Sunday, January 6, 2008

 

புத்தாண்டின் சபதம்..அது பொல்லாத சபதம்

கீதாம்மா என்னை புது வருட சபதம் எடுத்துக்கொண்டு பதிவிட அழைத்திருக்கிறார்கள். அழைப்பு எதானாலும் மறுக்கக்கூடாதல்லவா?

ஆகவே எடுத்த ஒர் உடனடி சபதத்தை ஒலிம்பிக் டார்ச் போல கையிலேந்திக் கொண்டு ஓடோடி வந்தேன். உஸ்..உஸ்..ஒன்றுமில்லை மூச்சு வாங்குகிறது.

வாழ்கையில் இது வரை சபதமெல்லாம் எடுத்ததில்லீங்க. ஏன்னா..அது ரொம்பப் பொல்லாததுங்க. திடீர்ன்னு நம்பள கவுத்துடும். 'எடுத்த சபதம் முடிப்பேன்!' என்று அண்ணாமலை ஸ்டைலில் நம்பளாலெல்லாம் முடிக்க முடியாதுங்க. காரணம் குடும்பம், நேரம்காலம், சூழ்நிலை, ஒத்துழைப்பு இதெல்லாம்தாங்க.

நிறைய சபதங்கள் எடுத்து பாதியிலேயே முறிந்திருக்கிறது. ஆகவே சபதமே எடுக்கக் கூடாது என்றுதான் இதுவரை சபதமெடுத்திருந்தேன். இப்போ கீதாம்மா அழைத்துவிட்டார்களே! அழைத்தவர் குரலுக்கு கண்ணன் மட்டும்தான் வரவேண்டுமா? இந்த நானானியும் வந்துட்டாள்!!

யாருக்கும் தொந்தரவு இல்லாமல், யாரையும் தொந்தரவு செய்யாமல் என்னால் எடுக்கக் கூடிய சபதம்..'ப்ளாக்கில் எழுதுவதை நிறுத்தக் கூடாது. தொடந்து எழுதி எல்லோரையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும்.' இதுதான் என் புத்தாண்டு சபதம்!!!

இது முறியாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நான் வணங்கும் அந்த ஆதிபாராசக்தியின் பொறுப்பு! ஆமாம்!! சரியான கைகளில் பொறுப்பை கொடுத்த நிம்மதியில் என் எழுத்தை தொடர்வேன்.

என் சபதம் ஓகேயா? கீதாம்மா?

இனி நான் சபதமிட நான் அழைக்கும் நால்வர்:

மைஃரெண்ட்
முத்துலெட்சுமி
ரசிகன்
சீனா

Labels:


Comments:
புத்தாண்டு சபதமா? அப்படின்னா என்னாங்க? அதையும் நானும் எழுதனுமா? நடக்குற காரியமா இது? ஹீஹீஹீ
 
என்னங்க..என்னையே எழுத வெச்சுட்டாங்க...உங்களுகெல்லாம் இது
ஜுஜூப்பி!!
 
அய்யய்யே - சபதம் எடுத்தா நிறைவேத்தனும் - முடியாது - காரணம் சொல்லிட்டீங்க - அப்புறம் கடவுள் மேலெ பாரத்தப் போட்டுட்டு சபதம் எடுத்துட்டீங்க . என்ன என்னத்துக்கு அழைச்சீங்க - என்னாலே மட்டும் சபதம் போட முடியுமா என்ன - அப்படியே போட்டுட்டாலும் அதெ நெறைவேத்த வேணாமா

sari sari - ithaip paarungka

http://pathivu.madurainagar.com

ரசிகனோட டாக்கிலே மாட்டிக்கிட்டு நான் எழுதுன பதிவு
 
பாத்துட்டேன் சீனா!
இருந்தாலும் கடைப்பிடிக்கக் கூடிய சபதம் ஏதாவது எடுங்களேன்..என்னை மாதிரி.
 
\\யாருக்கும் தொந்தரவு இல்லாமல், யாரையும் தொந்தரவு செய்யாமல் என்னால் எடுக்கக் கூடிய சபதம்..'ப்ளாக்கில் எழுதுவதை நிறுத்தக் கூடாது. தொடந்து எழுதி எல்லோரையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும்.' இதுதான் என் புத்தாண்டு சபதம்!!!\\

நானும் ஒரு ரெண்டு வருஷமாக ட்ரைப் பண்றேன்..ஒன்னும் முடியலை...உங்களுக்காவது நடக்குதான்னு பார்ப்போம்...;)))

வாழ்த்துக்கள் ;)
 
அதென்ன புத்தாண்டு? டிசம்பர் 31 காலை எப்படி விடிந்ததோ அப்படித்தான் ஜனவரி 1 அன்றும் பிறந்தது. நாளிதழில் சாலை விபத்து, பாலியல் பலாத்காரம், வீடு புகுந்து கொள்ளை, போன்ற செய்திகள் வராமலிருந்ததா? நான் என்ன சபதம் எடுப்பது என்று தெரியவில்லை. புத்தாண்டு கொண்டாட்டம், விடுமுறை எதுவுமில்லாமல் இந்த ஆண்டு நல்லபடியாக முடிய வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்.
சகாதேவன்
 
சரி தான். சபதம் நல்லா தான் இருக்குது? நம்ம மக்களுக்கு எதையும் தாங்கும் இதயம். எழுதித் தள்ளுங்க. ;-)
 
//யாருக்கும் தொந்தரவு இல்லாமல், யாரையும் தொந்தரவு செய்யாமல் என்னால் எடுக்கக் கூடிய சபதம்..'ப்ளாக்கில் எழுதுவதை நிறுத்தக் கூடாது. தொடந்து எழுதி எல்லோரையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும்.' இதுதான் என் புத்தாண்டு சபதம்!!!//

அருமையான சபதம், நிறைவேற வாழ்த்துக்கள், அப்பாடா, களைப்பா இருக்கு, நேத்திலே இருந்து உங்க பதிவுக்கு முதல் ஆளா வர முயற்சி பண்ணி, இப்போத் தான் வர முடிஞ்சது. முதல்லே இதுக்கு நான் ஏதாவது சபதம் எடுக்கலாமான்னு யோசிக்கிறேன். :))))))
 
சகோதரி, சபதப் பதிவு போடப்பட்டது.

http://cheenakay.blogspot.com/2008/01/blog-post_15.html

பார்வையிட அழைக்கிறேன்
 
நீங்கள் விடுத்திருப்பது வேண்டுகோள் அல்லது பிரார்த்தனை சகா! நான் சொன்னது தொடையைத் தட்டி மீசையை முறுக்கி எடுக்க வேண்டியது.
பிரியுதா? (நான் தொடையையும் தட்டவில்லை மீசையையும் முறுக்கவில்லை.ஹி..ஹி..)
 
காட்டாறு...இத்தானே வொணான்றது?
நானென்ன அவ்ளோ கனமான சபதமா எடுத்திருக்கிறேன்?
 
கீதா! நன்றி! ஆனா எந்த நேரம் சபதமெடுத்தேனோ? நெட் தொல்லை,உடம்புத்தொல்லை. அடுத்த பதிவு இன்னும் போடவில்லை.
இது பற்றியே தனி பதிவிடயிருக்கிறேன்.
வுட மாட்டேனே!
 
என்ன என்னோட பதிவெ இன்னும் பாக்கலியா - பாருங்களேன்

http://cheenakay.blogspot.com/2008/01/blog-post_15.html

நன்றி
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]