Tuesday, August 14, 2007

 

இந்தியத் தாய்க்கு...சஷ்டியப்த்தபூர்த்தி!!!


இந்திய சுதந்திரத் தாய்க்கு இன்று 'சஷ்டியப்தபூர்த்தி' அதாவது அறுபதாம் கல்யாணம்!!!! இந்தியத் தந்தை....? ஒவ்வொரு இந்தியக்குடிமகனும்தான்.
இந்த அறுபது வருடங்களில் அவளை என்ன....பாடுபடுத்தியிருப்போம்? வன்முறை,கொலை,கொள்ளை, கலவரம், லஞ்சம், ஏமாற்று, வரதட்சிணை கொடுமை, கற்பழிப்பு, பொய், பித்தலாட்டம்....இத்யாதி...இத்யாதி...இதைத் தவிர வேறு என்ன சந்தோஷம் அவளுக்கு நாம் கொடுத்திருப்போம்?
ஆங்காங்கே குறிப்பிடத்தக்க ஒரு சில நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள்..இருக்கிறார்கள், ஒரு சில நல்லவைகளும்
நடந்திருக்கின்றன...நடக்கின்றன. அவர்களாலும் அவைகளாலும் தான் இந்தியத்தாய் உலக நாடுகள் முன் நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையுமாக கம்பீரமாக நிற்கிறாள். நிற்பாள்!!

இனிமேலாவது வரும் காலம் சுதந்திரத்தாய்க்கு ஒரு நிம்மதியான....அமைதியான....ஓய்வான நாட்களாக(அவளுக்கெங்கே ஓய்வு?)
கழிய நாமெல்லாம் இன்று உறுதியாக...உண்மையாக...மனதார...உறுதி எடுத்துக்கொள்வோம்!!! வந்தேமாதரம்!!!!
நம் மகா..ஆத்மாவுக்குப் பிடித்தமான பாடலான..."சாந்தி நிலவவேண்டும் எங்கும் சாந்தி நிலவவேண்டும்..ஆத்ம சக்தி ஓங்கவேண்டும்...
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்" என்று எங்கும் சாந்தி நிலவ.....

இனிமேல் இதெல்லாம் இப்படித்தான் இருக்கவேண்டும்.


வாழ்க சுதந்திரம்...வாழிய வாழியவே...எங்கள் சுதந்திரம் என்றென்றும் வாழியவே!!!!!!!!!!!!!!!

இந்தியர் அனைவருக்கும் இனிய அறுபதாவது சுதந்திரதின வாழ்த்துக்கள்!!!
சொந்த நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும் - தாயே!
அதை நீ அருளவேண்டும்- என்று அவ்ள் பாதங்களில் பொற்பூக்களும் வெள்ளிப்பூக்களும்
தூவி அவள் ஆசிகளை வேண்டிப் பெறுவோமாக!மிட்டாய்....? துளசிடீச்சர் ஜிலேபி கொடுக்கிறார்கள், அங்கு போய் வாங்கிக்கொள்ளலாம்!!
ஹாஹ்ஹஹ்ஹா....!!

Labels:


Comments:
ஆகா!.....மிட்டாய் வாங்க ஆஸி போகனுமா.....
 
//சாந்தி நிலவவேண்டும் எங்கும் சாந்தி நிலவவேண்டும்..ஆத்ம சக்தி ஓங்கவேண்டும்...
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்"//
இதுதான் என் ஆசையும்.
வாழ்த்துக்கள்
 
இந்தியாவ இந்தியாவாவே இருக்க விடுங்கய்யா.
தாய், பேய், நாய்னு உருவகப்படுத்தி கேவலப்படுத்தாம இருக்கறதே நன்றிக் கடனாகும்.

-தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
 
தங்க, வெள்ளிப் பூக்களால் தாயை வணங்கும் உங்கள் உணர்ச்சிகள் புரிகிறது.
2020-ல் இந்தியா வல்லரசு மட்டுமில்லை நல்லரசாகவும் ஆக வேண்டும் என்று விரும்புவோம்.
சகாதேவன்.
 
நம்மூரில் 40 வயசானாவே 'மூதாட்டி'ன்னு சொல்லிடறாங்க. இதுலே அறுவதாங்கல்யாணம்னு
சொல்லிட்டா அவ்ளொதான்.

இந்தியத்தாய் இளமையா ஜொலிக்கட்டும். ஏன்னா அவள் 'கன்னித்தாய்'

மதுரையம்பதி,
ஆஸி வரைக்கும் வந்துட்டாப் போதுமா? நியூஸி அங்கே இருந்து 3/4 மணி நேரப் பயணமாச்சே.

பேசாம நியூஸிக்கே டிக்கெட் எடுங்க. சீக்கிரமா வாங்க. ஜாங்கிரி தீர்ந்துக்கிட்டு இருக்கு:-))))
 
தங்க, வெள்ளிப்பூக்கள் தூவி இந்தியத்தாயை வணங்கும் உங் கள் தேசப்பற்று புல்லரிக்க வைக்கிறது
சகாதேவன்.
 
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நானானி.
 
சுதந்திர தின வாழ்த்துக்கள்!
 
என்னே! மதுரையம்பதிக்கு வந்த மறதி! ஆஸியில்லை...நியூஸி!
ஜாங்கிரி வேணும்னால் போய்த்தானே ஆகணும். இதே சாக்கில் நியூஸியும்
பாத்தப்ல ஆச்சு! என்ன நான் சொல்றது?
 
யோகன் பாரிஸ்! உங்கள் ஆசை நிலவ
வாழ்த்துக்கள்!!நன்றி!!
 
தறுதலையின் ஆசைப்படி அப்படியே விட்டுவிடுவோம்....அதுவே அவருக்கு ஆறுதலைத் தரும்.
மிக்க நன்றி..வருகைக்கு.
 
இளமையாகவே இருந்துவிட்டால் அனுபவங்கள் எப்படி கிடைக்கும்?
ஆனாலும் அவள் மனதளவில் என்றும் பதினாறுதான்!!என்னைப்போலவே!ஹி..ஹி..
ஜாங்கிரியெல்லாம் காலியா? டீச்சர்?
வாழ்த்துக்களும் நன்றிகளும்!!
 
சஷ்டியப்த்தபூர்த்தின்னு எழுதியாச்சு...
அப்போ..தங்கவெள்ளிப்பூகளும் வேணுமே! அப்போதானே பூர்த்தியாகும்?
நன்றி! சகா! + வாழ்த்துக்கள்!!
 
காட்டாறுக்கு நன்றியும் வாழ்த்துக்கள்!!
 
ஜீவாவுக்கும் என் நன்றியும் சுதந்திரதின வாழ்த்துக்களும்!!
 
sashtiapthapoorthi....katturaiyn idai idaiye vanthey matharam....jai hind....sarey jagah se achaa .....sevigalil vizhunthu kondey irunthathu.swathanthirathina vaazhthukkaL
nunivaal .
 
அத்தனை பாடல்களும் கேட்டுதா...கேட்டுதா...கேட்டுதா...?
சந்தோஷம்! நுனிவால்!
 
inimeyl nunivaalukku bathil gomathi natarajan comment adikka varuvaar ......paraak paraak...
vidai perum nunivaal
 
வித்தியாசமான கற்பனை நானானி...;)
 
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

சுதந்திரக் காற்றை ஒவ்வொரு இந்தியனும் சுவாசிக்கக் காரணமான
'மகா..ஆத்மா'வின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமெனில, இங்கும் உலகெங்கும் சாந்தி நிலவ வேண்டும்.

அதற்கு மகா கவியின் வரிகளை நினைவில் கொள்வோம்:

"ஜாதி மதங்களைப் பாரோம்-உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே-அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
-நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும்
தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
வந்தே மாதரம் என்போம்!"
 
போற்றி போற்றி
-----------------------------
சுதந்திரத்தின் விலை என்ன
அடிமை கொடுமை
சுதந்திரத்தின் மதிப்பு என்ன
அறியாது தெரியாது
அடிமையின் வலி என்ன
அறியாது தெரியாது
பிறகு எப்படி தெரியும்
அருமையும் பெருமையும்.

போராட்டம் கண்டதில்லை நாம்
சுகம் காணுகிறோம்
பெற்றோரை சொல்லும் போல்
அவர்களும் பெற்றோரே
ஈன்ற சுதந்திரத்தை நமக்காக்கி
பெற்றோராய் வாழ்த்தினர்
அவர்களை நினைவு கொள்வோம்
கர்வம் கொள்வோம்.
 
போற்றி போற்றி
-----------------------------
சுதந்திரத்தின் விலை என்ன
அடிமை கொடுமை
சுதந்திரத்தின் மதிப்பு என்ன
அறியாது தெரியாது
அடிமையின் வலி என்ன
அறியாது தெரியாது
பிறகு எப்படி தெரியும்
அருமையும் பெருமையும்.

போராட்டம் கண்டதில்லை நாம்
சுகம் காணுகிறோம்
பெற்றோரை சொல்லும் போல்
அவர்களும் பெற்றோரே
ஈன்ற சுதந்திரத்தை நமக்காக்கி
பெற்றோராய் வாழ்த்தினர்
அவர்களை நினைவு கொள்வோம்
கர்வம் கொள்வோம்.
 
கோமதி நடராஜனுக்கு வந்தனம்!
நுனிவால் என்னாச்சு? வெட்டுப்பட்டுவிட்டதா?
 
இத..இத..இதத்தான் எதிர்பார்த்தேன்!
முத்துலெட்சுமி!!
 
அரு..அரு..அருமை! ராமலக்ஷ்மி!!
 
அனானி!
வலியோ, கொடுமையோ தெரியாது
நாம் காணும் சுகம்....? கொஞ்சம் வெட்கப்படத்தான் வேணும்!!
 
hi nanani
indiath thandhai ,ovoru kudimakanumaa?sariyaa padalaiye...engo idikkuthey...
thuppaakki ippadi irukkattum endru sonnathu sari, yaaroda thuppaakki?athai sollaliye!ellaiyil nirkum veerarkal kai police kai thuppaakki ellaam ippadi mudichodu irunthaal...naadu ennaakum?ippadikku
idakku madakku sanga uruppinar
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]