Thursday, January 24, 2008

 

ஏனெனக்கு மட்டும் இப்டி நடக்குது?

எனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதா..? இல்லை எல்லோருக்குமே இப்படித்தான் நடக்குதா?
இது ஒரு வகையான 'என்ன கொடுமை இது? சரவணன்?'

அவசரமாக எங்காவது போக ஆட்டோ பிடிப்பேன். ஆட்டோ சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று பெட்ரோல் பங்கில் போய் நிற்கும். நம்ப கிட்டையே ஐம்பது ரூபா வாங்கி ஆட்டொவின் தாகத்தை தணிப்பார். என்னான்னால் 'அம்மா...போணிம்மா!' என்பார். நம் அவசரம் புரியாமல்.

சரி ஆட்டோ வேண்டாம் டாக்ஸி பிடிக்கலாம் என்று போன் செய்து வரவழைத்தால்...அதுவும் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று பெட்ரோல் பங்கில்தான் போய் ப்ரேக் அடித்து நிற்கும்.என்னாப்பா என்றால்,'காலையிலிருந்து வண்டி ஷெட்டில்தான் நின்னுது. இதுதான் முதல் சவாரி.' என்பார் நம்மிடமே பெட்ரோலுக்கு ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டே.

பெட்ரோல் போட்டுவிட்டே வந்திருக்கலாமே என்றால்...பக்கத்தில்தான் உங்க வீடு பங் தள்ளியிருக்கிறது அதனால் வழியில் போட்டுவிட்டே போகலாமென்று வந்துட்டேன்.' என்பார் சாவகசமாக. நொந்துடுவேன்.

புதுப்புது வகையான உணவு வகைகளை சாப்பிட்டுப்பார்ப்பதில் விருப்பம் உண்டு. காரணம் வீட்டில் வந்து செய்துபார்க்கலாமே என்றுதான். அடிக்கடி ஹோட்டல்கள், ரெஸ்டொரண்ட்கள் போய் அமர்ந்து சாவகாசமாக மெனு கார்டை வாசித்து நமக்கு தெரியாத, இதுவரை ருசிக்காத ஐட்டமாக தேர்ந்தெடுத்து சர்வரோ அல்லது ஸ்டூவர்டோ அழைத்து குறிப்பிட்ட உணவு வகையை சொல்லி கொண்டுவரச் சொன்னால்....'சாரி! மேடம்!
அது இல்லை' என்றோ அல்லது 'காலியாகிவிட்டது' என்றோ சொல்வார்.. சர்வர் சுந்தரம் மாதிரி!! அப்போது நம் மூஞ்சியில் மூணாம் பேஸ்து அடிச்சிருக்கும்!!

ஜவுளிக்கடைகளிலும் இதே கதைதான்! புடவைகளையெல்லாம் இழுத்துப் போட்டு விட்டு, 'இந்த கலரில் இந்த பார்டர் வைத்து இருக்குதா? சின்ன பார்டர் வைத்து இருக்குதா? வித்தியாசமான காம்பினேஷனில் கிடைக்குமா?...நமக்கு கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி! என்று கடைக்காரரை குடைந்தெடுத்தால் அவர், 'முந்தா நேத்துதான் நீங்கள் கேட்ட மாதிரி மூன்று புடவைகள் வந்தன,
ரெண்டு போயிடுச்சு. ஒன்றுதான் இருக்கு.' என்பார். அவர் நமக்கு மேல் லொள்ளர்!!!!!

இப்படி எங்கு போனாலும் எனக்கேன் இப்படி நடக்குது? 'என்ன கொடுமையிது முருகா..குமரா..சரவணா?

உங்களுக்கெல்லாம் எப்படி? ஷொல்லுங்களேன்!!!!!!!!!!

Labels:


Comments:
பஸ்க்கு காத்திருக்கும் சமயத்தில், நாம போகும் இடத்திற்கு எதிர் திசையில் நிறைய பஸ்கள் போகும். அது போலதான் நீங்க சொல்லியிருக்கும் சில விஷயங்களும்.


அது சரி, அதென்ன "மூணாம் பேஸ்து". முன்னமும் ஒரு முறை யாரிடமோ கேட்டேன், ஆனா சரியான விளக்கம் கிடைக்கவில்லை. நீங்களாவது கூறுங்களேன்.
 
எனக்கும் சரியான அர்த்தம் தெரியவில்லை. சென்னை பாஷையில்
'அசடு வழிவது' என்று நினைக்கிறேன்.
 
இதேபோல எனக்கு நடப்பதையும் சொல்லியிருக்கிறேன்.
http://boochandi.blogspot.com/2007/12/blog-post_30.html
 
எங்களுக்கும் அப்படித்தான் நடக்குது...சரி காசுகொடுத்து போற டாக்சிக்காரன் தான் அப்படி செய்யறான்னா.. என் வீட்டுக்காரர் அதுக்கும் மேல.. கண்டிப்பா காரில் எங்களை ஏத்திக்கிட்டு தான் பெட்ரோல் போடனும்.. டயர்ல காத்து அடிக்கனும் ஏடிஎம்ல பணம் எடுக்கனும்ன்னு நிறுத்திநிறுத்தி போவாங்க... அது முதல்நாள் ஆபிசில் இருந்து வரும்போது செய்திருக்கலாம் இல்ல.. என்னவோ போங்க நமக்கு மட்டும் ஏங்க இப்படி எல்லாம் நடக்குது ????
 
ச்சின்னப்பையன்!
பூச்சாண்டி என்ற பேருக்கேற்ப 'தோ!!பூச்சாண்டி வருது' என்று நினைப்பிலேயே ஒவ்வொரு காரியமும் செய்யப்போனால் பூச்சாண்டிதான் வரும். எது வந்தாலும் ஓகே என்று போய்க்கொண்டேயிருங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
வாழ்த்துக்கள்! எதற்கா? புத்தாண்டுக்கு பொங்கலுக்கு.
 
ஆஹா! முத்துலெட்சுமி!!
இதெபோல்தான் ரங்கமணியும். தனக்கு ரெண்டு மூன்று வெளிவேலைகள் வைத்துக்கொண்டு என்னிடம் வந்து. நீ ஏதோ அந்தக்கடையில் வாங்கவேண்டுமென்றாயே' நைசாக அழைப்பார்.ஹையோ! என்ன அக்கரை என்று நானும் வலையில் விழுந்துவிடுவேன். தன் காரியங்களை என் துணையோடு..'பேனா கொடு, இதை எழுதிக்கொடு என்று எடுபிடிவேலைகளை வாங்கிக்கொண்டு, என் வேலையை டயர்டாக இருக்குது. நாளைக்கு பார்த்துக்கொள்ளலாமே? என்று வீடு திருப்பிவிடுவோம்.
கீதாம்மா மாதிரி ஒரே
நறநறநற...தான் காதிலிருந்து புகை மண்டலம்தான்.
 
எல்லாருக்குமே இது மாதிரி தான் நடக்குதுன்னா.. ஒரு வேளை இப்படி தான் நடக்கனுமோ? :-)
 
யாருக்குத்தெரியும்! காட்டாறு?
ஒருவேளை விதி நமக்கு நல்லவைகளை வகுத்துக்கொடுக்கிறதோ? என்னமோ? தடங்கல்களை நான் அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.
 
சிரிக்கத்தான் தோன்றுகிறது...
ம்ம்.
எல்லோறுக்கும் இப்படி ஒரு நிலைமை வருவது உண்டுதானே நனானி.
 
Murphy's Law கேள்விப்பட்டிருக்கீங்களா? "If anything can go wrong, it will".

http://en.wikipedia.org/wiki/Murphy's_law
http://www.murphys-laws.com

படிச்சுப்பாருங்க, ரொம்ப சுவாரசியமா இருக்கும்.
 
நானானி,
நான் இப்ப எல்லாம் பெருமாள்புரத்திலிருந்து நெல்லை ஜங்ஷன் போக நாலு வேலை இருந்தால்தான் போகிறேன். பெட்ரோல் விலை என்ன தெரியுமா? நாம் கொஞ்சம் சீக்கிரம் புறப்பட வேண்டும்.

மதுரையம்பதி,
முதல் தேதி என்று ஒரு படம். அதில் கலைவாணர் (பெரிய கலைவாணர்தான்) "ஒண்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம், இருபத்தொண்ணிலிருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்" என்று ஒரு பாட்டு பாடுவார். முழுமையாக நினைவில்லை. ஒரு வரி- "பிறகு மூணாம் பேஸ்து விழுந்தது போலே முகம் தூக்கிடும் இருபத்தொண்ணிலே". அப்ப இருந்து நானும் இதற்கு அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறேன்.

முத்துலெட்சுமி,
ஆபீசிலிருந்து வீடு திரும்பும் கணவரிடம் ஏன் லேட் என்று கேட்டால் அவர் பெட்ரோல் போட்டு, ட்யர் காத்து செக் பண்ணி, ஏடிம்-இல் காசு எடுத்து வருகிரேன் என்றால் சரி என்பீர்களா?

சகாதேவன்
 
டெல்ஃபின்,

அப்படித்தான் தோன்றுகிறது, டாக்டர்.
 
சேதுக்கரசி,

படித்தேன்..ரசித்தேன்.
 
கயல்,

சகாதேவன் கேள்விக்கு உங்க பதில் என்ன? சொல்லுங்க.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]