Wednesday, May 7, 2008

 

அண்டபஜாரு நாங்க ரொம்...ப உஷாரு!!

அட்ஷயதிருதியையும் அதுவுமாக ஏழெட்டு வருஷம் முன்னால் தங்கத்தாகமெடுத்து 'பொன்மகள் வருவாள் பொருள் கோடி தருவாள்' என்று தங்கப் புதையல் எடுக்க ஆழமாக குழிதோண்டியவர்கள் எல்லாம் இன்று தாங்கள் கோண்டிய குழியிலேயே விழுந்து மேலேறி வரத்தெரியாமல் தவிக்கிறார்கள்.

இரண்டு நாட்களாக தொலைக்காட்சி செய்தியிலும் செய்தித்தாள்களிலும் தகதகக்கிறது!!!!!

இதைப் படித்ததும் நான் பாடிய பாடல்தான் இப்பதிவின் தலைப்பு.

ஆமாம்!! 2002-ல் என் மகள் திருமண உறுதி விழாவுக்கு சொந்தபந்தங்கள் அனைவரும் வந்திருந்தார்கள். விழா முடிந்து மறுநாள் எல்லோரும் ஓய்வாக பேசிக்கொண்டிருந்த போது
என் சகோதரி இந்த 'கோல்ட்கொஸ்ட்' பற்றி விளக்கமாக பேசினாள். தான் அதில் சேர்ந்திருப்பதாகவும் அதன் மூலம் கிடைக்கப்போகும் லாபங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாள்.

எல்லோர் கண்களும் விரிந்தன. முதலில் மூவாயிரம் கட்டி சேரவேண்டும். சேரும் ஒவ்வொருவரும் இரண்டு பேர்களை இதில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்த்து அவர்கள் பணம் கட்டியவுடன் சேர்த்துவிட்ட நமக்கு நாம் முதலில் கட்டிய மூவாயிரம் மதிப்புக்கு.....ஒரு லிஸ்ட் தருவார்கள் அதில் நாம் தேர்வு செய்த பொருள்...உதாரணமாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ், கண்ணாடி மூடியுடன் கூடிய சமையல் பாத்திரங்கள், சூட்கேஸ்...இப்படி நீளும், நமக்கு
நம்மை சேர்த்துவிட்டவர் மூலம் வந்து சேரும்.

இதன் பிறகு ஒருவர் ஒருவராக சேரச்சேர சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலிருப்பவர்க்கும்
கமிஷன் வந்து கொண்டேயிருக்கும்....எப்பவுமே!!! கேட்கவே காதில் தங்கத்தை உருக்கி
ஊற்றினாற்போலில்லை?

அன்று ரங்கமணிகளைவிட தங்கமணிகளே அதிகமிருந்தனர். தங்கள் சொல் அம்பலமும் இம்பலமும்
ஏறாது என்று அமைதிகாத்தனர். குறிப்பாக எங்க வீட்டு ரங்கமணி இம்மாதிரி விஷயங்களில்
படு உஷார் பேர்வழி. இது போல் வந்து 'சார்! நீங்கள் இப்படி செய்தால் இது கிடைக்கும்
அப்படி வந்தால் அது கிடைக்கும்.' என்று நம் தலையை தடவுகிறவர்களை இவர் கேட்கும் கேள்விகள் அவர்களை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓஓஒடச் செய்துவிடும்.

ஆனால் இங்கு சொல்வது மச்சினிச்சியாயிற்றே!! மூவாயிரம்தானே சேர்ந்துகொள் என்று அனுமதியளித்தார். என்னைப்போல் சொந்தத்திலிருந்து இன்னும் மூன்று பேர் சேர்ந்தார்கள்.
சொன்னபடி எல்லோருக்கும் அவரவர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டாள்.
அத்தோடு அவள் கடமை முடிந்தது. இனி அச்சங்கிலி அறுந்து விடாமல் கோத்துக்கொண்டே
போகவேண்டியது சேருபவர்கள் கடமைதானே.

இது முடிந்ததும் ஒரு பதினேழாயிரம் ரூபாய் கட்டினால் தங்கக்காசு கிடைக்கும் என்றும்
சொன்னாள். அது மட்டுமல்ல தான் கட்டி கிடைத்த தங்கக்க்சையும் காட்டினாள்.

இந்த இடத்தில்தான் நாங்கள் கொஞ்சம் உஷாராகி இதுவரை போதும் என்று ஆட்டையை
முடித்துக்கொண்டோம்.

இதற்கிடையில் இரண்டு இடங்களுக்கு 'கோல்ட்கொஸ்ட்' மீட்டிங்குகளுக்கும் போனோம்!
ஹப்பா! ஹப்பப்பா! அதில் பேசியவர் சொன்ன விபரங்களைக் கேட்டால்....'தான் இதில் சேர்ந்து
அதனால் தனக்கு கிடைத்த லாபங்கள், சௌகர்யங்கள், சந்தோஷங்கள் பற்றி அளந்த விதம்..
கை நிறைய சம்பளம் கிடைத்த வேலையைக்கூட விட்டுவிட்டு முழுநேர வேலையாக இதிலேயே
மூழ்கி முத்தெடுத்த....ஹூஹும் தங்கப் புதையலெடுத்த விதத்தை கதைகதையாக கதைத்தார்.
மாதம் ஏழு லட்சம் கிடைப்பதாகவும் பென்ஸ் கார் வைத்திருப்பதாகவும் அளந்தார்..அது உண்மையாகவும் இருக்கலாம். காரணம் முதலில் நிறையவிட்டால்தானே கடைசியில் நி..........றையஅள்ளமுடியும்.

முதலில் சேர்ந்தவகள் லாபமடைந்திருக்கலாம். இப்போது கதறுபவர்கள் எல்லோரு இறுதியில்
சேர்ந்தவகளாயிருக்கலாம்.

எது எப்படியோ கீழ்தட்டு மக்களிலிருந்து மேல்தட்டு மக்கள் வரை சுலபமாக பணம் பார்க்க
ஆசை படுபவர்கள் இருக்கும்வரை இந்தச் சங்கிலி நீஈஈஈஈண்டு கொண்டேதானிருக்கும்!

Labels:


Comments:
//எது எப்படியோ கீழ்தட்டு மக்களிலிருந்து மேல்தட்டு மக்கள் வரை சுலபமாக பணம் பார்க்க
ஆசை படுபவர்கள் இருக்கும்வரை இந்தச் சங்கிலி நீஈஈஈஈண்டு கொண்டேதானிருக்கும்!//

கரெக்ட்டா சொன்னீங்க!!!
 
வாங்க பிரேம்ஜி!
சுலபமாய் ஏதாவது கிடைக்குதுன்னால்
எங்கோ இடிக்கும்...கவனி என்பார் எங்க வீட்டு ரங்கமணி.
அது சரியாத்தானே இருக்குது.
 
இது போல் இங்கு அமெரிக்காவில் சுமார் 15-20 வருடங்களுக்கு முன் டாப்பில் இருந்தது ஆம்வே என்ற நிறுவனம். இதே அணுகுமுறை, இதே பாணி - ஆனால் இது மாதிரி தங்கக் காசு, வைரக்கல் எல்லாம் கிடையாது. செயல்முறை விளக்கத்தில் இவை எல்லாம் சூப்பராக இருக்கும். நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதுதான் பிரச்சனை. Extreme sales skills உள்ள 1000ல் சில பேருக்கு இது ஒர்க் அவுட் ஆகலாம் - ஆனால் எல்லாருக்கும் அல்ல. AMWAY Indiaவுக்கும் வந்ததாகக் கேள்வி - இப்போ ஆம்வே ஃஇலைமை என்ன என்று தெரியலை.....

உழைக்காமல் பணம் சம்பாதிக்கலாம் என்றாலே எங்கோ இடிக்கிறது !

--- RL
 
ஜவுளிக் கடைகளுக்கு ஒரு ஆடிக் கழிவு விற்பனை போல நகைக்கடைகளுக்கு அக்ஷ்யதிருதியை. வேறு என்ன சொல்ல.

சகாதேவன்
 
நல்லவேளை,இதில் எல்லாம் அவ்வளவு ஆசை இல்லை, அப்புறம் "ஆம்வே" இன்னும் பிசியாத் தான் இருக்கு அமெரிக்காவில் மட்டுமில்லை, இந்தியாவிலும், தொலைக்காட்சி விளம்பரம் கூட இப்போ வருது, பத்திரிகைகளிலும் வருகின்றன.
 
உழைக்காமல், தவறான வழியில் வரும் பணம் நமக்கு ஒட்டாது. இது எங்க ரங்கமணி அடிக்கடி சொல்லும் பொன்மொழி!!ஆர்.எல்.!!
 
அதாவது பரவாயில்லை, சகா!
நாம் நமது சொந்தப்பணத்தில் நகையாக
வாங்குகிறோம். அதுவும் 'கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடிஞ்சுக்கிறா' மாதிரி கையில் புழக்கம் உள்ளவர்கள்
செய்கிறார்கள்.(எனக்கு கூந்தல் ரொம்பக் கம்மி..அள்ளவும் முடியாது முடியவும் முடியாது) அது ஒரு சேமிப்பு மாதிரி போய்விடுகிறது.
 
ஆம்வே பொருட்களை வாங்கலாம் ஆனால் அதில் சேரக்கூடாது. மக்களுக்கு அவர்கள் பணம் விட்டி குறைவாக இருந்தாலும் பத்திரமாக இருக்குமிடம் தெரிந்தாலும் பேராசையால் பரிதவிக்கிறார்கள்.
 
அண்ட பஜாரு! அருகே அண்ட விட்டா பெரும் பேஜாரு!

பெங்களூரிலும் ஒரு நிறுவனம் சங்கலியில் அப்பாவிகளைக் கட்டி இழுத்துக் கொண்டிருக்கு. என் வீட்டில் வேலை செய்யும் 3 பெண்மணிகளில் ஒருத்தி இதில் ஜரூர் மெம்பர். நம் போன்றவர்களிடம் ஜம்பம் பலிக்காதென அவள் குறி வைத்தது எம் அடுக்குமாடிக் குடியிருப்பின் சக வேலைக்கார நபர்களை! 5 ஆயிரம் முதலில் கட்ட வேண்டும்.. 20,30 ஆயிரம் பெறுமானமுள்ள சாமான்களிலிருத்து எதையாவது தவணை முறையில் பெற வேண்டும். 2 பேரை சேர்த்தும் விட்டால் "ச்செக் வந்துக்கினே...இருக்கும் வாழ்நாள் பூரா"(அந்த பெண் ராகம் போட்டு ஆசை காட்டுவது இப்படித்தான்). 20,30-க்கு எங்கே போவார்கள்? அதற்கும் வழி சொல்கிறார்கள். "சாமானே வாங்காதே..5-ஐ மறந்து விடு.இன்னும் 2 பேரை மாட்டி விடு..ச்செக் வந்துக்கினே....."அவளிடமிருத்து என் வீட்டில் வேலை செய்யும் மற்ற இருவரைக் காப்பாற்றி விட்டேன். ஆனால் அபார்ட்மெண்ட் வாசலுக்கு ஸ்பெஷல் பஸ் வரவழைத்து ஆட்களை அள்ளிப் போட்டு நீங்கள் குறிப்பிட்டாற் போன்ற மீட்டிங்கு கூட்டிச் சென்றதில், பாதி மயங்கி வலையில் விழுந்ததாகவும், மீதி தயங்கியதால் தலை தப்பித்ததாகவும் கேள்வி!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]