Thursday, May 29, 2008

 

ரொம்பநாளாக எனக்கொரு ஆசை! குடும்பத்திலிருந்து ஒரு வாரம் எஸ்கேப்!!!!

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை. என்ன?ங்குறீங்களா? குடும்பத்தலைவிக்கு எப்போ
ரிடையர்மெண்ட்?
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற ரங்கமணிகள் காலையில் ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு
பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது
தங்கமணிகள் கையில் கொண்டுதரும், அதுவும் அவர்கள் நீட்டுமிடத்தில் நாம் காபி தம்ளாரை கையில் சொருகவேண்டும். என்ன கொடுமையிது ரங்கமணிகளா!!!

ஒரு நாளாவது நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது ரங்கமணி இப்படி காபி
கொண்டுவந்தால் எப்படியிருக்கும்!!!!!!இதுதான் ரொம்ப நாள் ஆசை! இதற்கு என்ன சொல்வார் தெரியுமா? 'ஆங்! ஆசை..ஆசை..!' என்ன ஒரு ஆறுதல் என்றால் அதிகாலை 4-மணிக்கே எழுந்துவிடுபவர் என்னை எழுப்பாமல் தானே மைக்ரோவேவில் காபி சூடு பண்ணி குடித்துக்கொள்வார்.

ரொம்ப ஆசையாயிருக்கும் போது நான் சோபாவில் போய் ஒக்காந்து கொண்டு என் மகளை
எனக்கு காபி எடுத்து வரச் சொல்வேன். அதிலும் ஒரு ட்ரேயில் வைத்து. அற்ப ஆசைதான்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், குடும்பத்தலைவிகளுக்கு(பேருதான் பெத்த பேர்!!)
ரிடையர்மெண்ட் என்பதே கிடையாது. அதே ரொட்டீன்....காலையில் எழுந்து காபி போட்டு
டிபன் ரெடிபண்ணி.........இப்படிப் போய் கொண்டேயிருக்கும்.

அவர்களுக்கு இந்த ரொட்டீனிலிருந்து சில நாட்கள் ஓய்வு கிடைத்தால் எப்படி இருக்கும்!!
பல நாள் என் மனதில் ஓடிய எண்ணங்களுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள் 'டச்சஸ் க்ளப்
உறுப்பினர்கள்' முழுவதும் பெண்களாக..."தனியே தன்னந்தனியே..கணவர்,குழந்தைகளிடமிருந்து
ஒரு வாரம் எஸ்கேப்" நல்லாருக்கில்ல?

எங்களுக்கும் லீவு வேண்டாமா? என்று கேட்கும் இவர்கள் ஜாலியாக டூ சென்ற இடம் பாலித் தீவு.

இந்த வார குமுதத்தில் படித்த இந்தத் தகவல், உடனே உங்களோடு பகிர்ந்து கொள்ள காலையில்
கிடைத்த 'சைக்கிள் கேப்பில்' பதிவு செய்கிறேன்

இவர்களுக்கும் என்னைப் போல் இது ரொம்ப நாள் கனவாம்!!! ஒரு வாரம் விட்டுப் பொறுப்பு என்பது என்னவென்று அவர்களுக்கும் தெரிய வேண்டாமா? ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் போல
வீட்டு வேலைகளை ப்ளான் பண்ணி நாம் செய்யும் விதம்...கணவன்மார்கள் குழப்பி அடித்து
திண்டாடும் போதுதான் புரியும் என்பது இவர்களது வாதம். சரிதானே!!

குடும்பத்தலைவிகள், குடும்பத்தலைவிகள்தான் என்பது கடைசிக் கேள்வியில் புரிந்தது.
ஏழுநாளுக்கு மேல் வீட்டை விட்டுட்டு இருக்கு முடியலையாம் வீட்டு நினைவும் குறிப்பா பிள்ளைகள் நினைப்பும் வந்துச்சாம்....வந்துச்சாம். அடுத்த கேள்வி, 'அப்ப கணவர்களை மிஸ்
பண்ணலையா?' இதுக்கு உற்சாகத்தோடு துள்ளி வந்தது பதில், "மிஸ் பண்ணிட்டு செம்ம ஜாலிஈஈஈஈஈ!" என்கிறார்கள் இந்தப் பெண்மணிகள். நியாயம்தானே?

எப்படியோ...ஒரு வாரம் குடும்பத்தை விட்டுவிட்டு செம் ஜாலியாக கழித்துவிட்டு உடம்பையும் மனசையும் ரிசார்ஜ் செய்து கொண்டு புதுத் தெம்போடு திரும்பியிருக்கும் அவர்களுக்கு
என் வாழ்த்துக்கள்!!!!!

மொதோ வேலையா இந்த 'டச்சஸ் க்ளப்' எங்கிருக்கு என்று பாக்கணும். நா வரட்டா?

Labels:


Comments:
//இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், குடும்பத்தலைவிகளுக்கு(பேருதான் பெத்த பேர்!!)
ரிடையர்மெண்ட் என்பதே கிடையாது.//

ஏன் கிடையாது கல்யாணம் ஆகி வீட்டுக்கு மருமகள் வந்தபின் இருக்கே!

மருமகள் வந்த பின் காப்பி எடுத்துவர சொல்லிவிட்டு மம்மு சாப்பிடாமல் ஓடும் குழந்தை போல நீங்களும் ஓடி மருமகளையும் ஓட வைக்கலாமே!
 
///ரிடையர்மெண்ட் என்பதே கிடையாது. ////

தவறு.சிலருக்கு உண்டு!
மருமகள் வந்தவுடன்!
 
//'அப்ப கணவர்களை மிஸ்
பண்ணலையா?' இதுக்கு உற்சாகத்தோடு துள்ளி வந்தது பதில், "மிஸ் பண்ணிட்டு செம்ம ஜாலிஈஈஈஈஈ!" என்கிறார்கள் இந்தப் பெண்மணிகள். நியாயம்தானே? //

என்ன கொடுமைங்க இது, நீங்க இல்லாம ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதுன்னு கல்யாணம் ஆன புதுசுல சொல்லவேண்டியது அப்புறம் இப்படியா????
 
அது மருமகள் வந்த பின் தானே!
அதுவரை? குசும்பு பண்ணாமல் நீங்க சொன்னது நல்லாருக்கு.

நானும் மருமகளும் ஒக்காந்திருக்க யார் காபி கொண்டுவருவா? அதுதானே இங்கே கேள்வி?
 
வாத்தியாரையா! அந்த சிலரில் நானுமிருந்தால் சந்தோசம்தான்.
 
புதுசுலே சொன்னதுக்கும் இப்ப சொன்னதுக்கும் இடையிலே நடந்ததை வைத்துத் தானே இப்போது சொல்கிறார்கள்!!
 
//நானானி said...
நானும் மருமகளும் ஒக்காந்திருக்க யார் காபி கொண்டுவருவா? அதுதானே இங்கே கேள்வி?//

ம்ம்ம்ம்!!!(என்ன சொல்லி எஸ்கேப் ஆகலாம்)

முதலில் ரெண்டு பேரும் ஒற்றுமையா ஒக்காந்திருந்தா அப்புறம் பார்துக்கலாம்!

எங்கள எப்படி அப்படி சொல்லலாம் என்று யார் யாரெல்லாம் சண்டைக்கு வருகிறீர்களோ அவர்களுக்கு எல்லாம் என் சார்பா வாத்தியார் சுப்பையா பதில் சொல்வார்.
 
விவரம் விசாரிச்சி வைங்க எனக்கும் சேர்த்து.. :)

எதுவுமே ரொட்டீன் ஆகிடுச்சுன்னா நடுவில் ஒரு கேப் இருந்தா நல்லது தானே...
 
'அந்தச் சிலரில்' சீக்கிரமே நீங்களுமிருக்க வாழ்த்துக்கள்!
 
//மொதோ வேலையா இந்த 'டச்சஸ் க்ளப்' எங்கிருக்கு என்று பாக்கணும். நா வரட்டா?//

எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடுங்கப்பா!!!!
அன்புடன் அருணா
 
அநேகமா மாசத்துக்குப் பாதிநாள் டச்சஸ் கிளப்தான் நமக்கு.

ட்யூக்கைத் தொரத்திவிட்டுருவேன்:-)

என்ன ......அந்தக் க்ளப்லே ஒரு பையனும்(சின்ன தொரை) மெம்பரா இருக்கான்.

அவனுக்கு (மட்டும்) சேவை செய்யவேண்டி இருக்கு.

பரவாயில்லைன்னு விட்டுருவேன்.

டின்னைத் திறந்தாப் போதுமே:-)
 
குசும்பன்!
வராத மருமகளையெல்லாம் ஏன் இழுக்கிறீர்கள்? என் எதிர்பார்ப்பு தங்கமணிகள் ஒக்காந்திருக்க ரங்கமணிகள் காபி கொண்டுவந்து தருவார்களா? வீட்டிலேயே ஒரு ரெஸ்ட் தரலாமே!
 
நிச்சயம் நாங்கள் ஒற்றுமையாகத்தான் ஒக்காந்திருப்போம்!!!அவள் வருமுன்னேயே உங்கள் குசும்பைக் காட்டுகிறீர்களே!!!
 
கட்டாயம் கயல்விழி முத்துலெட்சுமி!
எனக்கொரு துணை கிடைத்தது. சந்தோசம்!!
 
உங்கள் வாழ்த்து என் தாய் வாழ்த்தாக பலிக்கட்டும். ராமலஷ்மி!!
 
அட! டச்சஸ் க்ளப்புக்கு ஜரூராக மெம்பர்ஸ் வராங்களே!! பேசாம நாமே ஒரு ப்ளாக்ர்ஸ் க்ளப் ஆரம்பிச்சுரலாம் போலிருக்கே?
வாங்க அருணா! எல்லோரும் சேர்ந்து போலாம்.
 
//அனேகமாக மாசத்தில் பாதி நாள்
டச்சஸ் க்ளப்தான் நமக்கு
ட்யூக்கைத் தொரத்திவிட்ருவேன்//
அட! இது நல்லாருக்கே!! துள்சி!!
இந்த ஐடியா நமக்குத் தோணலையே!!
டின்னைக் கூட திறக்காமலிருக்க வேண்டும் முடியுமா துள்சி?
 
டீச்சரிடமிருந்து புதுப்புதுப் பாடமெல்லாம் கத்துக்கலாம்.
 
டின்னைத் திறக்கலைனா எனக்கு 'டின்' கட்டிரும்.

பாவம். சக்கரை வியாதிப்பா தொரைக்கு.

சாப்பாடு இல்லைன்னா 'கோமா' லே போயிட்டா வம்பு.

அதுவுமில்லாமல் ட்யூக் வீட்டுலே இல்லேன்னா என்னைக் கண்ணும் கண்ணுமாக் கவனிச்சுக்குவார்ப்பா.

பதில் கவனிப்பு கொடுக்கணும்தானே? :-)))

ட்யூக் இருக்கும்போது சிலநாளில் காஃபி போட்டுத்தரவான்னு கேப்பார்தான்.
சரின்னு மடத்தனமாத் தலையாட்டிட்டு,
அன்னிக்கு முழுசும் வாந்தியெடுக்க யாராலே முடியுது? :-)))
 
//ட்யூக் இருக்கும்போது சில நாள்
காஃபி போட்டுத்தரவான்னு கேப்பார்தான். சரின்னு தலையாட்டிட்டு
அன்னைக்கு முழுசும் யாராலே வாந்தி எடுக்க முடியுது?//
இது..இதுதான் நம்ம விதிப்பா!
நம்மாலே இப்டிக்காவும் போவமுடியாது
அப்டிக்காவும் போவ முடியாது.
விழுந்துவிழுந்து சிரித்தேன்!!!!!துள்சி!
 
நடுவாலே பூந்து ஒரு சின்னக் கேள்வி கேட்கலாமா? ப்ளாகர்ஸ் பாஷையிலே "ரங்கமணி & தங்கமணி"க்கு யாருக்குங்க காப்பிரைட்?
'எடு கம்பை' எனும் முன் எஸ்கேப்ப்ப்...
 
துள்சிம்மா உங்களை நல்லாத்தான் மெரட்டீருக்காங்க! ரங்கமணி & தங்கமணி எல்லாம் ப்ளாக்கிலே மூத்தோர், முன்னோர் சொன்னது. யாரும் இதுவரை உரிமை கொண்டாடி வரலை. வந்த கொடுத்துடுவோம். சேரியா?
 
'சேரியா?' காப்பிரைட் ஏவோடது. சேரியா?
 
நானானி said://ரங்கமணி & தங்கமணி எல்லாம் ப்ளாக்கிலே மூத்தோர், முன்னோர் சொன்னது. யாரும் இதுவரை உரிமை கொண்டாடி வரலை. வந்த கொடுத்துடுவோம். சேரியா?//
சேரி மேடம்.('சேரியா' காப்பிரைட்டை ஏற்கனவே என் பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்து நன்றி நவிலலும் செய்து விட்டேனே பார்க்கலையா?)
 
ராமலெஷ்மி! தங்கமணி, ரங்கமணியின் சினிமா உலக காபிரைட் மணிரத்னம்(அக்னிநட்சத்திரத்திலே ஜனகராஜ் வசனம்), பின்னே வலையிலே அதன் முழுகாபிரைட் எங்க குரு "டுபுக்கு" அவர்களுடையது.பின்னாலே நாங்க எல்லாம் சேர்ந்து பயன்படுத்திகிட்டோம்!

ஆமா! நானானியக்கா, அது என்ன உங்க ரங்கமணி ஒரு பதிவு எழுதி வச்சிருந்தாராம் டிராப்டிலே அதை காணும்ன்னு தேடிகிட்டு இருக்காராமே! உண்மையா???:-))
 
வாங்க வாங்க அபிஅப்பா!
உங்க குரு டுபுக்குவுக்கு எல்லார் சார்பா
நன்றி! அனுமதிச்சதுக்கு.

அது சரி...."இந்த சர்கோஸெல்லாம்
என்ர கிட்ட வேணாம்!"
எங்க ரங்கமணியாவது பதிவு எழுதுவதாவது? அவருக்கு லெட்டர் எழுதுவது, செக் எழுதுவது இத்தியாதிகளை நாந்தேன் எய்தி கொடுக்கணும். அவாள் வெறும் கையெழுத்து மட்டும் போடுவாராக்கும்!!
அதையும் நானே போட்ட சமயங்களும்
உண்டு. இப்ப என்னாங்குறேள்?
 
அபி அப்பா said://ராமலெஷ்மி! தங்கமணி, ரங்கமணியின் சினிமா உலக காபிரைட் மணிரத்னம்(அக்னிநட்சத்திரத்திலே ஜனகராஜ் வசனம்), பின்னே வலையிலே அதன் முழுகாபிரைட் எங்க குரு "டுபுக்கு" அவர்களுடையது.//

சிந்து பைரவி ஜனகராஜ் போல தலையே வெடித்து விடும் போலிருந்தது. தக்க சமயத்தில் தகவல் தந்து காப்பாற்றியதுக்கு நன்றி அபி அப்பா!
 
அபிஅப்பா உங்கள் தலை வெடிக்காமல்
காப்பாத்திட்டார்! ராமலஷ்மி! அப்பாடா
இப்பத்தான் மூச்சு வந்தது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]