Friday, March 7, 2008

 

பண்டாண்டா....எவண்டா அது?

மழலை மொழி படிக்கலாமா? அட்மிஷன் இலவசம்!!

ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாள் அண்ணன் மகளும் அவளின் இரு சுட்டிப்பசங்களும்.
மதியம் உணவு முடித்து நாங்கள் பெட்ரூமில் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

திடீரென்று ஆரம்பித்தான் சின்னவன் ஷன்னு. "பண்டாண்டா...பண்டாண்டா..!"
'என்னதுடா பண்டாண்டா' என்று அவன் அம்மாவும் என் மகளும் கேட்டனர்.

இருவரும் மாறிமாறி கேட்க கேட்க அவனும் 'ஆத்தா வையும் காசு கொடு..ஆத்தா வையும் காசு கொடு..' என்பது போல் 'பண்டாண்டா..பண்டாண்டா..' என்றே சொல்லிக்கொண்டிருந்தான்.

நான் இருவரையும் கம்முன்னு இருக்கச் சொல்லிவிட்டு, அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, 'கண்ணா! பண்டாண்டா எங்கேயிருக்கு? காட்டு பார்க்கலாம்?' என்றேன்.

அவன் கையாலேயே வழிகாட்டி என்னை இட்டுச் சென்ற இடம்...சமையலறை. அவன் காட்டிய பண்டாண்டா....அங்கு பழக் கூடையில் நமட்டு சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்த.....
ஒரு சீப்பு...'வாழைப்பழம்!!' பனானாவாம்!!!!

'பிள்ளைகளா!! இங்கு வந்து பண்டாண்டா பாருங்கோ...' என்று கூவினேன். இருவரும் வந்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். மறக்க முடியாத...'பண்டாண்டா!'


இதே போல் எங்க வீட்டு குழந்தைகளின் மறக்க முடியாத மழலைச் சொற்கள் சில:

fee துட்டு தா-----கண்டக்டர், விசில் அடித்து டிக்கெட்டுக்கு காசு கேட்பவர்.
ஏவோட சாஞ்சக்கா----என்னோட சாய்வு நாற்காலி
பீ இந்தோ-----எவ்வளவு அழுக்கானாலும் கையில் இடுக்கிக்கொள்ளும் தலையணை.
பூ நந்னை-----சாஃட்டான தலையணை.
பண்டாண்டா----வாழைப்பழம்
ஆஞ்சுப்பி-----விரல் சூப்பும் போது கையில் இடுக்கிக்கொள்ளும் துணி.
சாக்கா------சாக்லேட்

இன்னும் நிறைய இருக்கு. ஆனால் மறந்துடுத்து.

இந்த 'ஆஞ்சுப்பி'க்குப் பின் ஒரு சுவாரஸ்யமான கதையே இருக்கு!
பண்டாண்டா ஷன்னுதான் ஆஞ்சுப்பிப் பையன்.


இதுதான் 'ஆஞ்சுப்பி!'

எப்போதும் ஆஞ்சூப்பியும் கையுமாக அலையும் மூன்றரை வயது குழந்தை. என் பேரன் பிறந்த
பதினைந்து நாளில் st.louis-லிருந்து SFO-க்கு தன் பெற்றோர் மற்றும் அண்ணன் சகிதம் பார்க்க வந்திருந்தான். குட்டிப்பாப்பாவைப் பார்த்ததும் என்ன நினைத்தானோ தன் அம்மாவைப் பார்த்து ,"amma! i want to gift somthing to the baby." என்றான். "good what are you going to gift?"

"MY AANCHUPPI! I DO'NT WANT ANYMORE!" என்றானே பார்க்கலாம். அது இல்லாமல் அவனை சமாளிக்கப்பட்ட பாடு அவளுக்குத்தானே தெரியும். எப்ப எங்கே கேட்டாலும் கொடுக்கத்தோதாக கைப்பையில் ஒரு பிட், பாண்ட் பாக்கெட்டில் ஒன்று, அப்பாவின் பாக்கெட்டிலும் ஒன்று, கார் டஷ்போர்டில் ஒன்று என்று ஸ்டோர் செய்திருந்தாள். ஆச்சரியத்துடன் கேட்டாள், 'really? are you sure?' 'yea! i mean it!' என்றான் தோரணையாக.

அவனுடைய விலை மதிப்பில்லாத ஆஞ்சூப்பியை குட்டிப்பாப்பாவின் கையில் திணித்து அதை உபயோகிக்கும் விதத்தையும் பாப்பாவுக்கு அவன் டெமோ செய்து காட்டியது கண்கொள்ளாக் காட்சி!!!!!

அந்த ஆஞ்சூப்பியை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

Labels:


Comments:
//அவனுடைய விலை மதிப்பில்லாத ஆஞ்சூப்பியை குட்டிப்பாப்பாவின் கையில் திணித்து அதை உபயோகிக்கும் விதத்தையும் பாப்பாவுக்கு அவன் டெமோ செய்து காட்டியது கண்கொள்ளாக் காட்சி!!!!! //
மிக அழகு. நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.
 
ஆவோ!ஆவோ! சுல்தான்!
குழந்தைகளின் அன்புக்கு ஈடாக எதுவுமே கிடையாது. ஷுக்ரியா!
 
அச்சோ.. சோ க்யூட்ட்ட்!! :-) எங்க வீட்டு பண்டாண்டாவுக்குப் பேர் "பனினா"வா இருந்தது ஒரு காலத்துல :-)
 
சேதுக்கரசி!
ஆம்! அவன் சோ..ச்வீட்...சோ..க்யூட்.
 
ஆச்சி அது ஏனோ கைசூப்பும் குட்டீஸ் கையில் கண்டிப்பா ஒரு ஆஞ்சூப்பி இருக்கும்.கவனிச்சிருக்கீங்களா?

(நான் கை சூப்ப மாட்டேன். அதனால் என்கிட்ட நோ ஆஞ்சூப்பி :P )
 
காலையில் படித்த முதல் பதிவு.

யூ மேட் மை டே.

ரசித்தேன்.

இங்கே பண்டாண்டாவுக்கு 'யானை'விலை:-))))
 
நிலாக்குட்டி.....!
சமத்துடா செல்லம்! அப்போ உன் பல்லெல்லாம் ஒழுங்காக இருக்கும். அப்டித்தானே?
 
துள்சி!
உங்கள் நாளை நல்லதாக ஆரம்பித்து வைத்த பண்டாண்டாவுக்கு டாங்ஸ்!
யானை விலை விற்றாலும் உங்கள் ஆனைக்குப் பிடித்தது அதுதானே?
வாழைப்பழம் கொடுத்தால் தோலை உரித்து பழம் மட்டும் சாப்பிடும் திருச்செந்தூர் யானை பார்த்திருக்கிறீர்களா? அதுக்காகவே நிறைய கொடுப்பேன். ஆனால் பாகன் விடமாட்டார். அதன் வயுத்துக்கு ஒத்துக்காதாம்!
 
:))
 
நானானி,
மழலையை விட இனியது ஏதாவது உண்டா.
அதுவும் உங்க பேரன் அருமையாச் செய்து வேற காட்டினானா.

எங்க வீட்டிலிம் ஒரு அழுக்கு டெடி பேர், அதைவிட அழுக்குத் தலயணை எல்லாம் இருந்தது. அதைப் பிடிச்சுகிட்டு வாயில விரலையும் போட்டுக் கிட்டவங்க இப்ப அதையெல்லாம் ஞாபகப் படுத்தினால் கூட மறுப்பார்கள்:)
 
சரி..சரி..கொத்ஸ்! ஒரு மாரியா போங்க!
 
வல்லி!
அப்படி வாங்க வழிக்கு...யார்யார் வீட்டில் என்னென்ன மாதிரி ஆஞ்சுப்பிகள் என்று ஒவ்வொண்ணா..ஒவ்வொண்ணா வெளிவரும், பாருங்க.
அழுக்க தலையணை,ட்ர்டிபேர் எல்லாம் பத்திரமாயிருக்கா?
குழந்தைகள் பற்றி பேசினால் சந்தோஷம்தானேப்பா!
 
என்னோட மக ரெண்டாங்கிளாஸ் படிச்சப்போ - ஒரு நா பள்ளியிலேந்து வந்த உடனே சொன்னது :

அம்மாம்மா - நாளைக்கி எனக்கு பீ ஏ எல் எல் (BALL) மா நாளைக்குன்னா

என்னடின்னு கேட்டா - நாளைக்கு பந்தாம் (Bundh) - பள்ளி லீவாம். - mmmmmm
 
ஆகா! அருமை சீனா!
பந்து...பந்த்!!!!
குழந்தைகளின் கற்பனை கடலளவு வானளவு விரிந்தது. நமக்கே தெரியாத, யோசிக்காத சில விஷயங்கள் சுலபமாக மழலை மூலம் சொல்லி புல்லரிக்க வைத்துவிடுவார்கள்.
உங்கள் வீட்டு மழலை மொழிகளையும் ஒரு பதிவாகப் போடலாமே!
 
நானானி, மழலைச் செல்வங்கள் வளர்ந்து மழலையர்க்குத் தாயாகி விட்டனர். இம்மழலையரோ அயலகத்தில். ஆண்டுக்கு ஒரிரு மாதங்களே இந்தியா - அவர்களுக்கு இங்கு ஆயிரம் வேலை. எங்களோடி இருப்பதோ மிகக் குறைவு. இது இயந்திரமாய் இயங்கும் காலம் அவர்களுக்கு. இருப்பினும் மழலைகள் சாட், தொலைபேசி, மற்றும் அவ்வப்போது யார் மூலமாவது செய்திகள், நாங்கள் அங்கு செல்வது போன்றவற்றால் தொடர்பு இருந்து கொண்டு இருக்கிறது.

ஒரு நாள் காலையில் பேத்தி அய்யா உனக்கு ஆங்கிலம் தெரியுமா என்று ஆங்கிலத்தில் கேட்டாளே பார்க்கலாம்.

மற்றொரு நாள் " I want to law - I want to law " ன்னு திருப்பித் திருப்பிச் சொன்னா - எங்களுக்கு ஒண்ணுமே புரிலே. அப்புறம் அவ அம்மா வந்து சொல்றா - She wants to DRAW nu

எப்படி இருக்கு ?
 
இதை..இதை...இது மாதிரித்தான் எதிர்பார்த்தேன் சீனா!!!
மழலை மொழி கேட்கையிலே இன்பத் தேன் வந்து பாயுமே காதினிலே!!!
 
9-west.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading 9-west.blogspot.com every day.
guaranteed bad credit loans
payday advance
 
Anony,
Thank you for reading and complementing my blog. expecting more comments on other posts too!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]