Thursday, March 6, 2008

 

மார்ச் மாத PIT- போட்டிக்கான...என்னோட பிரமிப்பு...அல்ல..அல்ல..'பிரதிபலிப்பு' ப்படங்கள்.இவையிரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள ' மில்லீனியம் பார்ர்கில்' கண்ணைக்கவரும் ஜெல்லிமீன் வடிவில் உள்ள ஒரு டூம்!! இதன் நட்டநடுவில் போய் அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிரதிபிம்பங்கள் அற்புதம்!!

வீட்டிலுள்ள வண்ணவண்ண மேஜைவிளக்கு.

இதுவும் சிகாகோவில் காண்டினி பார்க்கில் உள்ள 'ராபர்ட் ஆர். மெக்கார்மிக் மியூசியத்தில்' எடுத்தது.

கீழ் வரும் இரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள 'மேரி பியர்' என்னுமிடத்தில், நம்மைக் கோமாளி போல் காட்டும் கண்ணாடிமுன் எடுத்தது.


முதல் மூன்று படங்களும் போட்டிக்கு...மற்றவை பார்வைக்கு.
இதில் படங்களிலுள்ள தேதி நேரம் இவற்றை மாற்றத் தேவையான மென்பொருள் இல்லாததால்(எனக்கும் தெரியாததால்)
அப்படியே தந்திருக்கிறேன். நடுவர்கள் விதிவிலக்கு தருவார்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பங்கெடுத்ததே திருப்தி!!!!!!!!

Labels:


Comments:
//வீட்டிலுள்ள வண்ணவண்ண மேஜைவிளக்கு.//

விளக்கை அப்படியே எடுப்பதைவிட விளக்கின் வெளிச்சம் சுவற்றில் கலர் கலராக பிரதிபலிப்பதை எடுத்தால் நல்லாயிருக்கும்.
குறைந்த வெளிச்சம் காரணமாக ஸ்பீட் மாற்றி ஸ்டேன்ட் போட்டு எடுங்கள்

வால்பையன்
 
ஆகா அருமை , கலக்கிட்டீங்க... வெற்றிபெற வாழ்த்துக்கள்
 
வரவேண்டும்! வால்பையன்!
வீட்டு விளக்கை அப்படியே எடுக்கவில்லை. கருப்பு கண்ணாடி மேஜைமேல் வைத்து எடித்திருக்கிறேன்.
தெரியவில்லையா?
 
இம்சைக்கு நன்றி!!
 
எல்லாப் படங்களும் சூப்பர்! உங்க மேஜை விளக்கு அழகாயிருக்கு. பலமுறை சிகாகோ போயிருந்தும் இந்த dome-ஐப் பார்க்க விட்டுட்டேனே :(
 
பத்து நாள் விடுமுறைக்குப்
பின் பரிசைத்
தட்டிச்செல்ல வந்தீர்களோ?
வாழ்த்துக்கள். மில்லெனியம் பார்க்கில்
உள்ள "க்ளொட் கேட்"
படங்கள்
நன்றாக இருக்கிறது.
சகாதேவன்.
 
ஹாமாம்! சகாதேவன்!
உங்கள் ப்ளாக்கில் கூட இதன் முன் நின்று எடுத்த படத்தைத்தான் போட்டிருக்கிறீகள் அல்வா?
 
சிகாகோவா நீங்க..

நான் வடக்கே Waukeganல இருக்கேன். Close to Gurnee mills Mall.
 
ஆமாம். என் படமும் அங்கெடுத்ததுதான். போட்டிக்கும் க்ளொவுட் கேட் படங்கள் தரப்போகிறேன். எல்லோரும் பி.எஸ்.வீரப்பா மாதிரி சொல்லப் போகிறார்கள் பாருங்கள்.
சகாதேவன்.
 
your fotos are reflecting your interest in fotogrfy and enthu in taking part in contest .all the three are fine and will stand in final also.best of clik
 
நானானி மேடம்,

முதல் படம் அருமை. அதுல உள்ள நிக்கறது நீங்க தானே ? அந்த பச்ச சேல !
 
take your snap to adobe remove the date and time just a strip size ,copy a strip from a corner of the snap to suit the same background and paste it in that empty space .so simple .even now u have plenty of time to do that .
 
கட்டாயம் பாருங்கள் சேதுக்கரசி!
அதோடு பார்க்கிலிருந்து சாலையைக் கடந்து எதிர்ப் பக்கம் செல்ல வளைந்து வளைந்து ஒரு பாலம் இருக்கும் அதுவும் சூப்பராயிருக்கும்.
 
சகா!
விடுமுறை முடிந்து வந்து கலந்து கொண்டேன். அவ்ளோதான்!!
 
சிறில் அலெக்ஸ்!!
2005-ல் அமெரிக்கா போன போது சிகாகோவில் இரண்டு மாதம் இருந்தேன். அப்போது பார்த்ததையெல்லாம் விதவிதமாக க்ளிக்கினேன். அது இப்போது கை கொடுக்கிறது.
 
கலக்கிட்டீங்க போங்க.

வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
 
பி.எஸ். வீரப்பா சிரிப்பு வில்லன் சிரிப்பல்லவா? சிவாஜிகணேசனின் ஹீரோ சிரிப்பே சிரிக்கலாம். ஓகேவா?
 
நன்றி! கோமா!
எல்லாப் புகழும் எங்கள் அண்ணாச்சிக்கே!!
தேதி நேரம் எடுக்க முயல்கிறேன்.
 
சதங்கா..சதங்கா..!
நான்?..அதுவும் பச்ச சேலேல? அங்கு யாரும் சேலகட்டிய மாதர் யாரும் இல்லையே?
நான் வெகு தூரத்திலிருந்தல்லவா எடுத்தேன்!
 
சாரி..!சாரி!!சதங்கா!
நீங்கதான் சரி..சரி..! அந்த பச்ச சேல நாந்தேன். ரங்கமணியை எடுக்கச் சொன்னேன். என்லார்ஜ் செய்து பார்த்தபோது தெரிந்தது.
 
பி.எஸ்.வீரப்பா சிரிப்பில்லீங்க. போட்டி பார்த்ததும் அவர் என்ன சொன்னார்?
என் என்ட்ரியைப் பாருங்கள்.
 
சகா!
'சரியான போட்டிதான்!'
ஆனாலும் சாதுர்யம் பேசவேண்டாம்.
என் க்ளிக்குக்கு பதில் சொல்லுங்கள்!!
 
தூள் கிளப்புறீங்க - உங்களெப் பாத்தப்போ - இவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியாமப் போச்சே - கை வசம் நெரெய தொழில் வைச்சிருக்கீங்க போல - நல்வாழ்த்துகள்.

பச்சை சேலையே நானும் தேடிக் கண்டு பிடிச்சிட்டேன்லெ
 
ஆமா - படமெல்லாம் பிரமாதம் - வெற்றி உங்களுக்கே
 
பாரட்டுக்கு மிக்க நன்றி சீனா!!
ஆனால் நான் மாஸ்டர் ஆஃப் நத்திங், சீனா!
 
துள்சிக்கும் நன்றி!!
 
இரண்டாவது, மூன்றாவது படம் நல்லா இருக்கு
 
போட்டோஸ் சூப்பர் நானானி. டோம் நானும் எடுத்தேன். அதைப் போடத் தோன்றவில்லை:)
ஆமாம் அது நேவி பியர் இல்லை?/
 
நனானி,
எனக்கு மூன்றாவது படம் நன்றாக பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
 
தமிழ்பிரியன், காரூரன்!!
எனக்கும் ரெண்டு மூன்றும்தான் பிடிச்சிருக்கு.
 
சீனா!
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
 
வல்லி!
இப்ப என்ன கெட்டுப்போச்சு? காலமிருக்கே! நீங்களும் சகாதேவனோடு சேர்ந்து என்னோடு போட்டிக்கு வாருங்கள்!!கலக்கலாம்.
அது நேவிபியர் இல்லை...மில்லேனியம் பார்க்.
 
super
vaalthukkal
 
நாங்க இந்த டூமை "பீன்" என்று அழைப்போம்... நல்லா இருக்கு... வாழ்த்துக்கள் !!!
 
நாதஸ்! உங்களுக்கு 'பீன்', எனக்கு 'டூம்'
சகாதேவனுக்கு 'க்ளொட் கேட்'
ஏதோ ஒன்னு அழகாயிருக்காயில்லையா?
வருகைக்கு வந்தனம்!!
 
MejaiVilaku Shot is great. Colorful shot would say. Wish you good luck for the contest.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]