Wednesday, April 9, 2008

 

சதுரங்கம் வெளியரங்கில்

சன்னிவேலில் ஒரு நாள் சாப்பிங் மால் ஒன்றில் கால் ஓயுமட்டும் சுற்றிவிட்டு அருகில் ஒரு ரெஸ்டொரண்ட்க்கு சாப்பிடச் சென்றோம். நம்ம ஊரில் உள்ளே இடமில்லையென்றால் அங்கேயே
காத்திருக்க வேண்டும். ஆனால் அங்கு நம் கையில் பாட்டரியில் இயங்கும் டிஸ்க் ஒன்றைக் கையில் கொடுத்து பக்கத்து கடைகளில் சுற்றிக்கொண்டிருங்கள் மேஜை தயாரானதும் தகவல் வரும் அப்போது வாருங்கள் என்று பணிவோடு வேண்டிக்கொள்கிறார்கள்.

சரியென்று வெளியே வந்தோம். வாவ்!!!என்ன அருமையான இடம். இரு பக்கங்களிலும் கடைகள் வரிசையிட்டிருக்க, நடுவில் பார்க் போன்ற இடத்தின் இரண்டு ஓரங்களிலும் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு மேஜைகளின் மேல் செஸ்போர்டும்
காய்களும் தயாராக இருந்தன.விரும்பினால் அதில் இருவரிருவராக அமர்ந்து விளையாடலாம்.
மேஜை நாற்காலிகளுக்கு நடுவே நாமே காய்களாக நின்று விளையாடுமளவுக்கு பெரிய பெரிய செஸ் போர்டுகளும் இரண்டடி உயரமான காய்களும் வா..வா..என்றழைத்தன.எங்களை அழைத்துச்சென்றிருந்த குட்டித்தம்பியும் அவன் பிள்ளைகளும் சுவாரஸ்யமாக விளையாட
களமிறங்கினர். பெரியவன் கார்த்தி ஒரு புறமும் சின்னவன் சாகேத்தும் அப்பாவும் எதிர்புறமுமாக விளையாடவாரம்பித்தனர். சாகேத் கிராமத்து திருவிழா பார்க்கப்போகும் சிறுவன் போல் அப்பாவின் தோள் மீது ஏறிக்கொண்டான். அங்கு வெகு சகஜமான காட்சியிது. காய்களை நகர்த்தி விளையாடியது போய் தூக்கிக் கொண்டு போய் அடுத்த கட்டத்தில் வைப்பது வேடிக்கையாயிருந்தது.


ஆட்டையின் சுவாரஸ்யத்தின் நடுவே...திடீரென்று டிஸ்க் அதிர ஆரம்பித்தது. ஓஹோ!! இதுதான் டிஸ்க்தரும் சிக்னலா? என்ன அருமையான ஏற்பாடு? இல்ல? காத்திருக்க்கும் நேரத்தை
வீணாக்காமல் வேடிக்கையாக செலவளித்தது நன்றாக இருந்தது.


Labels:


Comments:
I love this idea too. I wish Indian restaurants use this kind of ideas. People would love it.

Ravi
 
டிஸ்க் ஐடியா சூப்பரா இருக்கே. இங்கே இன்னும் வரலைன்னு நினைக்கிறேன்(வெளியே போய் சாப்புட்டுட்டாலும்....)


சதுரங்கம் நம்மூர் சதுக்கத்தில் இருக்குப்பா. சின்ன அம்மிணி நம்மூர் வந்த பதிவில் படம் போட்டுருக்காங்க.

இந்தச் சதுரங்கம்,இங்கே வச்சே 35 வருசமாச்சாம்.

உடனே புறப்பட்டு வாங்க. வெள்ளாடலாம்:-)
 
அருமையான யோசனை தான்! இதை பார்த்தும் ஹாரி பாட்டரில் வரும் செஸ் விளையாட்டு தான் ஞாபகத்துக்கு வந்தது!
 
ஆனந்த் இதைப் பார்த்தால் எவ்வளவு ஆனந்தம் அடைவார்?
சகாதேவன்
 
எதைப் பார்த்து மனம் மகிழ்ந்தாலும் உடனே படம் பிடித்துப் பதிவு போட்டு அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளும் நானானியின் பண்பு பாராட்டத்தக்கது.
 
நம் ஊர் சரவணாஸ் சங்கீதா இங்கே எல்லாம் செஸ் வைக்க இடமிருக்காது ,குறைந்த பட்சமாக சுடோகு ஷீட்டாவது தரலாம் இல்லையா?
 
சின்ன மட்டையில் விளையாடும்போதே நான் என்னுடைய காயைத் தூக்கி எதிராளியின் காயை தடாலென் அடித்து வீழ்த்துவேன். ஆகா, இப்படியென்றால் எனது காயை தோளில் தூக்கிச் சென்று...நினைக்க மிக்க சந்தோசமாக உள்ளது..

மன்னர்கள் மரண தண்டனை வழங்கிய கைதிகளை காய்களுக்குப் பதிலாக நிறுத்தி வைத்து நிஜ வாள்கள் கொண்டு விளையாடுவார்கள் என்றும் அறிந்திருக்கிறேன். கூடுதலாக கப்ஸாவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.
 
i agree with you anony!
 
டிஸ்க் ஐடியாவும் ரெண்டடி உயர செஸ்காய்களும் பத்தி போடும் போதே...இப்படி நெனச்சேன்.
'அதா எனக்குத்தெரியுமே!' என்ற ரீதியில் கமெண்டுகள் வருமென்று.
கேள்விப் படவேயில்லை என்ற போது நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
நீங்களும் நியூசிக்கு அழைத்துக்கொண்டேயிருக்கிறீர்கள்.....!
வந்தாலும் வந்திடுவேன்!!விளையாட ஆள் கிடைக்காதா என்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.
 
வந்தியத்தேவரே!
ஒரு நல்ல தகவலை எல்லோரோடும் பகிர்ந்து கொண்டது சந்தோசமாயிருக்கிறது. வருகைக்கு நன்றி!
 
அப்படியா யாரந்த ஆனந்த்?
 
கோமா! உங்களுக்கெல்லாம் சுடோகு பேப்பர் தந்தால்... டிஸ்க் என்ன? உலகமே அதிர்ந்தாலும் அசையமாட்டீர்களே!!!
 
அங்கே சென்று சந்தோசமாக விளையாடுங்கள்...கௌபாய்மது!

மன்னர்கள் ஆடும் சதுரங்கம் கொடுமையானது. அவர்களுக்கு விளையாட்டுக்கு விளையாட்டுமாச்சு தண்டனைக்குத் தண்டனையுமாச்சு!!
 
நன்றி! சீனா!
என் ஆசைக்கும் ஆர்வத்துக்கும் நான் போட்ட தீனி.. இன்று மற்றவர்களும்
கொறிக்க உதவுகிறது.
 
//அப்படியா யாரந்த ஆனந்த்? //

என்ன கொடுமை இது ஆனந்த்(-:

உங்களுக்கே இந்த கதியா? .....

த்சு த்சு த்சு....
 
ஐயோ! ஐயோ! துள்சி! வேறே ஆனந்த் என்று நினச்சு சொல்லிட்டேன். தப்பு..தப்பு!

கீழே என்ன ஒரே மண்ணாயிருக்கு?
ஹேஹ்ஹே!!எனக்குத்தான் மீசையில்லையே!!
 
என்ன நானானி,

--அப்படியா யாரந்த ஆனந்த்?--

சும்மா கலாய்ப்போம்னு கேட்டீங்களா? இல்ல..நிஜமாவே தெரியாதா?..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]