Thursday, November 29, 2007

 

காரோடுதான் நான் குளித்தேன், ஆனால் நனையவில்லை!!

கார் வாஷ் செய்யப்போகிறேன் என்றாள் சிகாகோ சகோதரி. எப்படி விட்டுவிட்டு வந்துவிடுவாயா? என்றேன். இல்லை நாமும் காருக்குள் இருக்கலாமென்றாள். விடுவேனா? 'நானும் வருவேன்.'என்று காம்கார்டரும் டிஜிடல் காமிராவும் கையுமாக அவளோடு கிளம்பிவிட்டேன்.
என்ன சுவாரஸ்யமான அனுபவம்!!!
காரை அங்குள்ள ட்ராக்கில் கொண்டு நிறுத்தினாள். அத்தோடு சரி! மீதி வேலைகளை இயந்திரங்களே பார்த்துக்கொண்டன.இரண்டு காமிராக்களிலும் அள்ளிக்கொண்டேன்.

ட்ராக்கில் கார் மெதுவாக நகர்ந்து மையத்தில் வந்து நின்றது. நாலாபக்கமிருந்தும் தண்ணீர் பாய்ந்தடித்தது.நீர் காண்ணாடியில் வழிந்தோடியது.பிறகு சோப்பு நீர் வழிய காரின் ஐந்து பக்கங்களிலும் ப்ரெஷ்கள் சுகமாக வண்டியை தேய்த்துக்கொடுத்தன.


பின்னர் சோப்புநீர் மறுபடி பீச்சியடிக்கும் நீரால் வழிந்தோடியது.


அடுத்து ட்ரையர் நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்தது


அப்பால தலை துவட்டுமிடத்துக்கு கார் வந்தது.இந்த இடத்தில் வண்டி மிக மெதுவாக நகர்ந்த்து.


ரோலர் மாட்டிய டவல் கொண்டு மேலும் கீழும் உருட்டி நன்றாக துவட்டியது.பளபள வென்று
புத்தம் புதியதுபோல் பென்ஸ் கார் வெளியே வந்தது. என்ன...சாம்பிராணி புகை போடாத குறைத்தான்!!

கார் குளிக்கும் போது நாங்கள் உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.அதுவும் வெட்கப்படவில்லை,நாங்களும் ஜாலியாக பேசிக்கொண்டும் படமெடுத்துக் கொண்டுமிருந்தோம்.
வித்தியாசமான அனுபவம்!!

Labels:


Comments:
காரோடு குளியல் நல்ல அனுபவம்.
 
பேனா மாதிரி கேமிராவையும் எங்கு போனாலும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் போல இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன மாட்டுமோ என்று.
நீங்கள் சொல்லாவிட்டால் படத்தில் இருந்து ஓரளவு தான் கணித்திருக்கமுடியும்.
 
சூப்பரு பாட்டி....
 
அதே..அதே..!வடுவூர் குமார்!
நானும் நிறைய இடங்களில் ஹயோ..ஹயோ.. என்று பல முறை அங்கலாய்த்திருக்கிறேன்.உஷார்!!
 
பவன்..நீயும் வந்திருக்கலாம் செல்லம்!!
நல்ல எஞ்ஜாய் பண்ணியிருப்பாய்.
 
என் பையன் மிகவும் ரசித்து செல்லும் ஒரு இடம் இது! அவன் இல்லாமல் நான் போகவே முடியாது! :)
 
எப்படியோ கையில் கேமிராவை வைத்துக்கொண்டால், பதிவு எழுத எதாவது ஒரு மேட்டர் கிடைச்சிடுது!! வாழ்த்துக்கள்!
 
ம்ம்ம், எனக்கும் இந்த அனுபவம் நிறையவே ஏற்பட்டாலும் படம் எடுக்கணும்னு தோணலை, எங்களிடம் டிஜிட்டல் காமிரா இல்லைங்கறதாலேயே என்னவோ? பல அபூர்வ நிகழ்வுகளைப் படம் பிடிக்க முடியலையேனு குறை இன்னமும் இருக்கு. போன வருஷம் கைலை யாத்திரையின்போதும் அப்படித்தான். தூரே தெரிந்த எவரெஸ்ட் சிகரத்தைப் படம் எடுத்திருக்கோம்னு சந்தோஷப்பட்டால் பிலிமே வீணாகி இருந்தது, கொண்டு போன பிலிம் தீர்ந்து போய் மேலே போய்ப் படம் எடுக்க முடியாமல்!!!!! ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சுத் தான் வருது!!!!!
 
இது குளியல்.நம்ம வண்டி கொடுப்பினை நட்ட நடு ரோட்டுல வெட்கமில்லாம நின்னுகிட்டு ஏதோ தண்ணியில துண்ட முக்குனொமா உடம்பு பூரா துடைச்சமான்னு.
 
உண்மைதான் கொத்ஸ்!குழந்தைகள் மிகவும் விருந்புவார்கள்.
 
இந்தப் படங்கள் எடுக்கும் போது ப்ளாக் என்று ஒன்று உள்ளது அதில் நான் எழுதுவேன் என்று தெரியாது.
சாதாரணமாகவே வித்தியாசமான காட்சிகளை படம் பிடிப்பேன். அது இப்போது உதவுகிறது. என்ன/ குட்டிபிசாசே! சரியா?
 
இங்கேதான் ஆத்துக்குள்ளேயே வண்டியை இறக்கி முங்காச்சு..போட வைப்பார்களே!!நட்டு!
 
எங்களுக்கும் அப்போவோடு போய் கார் வாஷ் பார்ப்பது ரொம்ப பிடிக்கு

ஆஷிஷ் & அம்ருதா
 
அப்படியா? ஆஷிஷ் அம்ருதா! சந்தோஷம்.
 
கீதா! அடுத்த முறை தயாராகவே போகவும். என்ன?
 
namma oor car wash verum eye wash....oru day ithaiyum carukku inside irunthu shy padaama digital kaameraaviley shoot pannungkaLen...enakku paarkka very wish aa irukku.
 
என்கிட்ட கார் இல்லை,ஆகவே இந்த கார் குளியல் எல்லாம் முடியாது :(
ஓசியில கார் குளியல் கிடைச்சா போய்விட வேண்டியதுதான் :D
 
நம்ம ஊர் கார் வாஷில் நானுமல்லவா
நனைந்துவிடுவேன்?
வேணுமானால் துணைக்கு நீங்களூம் வருகிறீர்களா..கோமா?
 
துர்கா! இதற்காகவே சீக்கிரம் சொந்தமாக கார் வாங்குங்கள்!!
முன் - வாழ்த்துக்கள்!!
 
எங்க பேத்திகளுக்கு கார் வாஷிங்கின் போது உள்ளாற இருக்கணும் - அது கட்டாயம் - அடம் பிடிக்குங்க
 
ஆமாம்! சீனா! எனக்கு அது புது அனுபவம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]