Monday, March 24, 2008

 

நானும் கடலை போடுவேம்ல....அதுவும் யாரோட?

கடலை போடுதல் என்பது ஒரு வழக்குச் சொல்லாகவே அமைந்துவிட்டது. கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதுதான் கடலை போடுதல் என்று அறிந்தேன். ஓகே..ஓகே..

இந்த வயதில்தான் கடலைபோடமுடியும். பின்னாளில் கடலையாவது ஒண்ணாவது.
இப்போது ஒண்ணுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காக பேசுபவர்கள் திருமணத்துக்குப் பிறகு
அவசியமான விஷயங்களைக்கூட 'உம்..உஹூம்..' அடித்தொண்டையில் உறுமிக்கொண்டு போய்க்கொண்டேயிருப்பார்கள்!!! ஆகவே இளைஞர்களே! போடும் கடலையை இப்போதே போட்டு மகிழ்ந்து கொள்ளுங்கள்!!!

இவ்வளவும் சொல்லிவிட்டு நான் கடலை போடாமலிருந்தால் லல்லாருக்குமா?
நானும் போட்டேனே கடலை....யாருக்கு? கொழுத்த அணிலுக்கு.


கலிபோர்னியாவில் சன்னிவேலிலிருந்து '17-மைல் ட்ரைவ்' (பேரே அப்படித்தான்) என்னுமிடதுக்குப் போயிருந்த போது அங்கு 'பெபிள்பீச்'(pebble beach)-சில் தான் அணிலுக்கு கடலை போட்டேன். அங்கு வருபவரெல்லாம் அணிலுக்கும் கடற்பறவைகளுக்கும் தின்பதற்கு வேற்கடலை..ஒவ்வொன்றும் எம்மாம் பெரிசு!, சிப்ஸ், மற்றும் அவர்கள் கொண்டுவரும் பிற 'கொறிக்ஸ்' எல்லாவற்றையும் வாரியிறைகிறார்கள். அவைகள் ஆவலோடு வந்து கொறிக்கின்றன. நம் கைகளிலிருந்தும் கைகளால் எடுத்து கொறிக்கின்றன. பறவைகள் மேலே வீசினால் அழகாக கவ்விக்கொண்டு பறக்கின்றன. என்னோட அணில் என்னிடம் கடலைகள் 'காலி......!'என்ற பின்னும் போகாமல் என் பின்புறம் வந்து "பின்னலைப் பின்னின்றிழுத்தான்.." என்பது போல் என் முந்தானையைப் பின்னின்றிழுத்தான். சிறிது நேரம் அதோடு விளையாடிவிட்டுப் போகும்போது என் பின்னேயே வந்தது....அதற்குத்தான் என் மேல் எவ்வளவு பாசம்!!!!!

Labels:


Comments:
என் வீட்டில ஒரு அணில் குடித்தனம் நடத்துதே!!!...
 
எங்கட ஊரில "கடலை போடுறது" எண்டா ஒரு ஆணோ பெண்ணோ எதிர்ப்பாலாருடன் விடயமே இல்லாது கதைத்துக்கொண்டிருப்பதை குறிக்கும்.

அதாகப்பட்டது, கல்யாணமானவர்கள் கடலைபோட முடியதாது. அதனை எவ்வாறு சொல்வது என்று இனி கல்யாணம் ஆனாதான் தெரியும்போல.

//delphine: என் வீட்டில ஒரு அணில் குடித்தனம் நடத்துதே!!!...//

ஒரு வசனத்தில் நிறைய சொல்லிவிட்டீர்கள். :-)
 
நல்லா கொழுத்த அணிலா? டாக்டர்?
அங்கு கடலை கொறித்தே ஒவ்வொன்றும் பெருச்சாளி சைசில் இருக்கும்.
ஆமா....ஒரு அணில் எப்படி குடித்தனம் நடத்த முடியும்? பெண்டாட்டி, பிள்ளைகள் இல்லாமல்? ஹூம்?
 
அதைத்தான் சொன்னேன் கௌபாய்மது!
போடும் கடலையெல்லாம் கல்யாணத்துக்கு முன்பே போட்டுவிடுங்கள் என்று!
 
பாவம் நனானி... அது என்னை போல தனியாத்தான் இருக்குது... நான் அதை ரொம்ப ரசிக்கிறேன்.. பயந்த சுபாவம்..
 
பாட்டிம்மா கலக்கீட்டீங்க!!
 
டாங்ஸ்ப்பா1 பேராண்டி!
 
நானானி நான் அனுப்பின மயில் வந்ததா.
டெல்பினுக்கும் சொல்லணும்.
அவங்க நம்பரைத் தொலைச்சுட்டேன்.

இப்பவுமா கடலை போடறீங்க. அநியாயமா இருக்கே:))
 
வல்லி!
அசைந்தாடும் மயில் ஒன்று காணோமுன்னு சொல்லமாட்டேன். அது அசைந்தாடி தோகை விரித்து வந்து சேந்தது. அதை திருப்பி அனுப்பியிருக்கிறேனே? பாக்கலையாப்பா?
கடலை போட நாளென்ன வயசென்ன?
இபோது கடலையை வாயில்தான் போட்டுக்கொள்கிறேன். ஹி..ஹி..!
 
அம்சமான இந்திய யானைக்கும் ஆரவாரமான ஆப்பிரிக்க யானைக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல் அல்லவா இருக்கிறது அமரிக்கையான இந்திய அணிலுக்கும் பெருச்சாளி போல் பெருத்த தோற்றமளிக்கும் அமெரிக்க அணிலுக்கும் உள்ள வித்தியாசம். Anyway, நீங்கள் போடுவது நிஜமான கடலை என்பதால் அம்சம், அழகு, அமரிக்கை பற்றியெல்லாம் கவலைப் படத் தேவையில்லை.
 
நல்லா கடலை போட்டு இருக்கீங்க :)
சரி, இங்கே இருக்கும் அணிலுக்கு ஏன் முதுகில் கோடு இல்லை? அந்தக் காலத்துலேயே அமெரிக்கா விசா கெடுபுடிதானோ?? :)
 
மங்களூர் சிவா said...
பாட்டிம்மா கலக்கீட்டீங்க!!
நானானி said...
டாங்ஸ்ப்பா1 பேராண்டி!

இவரு உங்களுக்கு பேராண்டியா அப்ப நானெல்லாம் பிறக்கவே இன்னும் ஒரு 30 வருசம் ஆகுமே
 
ஆர்தி!
அம்சமும் அழகும் எல்லாருக்கும்தேவை.
அது அமெரிக்க அணிலானாலும் வரி இந்திய அணிலானாலும் சரி. முதுகில் மூன்று கோடுகள் இல்லைலையே பாக்கவில்லையா? இந்திய யானை மாதிரி இந்திய அணில்தான் அழகு.
 
நன்றி! தஞ்சாவூரான்!
அணிலுக்கு விசா பிரச்சனை இல்லை.
மேலும் ராம கதை அமெரிக்காவில் நடக்கவில்லை...ராமர் பாலமும் அங்கு கட்டப்படவில்லை. எல்லாம் நடந்தது நம்நாட்டில்தான். எனவே ராமர் வருடிய முதுகில் மூன்று வரி அணிலும் நமக்குத்தான் சொந்தம்!
அமெரிக்காவில் என் காமிராவில் முதன்முதலில் க்ளிக்கானதே இதுமாதிரி ஓர் அணில்தான்.பயங்கர பெரிசு!!
படத்திலிருப்பது குட்டி அணில்தான்!!
 
சரிதான். அப்போ "அணிலே அணிலே வா வா! அழகிய அணிலே வா வா" என அமெரிக்க அணிலைப் பார்த்து பாட முடியாது போலிருக்கிறது.

உங்கள் காமிராவில் முதலில் சிக்கிய அந்தப் "பயங்கர பெரிசு" இருந்தால் அதையும்தான் எங்கள் பார்வைக்கு வைக்கிறது!?!
 
உங்கள் சித்தம், என் பாக்கியம், ஆர்தி!
கட்டாயம் வைக்கிறேன்.
இன்னொரு (மொக்கை)பதிவிட வாய்ப்பு! ஹா..!ஹா!
 
நானானி இது கொஞ்சம் ஓவராயில்ல?
ஏதோ நானா கூட கடலை போட்ட மலரும் நினைவுன்னு நெனைச்சா அணிலுக்கு போட்ட கதையா?
ஹூம்.ம்ம்...நடத்துங்க
 
கண்மணி!
ஹி...!ஹி...!
 
பவன் குட்டி!
அப்ப நீ எனக்கு கொள்ளுப்பேராண்டி!
சேரியா? செல்லம்!
 
"பாட்டிம்மா கலக்கிட்டீங்க!"ன்னு சொன்ன மங்களூர் சிவா பேராண்டி ஆயிட்டார். "அப்ப நானு"ன்னு சிணுங்கிய பவன் குட்டி இப்பக் கொள்ளுப் பேராண்டி. "அத்தையம்மா அசத்திட்டீங்க!" என்று இந்த பெங்களூர் ஆர்தி சொல்லட்டுமா?
 
நல்லா சொல்லு மருமவளே!!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]