Sunday, March 30, 2008

 

தோலை உறிக்கலாம், வறுக்கலாம், சாப்பிடலாம்!!!மறைந்த நமது பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி தன் வீட்டு சமையல்காரருக்கு தரும் ஒரு குறிப்பு...முடிந்தவரை காய்கறி, பழங்களின் தோலோடு உபயோகிக்க வேண்டும் என்பதுதான்.

உடனே பலாப்பழத்தோல், அன்னாசிப்பழத்தோல்,முருங்கக்காய்த்தோல், சேனைக்கிழங்குத்தோல்
எல்லாம் உபயோகிக்கலாமா? என்று லொள்ளு கேள்விகள் வேண்டாமே!

முதலில் வாழைக்காயை எதையும் வீணாக்காமல் சமைக்கும் முறையைப் பார்க்கலாம்.
என் பேரிக்கா(பெரிய அக்கா) சொல்லிக்கொடுத்தது.
வாழைக்காயை இரு ஓரங்களையும் நறுக்கி விட்டு, முழுசாக தண்ணீரில் வேகவிடவும்.

வெந்ததும் தோலை உறித்து வைத்துக்கொள்ளவும். தோல் உறித்த வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்புக்காரம் போட்டு தளித்து பொறியலாகவும் செய்துகொள்ளலாம்.
அல்லது துருவி சிறியதாக நறுக்கிய சின்னசெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வாழக்காய் புட்டாகவும் செஞ்சிக்கலாம்.

இப்போ தனியாக எடுத்து வைத்த வாழைக்காய் தோலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து தோல் துண்டுகளையும் போட்டு புரட்டி எடுத்தால் சுவையான வாழைக்காய்த் தோல் கறி ரெடி! இதை பெரியவர்கள் மட்டும்தான் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடுவார்கள். காரணம் பொருளை வீணாக்காமல் செய்தது, தோலிலும் சத்துக்கள் நிரம்பியுள்ளன என்ற உண்மையையும் உணர்ந்தது. சரிதானே?

இதே போல் தேங்காய் சேர்க்கக்கூடாது என்ற நிலைமை வந்ததும். வேறு எதையெல்லாம் துவையல் செய்து சாப்பிடலாம் என்று தேடிய போது கிடைத்தவை...கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, பீர்க்ங்காய், தோசைக்காய் ஆகியவற்றைக் கொண்டு துகையல் செய்யலாம் என்று தெரிந்தது. வேறு காய்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள்! எல்லாவற்றையும் சேர்த்து அல்ல...தனித்தனியாக ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு காய் கொண்டு துகையல் செய்யலாம்.

மேற்சொன்ன காய்களில் ஏதாவது ஒன்று......பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் காய்ந்தமிளகாய்...காரத்துக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கி வைத்துள்ள காயும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் விரும்பும்படி ஒன்றிரண்டாகவோ அல்லது மையாகவோ அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தியுடனோ அல்லது சூடான சாதத்தில் போட்டு பிசைந்தோ ச்சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பிக்கேட்டால் கொடுக்கலாம்!!!!!!!!!!!
ஆப்பிளை முடிந்தவரை தோலோடுதான் சாப்பிடவேண்டும். தோல் சீவித்தான் ஆகவேண்டுமென்றால் அந்தத்தோலை தூரப்போடாமல் சட்னி அரைக்கும் போது உடன் சேர்த்துக்கொள்ளலாம்.
மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து எடுத்தவுடன் முத்துக்களைக் கவ்விக்கொண்டிருந்த இளம் மஞ்சள் பகுதியை அப்படியே சாப்பிடலாம். அதன் துவர்ப்பு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல மருந்துபோன்றது.
இனிமேல் எல்லோரும், ....'தோலோடுதான் நான் சாப்பிடுவேன்...!' என்று பாடலாம்தானே?!

Labels:


Comments:
காய்கறிகளின் தோலில் இத்தனை சத்தும் ருசியுமா? இந்திரா காந்தி அன்றே தன் சமையல்காரரிடம் சொன்னதை சட்டமாக போட்டிருக்கலாம்.
சகாதேவன்
 
நன்றி. எதையும் வீணாக்காமே சாப்பிட செய்முறை குடுத்ததுக்கு :)

//தோசைக்காய்//

இது என்னன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?
 
நாங்களும் நிறையா மேட்டரை அப்படியே சாப்பிடுவோமில்ல!! :))
 
அப்பிள் மாத்திரம் உங்கள் தோட்டத்தில் விளைந்ததாலால் தோலுடன் சாப்பிடவும். கடையில் வாங்கியாதானால் அதுவும் இறக்குமதி செய்ததானால் தோல் சீவவும்.
பழத்தைக் கெடாது பாதுகாக்கவும்,மினுகத்துக்கும்..மெழுகுப் பூச்சு பூசுகிறார்கள்.
இறக்குமதி அப்பிளை தோலின் மேற்பகுதிய மெதுவாக வழித்துப் பார்க்கவும்.
இது பற்றி ஒரு நண்பர் படத்துடன் பதிவு போட்டார்.
 
இங்கே ஒரு தோழி( வெள்ளைக்காரர்) எப்பவும் இதைத்தான் சொல்வாங்க. ஆரஞ்சுப்பழத்தைக்கூடத் தோலோடுதான் சாப்புடுவாங்களாம்!!!

என்னடான்னு இருக்கும்....... நம்ம வீட்டுக்கு வந்தால் எதாவது காஃபி டீ குடிக்கிறீங்களான்னு ( ஒரு மரியாதைக்குத்தான்) கேட்டால், நீ குடுக்கறேன்றதுக்காக என்னால் குடிக்கமுடியாதுன்னு சொல்வாங்க.

அவுங்க கேன்சர் வந்து இறந்துபோயிட்டாங்க ஒரு பத்துவருசம் முந்தி.

டாரதிக்கு வயசு 50க்கு பக்கம் அப்போது(-:
 
'தோலில்'தான் அத்தை விஷயமா!!! பதிவுக்கு நன்றி...
 
அட! உறவு பாராட்டுவதில் என்னை already முந்திக் கொண்டார் போலிருக்கே ச்சின்னப் பையன்..
 
கல்யாணத்துக்குப் பின் கரண்டி பிடித்தக் காலத்திலிருந்து பல ஆண்டுகள் சட்னி என்றாலே விதவிதமான combination-களில் தேங்காயைத்தான் உருட்டுவேன். ஒரு கட்டத்தில் தேங்காயைக் குறைக்கும் படி மருத்துவர் advice செய்த புதிதில், என் வீட்டுக்கு வந்திருந்த உறவினர் உங்களைப் போன்று முள்ளங்கி, முட்டைகோஸ், பீர்க்கையில் துகையல் செய்யும் idea-வைத் தந்தார். அன்றிலிருந்து 4 ஆண்டுகளாக அதைப் பின்பற்றி வருகிறேன்.

அதிலும் உருண்டை முள்ளங்கி, நூல்கோல் போன்றவற்றில் செய்யும் துகையல்கள் super taste என வந்திருந்த விருந்தினர் பாராட்ட, அந்த உறவினரின் செய்முறை என்பதைத் தவறாமல் சொல்லி அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.
 
தஞ்சாவூரான்!
தோசைக்காய் மஞ்சள் நிறத்தில் ஓவல் வடிவில் இருக்கும். ஒருவகையான வெள்ளரி வகையைச்சேர்ந்தது. காரசாரமாக துவையல் செய்தால் நல்லாருக்கும்.
 
கொத்ஸ்! கூடியவரை அப்டியே சாப்பிடக்கூடிய மேட்டரையெல்லாம் அப்படியே சாப்பிடுவதற்குத்தான் சொன்னமில்ல!!!
 
துள்சி!
நானும் யாராவது , 'காபி சாப்பிடுறயா?' என்று கேட்டால் உங்க தோழியைப் போல் பதில் சொல்லலாம் போல. அந்த பதில் நச்சுன்னு இருக்கு.
 
ச்சின்னப்பையா!
தோலில் அத்தைவிழயமும் தெரிஞ்கிட்டாச்சா? சமத்து!
 
ஆர்தி! மருமகளே!
இன்னும் எந்த காயெல்லாம் உபயோகித்து துவையல் செய்யலாம் என்று சொல்வீர்களா? மற்றவர்க்கும் பயன்படும். எங்களுக்கும் தேங்காய் 'நோ' என்றதிலிருந்து இப்படித்தான்.
 
சகாதேவன்!
சட்டமாக இல்லாததால்தான் இந்த அளவாவது செய்கிறோம். சட்டம் என்று வந்துவிட்டால் அதை மீறுவதில் நாம் கில்லாடிகள் ஆயிற்றே!!!
என்ன நாஞ்சொல்றது?
 
அத்தை! நானானியே!
அத்தனை பேருக்கும் அருமையான சமையல் குறிப்புகளை வாரி வழங்கும் வாத்தியாரம்மா நீங்கள்! உங்களுக்கு நான் tips கொடுத்தால் துரோணாச்சாரியாருக்கே அர்ஜுனன் வில் வித்தைக்கு tips கொடுப்பது போல் அல்லவா இருக்கும்!
 
ஹலோ! ஆர்தி!
நீங்கள் பெண் என்று நினைத்து மருமகளே..என்று விழித்துவிட்டேன்.
சகாதேவன் பதிவு வழியாகப் போய் உங்கள் பதிவுக்கு வந்து பார்த்தால்...மருகளல்ல...மருமகன் என்று அறிந்து விழித்துக்கொண்டேன். மேலோட்டமாக மேய்ந்தேன். படங்கள் எல்லாம் நல்லாருக்கு. சாவகாசமாக படிக்கிறேன். சேரியா?
 
ஆர்தி! நான் தோராணாச்சாரியார் லெவலுக்கெல்லாம் இல்லை. அது ரொம்ப டூமச்! இருந்தாலும் அவர் ஏகலைவனிடம் கேட்டது போல் கட்டைவிரலையோ கரண்டியையோ காவு கேட்கமாட்டேன். எந்தெந்த புத்தில் எந்தெந்த.....இருக்குமோ? யாருக்குத்தெரியும். அதனால் தைரியமாக உங்களுக்குத் தெரிந்த குறிப்புகளைச் சொல்லவும். குழந்தைகளிடமிருந்து கூட நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைப்பவள் நான்..நான்..நான்!!
 
நானானி எங்க வூட்டு ரங்கமணி மலை வாழைப்பழம் சாப்பிடும் போது தோலை நாக்கால் கெரண்டி சாப்பிடுவார்.ஏங்க வேணும்னா இன்னொரு பழம் சாப்பிடுங்க இப்படி தோலைக்கூட சாப்பிடறீங்கன்னு சொன்னா பட்டை பட்டையாக உரியும் அந்த தோலில் தான் அதிக நார்ச் சத்து இருக்காம்.கொலஸ்ட்ரால் குறைக்கும் னு சொல்லுவார்.

அப்படியே பீர்க்கங்காய் தோல் தொகையல் நல்லாருக்கும்.
ஆப்பிள் தோலைஇப்பெல்லாம் சாப்பிடுவது சரியல்லை.மெழுகு தடவி அமிலம் பூசி பதப்படுத்தறாங்களாம்.

ஆரஞ்சு பழத்தோலும் சமைக்கலாமாம்.செய்ததில்லை.
 
கண்மணி!!
உங்க ரங்கமணி செய்வது நூத்துக்குநூறு சரி. அது ருசியாகக் கூட இருக்கும்.
ஆரஞ்சுதோலை பொடிப்பொடியாக சீவி புலாவில் போட்டால் நல்லாருக்கும். ஆப்பிள் தோல்....யோசிக்கவேண்டிய விஷயம்தான்.
 
சொதப்பிட்டீங்களே அத்தை! aarti 'ஆர்தி'யாகவும் வந்தது 'பெண்' என நீங்கள் புரிந்து கொள்ளத்தான்! தவறாகப் புரிந்து கொள்வதை விடவும் நீங்கள் தெரியாமல் விழித்ததே தேவலையாக இருந்தது. இப்போதைக்கு ஆர்தி 'அனானி'யாகவே வந்து விட்டுப் போகிறேன். தக்க சமயம் வரும் போது "நான்தானே அந்தக் குயில்" என்று போட்டு உடைக்கிறேன். [உங்க பாஷையிலேயே] சேரியா?
 
நானானி said:
"குழந்தைகளிடமிருந்து கூட நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைப்பவள் நான்..நான்..நான்!!"

நானானியிடம் எல்லோருக்கும் பிடித்ததே இதான்..இதான்..இதாங்க!!
 
நன்றி கண்மணி, ஆப்பிள் தோல் சில சமயங்களில் ஏன் பிசுபிசுப்பாக இருக்கிறது என இப்போதுதான் புரிகிறது.
 
Useful tips....
Will definitely let you know how all the recipes turned out.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]