Tuesday, April 15, 2008

 

கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம்

நாம ஜிகர்தண்டா பாத்தாச்சு, நன்னாரிபால் சுவைக்காமலேயே கேள்விப்பட்டாச்சு.இனி அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம் பத்தி எனக்குத் தெரிந்ததைப்
பார்ப்போமா?
எந்த 'மால்'க்குள் நுழைந்தாலும் கட்டாயம் நம் கண்களில் தென்படுவது 'கோல்ட்ஸ்டோன்'
ஐஸ்கிரீம் பார்லர்கள்.

இங்கே ஐஸ்கிரீம் பார்லர்களில் விதவிதமான கலர்களிலும் ருசிகளிலும் ஐஸ்கிரீம்களும் அதற்கு தொட்டுக்கொள்ள....?! விதவிதமான ஸாஸ்களும் பழவகைகளும் மேலே தூவ வகைவகையான பருப்புகளும் இருக்கும். நம் ஊரில் நாம் கேட்கும் பழங்களை கப்புகளில் வாரிப் போட்டு, விரும்பும் ஐஸ்கிரீமை அதன் மேல் இட்டு, கேட்ட ஸாஸை ஊற்றி, பருப்புகள் தூவி தருவார்கள், அவ்வளவுதான்.

ஆனால் யூஎஸ்ஸில்லோ குறிப்பிட்ட கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம் பார்லடில், பழங்கள், வகைவகையான ஐஸ்கிரீம்கள், ஸாஸ்கள், பருப்புவகைகள்(பாதாம்,பிஸ்தா,முந்திரி,வால்நட், உலர்ந்தபழங்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பார்லரின் ஒரு பக்கத்தில் விதவிதமான காம்பினேஷன்களில் ஒரு மெனு கார்ட் இருக்கும்.
அதை பார்த்து, படித்து(புரிந்தால்), தேர்வு செய்து பணம் செலுத்தி...அதுவும் க்யூவில் நின்று,
பில்லை கவுண்டரில் கொடுத்தவுடன் அங்கிருக்கும் சேல்ஸ் பர்சன்ஸ்...boy,man, girl, woman, old woman என்று வயது வாரியாக நின்று கொண்டிருப்பார்கள்.
அவர்கள் பில்லை வாங்கி படித்து அதிலுள்ள பழங்கள், ஐஸ்கிரீம்கள், நட்ஸ், முதலியவற்றை கப்புகளில் அள்ளித்தராமல், 'cup or waffle/' என்று கேட்கிறார்கள். நாம் சொன்னவுடன்
கப் அல்லது வாஃபலில் தருமுன்...அவர்கள் எதிரில் இருக்கும் மார்பிள் ஸ்லாபில் பழங்கள், ஐஸ்கிரீம்,நட்ஸ்களை கொட்டி இரண்டு உலோக கரண்டிகளைக்கொண்டு கொத்துபரோட்டாவுக்கு
கொத்துவதுபோல் 'டண்டனக்கடி டண்டனக்கடி..' என்று கொத்துகொத்து என்று கொத்தி
வாரி விரும்பிய பேஸிலிட்டு ஸாஸ் ஊற்றி தாரும் விதம் இருக்கிறதே!!! பார்த்துக்கொண்டே
இருக்கலாம்.

அந்த மார்பிள் ஸ்லாபும் கரண்டிகளும். பார்க்கும் போதே காதில் 'டண்டனக்கடி..டண்டனக்கடி..'
என்று ஒலிக்கிறது. படம் எடுக்கத்தோணாமல் பார்த்துக்கொண்டேயிருந்தேன்நாங்கள் வாங்கிய ஐஸ்கிரீமுடன் நாங்கள்!!

என்னோடது:பனானா காரமல் க்ரஞ்ச் (பிரஞ்ச்பனானா ஐஸ்கிரீம்,பனானா, ரோஸ்டட் ஆல்மெண்ட்ஸ், காரமல்)
ரங்கமணிக்கு: மங்கிபைட்ஸ் (பனானா ஐஸ்கிரீம்,பனானா, டெஸிகேடட் கோகனட்,பட்டர்பீகான்ஸ்)
இதை கொத்திக்கொத்தி கொடுத்தது பார்க்கவே சுவையாயிருந்தது!
ஐஸ்கிரீமை சுவைத்துக்கொண்டே மால் முழுவதும் சுற்றிசுற்றி வந்தோம்.

அடுத்த மால் விசிட் அடுத்தவாரம்தான் என்பதால் ஒரு பக்கெட் ஐஸ்கிரீம்..டுகோ..பண்ணிக்கொண்டோம்.

எங்கள் நெருங்கிய உறவினர் தம் பிள்ளைகள் அமெரிக்காவிலிருப்பதால் தாமும் அங்கேயே
நிரந்தரமாக குடியேறிவிட முடிவு செய்தார்கள். அப்போது அந்தப் பெண்மணி சொன்னது,
"ஹையா! இனிமேல் நானும் அமெரிக்காவில் வீட்டில் சும்மாயிருக்காமல் சம்பாதிப்பேனே!!" என்றார்கள். எப்படி என்று கேட்டபோது. என்னை மாதிரி வயதானவர்கள் safeway-ல் காஷ்கவுண்டரில் வேலை செய்கிறார்கள்..அல்லது coldstone ஐஸ்கிரீம் பார்லரில் வேலை செய்கிறார்கள் அதுபோல் நானும் செய்வேன் என்றார்கள். அதற்கு பிள்ளைகள், 'அம்மா!
சேஃப்வே காஷ்கவுண்டரிலாவது வேலை செய்யலாம்..ஆனால் கோல்ட்ஸ்டோன் பார்லரில்
அவ்வளவு சுலபமாக வேலை கிடைக்காது. அதற்கு தனியாக பயிற்சி எடுத்துத் தேறவேண்டும்.
மேலும் நாள் முழுதும் உட்காரவே கூடாது, நின்றுகொண்டே வேலை செய்யவேண்டும் என்றார்கள்.
அம்மா அதற்குப்பிறகு மூச்சே காட்டவில்லை.

Labels:


Comments:
இதெல்லாமல் களைப்புத் தெரியாமல் இருக்க இடைஇடையே பாட்டு பாடிக் கொண்டே வேலை செய்வார்கள். மொத்த குழுவும் சேர்ந்து பாடுவதும் அதற்கு இணையாக கொத்துவதும் நன்றாக இருக்கும்.

தங்கமணி ஆர்டரினால் இப்பொழுது எல்லாம் இது கண்ணுக்கும் காதுக்கும்தான் விருந்து! :)
 
வாங்க கொத்ஸ்!
ஐஸ்கிரீம் கொத்தி கொடுப்பார்கள் என்றதும் ஓடோடி வந்துட்டீங்களே!
உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் எது?
 
அப்டீன்னா...ஐஸ்கிரீமுக்குத் தடாவா?
ஐயோ! பவம்!
தங்கமணியிடம் சொல்லி எப்பவாவது சாப்பிடுங்கள்!!
 
Attention! See Please Here
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]