Wednesday, November 28, 2007

 

வத்தக்கொழம்புப்பொடி...செய்யலாமா?

செய்வோமா? குழம்புப்பொடி!
தேவையானவை:
விதைக் கொத்தமல்லி----250 கிராம்
துவரம்பருப்பு---------- 75 கிராம்
அரிசி-------------------75 கிராம்
ஜீரகம்-------------------75 கிராம்
மிளகு-------------------75 கிராம
வெந்தயம்----------------50 கிராம்
கொத்தமல்லியை தனியாக வெறும் கடாயில் வறுத்துக்கொண்டு, பிறகு மற்றவற்றையும் அதேபோல்
வறுத்துக்கொள்ளவேண்டும். லேசாக வாசனை வரும் வரை.
காய்ந்த மிளகாய்---விருப்பத்துக்கேற்ப---150 அல்லது 200 கிராம்
கறிவேப்பிலை மிளகாய்க்கு சமமாக.
இவை இரண்டையும் கடாயில் தேவையான எண்ணையூற்றி மொறுமொறுவென்று வறுக்க வேண்டும். சிறிது ஆறியதும் மெஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த சூடு ஆறியதும் பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகிக்கலாம்.

இதுவே வத்தக்கொழம்புப்பொடி.
பெரியவர்களும் குழந்தைகளும்....சாரி..சாரி.. பழக்கதோஷம்.
வாய்க்கு வொணக்கையாக, காரமாக சாப்பிடும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எலுமிச்சையளவு புளி கரைத்துக்கொண்டு இந்தப்பொடி 4-5 கரண்டிகள் + மஞ்சள் பொடி 2 கரண்டிகள் + தேவையான உப்பு சேர்த்து கலக்கி அதோடு ஒன்றிரண்டாக அரைத்த சாம்பார் வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லியும் சேர்த்து பாத்திரத்தில் வெந்தயம் பொறித்து குழம்புக் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
இதற்கு பொறுத்தமான காய்கள்...பூண்டு, முருங்கக்காய்-கத்தரிக்காய், ஊறவைத்து வேகவைத்த
மொச்சை இன்னும் கைக்கு கிடைத்த காய்கள் எல்லாமும். குழம்பு விரும்பி ஏற்றுக்கொள்ளும்.

இதை நான் பூண்டு போட்டு கன்டென்ஸ்டாக செய்து வைத்துக்கொள்வேன். முடியாத நேரத்தில்
கை கொடுக்கும்.

Labels:


Comments:
புளிக்குழம்புப் பொடி செய்து பார்த்து சொல்லுங்கள்.
 
இதைச் செஞ்சு பார்க்கிறேன்.
 
நாளைக்குச் சொல்றேன்!:)
 
சமத்து! துள்சிம்மா!
 
சேரி!வீஎஸ்கே!
நல்ல அதிர்ஷ்டம் உண்டாகுக!
 
நானானி, நான் சீரகம் போட மாட்டேன். இணையத்தில் கண்ட குறிப்பு, சீரகத்துக்கு பதில் ஒரு
டேபிள் ஸ்பூன் (வேணா ஐம்பது கிராம் கணக்கு சரியாய் இருக்கும் என்று நம்புகிறேன்) அதை
வெறும் வாணலியில் வறுத்து, படபடவென்று வெடித்தப்பிறகு, அதையும் சேர்த்து பொடி செய்யுங்கள்.
ஹோட்டல்களில் வத்தக்குழம்பு கொஞ்சம் கறுத்த நிறத்தில் இருக்கும் ரகசியம் இதுதான்.
துளசி, கேட்டுக்கிட்டீங்களா :-) அப்புறம் மெஷின் எல்லாம் வேண்டாம், மிச்சி போதும். அப்ப
அப்ப செய்தால், சுவை குறையாமல் இருக்கும்.

-usha
 
நானும் நிறைய பேரிடம் வத்தக் குழம்பு எப்படி செய்றதுன்னு கேடு கேடுக் குழம்பிப் போய் இருந்தேன்....இன்றுதான் சட்டியில் கிட்டியது வத்தக் குழம்பு....இதைத்தான் பெரியவங்க சொல்வாங்களோ சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்னு...இனி என் சட்டியில் வத்தக் குழம்புதான் அகப்பையிலும் அதே குழம்புதான்...[எம் டீ ஆர் ,மல்லிகா பத்ரி,ஆச்சியெல்லாம் இனி அவசரத் தேவைக்குத்தான்]நானானி புண்ணியத்தில் நாந்தான் குழம்புராணி கோமளாவாகி விட்டேனே.
 
குழம்பு ராணி கோமளாவுக்கு,
எனக்கும் கொஞ்சம் சாம்பிள் அனுப்பவும்.இத்தனை நாள் வத்தகுழம்பு என்று எதை செய்து கொண்டிருந்தீர்கள்? கு.ரா.கோ?
 
உஷா! சீரகத்துக்குப் பதில் என்ன போடுவது என்று சொல்லவிட்டுப்போனது என்று நினைக்கிறேன். அப்பப்ப அரைப்பது அம்மியில்தான் நன்றாக இருக்கும்.
மிக்ஸியில் கொரகொரவென்றிருக்கும்.
அது இல்லாததால்தான் மெஷின் அரவை.
 
பொடிதானெ தெரியாதுன்னு சொன்னேன்...நாங்கல்லாம் அப்பப்போ freshஆ அம்மியிலே அரைச்சு கலப்போம்ல...
 
கோமா! அப்போ அரைத்துவிட்ட குழம்பு என்று சொல்லுங்கள். அது சூப்பராய் தானிருக்கும்.
 
பொம்பளங்க ராஜ்யம் - ஒரே கொளம்பா கொளம்புறீங்க - வீட்லே சொல்றேன் - வத்தக்குழம்பு சாப்பிடறோடத சரி
 
என்னாங்க சீனா பொம்பள ராஜ்ஜியம்-ன்னுட்டீங்க? எல்லாத்துறைகளிலும் புகுந்து புறப்படும் இந்தக்காலத்தில்? நீங்ககெல்லாம்தாம் சமையல் என்றால் கேவலிஷ் (இது எங்க பாஷை)என்று நினைக்கிறீர்கள். ஆமாம்...நளபாகம் நளபாகம் என்கிறார்களே? தமயந்தி பாகம் என்றா சொல்றாங்கோ?
என்ன தேடுகிறீர்கள்? முகத்தை எங்கே கொண்டு வைப்பது என்றா?
 
ஆகா ஆகா - கோச்சுக்காதீங்க - சும்மா தமாச்சுக்கு - எங்க வீட்லே இப்டி சொல்லித் தப்பிக்க முடியுமா என்ன - விடுங்க

கேவலீஷ் - சேரி - நெரெய கத்துக்கணும் - உங்க பாஷையெ

அந்தக்காலத்துலேயே எங்களப் பாடாப் படுத்தி - நள பாகம் எல்லாம் சொல்லிட்டீங்க - என்ன பண்றது - அல்லி ராஜ்யம். Take it sportively please - no hard feelings please
 
சீனா.....!மறுபடியும் அல்லி ராஜ்ஜியம்..ஆட்சிக்கு அல்லிகள்தான் என்று போட்டு வாங்கிவிட்டேனோ?
 
எங்க பாஷைகள் எல்லாம் ஒவ்வொன்றாகவரும். எல்லாம் எங்க வீட்டு சுட்டிகளிடமிருந்து சுட்டதுதான்.
 
பொம்பளங்க ராஜ்ஜியம்னா கோச்சுக்கறீங்க - அல்லி ராஜ்ஜியம்னா சந்தோசப் படறீங்க - புரிஞ்சுக்கவே முடிலெப்பா
 
இந்தப் பொடி என் தோழி சொல்லிக்கொடுத்து நான் அறிந்ததுதான்.
பிஞ்சான் கத்திரியில் நெடுக்குவாட்டில் நான்காக bisect செய்து,அதாவது முழுதாக வெட்டாமல்,இந்த பொடியை stuff செய்து,நல்லெண்ணெயில் காயை வதக்கி,புளிக்கரைசல் சேர்த்து குழம்பு செய்து பாருங்கள்.
மல்லிகா பத்ரிநாத் ஆகி விடுவீர்கள்,சாப்பிடுபவர்கள் வாழ்த்தில்.
 
ரெண்டு ராஜ்ஜியத்திலும் திறமை, பொறுமை, அன்பு,பாசம்,அரவணைப்பு எல்லாம் இருந்தால் அது 'சீதா ராஜ்ஜியம்தானே'
 
அறிவன்!
நீங்கள் ஸ்டபஃட் கத்தரிக்காய் சைட் ட்ஷ்ஷாக செய்திருக்கிறேன். குழம்பிலும் போட்டு செய்து பார்க்கிறேன். நல்ல டிப்புக்கு நன்றி!
 
I am going to try this tomorrow. I think I am going to eggplant. I am sure it will turn out good.

Rumya
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]