்சு. பதிலுக்கு நம்ம G.N.செட்டி ரோட்டு ஓரத்தில் உள்ள மாம்பழக் கடைகளை ஆகஸ்ட் வரை கொஞ்சம் extend பண்ண வைக்க முடியுமா pleeeease??
:-)
-- RL
 
இந்த வருடம் பங்கனப்பள்ளி மாம்பழ, வரத்து வழக்கத்தைவிட கொஞ்சம் கம்மிதான். ஜூலை வரைதான்அதனாலென்ன? கடைசி கன்சைன்மெண்டை வாங்கி என் ப்ரிட்ஜ்
கொள்ளுமட்டும் வைத்திருக்கிறேன்.
நான் தொடவேமாட்டேன்...ப்ராமிஸ்!!
(நான் ஒரு பங்கனப்பள்ளி மாம்பழப்
பைத்தியம்) சேரியா?
 
Good for people to know.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]