Saturday, November 17, 2007

 

இது எனக்கு....அது உனக்கு சேரியா?


யூஎஸ்ஸிலெங்கு போனாலும் தண்ணீர் பாட்டிலோ கைக்குட்டையோ எடுத்து செல்ல தேவையேயில்லை. பெரியவர்களும் சிறியவர்களூம் நீரருந்துமாறு உள்ள இந்த அமைப்பு வசதியாக உள்ளது.மக்களின் தேவையறிந்து எங்கே போனாலும் சுத்தமான கழிவறைகள் அதாவது REST ROOMS தாரளமாக உபயோகிக்க பேப்பர் நப்கின்கள்...என்று எங்கே போவதானாலும் கை வீசிக்கொண்டே போகலாம். வியர்வையும் இல்லை..சோ..நான் கொண்டுபோன ஒரு டஜன் கைக்குட்டைகளையும் புத்தம்புதிதாக அப்படியே திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன்.
இந்த ஒரு காரணத்துக்காகவே அவ்வூர் எனக்கு பிடித்துப்போயிற்று.

Labels:


Comments:
எனக்கு பிடிச்சிருக்கு...அப்ப உங்களுக்கு?
 
//எங்கே போனாலும் சுத்தமான கழிவறைகள் //

இது சொல்லறதுக்கு இல்லை, ஆனா பெரும்பாலும் நல்லா இருக்குன்னே சொல்லலாம். எனக்கும் பிடிச்சிருக்கு. :)
 
எனக்கும் பிடிச்சிருக்கு ....இதுபோல வேற ஏதாவது சங்கதிகள் உண்டா?
இருந்தால் இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்....
 
//சேரியா?//

என்னமோ எதோன்னு அலறியடிச்சுக்கிட்டு வந்தேன்.

வாங்க நம்மூருக்கும். இதுவும் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

சகலவசதிகளோட கூட்டமும் கம்மி பாருங்க:-)))
 
உங்களுக்கும் பிடிச்சிருக்கா..? ஏன்னா அது அங்குள்ள கொத்தனார் கட்டியது. இங்கு போல் ஓழத்த மாட்டார்கள்.இல்லையா?
சந்தோஷம் கொத்ஸ்!!
 
முதல் வரவுக்கு வந்தனம் ரங்கன்!
இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா வரும். சேரியா?
 
நாங்கதான் சரியா அப்டீனு சொல்ல சேரியா ன்னு கேப்போம். நீங்களுமா.:))
அங்ககூட மிஸ்யூஸ் இருக்கே.

எல்லா ஊரிலயும் பயப்படாமல் பயன்படுத்தலாம். ஸ்விஸ்ல 2 ஃப்ரான்க் கொடுத்தா ச்பெஷல் டாய்லெட்.:)

நம்மா ஊருதான் இன்னும் சில இடத்தில பரிதாபம். இப்ப எவ்வளோ தேவலாம்
10%!!!!
 
ஏன் இந்தப்பதற்றம் துள்ஸ்? ஏதோ சேரியை பாகம் பிரித்து பங்கு வைத்து உங்களுக்கு ஒரு பங்கு தருகிறேனோ என்று பயந்துவிட்டீகளா? ஹாஹ்ஹா...!
'சேரியா' என்றால் எங்க பாஷையில்
'சரியா' என்று அர்த்தம்.
இனி பதறாமல் சிதறாமல் வாருங்கள்.
"சேரியா"?
உங்க ஊருக்கு மகனுக்கோ மருமகனுக்கோ ப்ராஜெக்ட் வந்தால் வருவேன்.
 
இது மிஸ்யூஸ் இல்லே வல்லிம்மா!
மிஸ்சிவஸ் யூஸ்! சேரியா?
வாசலில் டேபிள் போட்டு அமர்ந்து காசு வாங்குவதை நிறுத்தி சுத்தமாக சேவையாக எப்போது செய்கிறார்களோ?
ரசிகன் சொன்னாற்போல் 'திருடனுக்கு தேள்....' ஆள்வோரையெல்லாம் பொது கழிப்பறைகளை உபயோகிக்கச்சொன்னால் எப்ப்ப்ப்படியிருக்கும்?
 
அதுச்சேரி நானானீ ரொம்ப சின்ன போஸ்டா போச்சே... :)
 
சின்னதானாலும் சிக்குன்னு இல்ல?
முத்துலெட்சுமி?
 
முத்துலெட்சுமி...!சின்னதானாலும் சிக்குன்னு இல்ல?
 
freeya kodutha vaangigravanga kazipparai vishathil suttha moosam. konjam kaasu selavu panna enna.

Hyderabad il angange saalaiyorangalil pothu kazippidam irunthalum, ellam pakkathil than poi ore naathama irukkum

chennai international airpot than. ange irukkum kazipparayin avalathai parthavargalukku theiyum.

nammalungalum ozunga paramarikkanum. Ithu THIRUDANA PARTHU THIRUNTHA VITTAL TIRUTTAI OZIKKA MUDIYATHUNGA Mathiri than

Inge Srilankavil kooda sutham sutham. Namma oorelenrthu varravanga adikaraa comment( kuppaya namathan roadil kondu vanthu podnumpola irukkennu)
 
உங்க மகனுக்கு project இல்லாட்டியும் இங்கே வாங்க. பார்த்து களிக்கலாம். வேண்டியது செய்ய நான் இருக்கேன். கதிர்காம் பார்க்க வேண்டாமா?
 
ஆகா, வசதிகள் நல்லாத்தான் இருக்கு - இலண்டனிலும் இது போல அனைத்து வசதிகளும் உண்டு.

ஆனா என்ன பண்றது - துடைச்சிப் போட்டுட்டு வர பழக்கம் நமக்கு வர்லிய்யெ இன்னும்.
 
புதுகைதென்றல்! அழைப்புக்கு நன்றி!
கதிர்காமக் கந்தன் அழைப்பான் அப்போது வருவேன். எங்கள் சின்னச்சின்ன டூர் ப்ரோ.வில் சிலோன்,சிங்கப்பூர்,அந்தமான் எல்லாமிருக்கு.அவ்வூர்கள் அழைக்கவேண்டும்
 
நான் குடிநீரும் பேப்பர் நாப்கின்களும் பற்றித்தான் ஆரம்பித்தேன்.ஆனால் எங்கோபோகிறதே!
 
பு.தென்றல்!ஆறுமாதம் சுத்தமாக திரிந்துவிட்டு சென்னை ஏர்போர்ட் வந்திறங்கியவுடன் அங்குள்ள டாய்லெட்..ஆமாம் டாய்லெட்தான் ரெஸ்ட்ரூம் இல்லை,பார்த்ததும் ஏன் வந்தோம் என்றிருந்தது.'சொர்க்கமே என்றாலும்...'பாட்டும் கசந்தது.
 
அதே அதே சபா பதே.
 
இப்பொது இந்தியாவிலும் பல ஊர்களில் பொது இடங்களில் சுத்தம் செய்துகொள்ளும் வசதிகள் சிறுவர்களுக்கும் எளிதாக இருக்குபடி சிறிது தாழ்வான உயரத்தில் தனியாக அமைக்கப்பட்டு வருகின்றன.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]