Sunday, October 14, 2007

 

காய்கறி ஊறுகாய்..ஒஹோஹோஹோ..எச்சி ஊறுதே!!

காய்கறி ஊறுகாய்

எங்கள் வீட்டு ஸ்பெஷல் இந்த ஊறுகாய். அம்மா போடுவார்கள். நான் நேரடியாக் கற்றுக்கொள்ளாவிட்டாலும் வழிவழியாக வந்து
ஒரு வழியாக நானும் கற்றுக்கொண்டேன். எங்கள் வீட்டுக்கு வந்து இதை ருசி பார்த்தவர்கள் எல்லோரையும் அடிமையாக்கிவிட்டது
இந்த ஊறுகாய்!!!! பலர் இல்லங்களுக்கு 'TO GO' வாகப்போகும் பாக்கியம் பெற்றது.

சரி..சரி..ஒருமாரியா..போ! போதும் பில்டப் ங்குறீங்களா? ஓK..ஓK.. ரெஸிபிக்கு வாரேன்.

வேணுங்கிறது:

காரட்,பீன்ஸ், காலிப்பூ, டர்னிப், மஞ்சள்பூசணி, நெல்லிக்காய், மாங்காஇஞ்சி, சௌசௌ, பெரியபாவக்காய் தலா ஒரு கப்.
பச்சை,மஞ்சள்,சிவப்பு குடமிளகாய் தலா அரைக் கப்.
மாங்காய் அரைக்கப் கிடைக்கவில்லையென்றால் எலுமிச்சை சாறு அரைக் கப்
இஞ்சி அரைக் கப்
பூண்டு அரை கப்
பச்சைமிளகாய் கால் கப்
இந்த கப் அளவெல்லாம் பொடியாக ந்றுக்கிய பின்.
அம்மா ஸ்பெஷலாக இதில் பிஞ்சு முருங்கக்காய் , திரிதிரியாக...ஒடித்தால் ஒடியணும் , அதில் நாலைந்து சேர்ப்பார்கள்.
மஞ்சள் பொடி- 2 டீஸ்பூன்
மிளகாய்பொடி- 4-5 டீஸ்பூன் அவ்ரவர் காரத்துக்கேற்ப கூட்டவோ..குறைக்கவோ.....எடுக்கவோ கோர்க்கவோ மாதிரி செய்துகொள்ளலாம்.
இறுதியாக
கடுகு-4 டீஸ்பூன்
வெந்தயம்- 2 டீஸ்பூன் இரண்டையும் வறுத்து பொடித்துக்கொள்ளவும்
பொருங்காயம்- 3 டீஸ்பூ
நல்லெண்ணை- 500 மி
உப்பு- தேவைக்கேற்ப

இப்போ ரெடி பண்ணலாம்:

பொடியாக நறுக்கிய காய்கள் எல்லாவற்றையும் ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு குலுக்கி கலக்கவும். அத்தோடு மஞசள் பொடி,
மிளகாய்பொடி சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும். மாங்காய் சேர்க்கவில்லையென்றால் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். உப்பு, பெருங்காயம். போடவும் எண்ணையை அடுப்பில் நன்றாக காயவைத்து ஆறவைத்து அதில் ஊற்றவும். இப்போது கடுகு,வெந்தயம் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும். ஊறுகாய் மேல் எண்ணை தளும்புமாறு ஊற்றவேண்டும். கடுகு,வெந்தயப்பொடிதான் ஊறுகாய்க்கான மசாலா. கடைசியாக சேர்ப்பதால் வெந்தயத்தின் கசப்பு மட்டுப்படும்.

மேலே எண்ணை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் ஒரு வாரம் வரை கெடாது. அதற்காக சோதித்துப்பார்க்கவேண்டாம். சாப்பிட்டு
கா....லி... செய்து விடுங்கள்

நட்சத்திரங்களில் சுவாதி, எல்லா நட்சத்திரங்களோடும் பொருந்துமாம்...மெய்யாலுமா? அதுபோல் இந்த ஊறுகாய், இட்லி, தோசை,
பூரி, சப்பாத்தி, முக்கியமாக தயிர்சாதம் எல்லாரோடும் அம்சமாக பொருந்தும்.

செய்து சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!! படம் போட ஆசை..ஆசைதான். ஆனால் அதற்கு காத்திருந்தால் ஊறுகாய் ஊசிவிடும்.
சோ...இப்போதைக்கு பதிவு மட்டும்தான்.

ஆஹா...இது என் ஐம்பதாவது பதிவு! வாவ்! பாட் டை தூக்கிக்காட்டுகிறேன். எல்லொரும்
ஜோரா ஒருதரம் கை தட்டுங்க....நன்றி..நன்றி!

Labels:


Comments:
கங்ராஜுலேஷன்ஸ் அண்ட் செலப்ரேஷன்ஸ்
பாடிட்டேன்:)))
சூப்பர் ஊறுகாய்ப்பா,.
படிக்கவே நல்லா இருக்கு. இன்னும் செய்தால் எப்படி இருக்கும்ம்ம்ம்ம்ம்.
வாழ்த்துக்கள் நானானி. ஐம்பது ஐன்னூறு ஆயிரமாகணும்.

மீண்டும் வாழ்த்துக்கள்.
 
நவராத்திரிச் சுண்டல் வசூலுக்கு வந்தால் காரசாரமா ஊறுகாயா? அதென்ன ஜாதிப் பிரச்னையைக் கிளப்பிட்டு வந்துட்டீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர் :P கொலு பார்த்துட்டு வரேன்.
 
உங்க புளி மிளகாய் பண்ணிப்பாத்தேன். சுப்பர். இதையும் சீக்கிரம் பண்ணிப்பாத்துருவோம். வல்லிம்மா சொன்ன மாதிரி நிறைய எழுதுங்க‌
 
அம்பதுக்கு வாழ்த்து(க்)கள்.

சீக்கிரம் அறுபதாகட்டும்:-))))
 
ஊறுகாய்க்கு நான் போட்ட கமெண்டக் காணோமே? ஊறுகாய் நல்லா இருக்குன்னு தானே சொன்னேன்? :P ம்ம்ம்ம், பச்சை ஆப்பிளில் நானும் தொக்கு போட்டுட்டு, மாங்காய்த் தொக்குனு சொன்னதை எல்லாரும் நம்பினாங்க!
 
இதுக்கும் கமெண்டினேன். வரலை, என்ன கோவிச்சுட்டீங்கனு புரியலை? :((((((((((((((((((((
 
நன்றி! துளசி!
 
கீ........தா!
மன்னிப்பு!
பச்சை ஆப்பிளும் தக்காளியும் சேர்த்து
தொக்கு செய்வேன்.சூப்பராயிருக்கும்.
 
கீதா! எனக்கு கோபமே வராது. ரொம்ப சாது. ஆனால் மிரண்டால் என்ன ஆகுமோ தெரியாது. ஹி..ஹி..
 
கீதா! எனக்கு கோபமே வராது. ரொம்ப சாது. ஆனால் மிரண்டால் என்ன ஆகுமோ தெரியாது.ஹி..ஹி..
 
வாழ்த்துகள் ஐம்பதுக்கு - இன்னும் பெருகி ஐனூறு ஆகட்டும். ஊறுகாய் சூப்பர் - தொடர்க
 
அம்பதுக்கு வாழ்த்துக்கள் நானானி
சீக்கிரம் நூறாகி வளரனும்.
 
சீனாவுக்கும் கண்மணிக்கும் நன்றி,நன்றி!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]