Sunday, November 18, 2007

 

மரம் வளர்ப்போம்...அதைப் பாது'ம்'காப்போம்மரம் வளர்த்து அதைப் பாதுகாப்பது என்பது இப்படித்தான். பார்த்ததும் இந்த அக்கரை ஈங்கில்லையே என்று மனம் சங்கடப்பட்டது.
மரத்தைச் சுற்றி சுமார் இரண்டடி விட்டத்துக்கு வேர்கள் பரவ சுவாசிக்க இடம் விட்டு அதையும் இரும்பு சல்லடை கொண்டு மூடி மழை நீரோ விடும் நீரோ தாரளமாக உள்ளிறங்க வழி விட்டு
அருமையாக பாதுகாக்கும் மனம், இங்கேயா?......அட!போங்கய்யா! அடிமரத்துக்கு காலடி அளவு இடம் விட்டு மரத்தின் கழுத்தை நெருக்கி சுவாசிக்கவும் உண்ணவும் திக்கி திணறி வளரும்
நம் மரங்கள் என்ன பாவம் செய்தனவோ?

இது சிகாகோ நகரில் பிடித்தது. அந்நகர மேயர் ஒரு பெண். அவருக்கு தான் அழகாயிருப்பதைவிட தன் நகரம் அழகாயிருக்கவேண்டுமென்பதில் மிகுந்த அக்கரை காட்டுவாராம். அது அந்த நகரில் ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது. ஏன்...விமானநிலையதிலும் கூட அவர் படம் போட்டு அங்கு வரும் பயணிகளை 'அன்போடு வரவேற்கும்' பானர்களை பார்க்கமுடிந்தது. இங்கோ ஒரு முனிசிபல் கவுன்சிலருக்குக்கூட கட்டவுட்,வாழைமரம்,தோரணம்,கொடி என்று ஊரையே நாறடித்துவிடுவார்கள். கேட்பாரில்லை.

மரம் வளர்ப்ப்து மட்டுமல்ல அதை முறையாக பாதுகாக்கவும் செய்வோம்.

Labels:


Comments:
சரியாக சொன்னீர்கள் நனானி..(நம்ப கவுன்சிலர்கள்ள் பற்றி)
 
உண்மையான ஆதங்கம்.
 
டாக்டர்! நம் வயிற்றெரிச்சலை இப்படித்தான் கொட்டிக்க முடியும்.
 
நன்றி! புதுகை தென்றல்!
 
நாம இந்த இரும்பைஎல்லாம் தூக்கி எடைகுப்போட்டு கட்டிங் போட்ருவோம்ல!!
 
அப்பாஸ்! உங்களுக்கு ஒரு அப்ளாஸ்!!!
அப்படி போடு அருவாள!
இதுதானே நாம்?
 
ஏர் போர்ட்டிலே பானர் பத்தி மூச்சு விட்டுடாதீங்க...நம்ம தலைவருங்களும் ஆரம்பிச்சுடப் போறாங்க.
 
அவர்கள் எங்கே நம் போன்ற குடிமக்களை வரவேற்க பானர் வைக்கப்போகிறார்கள்?
'டெல்லியிலிருந்து வரும் தலைவரே!வருக.'...'கூடுவாஞ்சேரியிலிருந்து வரும் அன்னையே வருக' என்றுதான் வைப்பார்கள். ஐயையோ!! ஐடியா கொடுத்துவிட்டேனோ?
ஏர்போர்ட் இப்போதுதான் கொஞ்சம் பார்க்கிறார்போல் இருக்கிறது.
 
அக்கா,
மழைநீர் சேகரிப்பு தொட்டி போல இதனையும் நாம் பாவிக்கலாம்!!
 
//ஏர்போர்ட் இப்போதுதான் கொஞ்சம் பார்க்கிறார்போல் இருக்கிறது.//

:-))))))
 
நல்ல யோசனை! கு.பிசாசுத்தம்பி!
 
துள்சி!
சிரிப்பா?உருண்டு உருண்டு சிரிப்பா?வாய்விட்டு சிரிப்பா?அல்லது ஹி..ஹி..யா? எனக்கு தெரியவில்லை.
தெளிவுபடுத்தவும்.
 
உங்களின் அக்கறை யாருக்கும் இல்லை.
என் எனக்கே இருந்ததில்லை.
உங்கள் பதிவை பார்த்துவிட்டுத்தான் புத்தி வந்தது.
மிக்க நன்றி:-))
 
என்னான்னு ரங்கன்?
 
சுவிசிலும் இதே முறையில் தான் வீதி ஓரங்களில் மரம் நடுவார்கள்.
 
இக்கரைக்கு அக்கரை பச்சை - வித்தியாசங்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. - பாருங்கள் அயல் நாட்டினை - ரசியுங்கள் - பாராட்டுங்கள்.
வேண்டாமென்று சொல்லவில்லை. ஒப்பு நோக்காதீர்கள்.

நமது நாட்டின் பிரச்னை வேறு டாக்டர்.
 
முதல் வருகைக்கு வந்தனம் நளாயினி!
நன்றியும் கூட!
 
சீனா,
ஒப்பு நோக்காவிடில் நமக்கு இத்தனை தீம் பார்க்குகளும் ஷாப்பிங் மால்களும் ஐடி காரிடோர்களும் கிடைத்திருக்குமா?
நல்லவைகளை நம்மால் முடிந்தவைகளை
இங்கு கொண்டுவரலாமே!
 
அசோகர் சாலைகளில் மரம் நட்டார் என்றெல்லாம் படித்தோம். இன்று நால்வழிச் சாலைகளாக்குகிறோம் என்று சாலை அகலப்படுத்த மரங்களைஎல்லாம் வெட்டித்தள்ளுகிறார்கள்.எப்படி மழை பெய்யும்?
சகாதேவன்.
 
நால்வழிச் சாலைகளில் இப்போது அரளிச் செடிகள் நட்டுள்ளார்கள். அவை பூத்துக் குலுங்குவது ஓர் அழகுதான்.
மரம் வைக்காவிடாலும் கூட வெச்ச மரங்களின் பாதுகாப்பு முக்கியமல்லவா?
சகாதேவன்?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]