Sunday, February 24, 2008

 

எங்காத்துக்காரியும் படிக்கப்போனாள்!!

உள்ளூக்குள் ஆசையும் ஆர்வமும் பொங்கிவழிந்தால் எந்த வயதிலும் படிக்கலாம். சமீபத்தில் பத்திரிகையொன்றில் 90-வயது மூதாட்டி ஒருவர் உலகில் இருக்கிற பட்டப்படிப்பெல்லாம் படித்து முடித்து முதலாவதாக தேறி எல்லோரையும் பிரமிக்க வைத்தார். அவரிடம் எதிர்காலக்கனவு(!?)என்னவென்று கேட்டபோது.... சொந்தமாக பிசினஸ் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று சொல்லி அதிபிரமிக்கவைத்தார்!!!!

பெரிய கனவென்று ஒன்றுமில்லை. ஆனால் ஜாக் ஆஃ ஆல் டிரேட் ஆக இல்லாவிட்டாலும் மாஸ்டர் ஆஃ நத்திங் ஆகவாவது இருக்கலாமென்ற எண்ணம்தான். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றதும் வீட்டில் சும்மா பொழுது போக்கிகொண்டிருந்த என்னை ஏதாவது கோர்ஸ் போகிறாயா என்று கேட்டார் ரங்கமணி. ஓஓஓஓஓஓஓஓஓஒகே! என்றேன்.

மறுநாளே கம்ப்யூட்டர் கோர்ஸுக்கும் இண்ட்டீரியர் டிசைன் கோர்ஸுக்குமான விண்ணப்பபாரங்களோடு வந்தார். கம்ப்யூட்டர் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன், அடுத்த கோர்ஸ் கொஞ்சம் வரைய வருமென்பதால்.

முதலில் கம்ப்யூட்டர் கோர்ஸ் தேர்ந்தெடுத்தேன். திநகரில் 'கம்ப்யூட்டர் பாயிண்டில்' நுழைவுத்தேர்வு. ஒரு ஹாலில் அமர வைத்து கேள்வித்தாளை கொடுத்துவிட்டு போய்விட்டார்
ஆசிரியர். கேள்விகளை மேய்ந்ததில் எல்லாம் அப்ஜெக்டிவ் கேள்விகள். கொஞ்சம் லாஜிக்கலாகயிருந்தது. பேப்பரை கொடுத்துவிட்டு வெளியே காத்திருந்தேன்.

இன்ஸ்ட்ரக்டர் வெளியே வந்து 'குட்!' என்று சொல்லி அட்மிஷனை உறுதி செய்து, பணம் கட்டிவிட்டு மறுநாளிலிருந்து வரச் சொன்னார்.

மறுநாள் என்னை திநகரில் விட்டுவிட்டு அம்பத்தூர் சென்றுவிட்டார். வகுப்பில் நுழைந்தேன்.
இளம் பெண்களும் பையன்களுமாக இருக்க 'நானொருவள் மட்டிலும்' பேரிளம் பெண்!!ஹி..ஹி..!

எல்லோருக்கும் பொதுவாக ஒரு 'ஹாய்!' சொல்லிவிட்டு இருக்கையிலமர்ந்தேன். ஸ்ஸர் வந்து ஒரு கம்ப்யூட்டருக்கு இருவர் வீதம் அமரச்சொன்னார். என்னருகில் மாலதி என்ற 20வயதுப்பெண் இருந்தாள். முதலில் அனைவரும் என்னை 'ஆன்டி..ஆன்டி..'என்றே அழைக்கவாரம்பித்தனர். ஆகா...! இது சரிப்படாதே! நம்மோட நண்டு மணியடித்தது.

நானே என்னோட மனவண்டியில் ரிவர்ஸ் கியர் போட்டு என்னோட 22-ஆவது வயதுக்குப் போயிருந்தேன். மறுபடி கல்லூரி நாட்களுக்குள் நுழைந்தாற்போன்ற ஒரு புத்துணர்வு!!!!! ஆன்டியாவது..?
பிள்ளீங்களா!!என்னை நீங்கள் 'நானானி' என்றே அழைக்கலாம். அதுதான் எனக்கும் பிடிக்கும் என்றேன். ஓகே! நானானி! உங்களை அப்படியே கூப்பிடுகிறோம்!' என்றார்கள் கோரஸ்ஸாக.

பிறகென்ன? என்னோட நக்கல், நையாண்டி,கடிஜோக்ஸ் மூலம் அவர்களில் ஒருத்தியாக என்னை இணைத்துக்கொண்டேன்.....இணைத்தும் கொண்டார்கள். 'நானானி! இப்போதே இப்படியென்றால் கல்லூரி நாட்களில் எப்படி கலக்கியிருப்பீர்கள்? ' என்றார்கள் இப்போதும் நான் அந்நாட்களில்தான் இருக்கிறேன் என்றேன்.

முதல் சிறிது நாட்கள் இப்படி கலகலவென்று ஓடியது. பிறகு சீரியஸ்ஸாக பாடம் படிக்கவாரம்பித்தோம்.

பெரிய எக்ஸ்பர்ட் ஆகும் அளவுக்கு நமக்கு சரக்கு இல்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் ஆபரேட் செய்வது, சின்னச்சின்ன ப்ரோக்ராம் எழுதுவது என்று கற்றுக்கொண்டேன். நமக்கு அது போதும்.

எனக்கும் மாலதிக்குமான ப்ராஜெக்ட் லைப்ரெரி மானேஜ்மெண்ட். கொஞ்சம் திணறித்தான் போய்விட்டேன். அக்கா பையன் வந்து வந்து உதவிகள் செய்வான். மாலதியும் அவனிடம் நிறைய கேட்டுத்தெரிந்து கொள்வாள்.

ஒருவழியாக மாலதி புண்ணியத்தில் ப்ராஜெக்ட் முடித்து..முதல் வகுப்பில் தேறி சர்டிபிகேடோடு வெளிவந்தேன். மறக்க முடியாத அனுபவம்!!!

அடுத்து நான் படையெடுத்தது Exterior Interior Institute ராதாகிருஷ்ணா சாலையில் நீல்கிரீஸ்-க்கு எதிரே ஒரு சந்தில் இருந்தது. வாரம் மூன்று நாட்கள். அப்போதிருந்த ஆர்வத்தில் மின்சார ரயில் பிடித்து கிண்டி வந்து அங்கிருந்து 45B பிடித்து போவேன்.

அங்கும் இதுபோல் ஒரு நுழைவுத்தேர்வு. என்னை தயக்கமாய் ஒரு பார்வை பார்த்தார், ஆசிரியர். ரங்கமணி நன்றாக வரைவாள் என்று எடுத்துக்கொடுத்தார். ஒரு பேப்பரும் சில அளவுகளும் கொடுத்து வரையச் சொல்லிவிட்டு வகுப்புக்கு சென்றுவிட்டார். ரங்கமணியும் அலுவலகம் போய்விட்டார். தனியே தன்னந்தனியே நான் மட்டும் அந்த அறையில். கொடுத்த அளவைக்கொண்டு, ஸ்கேல்,பென்சில்,போர்டு, டி-ஸ்கோயர் ஆகியோர் உதவியோடு வரைந்து முடித்தேன். அதன் நேர்த்தியைக்கண்டு திருப்தியாகி உடனேயே வகுப்புக்குப் போகச் சொன்னார்.

வகுப்பில் நுழைந்தால் அங்கு எல்லா வயதினரும் கலந்தடித்து இருந்தார்கள். ஹாய்!..ஹாய்! என்று அறிமுகப்படலம் முடிந்தது. கணினி வகுப்பைவிட இது பிடித்திருந்தது.

ஒருவகுப்பில் ஸ்ஸர், ஒரு செல்லைக்குடுத்து(சுவர்கள் மட்டுமே உள்ள அறை) அதில் என்னவெல்லாம் இருக்கவேண்டுமென்று சொல்லி ஒவ்வொருத்தர் கற்பனைக்கும் ஏற்ற டிசைன் வரையச்சொன்னார். இடையில் என்ன சந்தேகமும் கேட்கலாமென்றார். எல்லோரும் கேட்க நான் மட்டும் தயங்கியவேறே இருந்தேன்.

இப்படிக்கேட்டால் சிரிப்பார்களோ? என் தயக்கத்தைப் பார்த்து,'நானானி! தயங்கவேண்டாம். எவ்வளவு முட்டாள்தனமாக(!) இருந்தாலும் கேள். இம்மாதிரி சந்தேகங்களிலிருந்துதான் நல்ல நல்ல டிசைன்கள் உருவாகியிருக்கின்றன. so don't think is it possible...is it possible. in designing field...NOTHING IS IMPOSSIBLE EVERYTHING IS POSSIBLE!!!'என்றார்.


NOTHING IS IMPOSSIBLE EVERYTHING IS POSSIBLE!!!

என்னவொரு தன்னம்பிக்கைதரும் உற்சாகம் ஊட்டும் சத்தியமான வாக்கியங்கள்!!!
டிசைனிங்க்குமட்டுமல்ல வாழ்கைக்கும் ஏற்ற புத்துணர்ச்சி தரும் டானிக்!!!

இப்பதிவை எழுத என் மனக்கிணறையும் தூர்வார்த்த துளசி கோபாலுக்கு நன்றி!
ஒரு பத்து நாட்கள் ஊரிலிருக்கமாட்டேன். என்னைத்தேடவேண்டாம்(!?) யாரோ தேட்ரா மாரிததான் நெனெப்பு!!ஹி..ஹி..
வந்து சந்திக்கிறேன்.

Labels:


Comments:
கறபதற்கு வயதுத்தடையில்லை என்பதை நீங்க நிருபிச்சிருக்கீங்க,

இங்கே எனக்குத்தெரிந்த ஒரு ஆண்டி.

55 வயதுதான். psychologyil M.Sc
செய்து கொண்டிருக்கிறார்.

நீங்களூம், இந்த ஆண்டியும் எங்களைப் போன்றவர்களுக்கு ரோல் மாடல்கள்.

வாழ்த்துக்கள்.
 
ஆஹா............. கொசுவத்தி ஏத்தியாச்சு!!!!

இந்த எவ்ரி திங் ஈஸ் பாஸிபிள் எங்க வீட்டுக் கிச்சன் டிசைனர்'கிங்'சொல்லிக்கிட்டே இருப்பார்.

10 நாள் ரீசார்ஜிங்?

வெரி குட்.

நிதானமா வந்து சேருங்க.
 
புதுகைத் தென்றல்!
ஹையோ! ரோல் மாடல்லாம் வேண்டாங்க. நானெல்லாம் ரோடுரோலரில் உருட்டியெடுத்த ஒரு உப்புக்கு 'சப்பை' மாடல்.
நாந்தான் எதுவும் சாதிக்கவில்லையே.
படிக்கும் காலத்திலும் சரி இப்போதும் சரி படித்தெல்லாம்...ச்சும்மா!!!!
 
ஆமா..துள்சி!
அடடா..இப்போதான் என் கிச்சனை ரெனொவேட் செய்தேன். தெரிந்திருந்தால் உங்கூட்டு 'கிங்கிடம்'
ஆலோசனை கேட்டிருக்கலாமே.
 
நானானி - நல்லதொரு பதிவு - படிங்க படிங்க - படிச்சுக்கிட்டே இருங்க - சந்திக்கிறோம்
 
நானானி மேடம்,

உங்கள் ஆர்வமும், ஈடுபாடும் எல்லோருக்குமே ஒரு ஊக்கமருந்து. வாழ்த்துக்கள். நீங்க படம் வரைவேன் என்று சொன்னீங்க இல்லியா, நானும் கொஞ்சம் வரைவேன். உங்க அளவுக்கு கண்டிப்பா இருக்காது. ஏதோ பொழுது போக்குறதுக்கு வரையறது. எனக்கும் அது சம்பந்தமா படிக்கணும் என்று ஆர்வம் தான். இந்த அமெரிக்காவுல வந்து ஒக்காந்ததுல இருந்து, வேலை, வீடு, வேலை என்று ஓடுகிறது வாழ்க்கை. உங்க வயசுல தான் நானும் இந்த மாதிரி படிக்கப் போறேனோ என்னவோ ? :)))
 
சீனா!
இனி எங்கே படிக்கிறது? வலையில்தான் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
 
சதங்கா!
எதை வைத்து //உங்க அளவு//என்கிறீர்கள்? நானும் சுமாராகத்தான் வரைவேன்..உங்க அளவு வரைவேனா? தெரியாது. ரைட்டா?
அமெரிக்காவிலும் கூட வீடு வேலைக்கு நடுவில் ச்சிறிது கேப் கிடைக்குமே!?
வரைங்க..வரைங்க..வரஞ்சுக்கிட்டேயிருங்க....வர்ட்டா?
 
நானானி மேடம்,

நீங்க வரைந்த படங்களை வலை ஏற்றுங்கள். பாடம் படித்தேன் என்று சொன்னிங்கல்ல, அதை வைத்து நல்லா வரைவீங்க என்று ஒரு எண்ணம். அதான்.

அப்புறம், கிடைக்கிற கேப்புல வரையலாம்னா, நம்ம ஆட்டைய கலைக்க வீட்டுல ரெண்டு குட்டீஸ் இருக்குதுங்க ;‍) சில மாதங்களுக்கு ஒன்னு வரையறதே பெரிய விசயமா இருக்கு.
 
நிச்சயம் நான் வரைந்த படங்கள் சில வலையில் போடுகிறேன். உங்கள் ஆசையையும் கெடுப்பானேன்?!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]