Tuesday, August 28, 2007

 

ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்!!!



காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போல் சகோதரர்களுக்கான தினம்தான் 'ரக்ஷாபந்தன்' தினம். ஆவணி பௌர்ணமிநாள் ராக்கி தினம். இவ்வருடம் 28-8-07 அன்று உலகெங்கும் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் தங்களின் பாதுகாப்புகாகவும் வேண்டி அவர்கள் மணிக்கட்டில் கட்டும் ஒரு கயிறுதான் ராக்கி! பளபளப்பாகவும் வண்ணவண்ணமாகவும் விதவிதமாகக் கிடைக்கும்.

ஆசைஆசையாக தட்டில் தீப மேந்தி நெற்றியில் திலகமிட்டு வாயில் இனிப்பு ஊட்டி ராக்கி கட்டி மகிழ்வார்கள். பதிலுக்கு சகோதரிகளுக்கு சின்னச்சின்ன அன்புப் பரிசுகள் கொடுத்து மகிழ்விப்பார்கள்.

இந்த இனிய நன்னாளில் வலைச்சகோதரர்கள் அனைவருக்கும் என் அன்பான ரக்ஷாபந்தன் தின வாழ்த்துக்கள்!!!

Labels:


Comments:
Happy raksha bandan day to you too...
 
//சகோதரிகளுக்கு சின்னச்சின்ன அன்புப் பரிசுகள் கொடுத்து //

இது...........

அதெல்லாம் பொங்கல் சமயமே கிடைச்சிருது.

வாழ்த்து(க்)கள்.
 
என்னை போல் ஒருவருக்கு, உங்களைப்போல் ஒருத்தியின் வாழ்த்துக்களும் நன்றிகளும்
 
நீங்கள் சொல்லும் பொங்கல் சமயம் கிடைப்பது...மணமான சகோதரிகளுக்கு வரும் பொங்கல் சீர்!
இது...சின்னஞ்சிறு சிறுமிகளும் ராக்கி
கட்டினால் கிடைப்பது, அது ஒத்த ரூபா ஆனாலும் சந்தோஷமே!!
என்ன நாஞ்சொல்றது? துள்சி?









'
 
Happy Raksha Banthan Day to you too Naanaani.
Unga Annaavukkum vaazhthukkaL.
paasam sezhiththu IllangaL sezhikkattum.
 
ராக்கி வாழ்த்துக்கள், வல்லி!
 
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்
 
தி.ரா.ச.வின் வருகைக்கு நல்வரவு.
நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]