Friday, March 28, 2008

 

பல்சிறைக்கழகம்!!!!!!!

சிறைச்சாலை என்ன செய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அது எதுவும் செய்யும் என்று உறுதியாயிருக்கிறது

முன்பெல்லாம் ஒரு கைதி விடுதலை பெற்றுப் போகும் போது சிறை அதிகாரி, அவனுடய உடமைகளையும் சிறையிலிருந்தபோது செய்த வேலைகளுக்கான சம்பளத்தையும் கொடுத்து பொத்தாம்பொதுவாக ஓர் அறிவுரையும், 'இனிமேல் ஒழுங்காக இரு. திருந்தி வாழப்பார். திரும்பி இங்கே வராதே!' என்று கூறி அனுப்பிவைப்பார்.

ஆனால் இப்போது எவ்வளவு மற்றங்கள்!!!சிறை சட்டதிட்டங்களிலும் சரி, கைதிகளின் மனவோட்டங்களிலும் சரி, மகிழத்தக்க மாற்றங்கள்.

இவ்வார விகடனில் வந்த ஒரு கட்டுரை...."சூழ்நிலைகளாலும் சுருக்கென்று எழுந்த கோபத்தாலும் குற்றவாளிகளாகி, சிறைச்சாலைகளில் ஆயுளைத்தொலைத்த பலர், இப்போது பண்பான பட்டதாரிகள்!"

புழல் மத்தியசிறையில்தான் இத்தனை மாற்றங்கள். காரணம் கடுமை காட்டாத சிறை கண்காணிப்பாளர்களின் கனிவும் மனிதாபிமானமும்தான். குற்றவாளிகள் என்றோ கைதிகள் என்றோ அழைக்கப்படுவதில்லை சிறைவாசிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.

அவர்களின் மனமாற்றம், யோகா, கவுன்சிலிங், தியானம், சுயவேலை வாய்ப்பபுப் பயிற்சிகள், கல்வி இவைகள்தான் சாத்தியப்படுத்தியிருக்கிறன என்கிறார் தமிழக சிறத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.சுப்பிரமணியன் ஐ.பி.எஸ்.

B.Sc., M.Com., M.C.A., M.A., PGDLA என்று பல பட்டங்கள் வாங்கிய பலர், உணவு மற்றும் ஊட்டச்சத்து,டூ-வீலர் மெக்கானிசம், டைப்ரைட்டிங், டி.வி. மெக்கானிசம் என்று நான் -
ஸ்டாப்பாக படித்துக் கொண்டிருப்போரும் உண்டு. விடுதலைக்குப் பிறகு வெளியே சென்றதும் எந்த வேலைக்கும் தன்னை தயார் படுத்திக்கொள்ளவே இத்தனை படிப்பும் என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது உள்ளே நடக்கும் இது போன்ற நல்ல விஷயங்கள் வெளியிலும் நடந்தால் நம் நாடு எங்கோஓஓஓஓஓஓஓஓஒ போய்விடுமல்லவா?

Labels:


Comments:
கடந்த பதிவின் தலைப்பே தப்புத் தாளமாக இருக்கிறதே என எண்ணி நான் செய்த விமரிசனம் உங்கள் சிந்தனையைத் தூண்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். விமரிசனங்களை positive-ஆக ஏற்றுக் கொள்ளும் பண்பையும் பாராட்டுகிறேன். புழல் சிறைச் சாலையின் சீரிய பணியைப் பற்றி சிறப்பான பதிப்பைத் தந்துள்ள நீங்கள், எனக்கு promise செய்த அந்த 'மொக்கை'ப் பதிவைப் போட மறந்து விடாதீர்கள். அதாங்க அந்த அணில் படம்!
 
"சிறைச்சாலை என்ன செய்யும்" என்ற பாட்டு பொருத்தமான தலைப்பு என நினைத்தீர்கள். சிறையில் நடக்கும் வகுப்புகள் பற்றி முன்பே படித்திருக்கிறேன். காலையில் காமெண்ட் எழுத இருந்தேன். ஹிண்டு பார்த்து, சுடோகு போட்டுவிட்டு விகடன் பார்த்தால் அந்த கட்டுரை. ஆபீஸ் முடிந்து மத்தியானம் வந்து பார்த்தால் ஆர்த்தியின் காமெண்டுக்குப் பதிலாக உங்கள் புது போஸ்ட். சிறைச்சாலை என்னவெல்லாம் செய்கிறது பார்த்தீர்களா
சகாதேவன்
 
மிக்க நன்றி! ஆர்தி!
மறக்கமாட்டேன். கணினியில் அவ்வணில் ஏறியதும் 'மொக்கைதான்...பதிவுதான்!!
 
சுடோகுவுக்கு நன்றி! சகா!
கொஞ்சம் விட்டால் சிறையிலேயே அடைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!
 
சகா, நானானியின் இந்த நல்ல பதிவு விகடன் கட்டுரையின் பின்னோட்டம் என்பது உங்கள் பின்னோட்டத்தின் மூலம் அறிந்த அடுத்த நாள்தான் எனக்கு அந்த இதழ் கிடைத்தது. [எங்கள் மாநிலத்தில் வார இதழ்கள் 2,3 நாட்கள் தாமதமாகத்தான் கடைக்கு வரும்.] நானானி தன் பதிவின் முடிவில் எழுப்பியிருக்கும் "இதை எல்லாம் பார்க்கும் போது உள்ளே நடக்கும் இது போன்ற நல்ல விஷயங்கள் வெளியிலும் நடந்தால் நம் நாடு எங்கோஓஓஓஓஓஓஓஓஒ போய்விடுமல்லவா?" என்ற இக்
கேள்வியைப் போல, விகடன் கட்டுரை இன்னும் பல கேள்விகளை என்னுள் எழுப்பியது! அவற்றை இதே பதிவின் பின்னோட்டமாக நாளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்!
 
ஆப்பிரிக்க யானையும் அமெரிக்க அணிலும் அந்தந்த கண்டங்களின் சீதோஷ்ண நிலையைத் தாக்குப் பிடிக்கும் வகையில் இறைவன் படைத்தவை. அந்த அணில் "பெருத்த பெருச்சாளியாகத் தோற்றமளிப்பதைப் பார்த்து "அம்மாடியோவ், எம்மாம் பெரிசு" என வியந்து ரசித்து விட்டுப் போகலாம். ஆனால் நம் நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கும் "பெருத்த ஊழல் பெருச்சாளி"களை அப்படி ரசிக்க (சகிக்க) முடிகிறதா நானானி?
 
வம்சம் வாடாமலிருக்க வாங்கி வாங்கி போட்டுக் கொள்வது, வழியில் குறுக்கிடுபவர்களைப் போட்டுத் தள்ளுவது, தப்பித் தவறிக் கைது செய்யப் பட்டால் 'எதிர் கட்சியினரின் சதி' என வாயெல்லாம் பல்லாக காமிராவுக்குக் கையசைத்தபடி bail-லில் வெளியே வந்து விட வேண்டியது. என்ன கொடுமை சரவணன் இது! சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறை சென்றவர்கள் பெருமையாக மதிக்கப் பட்டார் ஒரு காலத்தில். இன்றோ இந்தப் பெருந்தலைகள் சிறை செல்வதை publicity-யாக அல்லவா நினைக்கிறது?
 
மக்கள் நலத் திட்டங்களுக்கான கோடிகளை இவர்கள் அமுக்க, இன்னொரு கோடியில் அப்பாவி ஜனங்களின் முன்னேற்றம் பல தலைமுறைகளுக்கு தலை எடுக்க முடியாத படியல்லவா அமுக்கப் படுகிறது?
 
என் கடைசிக் கேள்வி பதிவிடப் படவில்லையே நானானி? அதில்தான் point-ஏ இருக்கிறது.

"வறுமை, வளர்ப்பு, படிப்பறிவின்மை போன்ற சூழ்நிலை இறுக்கங்களினாலும், மன அழுத்தங்களினாலும் தவறிழைத்த இவர்களைப் புழல் திருத்துகிறது. தெரிந்தே தவறு செய்யும் சமூகத்தின் கரும் புள்ளிகளான ஊழல் பெரும் புள்ளிகளை யார் திருத்துவது?"
 
ஆர்தி!
உங்களின் ஆதங்கம் புரிகிறது. ஊழல் பெருச்சாளிகளை தமிழக மக்கள்,'பெறுத்தது போதும் பொங்கி எழு!' என்று என்றைக்குப் பொங்கியெழுகிறார்களோ அன்றுதான் தமிழ்நாடே சுத்தமாகும். ஏழுதலைமுறை தாண்டியும் சொத்து சேர்க்கும் பேரா....சையும் ஒழியும்.
முதல் கல்லை யாரெடுத்துப் போடுவது?
உங்கள் கடைசிக் கேள்வியை மறக்கமாட்டேன். அந்த சிடி எங்கோ சுழலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. கிடைத்ததும் முதல் வேலை அதுதான்.
மறக்கமாட்டேன் மருமகளே!!
 
ஆர்தி!
உங்கள் பதிவுக்குப் போக முடியவில்லையே? ப்ளாக் என்னவென்று சொல்லுங்கள்.
 
தமிழுக்கும் அமுதென்று பேர்!

தற்போது தங்களைப் போன்றோர் படைக்கின்ற அமுதைப் பருகி, பின்னோட்டமிடுவதில் இன்புறும் நான் விரைவில் அமுதைப் பதிவாக வழங்கிடுவேன். வாழ்த்தி வரவேற்பீர்களா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]