Saturday, March 8, 2008

 

இது கொஞ்சம்...ரொம்ப டூ மச்சா இல்ல?

விளையாட்டுகள் பல விதம். இது டூமச் ரகம். இண்டோர் கேம்ஸ் எப்படியல்லாமோ விளையாடியிருப்போம். இப்படி விளையாடியிருக்கிறீர்களா?

விளையாட்டுப் பிள்ளைகளான நாங்கள்....முந்தின பதிவுகளிலேயே தெரிந்திருக்கும், பலவகை இண்டோர் கேம்ஸ்களை ஆர்வத்தோடு ஆடுவோம்.

அதில் ஒன்று....'க்ரூயிஸர்' இப்போது அதன் பெயர் 'பாட்டில்ஃபீல்ட்'. அப்போதெல்லாம் இதற்கென்று எந்த ஒரு சாதனமும் கிடையாது. பேப்பரில் சதுரங்கக் கட்டங்கள் மாதிரி 9க்கு9-என்று வரைந்துகொண்டு இடமிருந்து வலமாக, R S T U V W X Y Z என்றும் மேலிருந்து கீழாக, 1 2 3 4 5 6 7 8 9 என்றும் ஆளுக்கொன்றாக குறித்துக வத்துக்கொண்டு கொண்டு ஆடவாரம்பிப்போம்.

கடல் போர் தான் இந்த ஆட்டத்தின் கரு. இருவரும் ஒருவர்க்கு ஒருவர் தெரியாமல் தத்தமது கடற்படையை கட்டங்களுக்குள் அமைத்துக்கொள்ளவேண்டும்.

ஷிப்-----4 கட்டங்கள்
க்ரூயிஸர்-3 கட்டங்கள்
டெஸ்ட்ராயர்--2 கட்டங்கள்
சப்மெரின்-----1 கட்டம்

இவற்றை நம் விருப்பம் போல் படுக்கை வசமாகவோ அல்லது நிற்கும்வசமாகவோ அமைத்துக்கொள்ளலாம். இப்போது ஆட ரெடி.

ஒருவர் பேப்பரை ஒருவர் பார்க்காமல் அமர்ந்து கொண்டு குண்டு வீச ஆரம்பிக்க வேண்டும்.
அதாவது ஷாட்ஸ்!! ஒரு நேரம் 3 ஷாட்ஸ்தான் அனுமதி.

முதலில் ஆடுபவர், S6, S7, S8 என்று கொடுத்தால்...எதிராளி அதை தன் பேப்பரில் அந்தந்த கட்டங்களில் குறித்துக் கொள்ள வேண்டும். உடனே அதன் முடிவுகளைச் சொல்ல வேண்டும்.

அது கப்பல் அடி, கப்பல் அடி, கப்பல் அடியாகவும் இருக்கலாம். அல்லது க்ரூயிஸர் முங்கிடுச்சு-ஆகவும் இருக்கலாம் அல்லது டெஸ்ட்ராயர் அடி,அடியாகவும் இருக்கலாம் அல்லது சப்மெரின் முழ்கிடுச்சு என்றும் இருக்கலாம் அல்லது மூன்று ஷாட்ஸும் வாஷவுட்-ஆகவும் ஆகலாம்.

இது மாதிரியான முடிவுகளை சொல்ல ஷாட் வாங்கியவர் அதைத்தன் பேப்பரிலும் குறித்துக் கொண்டு, தன்னோட ஷாட்ஸ்களை மற்றவர்க்கு கொடுக்கவேண்டும். அவரும் அதை வாங்கிக்கொண்டு முடிவுகளைச் சொல்லவேண்டும்.

இப்படியாகத்தானே மாறிமாறி ஷாட்ஸ்கள் கொடுத்து வாங்கி யார் மற்றவர் கடற்படையை முற்றிலும் அழிக்கிறார்களோ அவர்தான் வின்னர்.

இதிலென்ன டூமச்? இருக்கிறது. என் திருமணத்துக்கு முன் நானும் என் தங்கையும் ஆர்வத்தோடு விளையாடும் ஆட்டம் இது.

திருமணத்துக்குப் பிறகு ஒரு முறை ஊருக்குப் போயிருந்தபோது நானும் அவளும் க்ரூயிஸர் ஆட ஆரம்பித்தோம். பாதி ஆட்டத்தில் நான் தூத்துக்குடி திரும்ப வேண்டியதாயிற்று. அப்போது அங்கு தானிருந்தேன். என்ன செய்வது? நாம் தொடருவோம் என்றபடி ஊர் வந்துசேர்ந்தேன்.

தந்தையார் டிரான்ஸ்போர்ட் பிசினஸிலிருந்தது எங்களுக்கு வசதியாய் போயிற்று. திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு நாளைக்கு 2-3 பஸ்கள் ஷண்டிங் அடித்துக்கொண்டிருக்கும்.

காலை முதல் பஸ்ஸில் என்னோட ஷாட்ஸ்களை ஆபீஸ் பையன் கண்டக்டரிடம் சேர்ப்பித்துவிடுவான். அதே பஸ் திரும்பும்போது தங்கையிடமிருந்து இதே போல் அங்குள்ள ஆபீஸ் பாய் கண்டக்டரிடம் சேர்ப்பித்துவிடுவான். இப்படியே ஒருவரிடமிருந்து ஷாட்ஸுக்கான ரிசல்ட்டும் பதில் ஷாட்ஸும் ஷண்டிங் அடித்து ஆட்டம் முடிய 10 நாட்களாவது ஆகும்.

தொடங்கி பாதியில் ஊர்திரும்பிய ஆட்டம் ஒரு வாரத்தில் முடிந்தது. "ஹை! இது நல்லாருக்கே!"
என்று அடுத்த ஆட்டமும் ஆடுவோம். அப்பாவுக்கோ அண்ணன்மார்களுக்கோ இது தெரியாது.
ஏதோ அக்கா தங்கை பாச மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொள்வார்கள். அந்த மழையும் உண்டு.

அப்போதுள்ள மனநிலையில் அது டூமச்சாக தெரியவில்லை. வாழ்கை சுகமானது என்று எண்ணியிருந்த காலம்.

இபோது நினைத்துப் பார்த்தால் டூமச் இல்லை த்ரிமச்...ஃபோர்மச்............டென்மச்சாகத்தெரிகிறது.

Labels:


Comments:
இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையாக்கா? ஆனா ஆட்டம் தான் எப்படினு புரியலை :)
 
அதைத்தான் நான் தலைப்பிலேயே சொல்லிவிட்டேனே? தமிழ்பிரியன்!
இப்போது பிளாஸ்டிக் போர்டில் காய்களை குத்திகுத்தி விளையாடுவது போல் கடைகளில் கிடைக்கிறது.
battle field என்று பேர். விளையாடிப்பாருங்கள்...எங்களைப்போல் பைத்தியமாகி விடுவீர்கள்.
 
அடப்பாவிகளா!! :))
 
நீங்கள் 2மச்சு 3மச்சு என்று இருப்பதைப் பார்த்தால் உங்கள் அப்பாவுக்கு சரியான இம்சை அரசிகளாக இருந்திருப்பீர்கள் போலிருக்கிறதே......
 
கொத்ஸ்!!
கையில் கிடைத்தால் கொத்கொத்தென்று கொத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே!!
இறந்தகால வசந்தங்கள்தாம் எங்களை இன்றும் அன்றலர்ந்த பூப் போல் வைத்திருக்கிறது.
 
கோமா!
அப்பாவுக்கு நாங்கள் இம்சை கொடுக்காத இளவரசிகளாகத்தான் இருந்திருக்கிறோமப்பா!!
வாயைத்திறந்து எதுவும் கேட்கத்தெரியாத பூச்சிகளாக. வெளியில் போகும்போது,'ஏதாவது வேணுமா?' என்று கேட்பார்கள்.'ஒன்னும்வேண்டாம்!' இதுதான் பதில். என் நாத்தனார்..ஹையோ!ஹையோ! என்னையெல்லாம் கேட்டால் ஒரு பெரிய லிஸ்டே கொடுத்திருப்பேனே என்று அங்கலாய்ப்பாள்.
 
நானானி,
இது டூ மச் இல்லைப்பா. வெரி டென் மச்.

ஆனால் ஆனந்தமாக இருக்கு. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம்
அவங்களுக்குச் சென்னைத் தண்ணீர் பிடிக்காததால், தினம் அவங்க பஸ் சர்வீஸ்ல ரெண்டு குடம் தண்ணிர் அவங்க எஸ்டேட் லிருந்து கொண்டு வரச் சொல்வாங்க:)
 
நானானி, இளமைக்கால வசந்தங்கள் - அடிமனதில் எப்போதும் இருக்கும்- அவ்வப்பொழுது எழுந்து வந்து நம்மை மகிழ்விக்கும் - மறக்க முடியுமா அவைகளை. இப்பொழுது எல்லாமெ இன்ஸ்டண்ட் - வருவதும் தெரியவில்லை போவதும் தெரிய வில்லை - நினைவிலுமில்லை.

அழகா எழுதுறீங்க - அழகா புகைப்படம் எடுக்குறீங்க - அழகாப் பேசுறீங்க - அமைதியா இருக்கீங்க - அன்பு - பண்பு -விருந்தினரை உபசரிப்பது எல்லாமே போற்றத் தக்கது - நல் வாழ்த்துகள்
 
சீனா!
என்னை எனக்கே அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். நன்றிகள் பல.
தூறும் மழையையும் பொருட்படுத்தாமல் வெகு தூரம் கடந்து வந்து சந்தித்தது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது.
 
http://www.wikihow.com/Play-Battleship-Without-Grid-Paper
--------
dear bloggers
this is site for the game .
 
pirandha veettil ippadiyellaam aattam potta ungkalukku pukundha veettil vachchiruppaangkaley AAPPUU
 
அனானி! என்ன ஒரு ஆசை!
யாரும் எனக்கு ஆப்பு வைக்க இயலாது. நா வெச்சிருக்கேன் அங்கங்கே ஆஆஆப்பு!!
 
அனானி!
ஆப்பு என்னங்க ஆப்பு! அப்போது வாய்ப்பு கிடைத்தது கொண்டாடினோம்.
இப்போது அதை நினைத்து அசைபோடுகிறோம். அவ்வளவுதான்.
 
வல்லி!
வரணும்! இப்போது நினைத்துப்பார்த்தால் எத்தனையோ மச்சாகத் தெரிகிறது. அதுதான் தற்போது மனதுக்கு இதம்.
இளமையில் இதெல்லாம் சகஜமப்பா!!
 
Thanks for posting, as I have been looking for this topic for a long time. kamagra 100 mg
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]