Friday, May 9, 2008

 

ஜோடி!!ஜோடி!! PiT-மேமாத போட்டி!!போட்டி!!

முதல் படம் போட்டிக்கு...சேரியா?

முன்னால் போகும் வாத்துக்கு ஜோடியாகப் போக விருப்பமில்லையோ? இல்லை பின்னால்
போகும் வாத்து, 'நடையா..இது நடையா..' என்று டீஸ் பண்ணிக் கொண்டே போகுதோ?


இங்கு ஜோடி மாறினாலும் நாங்க ஜோடிதானுங்க!


மணக்கும் வெட்டிவேர் கூட்டில் உயிரில்லா ஜோடிகள்!!

Labels:


Comments:
வாத்து படம் கொள்ளை அழகு.. முன்னாலும் பின்னாலும் இருப்பதால்தான் படம் வித்தியாசமாக தெரிவது போல இருக்கிறது..
 
நானானி மேடம்! போட்டிக்கான படம் அருமை.
 
டக் படம் டக்கர்.
ஜோடி என்றதும் நானும் சப்பல் தான் நினைத்தேன். ச(ப்)பாஷ்.
மூன்றாவது படத்தில் உயிர் இருக்கே.
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.
சகாதேவன்
 
வாங்க..புபட்டியன்!!
பிரசுரித்து உடனே ஜிமெயில் போனால்
உள்ளே இருக்குது உங்க மெயில்!!!
செம ஸ்பீடு!!
நன்றிகள்!!
 
நீங்களும் அதே ஸ்பீடுதான் பிரேம்ஜி!!
சந்தோசமாயிருக்கு!
 
நானானி மேடம்! எனக்கொரு கேள்வி. உங்கள் பதிவு தளத்தில் இடது பக்கம் வரும் லேபிள்கள் அதாவது "இதெல்லாம் படிச்சீங்களா?" பகுதியை எப்படி வரவைப்பது?
( இந்த பின்னூட்டத்தை வெளியிட அவசியமில்லை.தங்களை தொடர்புகொள்ளவே இது. premkug@gmail.com)
 
அழகு வாத்துகள். கம்பீரமாப் போகிற அழகே தனி.
வெள்ளை வாத்து, பச்சைத்தண்ணீர்.
ம்ம் ஜோடி ஜோர்தான்.
 
என் ஓட்டும் வாத்துக்கே ... சூப்பர்
 
'டக்கர் டக்'னு சகாதேவனின் கமெண்டுடன்..டக் படம் டக்கராத்தான் இருக்கு...
 
சகா!
இந்த டக் படம் நானும் டக்குகளும்
போகும் வேகத்தில் 'டக்'கென்று எடுத்தது.
 
வல்லிம்மா!!!
எங்க இருக்கீங்க? உள்நாட்டிலா...வெளிநாட்டிலா?
வாத்தை வாழ்த்தியதுக்கு நன்றிப்பா!!!
 
நெல்லை சிவா!
உங்க ரோஜாப்பூவும்...கிள்ளி தலையில் சூடிக்கொள்ளலாம் போலுள்ளது.
 
வாவ்...வாழ்த்துக்கள்!
வழுக்கிச் செல்லும் வாத்துக்கள்..
மாறிப் போனச் செருப்புக்கள்..
தாம் கட்டாத கூட்டிலே குருவிகள்!
 
மூன்று நன்றிகள்!!!ராமலஷ்மி!
 
'டக்' போன வேகத்துல டக்குன்னு எடுத்ததா?

நான் வாத்து நல்லா போஸ் கொடுத்துன்னு நினைச்சேன்.:)))

படம் எஅடுத்த உங்களுக்கு வாழ்த்துகள்.படம் அருமை.
 
ஆமாம்! புதுத் தேனீ!
டிஸ்னிலேண்டில் ஒரு பாலத்தை க்ராஸ் செய்யும் போது கீழே நீரில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகளை போகிற போக்கில் க்ளிக்கியது.
 
பின்னால வாற வாத்து முறைச்சிட்டு வாறார்.. ரெண்டு பேருக்கும் சண்டையோ?
 
வாத்து நடை,வாத்துக் குளியல் ன்னு கைவசம் நிறைய இருக்கும் போல.எனது தேர்வு சிட்டுக் குருவி.
 
அப்படியும் இருக்கலாம் ஓவியா!
போட்டியில் வென்றால் சமாதானமாகிவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள்!!!ஹி..ஹி..!
 
கைவசம் நிறையத்தான் இருக்குது நட்டு!
அதற்கு தோதாக போட்டிகள் வந்தால்
தேவலை!
 
வாத்துக்கு என் வா-ழ்-த்துக்கள்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]