Thursday, May 15, 2008

 

பிரார்த்தனாவுக்கு மட்டுமே போவது என்பதே எங்கள் பிரார்த்தனை!!!

எண்பத்தியாறாம் வருடம் என்று நினைக்கிறேன், என் பிறந்தநாளன்று சின்னக்கா தன் குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்திருந்தாள். மதியம் சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தபோது...மாலை சினிமாவுக்குப் போகலாமா? என்று பேச்சு வந்தது.

உடனே முடிவு செய்து நானும் குழந்தகளுடன் நால்வரும் உதயம் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனேம். இது தெரிந்து பெரியக்கா,'என்னை விட்டுவிட்டு போகலாமா?'என்க...சேரியென்று அடுத்த வருட பிறந்தநாளில் அக்கா, அத்தான், சின்னக்கா, அவள் குழந்தைகள், நாங்கள்
நால்வர்...ஆம் ரங்கமணியும்தான். சினிமாவுக்குப்போனோம்.

இப்படியாகத்தானே வருடாவருடம் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. என் வீட்டு கெட்டுகெதருக்கு வழக்கமாய் வரும் அண்ணன் பிள்ளைகள் அத்தான் பிள்ளைகள் என்று ஒரு
பதினைந்து பதினாறு பேர்கள் சேர்ந்தது.

ஒரு வருடம் பரங்கிமலை ஜோதி தியேட்டருக்கு போனதுதான் மறக்க முடியாத நிகழ்வு!'கிழக்குவாசல்' படம் ஓடிக்கொண்டிருந்தது.

தியேட்டருக்கு சீக்கிரமே போய் பன்னிரெண்டு டிக்கெட் வாங்கினோம். அக்கா அத்தான் தவிர
மற்றவர்கள் வந்துவிட்டார்கள். ஜோதி தியேட்டரில் ரிசர்வேஷன் எல்லாம் கிடையாது.
பஸ்ட் கம் பஸ்ட் பேஸிஸ்தான். நாங்கள் உள்ளே போய் இடம் பிடித்தோம். மூன்று பேர்
வெளியில் காத்திருந்தார்கள். நாங்கள் நடுவில் ஐந்து சீட் விட்டு இருபுறமும் அமர்ந்து கொண்டோம். கூட்டம் சேர ஆரம்பித்தது. காலி ஐந்து சீட்டுகளை குறிவைத்து வந்தவர்களை
'ஆட்கள் வருகிறார்கள்' என்றதும் சமத்தாக விலகிச் சென்றார்கள். நேரம் ஆக ஆக அவர்கள்
பொறுமை சிட்டாய் பறந்தது. பேட்டை தாதாக்கள் மாதிரி இருந்த தாதிகள் இருவர்,'எவ்ளோ
நேரம் இத்தையே சொல்லீட்ருப்பே! எருமைமாடு மாதிரி மறிச்சுக்கிட்டு!' என்று எங்களை
நெட்டித்தள்ளி விட்டு காலி இருக்கைகளில் பந்தாவாக அமர்ந்தனர்.

நாங்கள் எல்லோரும் அடிச்சுபுரண்டு வெளியே வந்து டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு, இந்த வித்தியாசமான அனுபவத்தையும்
ரசித்து சிரித்து மகிழ்ந்தோம். அதன் பிறகு அக்காவும் அத்தானும் வந்து சேர்ந்தது தனிக் கதை.இதன் பிறகு சென்னைக்கு ட்ரைவ்-இன்-ரெஸ்டொரண்ட் மாதிரி 'பிரார்த்தனா' என்ற பேரோடு ட்ரைவ்-இன்-தியேட்டர் வந்தது.நாங்கள் இருந்த ஆதம்பாக்கம் எங்கே பிரார்த்தனா இருந்த
ஈஞ்சம்பாக்கம் எங்கே! ஆனாலும் எங்கள் பியட் காரில் நாங்க நால்வரும் போனோம். படம்
'மாநகரகாவல்'. 10 ரூபாய் டிக்கெட், 5ரூபாய் ராம்ப் சார்ஜ்! அப்போது. சொய்ய்ய்ய்ய்ய் என்று
காரை ராம்ப்பில் ஏற்றி காருக்குள்ளேயிருந்து படம் பார்த்தோம். காருக்கு அருகில் உள்ள போஸ்டில் சங்கிலி போட்டு மாட்டியிருந்த ஸ்பீக்கரை எடுத்து கதவு கண்ணாடியை சிறிது ஏற்றி
அதில் சொருகிக்கொண்டு அந்த வித்தியாசமான அனுபவத்தை ரசித்தோம்.

ஆரம்பத்தில் மக்கள்ஸ் ரொம்ப சமத்தாக காரினுள்ளிருந்து படம் பார்த்தவர்கள். பிறகு மடக்கும் நாற்காலிகளைக் கொண்டுவந்து வெளியே போட்டு படம் பார்க்கவாரம்பித்தார்கள்.
அதன் பின் தரைடிக்கெட் வாங்கினாற்போல் கீழே அமர்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக
குஷன்கள் வந்தன...பெட்ஷீட்கள், பாய்கள், தலையணைகள் என்று ஒவ்வொன்றாக வந்தன.
ட்ராயிங்ரூம் போல் ஆரம்பித்து பின் பெட்ரூம் போல் சிறிய மெத்தை தலயணைகள் என்று இப்போதெல்லாம் ராம்ப்பில் காரை ஏற்றியவுடன் இண்டீரியர் டிசைனர்களைப் போல்
பக்கா ட்ராயிங் ரூம் போல் அமைத்து செட்டிலாகிவிடுகிறார்கள்.

நாங்களும் விதிவிலக்கா என்ன? பிரார்த்தனாவுக்காகவே தனியாக 8'x6' அளவில் ஸ்பாஞ், டபுள்
பெட்ஷீட் மற்றும் குஷன்கள் பில்லோக்கள் என்று டிக்கியில் ஏறிவிடும்.காற்றாட பீச் காத்தை வாங்கிக் கொண்டு இஷ்டம் போல் உக்காந்துகொண்டு, படுத்துக் கொண்டு, சாய்ந்துகொண்டு
பார்க்கும் சுகத்துக்காகவே எல்லோருக்கும் பிடித்துப் போனது

ஆரம்பத்தில் சங்கிலியோடு கூடிய ஸ்பீக்கர்களை மக்கள்ஸ் படம் முடிந்து கிளம்பும் அவசரத்தில்
திரும்ப அதனிடத்தில் சொருகாமல் அப்படியே வண்டியை கிளப்பிக்கொண்டு போனதால்
இப்போது ஸ்பீக்கரை போஸ்டில் பிக்ஸ் பண்ணிவிட்டார்கள். (இதுதான் இந்தியா!)

தியேட்டருக்குள்ளேயே காண்டீனும் வந்தது. விலையை கேட்டால் பசி பறந்து போவிடும்.
வீட்டிலேயே சாப்பாடும் தயார் செய்து கொண்டு வந்து இடைவேளையில் டைனிங் ரூமாகவும் மாறி விடும் அதிசயமும் நடக்கும். விதவிதமான உணவுகளின் கதம்ப மணம் காற்றிலே பரவி கம்மென்ற வாசம்பசியைதூண்டும்.

இந்த செட்டப்களுக்காகவே எங்க ரங்கமணிக்கு பிரார்த்தனா ரொம்ப பிடிச்சுப்போச்சு. சாதாரணமாக சினிமாவுக்கு என்றாலே வர மனசிலாதவர், 'பிரார்த்தனா' போலாமா? என்றவுடன் ரெடி என்று கிளம்பிவிடுவார். என்ன படம் ஓடினாலும் பரவாயில்லை. 'நான் படம் பார்க்கவா
வருகிறேன்! அந்த அட்மாஸ்பியர் நல்லாருக்கு அதுனால்தான் என்பார்.அதிலிருந்து சினிமா என்றால் பிரார்த்தனாவுக்குத்தான்!!!ஊரிலிருந்து விருந்தினர் வந்தாலும் அவர்களையும் அழைத்துப் போவோம்.

ஆகவே ஜோதி தியேட்டர் அனுபவத்துக்குப் பிறகு என் பிறந்தநாளுக்கு எல்லோரையும்
அழைத்துக் கொண்டு பிரார்த்தனா போக ஆரம்பித்தோம். அதே 12 டிக்கெட்!!
நான் மொத்தமாக இட்லி, ரயில் சட்னி ஏதாவது ஸ்வீட் தயார் செய்து கொள்வேன்.
சின்னக்கா சப்பாத்தி குருமா கொண்டுவருவாள். மற்றவர்கள் ஏதாவது கொறிக்ஸ் வாங்கி வருவார்கள். சில சமயங்களில் கூட்டாஞ்சோறு, தயிர் சாதம், பழங்கறி, மாம்பழமும் உண்டு. ரெண்டு கார்களில் குஷாலாக கிளம்பி...எங்கள் பேவரைட் இடமான முதல் வரிசையில் நடுவில் அதாவது ஸ்க்ரீனுக்கு நேரே காரை பார்க் செய்து காருக்கு முன்னால்
ட்ராயிங் ரூம் அமைத்து சுகமாக செட்டிலாவோம்.

இடைவேளையில் மணக்க மணக்க இட்லி ரயில்சட்னி சப்பாத்திகுருமா என்று ஒரு கட்டுகட்டிவிட்டு மீது படமும் பார்த்துவிட்டு ஜாலியாக வீடு திரும்புவோம்.ஒரு நாலைந்து வருடங்கள் இப்படி ஓடியது.

காலம் ஓடஓட கிளிகள் ஒவ்வொன்றாக வேறிடம் தேடிப் பறந்தன. பிரார்த்தனாவுக்கு நாங்கள் மட்டுமே போகிறோம். இன்னொரு முக்கிய காரணமும் உண்டு....இப்போது டிக்கெட் ஒன்று
100 ரூபாய்!! பார்கிங் 30 ரூபாய்!!தாங்காதும்மா...தாங்காது!!!!

Labels:


Comments:
திருவான்மியூரில் வசித்ததால் நமக்கு இந்த அனுபவம் அடிக்கடி கிட்டியது! :))
 
Effect from may 1st 2008 no more out side food is allowed in Prarthana...
 
உங்கள் அடுத்த பிறந்தநாள் என்றைக்கு?
நான் சென்னை வருகிறேன்.
பிரார்த்தனாவில் பார்க்கலாமா?
சகாதேவன்
 
சுவையான அனுபவங்கள் இல்லையா கொத்ஸ்?
 
ssp!!
ஹையோ!!வெச்சுட்டாங்களே எனக்கு ஆப்பு!!
முதல் வருகைக்கு வணக்கம் எஸெஸ்பி!
 
கடைசி வரிகளைப் படிக்கலையா சகா!!
இருந்தாலும் உங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்கிறேன். வாங்க வரும் ஆகஸ்டில்.
 
இந்த ப்ரார்த்தனா அனுபவம் எனக்கும் கிட்டியது, நானும் என் தங்கையும் குழந்தைகளுடன் என் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்த போது!

யாருக்கு இப்போ யாரு வைக்கிறா ஆப்பு? ஆகஸ்டிலே ஏன் வரச் சொல்றாங்க அம்மணின்னு புரியுதா சகா?
 
பிரார்த்தனா எனக்கு வெச்ச ஆப்பைத்தான் சொன்னேன். ஆனாலும்சகா ஆகஸ்டில் வந்து எனக்கு
பிரார்த்தனாவில் பர்த்டே ட்ரீட் தருவார், அப்படித்தானே ரா.லஷ்மி?
நீங்களும் ஜாயின் பண்ணிக்கலாம். சேரியா?
 
கண்டிப்பாக வருகிறேன்!
 
ஓ அப்படி ஒண்ணு இருக்கா? அதனால் என்ன.
செய்துவிடலாம்.
சகா
 
ஓஓஓகே ராமலஷ்மி!
 
அப்டீன்னா சேரி! சகா!
 
அட, இப்படி ஒரு தியேட்டர் சென்னையிலே இருக்குன்னே இப்போத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். ஈஞ்சம்பாக்கம்??? அது எங்கேனு தெரியலை? பேர் மட்டும் கேட்டிருக்கேன். கிழக்குக் கடற்கரையா?
ரொம்ப நாள் ஆச்சு, எல்லார் ப்ளாகுக்கும் வந்து. இன்னிக்கு வந்து பார்க்கலாம்னு பார்த்தா, புது விஷயம்!
 
ஆகா! ஆகஸ்டில் சென்னை வர இப்பவே ticket book பண்ணிடறேன்!
 
கீதாம்மா!
ரொம்ப நாளாச்சு, சந்திச்சு!!
அம்பத்தூரைவிட்டு வெளியே வாங்க.
அப்பத்தானே தெரியும். பிரார்த்தனா, கிழக்குக் கடற்கரை சாலையில் நீலாங்கரை தாண்டி இருக்குது. கட்டாயம் சென்று வாருங்கள்.அம்பத்தூரிலிருந்து நீங்க 4-மணிக்கே கிளம்பணும். வந்து ஒரு பதிவு போடுங்க. சேரியா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]