Tuesday, April 22, 2008

 

போகுமிடம் வெகுதூரமில்லை நீ போவாய்


நாவிகேட்டர் எனப்படும் சாலை வழிகாட்டி. யூஎஸ்ஸில் எல்லாம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப்போக, போகும் போது ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டே போகலாம் என்றெல்லாம் போக முடியாது. சாட்டலைட் மூலம்
நம் வீட்டிலிருந்து ஓர் இடத்துக்குப் போகவேண்டுமென்றால் முதலில் போகுமிடம், சேருமிடம் இரண்டையும் கம்ப்யூட்டரில் அந்த சைட்டுக்குப்போய் கொடுத்து ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நாவிகேட்டர் இல்லாத கார்களுக்கு.

நாவிகேட்டர் உள்ள காரில் இந்த இரண்டு இடங்களையும் பதிவு செய்துவிட்டால்..அது வழிகாட்டும் அழகே அழகு! '500 அடியில் வலது புறம் திரும்பு, 700 அடியில் இடது புறம் திரும்பு, இந்த லேன் எடு அந்த எக்ஸிட்...இந்த எக்ஸிட் எடு என்று மேப்பில் வழியும் காட்டி
வழியும் சொல்லிக்கொண்டே வரும்.

மேலும் கீழும் உள்ள படங்கள் சிகாகோ வீட்டனிலிருந்து டவுண்டவுன் செல்லும் பாதை..நாம் இருக்குமிடத்தையும் அம்புக்குறியிட்டுக் காட்டிக் கொண்டே வரும்.

இந்த அழகை என் காம்கார்டரில் படமெடுக்க ஆசைப்பட்ட போது ரங்கமணியின் சகோதரர் என்னை தன்னோட பென்ஸ் காரில் அழைத்துச் சென்றார். வீட்டிலிருந்த்து சிறிது தூரம் போய்
திரும்பி, நாவிகேட்டரில் வீட்டு முகவரியை பதிவு செய்தார். போகும் வழியை சரியாகச் சொல்லிக்கொண்டே வந்து, வீடு இருக்கும் சாலையில் திரும்பியதும் 'இன்னும் 100 அடியில் வீடு வந்துவிடும் என்று சொல்லி காராஜ் அருகில் வந்ததும் வலது புறம் திரும்பு என்றும் சொல்லி,
முடிவில், 'YOU HAVE REACHED YOUR DESTINSTION!' என்று ஒரு முத்தய்ப்பும் வைத்தது.

சாட்டலைட் தகவல்கள் எவ்வளவு கூர்மையாயிருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம்:

நான், ரங்கமணி, அவரது சகோதரர்(அவர்தான் எங்களை அழைத்துச் சென்றது) மூவரும்
நியூயார்க் சென்று சுதந்திரதேவி சிலை பார்க்க திட்டமிட்டோம். குறிப்பிட்ட தினத்தில் சிகாகோவிலிருந்து விமானம் பிடித்து நெவாக் ஏர்போர்ட் போய்சேர்ந்தோம். சகோதரர்
முன்பே ரெண்டல் கார் வித் நாவிகேட்டர் புக் செய்திருந்தார். கீழே இறங்கி ரெண்டல் கார்
கவுண்டரில் கார் சாவியை வாங்கிக்கொண்டு அங்கிருந்த போர்டில் அவர் பெயர் போட்டு கார்
எந்த பார்ங்கிங்கில் நிற்கிறது என்று அறிவித்திருந்தது. அருமையான ஏற்பாடு.

கீழே பேஸ்மெண்டில் வந்து காரை எடுத்துக்கொண்டு நேரே லிபர்டி ஸ்டாச்சு பார்க்கப்போனோம். அடுத்து நியூயார்க் வீதிகளில் உலா வந்தோம் அன்று எனக்கு அறுபதாவது பிறந்தநாள்!...ஊரிலிருந்திருந்தால் சகோதரிகளோடு கொண்டாடியிருப்பேன். நியூயார்க் நகர நட்ட நடுவீதிகளில் லோலோ என்று அலைந்து திரிந்து வித்தியாசமாய் கொண்டாடினேன். அன்று எங்களோடு
ரங்கமணியின் சகோதரர் மட்டுமே இருந்ததால் இரவு டின்னர் அவருக்கு நாங்கள் கொடுத்து
செலபெரேட்டினோம்!!!

இரவு மாரியாட் ஹோட்டலில் தங்கி விட்டு காலையில் கிளம்பினோம். அங்கு பார்கிங் பெரிய ப்ராப்ளம்...எங்கோ பார்க் செய்துவிட்டு எங்கோ போகவேண்டும் என்பதால் சகோதரர் எங்களிடம், 'ஒவ்வொரு இடத்திலும் உங்களை இறக்கிவிட்டுவிட்டு காரில் நான் ஒரு பெரிய ரவுண்ட் அடித்து மறுபடி உங்களை இறக்கிவிட்ட இடத்துக்கே வருகிறேன்...அதற்கே அரைமணி, முக்கால் மணியாகும் அதற்குள் அவ்விடத்தி சுற்றிப் பார்த்துவிடுங்கள்.' என்று சொல்லி எம்பயர் ஸ்டேட் பில்டிங், வால்ஸ்டிரீட், யூஎன் பில்டிங் போன்ற பார்க்கவேண்டிய இடங்களிலெல்லாம் எல்லாம் இறக்கிவிட்டு, மறுபடி வந்து ஏற்றிக்கொண்டு சுற்றிகாட்டிய அவரது பெருந்தன்மையும்
பொறுமையும் குறிப்பிடத்தக்க ஒன்று. நாங்களும் எல்லா இடங்களையும் இந்த அளவாவது
பார்க்கக் கிடைத்ததே என்று ஜஸ்ட் பார்த்துவிட்டு காரில் ஏறி ஏர்போர்ட் போக
நாவிகேட்டரில் செட் செய்துவிட்டு புறப்பட்டோம். சிகாகோவிலிருந்து கிளம்பு முன் அனைத்து ரூட்டுக்கும் மேப்பும் பிரிண்ட்டவுடும் வைத்திருந்தோம்.

வழியில் ஓரிடத்தில், மேப் அடுத்த வலது புறம் திரும்ப வேண்டுமென குறித்திருந்தது.
ஆனால் நாவிகேட்டரோ அதற்கு அடுத்த வலதுபுறம் திரும்பு என்றது. நாங்கள் சிறிது குழம்பி
மேப் காட்டியபடி முதல் வலதில் திரும்பி சிறிது தூரம் சென்றிருப்போம்...அங்கே ரோடு
ரிப்பேர் வேலை நடந்து கொண்டிருந்தது. போலீஸ் எங்களை அடுத்த வலது எடுத்து போகும்படி
சொன்னார்கள். இனி திரும்ப முடியாது என்பதால் ஒரு பெரிய ரவுண்ட் எடுத்து மறுபடி அதே சாலைக்கு வந்து 'மரியாதையாக' நாவிகேட்டர் சொன்ன வலது எடுத்து ஏர்போர்ட்
சென்றடைந்தோம்.

மேப் இரண்டு நாட்கள் முந்தி எடுத்தது. ஆனால் சாட்டலைட் மூலம் வழிகாட்டும் நாவிகேட்டர்
அந்த நிமிஷத்து மாற்றங்களையும் உடனுக்குடன் தெள்ளத்தெளிவாக காட்டிவிடும்.
ரங்கமணியின் சகோதரிடம், 'இனி நாவிகேட்டரையே நம்புங்கள்!' என்று சொல்லி சிரித்துக்கொண்டே ஊர் வந்து சேர்ந்தோம்.

Labels:


Comments:
அருமை..

GPŠ இருந்தும் வழி மாறிய அனுபவம் பல உண்டு, என்ன ஒரு exit சேர்த்து 10 மைல் சுத்தி வந்துசேருவோம்.

:)
 
ஆஹா...அறுபதுக்கு அறுபதை (பெரிய) ஆப்பிளில் கொண்டாடிட்டீங்க.

வாழ்த்து(க்)கள்.

நியூயார்க்லே எனக்கு ரொம்பப் பிடிச்சமான விஷயம் நல்லா க்ரிட் போட்டு இருக்கும் தெருக்கள்தான்.
எல்லாத் தெருக்களுக்கும் எண்கள்தான். கண்டபடி அரசியல்வாதிகள் பேரை வைக்கலை.அப்புறம் புதுக் கட்சிவந்துட்டா எல்லா பேரையும் மாத்தும் அவலமும் இல்லை:-)))))

மேப் கையில் வச்சுக்கிட்டே ஊரை வலம் வந்துறலாம்.

பின்குறிப்பு:

பேராண்டி பதிவுக்கு நான் போட்ட பிழை திருத்தப் பின்னூட்டம் கிடைக்கலையா?
 
இளா!
ஆமாம்! ஒரு எக்ஸிட்டை விட்டுட்டால், நம்மூர் போல் யூ ட்ர்ன் எடுக்க முடியாது. நல்ல நல்ல அனுபவங்கள்!
 
சரியாகச்சொன்னீர்கள், துள்சி!!
நீங்கள் அனுப்பிய படிதான் வந்தது. பிழைதிருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதுதான் மதி!!
பிள்ளைகளோடு லூட்டி அடிப்பது ரொம்பப் பிடிக்கும். சமயத்தில் உடம்புதான் ஒத்துழைக்காது. ஓடிஓடி அவனை பிடிக்கமுடியாது.
 
சகோதரி நானானி,

இலண்டனில் இக்கருவியை பயன் படுத்திச் சுற்றி வந்து மகிழ்ந்தது நினைவில் மலரும் நினைவுகளாக அசை போட வைக்கிறது.

தனி மடலில் தங்களின் தனிமடல் முகவரி கொடுக்க இயலுமா ?

cheenakay@gmail.com
 
விதவித மான வாசனையோடு கொசுவத்தி ஏத்திட்டேனோ?
 
இந்த ஜிபிஎஸ் புண்ணியத்தில் நாங்கள் ஃபீனிக்ஸிலிருந்து க்ராண்ட் கான்யான் வரை போனோம். ஒரு குட்டித் தப்பு கூட செய்யலை.
என்ன க்விஸ்னோஸ் சான்விச் கடைக்கு ரெண்டு தெரு அலைய வச்சிடுச்சி:)
அறுபதுக்கு வாழ்த்துகள் நானானி.
இன்னும்ம் ஆயிரம் பதிவுகள் ஆரோக்கியத்துடன் இருந்து பதிய வாழ்த்துகள்.
 
GPS எந்த தப்பும் செய்யாது காரணம் அது சாட்டலைடிலிருந்து தகவல்களை சேகரிக்கிறது. நாம்தான் அதை தவறாக புரிந்து கொண்டு சில சமயம் சொதப்பிவிடுகிறோம்.
இல்லையா வல்லி?
 
முட்டை சம்பால் பதிவில் உங்கள் பின்னூட்டம்

//ரொம்ப நல்லாருக்கு//

படித்தே கண்டு பிடிசிடாங்க... பார்த்துகோங்க பேரன் முட்டையை வைத்து புட்பால் விளையாண்டுட போகிறார்.
 
See Please Here
 
தலைப்பு தான் எனக்கு
ரொம்ப பிடித்திருக்கிறது.
சகாதேவன்
 
ஓஹோ....ஓகே! ஆனால் உங்க காரில்
இந்த GPS மாட்டிக்கொடுத்தால் வேண்டா
மென்பீர்களா? சகா?
அதுசரி..நம்மூரில்தான் அதுக்கான வசதிகள்
இல்லையே!!
 
'பிரமாதமான தலைப்பு' என சகாவைப் போலவே எனக்கும் தோன்றியது. எப்போதும் பொருத்தமானப் பாடல் வரிகளைத் தலைப்பாக தருவதில் கில்லாடியான நீங்கள் ஒரு முறை, ஒரே ஒரு முறை என்னிடம் "சிறைச் சாலை என்ன செய்யும் எதுவும் செய்யாது..செய்யவும் முடியாது.." என்ற பாடல் வரிகளைத் தப்பாகத் தலைப்பிட்டு மாட்டிக் கொண்டீர்கள். என்ன திகைக்கிறீர்களா?
 
"என்னைத் தெரியுதா...? உங்க பதிவைப் பார்த்து கருத்து கூறும் ரசிகை... என்னைத் தெரியுதா...? ஆகா ரசிகை! நல்ல ரசிகை! ஆர்தி(RT)யாக வந்த ரசிகை! என்னைத் தெரியுதா...?"
 
உங்கள் வலைப் பூ மலர்ந்த புதிதில் "கூட்டாஞ்சோறு" பதிவைப் பார்த்து விட்டு "அட நம்ம ஊரு special-லுடன் நம்ம ஊரு அத்தையம்மா!" எனக் குதித்து வந்து பின்னூட்டமிட்ட, உங்கள் அன்னை பெயர் கொண்டேன் என உங்களால் பாசம் காட்டப் பட்ட, Ramalakshmi,Tirunelveli-யேதான். உங்களுக்கு வாக்களித்த படி என் வலைப்பூவை முத்துச்சரமாகக் கோர்த்தளிக்கிறேன்.
 
வாங்க..வாங்க..ஆர்தியம்மா!
நாந்தே அப்பவே ஒத்துக்கிடேனே!
மறுபடி ஏ..யாவப்படுத்துரவோ!
 
ஆர்தி!
ஆனைக்கும் அடி சறுக்குமல்லோ?
நானானி எம்மட்டு?
 
அட சத்தியமா நீங்க அடி சறுக்கிய கதையை இழுக்க "என்ன திகைக்கிறீகளா?" எனக் கேட்கவில்லை.

"என்னைத் தெரியுதா...? உங்க பதிவைப் பார்த்து கருத்து கூறும் ரசிகை... என்னைத் தெரியுதா...? ஆகா ரசிகை! நல்ல ரசிகை! ஆர்தி(RT)யாக வந்த ரசிகை! என்னைத் தெரியுதா...?" என்று நான் அடுத்து அனுப்பிய பின்னூட்டம் விட்டுப் போயிருக்கிறது.[ இனி ஒரே பின்னூட்டமாக அனுப்புவதே சரி!]

என்னைச் சரியாகவே யூகித்து விட்டீர்கள்.நன்றி!
உங்கள் வலைப் பூ மலர்ந்த புதிதில் "கூட்டாஞ்சோறு" பதிவைப் பார்த்து விட்டு "ஹை நம்ம ஊர் அத்தையம்மா!" எனக் குதித்து வந்து பின்னூட்டமிட்ட, உங்கள் அன்னை பெயர் கொண்டேன் என உங்களால் பாசம் காட்டப் பட்ட, Ramalakshmi,Tirunelveli-யேதான். உங்களுக்கு வாக்களித்த படி என் வலைப்பூவை முத்துச்சரமாகக் கோர்த்தளிக்கிறேன்.
 
"வாராய் நீ வாராய்
ப்ளாகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்."

என்ன ஆளையே காணும்.
சகாதேவன்
 
அட நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க.... நம்ம வீட்டு ரங்கமணிக்கு இது மாதிரி ஒரு நேவிகேட்டர் வாங்கிக் கொடுத்தோம் - மனுஷர் தினம் தினம் புது இடம் போனால் தொலையுராரேன்னு. அதற்கப்புறமும் அதே தொலைந்து போதல்! காரணம் கேட்டால் 'அது நை நை என்று எஃசிட் எடுப்பதற்கு 2 மைல் முன்னால், 1 மைல் முன்னால், அரை மைல் முன்னால் என்று சொல்லிக் கொண்டே வருகிறதாம், அதனால் எப்போ உண்மையான எஃசிட் என்று தெரியாமல் போகுதாம்!!

அது சரி, வாழைப்பழத்தை தோலுரித்து ஒருவர் வாயில் திணித்தாலும், அதை அவர்தான் மென்று முழுங்க வேண்டும் என்று விட்டு விட்டோம்!!

--- RL
 
பேசாமல் நீங்களே ஒரு நாவிகேட்டராக
பக்கத்தில் ஒக்காந்து கொண்டு 'நை..நை..' என்று போங்கள்..கொஞ்சம் பயமாவது இருக்கும்!!!!!!!!!!!
 
RL, உங்க அனுபவம் ஹா..ஹா..ஹா..!
நானானி கொடுத்த "நை..நை" யோசனையும் நல்லாதானிருக்கு!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]