Saturday, May 31, 2008

 

எங்க ஊரு...சின்ன ஊரா...?

இன்றய TIMES OF INDIA பத்திரிகையில் வந்த ஒரு செய்தியைப்பார்த்து நொந்து போனேன்.

" Small town girls score over city SSLC students "

என்ன இது எங்க பாளையம்கோட்டைக்கு வந்த சோதனை? சின்ன ஊராம்ல!!
பல வருடங்களாக இந்துக்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழும் ஒரு நகரம். மதச்சண்டையெல்லாம் சமீபத்தில் வந்ததுதானே! அதுவும் அரசியல் ஆதாயத்துக்காக
மூட்டிவிடப்பட்டது. மற்றபடி பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பலவகையான கல்வி ஸ்தாபனங்கள்
குறிப்பாக பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி என்று கல்வி அறிவை பலவகையிலும்
ஊட்டிவரும் பாளையங்கோட்டை தென்னகத்தின் ' oxford ' என்று பேர் பெற்றது,

அப்படியாப்பட்ட, திருநெல்வேலிக்கே பெருமை சேர்க்கும் பாளையங்கோட்டையை
ஸ்மால் டவுன் என்று எழுதியதை மென்மையாக கண்டிக்கிறேன்!!அதுவும் நான் படித்த
செயிண்ட் இக்னேஷியஸ் பள்ளி மாணவி மாநிலத்திலேயே 496 மதிப்பெண்கள் எடுத்து முதலாவதாக தேறியிருக்கிறார்...என்னும் போது அடையும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் அளவேது?மாநகரத்து மாணவர்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை (படிப்பில்தான் ) என்று நிரூபித்த எங்களூர் மாணவர்களை மனமார பாராட்டுகிறேன்!!

Labels:


Comments:
அதானே? இந்த அநியாயத்தைக் கேக்க யாருமில்லையா?

மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும் அந்த மாணவிக்கு.
 
ஏம்பாட்டுக்கு எசப்பாட்டு பாடியதுக்கு...என்னான்றது...நன்னிதான்!
 
பாட்டுச் சத்தம் கேக்கலையா....

பாட்ட்ட்டுச் சத்தம்....... கேக்கலையா?

பாட்டுச்சத்தம்....

ம்ம்ம்ம்ம்ம்

பாட்டுச்சத்தம் :-))))
 
அடி! நீதானா அந்தக் குயில்?
 
கூவுகிற சத்தமெல்லாம்
குயிலு சத்தமிந்நிருந்தேன்
குயிலு சத்தமிந்நிருந்தேன்!


பாடுங்கள் அக்காக்களே
பாடுங்கள்!

உங்கள் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் எல்லோரையும் முழ்கடிக்க பாடுங்கள் :))))
 
ஒர் தமிழச்சிக்கு ஓர் உண்மைத் தமிழனின் (அம்மனிக்கு அடியேனின் )வாழ்த்துக்கள்......

சின்னசாமி
வலையகம் :உலக நண்பர்கள் மரம்‍
BANGALORE
 
//மாநகரத்து மாணவர்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை (படிப்பில்தான் ) என்று நிரூபித்த எங்களூர் மாணவர்களை மனமார பாராட்டுகிறேன்!!//

சரி! மாணவி மார்க் வாங்கினா எதுக்கு மாணவர்களை பாராட்டனும். ஒன்னும் புரியல. போகட்டும் அந்த பொண்ணு பேட்டி கூட பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. வாழ்த்துக்கள்.

பாளையங்கோட்டை சின்ன ஊர்ன்னு யார் சொன்னது. அந்த ஜெயில்ல மட்டும் 8000 பேர் அடைக்கலாம். வெளியே பெரிய கதவுக்கு வெளியே சூப்பரண்டண்ட் பங்களாவுக்கு முன்னே உள்ள வராண்டாவிலே மட்டும் 1000 பேரை காலை அடைச்சு வச்சு மாலை விடுவிக்கலாம். இத்தன பெரிய ஜெயில் உள்ள ஊரை போய் சின்ன ஊர்ன்னு சொன்னா என்னா அர்த்தம்:-))

அன்புடன்
அபிஅப்பா
 
நனானி! எப்பவுமே உங்க ஸ்கூலில் உள்ள மாணவிகள் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி பெறுவாங்க... என்னவோ தெரியாம எழுதிட்டாங்க... மன்னிச்சு விட்டுடுங்க...
 
நானும் மென்மையா கண்டிக்கறதுல சேர்ந்துக்கறேங்கோ.
 
அந்த இசையென்னும் இன்ப வெள்ளம் எல்லொரையும் மூழ்கடிக்க
சுனாமி போல் வந்தால் பரவாயில்லையா?
ஆயில்யன்?
 
முதன்முதலாக வருகை தரும் சின்னச்சாமிக்கு வந்தனம், நன்றி!
 
மாணவர்கள் என்பது பொதுவான வார்த்தை. அது சரி... அபிஅப்பாவுக்கு பாளையம்கோட்டையில்
முக்கியமான இடமெல்லாம் நல்ல
பழக்கம் போலிருக்கு!!! எண்ணிக்கை கணக்கெல்லாம் பக்காவாயிருக்கு?
 
ரெண்டு வயசானவங்க சேர்ந்து கும்மியா? நல்லா இருங்கம்மா!!

திருநெல்வேலியைப் பார்க்கும் பொழுது பாளையங்கோட்டி சின்னதுதானே. அதான் அப்படிச் சொல்லிட்டாங்க. நீங்க ரென்சன் ஆவாதீங்க.
 
ஹையோ! டாக்டர்! தமிழில் எனக்கு
பிடித்த ஒரே வார்த்தை 'மன்னிப்பு'
ஆகவே மன்னித்தோம்!!
 
ஆடுமாடும் இந்த பட்டியில் வந்து அடைந்ததுக்கு ரொம்ப சந்தோசமுங்கோ!!
 
இவர்கள் குறைவான சம்பளத்திற்கு ஆள்களை படித்து அவர்களை நிருபர்கள் ஆக்குகிறார்கள் . அவர்கள் எழுதி தருவதை அப்படியே பிரசுரம் பண்ணுகிறார்கள் .
பாளையம் கோட்டை எவ்வளவு பெரிய ஊர் என்று குழந்தைகளை கேட்டால் கூட சொல்லும் !
 
படித்த பள்ளிக்கும் வாழ்ந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் பதிவு.
 
ஏன் கொத்ஸ்? வயசானவங்க கும்மியடிக்கக் கூடாதா என்ன?
பதிவிலே கூட கும்மியடிக்க விட மாட்டேங்கறாங்கப்பா!!
 
அப்படிப்பட்ட ஒரு நிருபராலேதானே
எனக்கு ஒரு பதிவு போட மேட்டர் கெடச்சிருக்கு? அந்த நிருபர் வாழ்க!!
 
சந்தோசமாயிருக்கு ராமலஷ்மி!!!
உங்களுக்கும்தானே?
 
உங்க 'பெரிய' ஊரு மாணவிக்கு வாழ்த்துக்கள்.. நல்ல விஷயம் நடக்கும் போது, நடந்த 'சின்ன' தவற மன்னிச்சு விட்ருங்க :)
 
தஞ்சாவூரான்! 'பெரிய' வார்த்தையெல்லாம் சொல்லாதீக.
தமிழில் எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தையைத்தான் டெல்ஃபின் டாக்டரம்மாவுக்கு பின்னோட்டத்தில் சொல்லீட்டேனே!!!
 
அட எல்லாருக்கும் தெரியுமா கற்பூர வாசனை ? பாவம் சின்னப் பசங்க யாரோ தெரியாம எழுதிட்டாங்க :)

--RL
 
அவங்க பம்பாய்க்காரங்க! அப்படித்தான் சொல்வாங்க!
பம்பாயைப் பார்க்கும்போது அதற்குத் தோதாக ஒரு ஆறு ஊர்கள்தானே இருக்கிறது
மற்ற ஊர்கள் எல்லாம் சின்ன ஊர்தான், கோவை, மதுரை, திருச்சி உட்பட!:-))))
 
இருக்காதா பின்னே! நான் படித்த பள்ளியும், வாழ்ந்த ஊருமாச்சே!
 
//ரெண்டு வயசானவங்க சேர்ந்து கும்மியா? நல்லா இருங்கம்மா!! //

ரிப்பீட்டேய், ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஆமா, யாரு அந்த ரெண்டு பேரு ? :)))
 
அடடே!!உங்களுக்கும் கற்பூரவாசனை தெரியுமா? RL! அப்ப நீங்களும் நம்ம
பட்டியில் வந்து அடஞ்சுக்கோங்க!!
 
சுப்பையா சார்! போனாப் போகுதுன்னு
விட்டுடுவோமா? நீங்க சொன்ன சரி!!
சுவாரஸ்யாய் ஒரு பதிவு போட காரணமான பம்பாய்காரவுகளுக்கு
என்னோட 'தன்யவாத்!...அவுர்..
ஷுக்கிரியா!!!
பஹூத் அச்சா! ஹைனா?

எனக்கு இவ்வளவுதான் இந்தி தெரியும்.
ஹி..ஹீ!
 
இருக்கும் இருக்கும் ரொம்பவே இருக்கும் ராமலஷ்மி!!!
 
ஆ..து சரி சதங்கா!
இம்பூட்டு பின்னோட்டங்களையும் படிச்சுட்டு அந்த ரெண்டு பேர் ஆருங்கிறீகளே?
 
விட்டுத் தள்ளுங்க நானானி, பாதிப்பேருக்கு Oxford of South India - Palayamkottai அப்படிங்கிற விஷயமே தெரியாது.

இப்பத்தானே எல்லா இடங்களிலும் நர்ஸரி, மற்ற பள்ளிகள் புற்றீசல் போல வருவதைப் பார்க்கிறார்கள். பாளையங்கோட்டையில் 20, 30 வருடங்களுக்கு முன்னால் தடுக்கி விழுந்தால் ஏதாவது பள்ளியுன் மேல் தான் விழ வேண்டும், என்பது மட்டும் எப்படி தெரியும்?
 
இதே போல சின்ன ஊருன்னு சொல்லி எங்க அம்மா கிட்ட மாட்டிக்கிட்டேன்.. அதன் அருமை பெருமையெல்லாம் சொல்லிட்டுத்தான் ஓய்ந்தாங்க.. பதிவும் கமெண்டுகளும் படித்து ரசித்தேன் , நானானி.
 
வாங்க வாங்க கோகிலவாணி கார்த்திகேயன்!!
பின்ன ஊர் பாசம் பொத்துக்கிட்டு வரும்ல!!
நல்ல பெயர் உங்களது!
இதே பெயரில் தமிழில் ஒரு பழைய படம் உண்டு. அதில் பாடல்களெல்லாம்
சூப்பராயிருக்கும்.
 
கயல்விழி முத்துலெட்சுமி!
அம்மான்னா என்ன அவங்க ஊரைச் சொன்னா பொத்துக்கிட்டுத்தானே வரும்?
செமையா மாட்டுனீங்களா?
வருகைக்கு நன்றிப்பா!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]