Friday, March 7, 2008

 

தொடர்விளையாட்டோ..பங்களிப்போ...நானும் வாரேன்!!

கண்மணியின் அழைப்பு...தொடர்விளையாட்டு...என்ன விளையாட்டு.
சின்னதில் பாடிய அர்த்தமுள்ள(!)பாடல்கள்.

எனக்கு ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!!

குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கு
பைய வேணா பாத்துக்கோ
பணத்த வாங்கிப் போட்டுக்கோ
சில்லறயை மாத்திக்கோ
சிலுக்கு சட்டை போட்டுக்கோ
ஜில்ஜில் ஆடிக்கோதோசையம்மா தோசை
அரிசிமாவும் உளுந்தமாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஒன்னு
அண்ணனுக்கு ரெண்டு
எனக்கு மட்டும் நாலு


காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு முட்டாயி
குண்டாங்குண்டாங் தலகாணி
குதிரை மேலே சவ்வாரி
ஏண்டியக்கா அழுகிறாய்
காஞ்சிபுரம் போகலாம்
ல்ட்டு மிட்டாய் வாங்கலாம்
பிட்டுபிட்டு தின்னலாம்
எங்க வீட்டு மாடியிலே
தாம்தூம் குதிக்கலாம்

டக்குடக்கு கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டிகுட்டி சுண்டெலிகள்
எட்டிஎட்டிப் பார்த்தனவே
டண்டண் என்றது கடிகாரம்
தாவி வந்தது கரும்பூனை
கண்டு மிரண்ட சுண்டெலிகள்
காற்றாய் பறந்து மறைந்தனவே
(hickary dickary dog..ன் மொழிபெயர்ப்பு மாதிரியில்ல?)

Labels:


Comments:
ஓகேவா? கண்மணி!
 
நல்லாயிருக்கு நானானி! :-)

//குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா
//

இத சைலண்டா வைச்சிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்குமோ!
 
வரணும் ஆயில்யன்!
எனக்குப் புரியலை! எப்படி? ஆனால் இப்படித்தான் பாடுவார்கள்.
 
சூப்பர் பாட்டுகள்...கலக்கிட்டிங்க..;))

எல்லா பாட்டும் புதுசாக இருக்கு..;))


\\குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா\\

இந்த பாட்டை கில்லி படத்துல வேற மாதிரி வரும் ;))
 
கோபிநாத்!
இதுதான் ஒரிஜினல். கில்லியில் வருவது இதன் ரீமிக்ஸ். பாடல் வரிகள் இடிக்கும் இடங்களில் இப்படி வட்டார வழக்குப் பாடல் வரிகளை இட்டு நிரப்புவதுதான் இப்போதைய ஸ்டைல்.
எங்கள் வீட்டு குழந்தைகள் இவற்றை பாடி ஆடும் போது உற்சாகமாயிருக்கும்..அதிலும் பெரியவள் கதை சொல்லும் பாங்கே ஓர் அழகு!பழைய பாடல்களை ஞாபகப்படுத்தி கொடுத்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆயினும் பாராட்டுக்கு வந்தனம்.
 
ஆஹா நானானி அருமை மறந்து போன பாட்டெல்லாம் இப்பத்தான் ஞாபகம் வருது.
அது டிக் டிக் கடிகாரம்தானே
ரொம்ப நன்றிம்மா.
 
இவ்வளவு நியாபகமா நனானி!
 
சந்தோசம்! கண்மணி!
ரெண்டாவது வரி...தட்டு நிறைய..
அதுக்கு முதல் வரி..டக்கு டக்கு என்றிருந்தால்தானே எதுகையும் மோனையும் கை கோக்கும்?
 
வரணும் டாக்டர்!
கொஞ்சம் ஞாபகம்...கொஞ்சம் பிள்ளைகளைக் கேட்டு...ரெண்டும் கலந்து செய்த பதிவு.
 
ஆகா - எஅன்க்கு ஒண்ணூமே நெனைவுக்கு வரலீயே - ஆம்பளப் பசங்களுக்கு பாட்டெல்லாம் நெனிவிலே இருக்காது இல்ல
 
ஆமாம்,சீனா!
அப்படித்தானோ என்னவோ?
பின்னோட்டங்கள் கொத்தும்குலையுமாக இட்டுவிட்டீகளே! சந்தோசம்!!
 
நானானி முதல் தொகுப்பு போட்டு விட்டேன்.
உங்க பாட்டுதான் முதல்;)
http://arumbugal.blogspot.com/2008/03/blog-post_07.html
 
நன்றி! கண்மணி!
முதலிடம் கொடுத்ததுக்கு.

'இதுவரை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா?'

பிள்ளைகளை கேட்டிருக்கிறேன்.
எவ்வளவு உற்சாகமாக ஞாபகப் படுத்தினார்கள்!!!
 
ஆகா நல்ல பாட்டுதான்..
என்ன இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் நியாபக சக்தி அதிகம் தான்...
 
கயல்விழி முத்துலெட்சுமி!
நான் ஒரு வரியை ஞாபகம் வைத்துக்கேட்டால் பிள்ளைகள் மடமடவென்று ஒப்பித்துவிடுவார்கள்.
ஆக்ஷனோடு ஒரு பாட்டிருக்கு அதையும் பதியப்போகிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]